FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Sunday, January 15, 2012

தினமனி பத்திரிக்கைக்கு நன்றி

Sunday, January 15, 2012
7:08 PM

அடியக்கமங்கலம் ராஜாத் தெரு TNTJ  நிர்வாகிகள் 05-01-2012 வியாழக் கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் முனியநாதன் அவர்களிடம் பேருந்துகள் சரிவற நிற்தில்லை என்று மனு கொடுத்தனர்.
இந்த செய்தி கடந்த 10-01-2012 அன்று தினமனி செய்தாளில் வெளியானது.


பத்திரிக்கை செய்தி இதோ...
திருவாரூர், ஜன. 10: திருவாரூரை அடுத்துள்ள அடியக்கமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் அனைத்துப் பேருந்துகளும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து ஜமாத்தின் அடியக்கமங்கலம் கிளைத் தலைவர் எஸ். அகமது சபியுல்வரா, செயலர் ஏ. முகமது சுல்தான் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த கோரிக்கை மனு விவரம்:


திருவாரூரிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அடியக்கமங்கலம் கிராமத்தில் ஏறத்தாழ 12,000-த்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ளவர்கள் தினந்தோறும் தொழில் மற்றும் மருத்துவத் தேவைக்காக திருவாரூர் மற்றும் நாகைக்குச் சென்று வர வேண்டிய சூழ்நிலை உள்ளது. அதேபோல், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர்.


இதற்கு அரசுப் பேருந்துகளையே நம்பியுள்ளனர்.
திருவாரூர் - நாகை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்த கிராமத்தின் வழியாகச் செல்லும் பெரும்பாலான பேருந்துகள் அடியக்கமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தப்படுவதில்லை.


இதனால், பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் பெரும் சிரமத்துக்கும், காலதாமதத்துக்கும் ஆளாக நேரிடுகிறது.

எனவே, இந்த வழியாகச் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் அடியக்கமங்கலம் செட்டித் தெரு மற்றும் பட்டக்கால் தெரு பேருந்து நிறுத்தங்களில் நின்று செல்ல மாவட்ட ஆட்சியர் அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு உத்தரவிட வேண்டுமென அந்த மனுவில் இருவரும் கூட்டாக கேட்டுக் கொண்டுள்ளனர்.








  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: தினமனி பத்திரிக்கைக்கு நன்றி Rating: 5 Reviewed By: AYM-TNTJ
Scroll to Top