FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Saturday, March 20, 2021

மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்

Saturday, March 20, 2021
7:33 PM
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக 19-03-2021 அன்று பட்டக்கால் தெருவில் மாபெரும் மார்க்க விளக்கப்பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியை மாவட்ட தலைவர் M. முஹம்மது பாசித் அவர்கள் தலைமையேற்று துவங்கினார். முதலாவதாக TNTJ பேச்சாளர் மல்லவி A.சபீர் அலி அவர்கள் நபி வழியை! நம் வழியாக்குவோம்!! என்ற தலைப்பில் உரையாற்றினார். அடுத்ததாக கிளை-2 செயலாளர் Z. முஹம்மது ரிஃபாஸ் அவர்கள் பொதுக்கூட்டத்தின் தீர்மானங்களை வாசித்தார். மேலும் AYM பெண்கள் தஃவா குழு வாட்ஸப் குழுமத்தில் நடைப்பெற்ற கேள்வி பதில் போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. அடுத்ததாக TNTJ பேச்சாளர் மல்லவி. கோவை R.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் மனிதா! உன்னை மண்ணறை அழைக்கிறது என்ற தலைப்பில் உரையாற்றினார். இறுதியாக, கிளை-1 செயலாளர் A.ருமைஸ்தீன் அவர்கள் நன்றியுரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்துக்கொண்டனர். இது பொதுக்கூட்டமா அல்லது மாநாடா என்று பார்ப்பவர்களை வியக்க வைத்த எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே புகழணைத்தும். அல்ஹம்துலில்லாஹ்...
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top