சமீபத்தில் தர்மபுரி பாலகோட்டில் நடைபெற்ற பிரச்சனை குறித்து எந்த விதமான நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து நேற்று (29-7-2011) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையரிந்த கொள்கை சகோதரர்கள் போராட்டக் கலத்தில் நேற்று குவிந்தனர்.
உடனே தகவல் அறிந்த காவல்துறையினர் இரு தரப்பினரையும் அழைத்து சமரச பேச்சு வார்த்தை நடத்தினர்.
இறைவனது கிருபையால் எதிர் தரப்பினர் ஒத்த கருத்திற்கு வந்ததால் ஆர்ப்பாட்டம் நல்லிணக்கன கூட்டமாக அறிவிக்கப்பட்டு நடைபெற்றது.
இதில் மேலாண்மைக்குழு உறுப்பினர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் உரையாற்றினார்கள். ஏராளமான கொள்கை சகோதரர்கள் இதில் கலந்து கொண்டனர்.