ஆகையால் 14-01-2012 சனிக்கிழமை காலை 12:30 மணியளவில் நமது AYM TNTJ நிர்வாகிள் அரசு மருத்துவமனை மருத்துவரை நேரில் சந்தித்து பெண் மருத்துவர் சம்பந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது.
மேலும் மருத்துவமனையின் தூய்மையை அறிய அவர்களின் உதிவியோடு அனைத்து இடங்களுக்கும் சென்று ஆய்வு செய்யப்பட்டது.
அதன் பிறகு அங்கு சிகிச்சை எடுக்க கூடிய பொதுமக்களிடம் நமது நிர்வாகிகள் நலம் விசாரித்து அவர்களுக்கு ஆறுதலும் கூறினார்கள். மேலும் சிகிச்சை எடுக்க கூடியவர்களிடம் மருத்துவமனையின் பராமரிப்பு பற்றியும், குறைகள் கேட்டனர் அதற்கு அவர்கள் சிறப்பாக உள்ளதாக கூறினர்.
அதன் பின் மருத்துவமனையின் நிர்வாகிகளிடம் மக்களிடத்தில் ஏதாவது குறைகள் கண்டிர்களா என்று நிர்வாகிகள் கேட்டனர்.
அதற்கு அவர்கள் பொதுமக்கள் பலர் இந்த மருத்துவமனையை முறையாக பயன்படுத்துவதில்லை என்று பெரிய குற்றச்சாட்டை முன்வைத்தனர். இந்த மருத்துவமனையில் அறுவை அரங்கு (OPERATION THEATRE), ஆய்வு கூடம் (LAB), x-Ray, நாய் கடி மருந்து போன்ற வசதிகள் இருப்பதாகவும், அதனால் சிலர் தான் பயன் அடைகிறார்கள் என்றும், பலர் இதை பயன்படுத்துவதில்லை என்று கூறினார்.
இவர் சொல்லகூடிய குறை அடியக்கமங்கலம் பொதுமக்களிடம் காணபடுகின்றது. குறிப்பாக முஸ்லிம் மக்களிடம் இது அதிகமாகவே உள்ளது. இங்கு இவர்கள் சிகிச்சை எடுப்பதில்லை. அதற்கு பதிலாக தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை எடுக்கிறார்கள்.
சிலர் அடியற்கையில் இருந்து திருவாரூர் , நாகை சென்று சிகிச்சை எடுக்கின்றனர். அந்த தனியார் மருத்துவமணையின் மருத்துவர்கள் மற்றும் சேவிலியர்கள் அவர்களின் வேலை பளுவின் காரணமாக சிலநேரங்களில் கடிணமாக பேசுகிறார்கள், அவர்களின் செயல்கள் முறத்து தனமாகவும் அமைகிறது.அதை எல்லாம் பொருத்படுத்தாமல் கால் கடுக்க நின்று, செல்வங்களை இறைத்து சிகிச்சை எடுக்கிறார்கள்.
இவை எல்லாம் அரசு மருத்துவமனையின் சிகிச்சை சரி இல்லை என்று சொன்னால் கூட மனம் ஆறிவிடும் இவர்கள் கூறுவது என்ன தெரியுமா? அங்கு செல்வதற்கு வெக்கமாக இருக்கிறது என்கிறார்கள். இந்த காரணத்தினால் பலர் இந்த அரசு மருத்துவமனையை பயன் படுத்துவதில்லை.
சொல்ல போனால் இவர்கள் தனியார் மருத்துவமனைக்கு செல்வதற்கு தான் வெக்க பட வேண்டும் ஏன் என்றால்? அங்க அவர்கள் பேச கூடிய முறை, நடவடிக்கை, நோயாளியை அங்க போ! இங்க போ! என்று பந்தாடுவது போன்ற செயல்களை பார்த்தால் ரோஷம் உள்ளவர்கள் அங்கு செல்லமாட்டார்கள்.
அரசு பொதுவாக அனைத்து மக்களும் இலவசமாக பயன் பெற வேண்டும் என்பதற்க்காக தான் அரசு மருத்துவமனையை நிறுவியுள்ளது. அதை முறையாக பயன்படுத்தாமல் இருந்தால் நமக்கு தான் நஷ்டம்!!!
ஆக அடியக்கமங்கலம் மருத்துவமனையை முறையாக அனைத்து தறப்பு பொதுமக்களும் பயன்படுத்த வேண்டும் என்று AYM TNTJ கேட்டு கொள்கிறது.
(பெண் மருத்துவரை அமைக்க AYM TNTJ நிர்வாகிகள் விரைவில் தக்க நடவடிக்கை எடுப்பார்கள்...)