தீர்மானம்:1
*வளர்ந்துவரும் கலாச்சாரத்தில் ஒழுக்க சீர்கேட்டை நோக்க மாணவ மாணவிகளை அழைத்து செல்வது co-education என்ற ஆண்கள்பெண்கள் இணைந்து படிக்கக் கூடிய பள்ளிகளாகும். எதிர்க்கால கல்வியை கருத்தில் கொண்டு அடியக்கமங்கலத்தில் தனியாக மகளிர் மேல் நிலைப் பள்ளி அமைக்க வேண்டும்.
தீர்மானம்:2
*ரேசன் கார்ட் பதிவு செய்து 60 நாட்களில் கிடைக்க வேண்டியது பதிவு செய்து பல மாதங்கள் ஆகியும் இன்னும் கிடைக்கப் பெறாத பல குடும்பங்கள் இருக்கின்றன. அவர்களுக்கு விரைவில் கிடைக்க ஆவன செய்யவேண்டும்.
தீர்மானம்:3
*அடியக்கமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நின்றாலும் பேருந்துகள் நிற்காமல் சென்றுவிடுகின்றன. பொதுமக்களின் நேரத்தையும் கருத்தில் கொண்டு அனைத்துப் பேருந்துகளும் பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்ல ஆவன செய்ய வேண்டும் என இம்மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது