
சிலிண்டரை உடனுக்குடன் பதிவு செய்து பெற்றுக்கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் இன்டேன் நிறுவனம் செய்கிறது . 21 நாட்கள் காத்திருக்க வேண்டும் என்ற முறை எப்போதும் இருந்ததில்லை தட்டுப்பாட்டை சமாளிக்க கூடுதலாக பாட்டிலிங் பிளான்ட் தொடங்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் முறையாக பதிவு செய்து வெய்ட்டிங் லிஸ்ட் நம்பரை அவ்வப்போது சரி செய்து சிலிண்டரை கேட்டுப்பெற வேண்டும்.
சில வாடிக்கையாளர்கள் ஏஜென்சியிடம் அதிகப் பணம் கொடுத்து சிலிண்டர் பெறுவதால் முறைக் கேடு தொடர்கிறது. ஏஜென்சி அடாவடியில் ஈடுப்பட்டாலோ பிளாக்கில் சிலிண்டர் விற்பனை செய்தாலோ இண்டேனுக்கு தொரியப்படுத்தவும். ஏஜென்சி மீதான புகார்களை 044 -24339236, 044- 24339246, ஆகிய தொலைப்பேசி எங்களில் தெரிவிக்கலாம். கடிதம் மூலம் அனுப்பப்படும் புகார்களையும் உடனே பரிசீலிக்கிறோம். புகார்கள் உறுதி செய்யப்பட்டால் சம்மந்தப்பட்ட ஏஜென்சி மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
நன்றி: தினக்கரன் 09/11/2010