FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Sunday, October 23, 2011

புதிய ஊராட்சி மன்ற தலைவரிடம் பேட்டி

Sunday, October 23, 2011
7:42 PM
அடியக்கமங்கலம் ஊராட்சி மன்ற தலைவராக வெற்றிப் பெற்றுள்ள நமதூர் SMJ.நிஜாமுதீன் அவர்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-(TNTJ) அடியக்கமங்கலம்-கிளை சார்பாக செய்தி தொகுப்பாளர்கள் சந்தித்து பேட்டி எடுத்தோம்.


வாழ்த்துகள் தெரிவித்து கேள்வியை தொடங்கினோம்.

கேள்வி 1: இந்த வெற்றியை எவ்வாறு நினைக்கின்றிர்கள்?

இதை நான்  வெற்றியாக நினைக்கவில்லை இறைவனுக்கே எல்லா புகழும் என்று கூறினார். 

கேள்வி 2:எதிர்காலத்தில் என்ன திட்டம் வெச்சிருக்கின்றீர்கள்?


தமிழ்நாட்டில் முதல் ஊராட்சியாக் மாற்றுவேன் அது தான் எனது எதிர்காலத்தில் திட்டம் என்று கூறினார்.

கேள்வி 3:தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகளை விரைந்து முடிப்பீர்களா?

கண்டிப்பாக நான் கொடுத்த  வாக்குறுதிகளை விரைந்து முடிக்க என்னால் ஆன முயற்சி செய்வேன்.


கேள்வி 4:  ஏன் ஊராட்சி மன்ற தலைவர் ஆக நினைத்தீர்கள்?


ஊர்ருக்கும் மக்களுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணம் தான் காரணம்.ஊர்ருக்காக நல்ல ஆக்கபூர்வமான பல நல்ல பணிகள் செய்ய வேண்டுமானால்  ஊராட்சி மன்ற தலைவர் ஆனால் தான் செய்ய முடியும்.

கேள்வி 5:  இந்த யோசனை எப்பொழுது வந்தது?


மூன்று ஆண்டுக்கு முன்பே நான் முடிவு செய்தது தான்.

கேள்வி 6:  அனைத்து தரப்பு மக்களுக்கும் நீதியாக நியமாக நடப்பிர்களா?

கண்டிப்பாக அனைத்து தரப்பு மக்களும் எனக்கு வாக்களித்தார்கள் ஆகவே நான் நீதியாக நியமாக நடப்பேன்.ஜாதி மத சார்பற்று நடப்பேன் என்று கூறினார்.

கேள்வி 7:  குப்பைகள் கிடப்பது பற்றி சில இடங்களை மட்டுமே நோட்டிஸில் குறிப்பிட்டிருந்திர்கள் அதை விட அதிகமான குப்பை உள்ள இடங்களை ஏன் குறிப்பிடவில்லை?


எடுத்துக்காட்டுகாக போட்டது.அனைத்தையும் போட முடியாது அதிகமாக செலவாகும் அதனால் தான் நான்கு இடங்களை மட்டும் போட்டேன்.

கேள்வி 8: வார்டு உறுப்பினர்களையும் ஒருக்கிணைப்பீர்களா?


கண்டிப்பாக செய்வேன் ஒற்றுமையாக இருந்தால் தான் நன்கு செயல்பட முடியும்.



கேள்வி 9:   வார்டு உறுப்பினர்கள் கருத்துகளை கேட்டு செயல்படுவீர்களா?


ஆம் என் கருத்துகளை விட எதிர் கருத்துகளை மதிப்பேன் முன்னுறிமை கொடுப்பேன்.


கேள்வி 10: ஊழள் மற்றும் லஞ்சங்கள் இல்லாத நிர்வாகம் இருக்குமா?

       கண்டிப்பாக இவைகள் இல்லாத் நிர்வாகம் இருக்கும் இன்ஷா அல்லாஹ்...என்று கூறினார்.

செய்தி தொகுப்பாளர்கள்:-
S.சிராஜ் & A.ருமைஸ்...

  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: புதிய ஊராட்சி மன்ற தலைவரிடம் பேட்டி Rating: 5 Reviewed By: AYM-TNTJ
Scroll to Top