அடியக்கமங்கலத்தில் இருந்து காலை நேரத்தில் மாணவர்கள் திருவாரூர் , நாகப்பட்டினம் பள்ளி கூடங்கள் செல்வதற்க்கு பேருந்துகள் நிற்பதில்லை, அது போல் அடியற்க்கை அரசு பள்ளிக்கு வெளியூரில் இருந்து வரும் மாணவ, மாணவிகள் செட்டித் தெரு பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்க்காததால் பட்டக்கால் தெருவில் இறங்கி அதிக தொலைவில் நடந்து செல்லவேண்டி இருக்கிறது. இதனால் மாணவ, மாணவிகள் மன ஊழைச்சல் அடைகின்றனர்.
இதை கருத்தில் கொண்டு அடியக்கமங்கலம் ராஜாத் தெரு TNTJ நிர்வாகிகள் 05-01-2012 வியாழக் கிழமை திருவாரூர் மாவட்ட TNTJ துணை செயலாளர் இஸ்மத் பாட்ஷா தலைமையில் மாவட்ட ஆட்சியர் முனியநாதன் அவர்களிடம் மனு கொடுத்து உடனடி நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தினர்.
மேலும் அடியக்கமங்கலத்தில் பேருந்துகள் நிறுத்தவில்லை என்று பொதுமக்கள் பேருந்துகளை வழிமறைக்கின்றனர். இது சரியான தீர்வு அல்ல பேருந்து உரிமையாளர் செய்யும் தவறுக்காக பயணிகளாக பயனிக்கும் பொதுமக்களை சிரமப்படுத்துவது நியாயமல்ல....
இவ்வாறு மறைக்கப்படும் பேருந்துகளில் பயனிகளாக இருக்க கூடியவர்கள்
நோயாளியாக இருக்கலாம், வேலைக்கு செல்ல கூடியவராக இருக்கலாம், பள்ளி கூடங்களுக்கு செல்ல கூடியவர்களாக இருக்கலாம் அவர்களை வழிமறைத்து அவர்களின் வேலைகளை தடுப்பது எந்த விதத்திலும் நியாம் இல்லை...
இது போன்ற செயல்களுக்கு மார்க்கத்திலும் அனுமதி இல்லை...