அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 21-07-2012 கடலூர் மாவட்டத்தில் பிறை பார்த்த செய்தி TNTJ தலைமை மூலம் உறுதி செய்யப்பட்டது. அதை அடுத்து மெகா ஃபோன் மூலம் மக்களுக்கு அறிவிப்பு செய்து அன்று இரவு தொழுகைக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது. கொடுத்த சில நிமிடங்களில் ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் தாரைத்தாரையாக பள்ளிக்கு வந்தனர். முதல் நாளே இடம் பற்றாமல் மிகவும் சிரமப்பட்டு தங்களது வணக்கங்களை நிறைவு செய்தனர்.
பிறகு மறுநாள் (22-07-2012) மாலையில் அஸர் தொழுகைக்குப் பிறகு நோன்பு கஞ்சி விநியோகம் செய்யப்பட்டது.
அதன் பின் சொற்பொழிவுடன் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.
பிறகு 8:45 மணியளவில் இஷாத் தொழுகையும், 9:00 மணியளவில் நபி வழி இரவு தொழுகையும் நடைபெற்றது. அதன் பின் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்......