கடந்த 05-11-2012 அன்று AYM TNTJ மர்க்கஸில் நடந்த நபிவழி
திருமணத்தை பற்றியும், இந்த திருமணத்தை முன்னின்று நடத்திய தவ்ஹீத் சகோதரர்களை பற்றியும், இதற்கு பல வகைகளில் தங்களது எதிர்ப்புகளை காட்டிய சுன்னத் ஜமாஅத்(?) பற்றியும் பல்வேறு பொய்யான செய்திகளையும்,
அவதூறுகளையும், தங்களை யார்(?) என்று காட்டிக்கொள்ள
திராணியில்லாத பேடிகள் இணையதளங்களில் பரப்பி வருகிறார்கள், அவர்களுக்கும் உண்மை எது? என்று அறிய துடிக்கும் பொதுமக்களுக்கும் ஒரு சில விளக்கங்கள் அறிய தருகிறோம்.
நமதூரில் நாமெல்லாம் 400 ஆண்டுகால பாரம்பரியத்தோடும், கட்டுக்கோப்போடும்
இணைந்து ஒற்றுமையாக செயல்பட்டுவந்தோம். 1980-களில் ஏற்பட்ட ஏகத்துவ எழுச்சி நமதூரில் 1995-ல் சுடர் விட ஆரம்பித்தது. அதன் பிறகு திருமறை குர்ஆனையும், திருத்தூதர் (ஸல்) அவர்களின் போதனைகளையும் அதனுடைய தூய வடிவில் கண்ட நாம் பல சந்தர்ப்பங்களில்
நமது ஜமாஅத் நிர்வாகிகளையும், பொதுமக்களையும் நேரிலும், பொதுக்கூட்டங்கள் வாயிலாகவும் சந்தித்து சத்தியத்தை எடுத்துவைத்தோம்.
படிப்படியாக நாம் ஏகத்துவ அடிப்படையில் பல செயற்பாடுகளை மாற்றிக்கொண்டோம். இந்த வேளையில் ஊர் ஜமாஅத் பல விஷயங்களை சத்தியம் என்று தெரிந்தும் பாரம்பரியம் என்ற போர்வையிலும், ஒற்றுமை என்ற வெற்று கோஷத்திலும் மார்க்கத்தை தன் முதுகுக்குப் பின்னால் தூக்கி எறிந்தது. அதன் பிறகு படிப்படியாக பல்வேறு நிகழ்ச்சிகளையும், போராட்டங்களையும்
நடத்திய நாம் இது தான் இஸ்லாம் என்று விளங்கி யார் எதித்தாலும் எந்தப்பிளவு ஏற்பட்டாலும், பரவாயில்லை எங்களுக்கு மார்க்கம் தான் முக்கியமானது என்ற உண்னதமான கருத்துக்கு வந்தோம். மேற்கண்ட பணிகளை நாம் அதிகமாக்கிய போது நமதூர் மக்களில் 50% மேல் ஏகத்துவ சிந்தனை கொண்டவர்களாக மாறினார்கள். 1997-களில் நமதூர் ஜமாஅத்தால் ஏகத்துவவாதிகளுக்கு மிகப்பெரிய கொடுமை நிகழ்ந்தது. " என்னை எவ்வாறு தொழக்கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்" என்ற மாநபியின் கட்டளையை ஏற்று பல சகோதரர்கள் தொழுகை முறையை மாற்றினார்கள்.
இன்னும் எங்கள் அனைத்து செயல்களையும் குர்ஆன்-ஹதீஸ் அடிப்படையில் தான் அமைத்துக் கொள்வோம் என்று சூளுரைத்தார்கள். நம் ஜமாஅத் முஸ்லிம் மஹாஜன சபை உடைய ஒற்றுமையை எந்த வகையிலும் சிதைத்துவிடக்கூடாது என்ற ஏகத்துவ சகோதரர்கள் தொழும் போது இரண்டு சாட்சிகளை போட்டு CCTV கேமரா போன்று கண்காணித்து ரூ.10,000/= அபராதாம் விதித்தார்கள் (ரூ.10,000/= என்பது 1997-களில் ரூ.10,0000/= க்கு சமம்) இரண்டு சகோதரர்களுடைய
வீட்டில் ஜனாஸா நிகழ்ந்த நேரத்தில் ஜனாஸா உடலே கரைந்துபோனாலும் அபராதம் கட்டாமல் அடக்க செய்யமாட்டோம்
என்று திமிர்வாதம் செய்தார்கள். (அந்த ரூ.10,000/=க்கு திருவாரூர்க்கு நன்கொடை என்ற பில் கொடுத்தது பேடித்தனம் அது தனி விஷயம்). இந்த நேரத்தில் தான் இணைவைக்கும் இமாமை பின்பற்றி தொழக்கூடாது என்ற இஸ்லாத்தின் போதனை ஏகத்துவ சகோதரர்களை உரசிப்பார்த்தது.
"தனியாக தொழுவதை விட ஜமாஅத்தாக தொழுவது 27 மடங்கு நன்மை" என்ற மாநபியின் கட்டளையயும் பின்பற்ற வேண்டும், அதே சமயத்தில் அந்த இமாம் இணைவைப்பவராக இருக்கக்கூடாது
என்ற முடிவு செயது மஹாஜன சபைக்கு மனு கொடுத்தோம். வழக்கம் போலவே இந்த மனுவும் குப்பையில் தூக்கி வீசப்பட்டது. இப்படி நம்முடைய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்காத போதுதான் ஜலாலியா தெரு மர்க்கஸை அனைத்து சகோதரர்களும் ஒன்றிணைந்து ஆரம்பித்தார்கள்.
இந்த நேரத்தில் " அல்லாஹ்வின் மீது சத்தியமாக நாங்கள் அரசியலில் போட்டியிடமாட்டோம்" என்று முழங்கிய தமுமுக "தவ்ஹீத் ஜமாஅத்-தான் எங்களுக்கு முட்டுக்கட்டை" என்று சொன்னது. இதன் பிறகு 2004-ல் தனியாக களம் காணவேண்டிய சூழ்நிலை உண்மையான தவ்ஹீத் சகோதரர்களுக்கு ஏற்பட்டது. நமதூர் சுன்னத் ஜமாஅத்தோடு பலவகையிலும் சத்தியத்தை எடுத்துச் சொல்லி பல மாற்றங்களை சமதாய மக்களிடத்தில் உண்மையான தவ்ஹீத் சகோதரர்கள் ஏற்படுத்தினார்கள். இதன் பிறகு கடந்த 2004-ஆம் ஆண்டு TNTJ & சுமையா அறக்கட்டளைக்காக
சொந்த இடம் வாங்கப்பட்டு ஏகத்துவப் பிரச்சாரம் நடைப்பெற்றுக் கொண்டுவந்தது.
இணைவைக்கும் இமாமை பின்பற்றி தொழக்கூடாது என்ற தமுமுக சகோதர்களின் சிந்தனை தடுமாற ஆரம்பித்தது. காரணம் தமுமுக,தவ்ஹீத் ஜமாஅத் பிளவுதான். இவர்கள் கொள்கையில் உறுதியாக இருந்திருந்தால் (முன்னால் TNTJ ) சுமையா அறக்கட்டளை நபிவழிப் பள்ளியில் தொழுது இருக்கவேண்டும்.
2004-லிருந்து 2010 ஏப்ரல் 4-ந் தேதிவரை இவர்களில் பலபேர் இங்கு வந்து தொழுவில்லை. மெளலீது ஒதும் இமாம்களையும், ஷிர்க் செய்யும் இமாம்களையும், அஸ்மா வேலை செய்யும் பீர் முஹம்மது-வையுமே பின்பற்றி தொழுதார்கள்.
(ஆனால் சுமையா, TNTJ பிரிவினை ஏற்பட்ட 04-04-2010 அஸர் தொழுகைக்கே இவர்கள் வந்து ஜமாஅத் தொழுகையில் கலந்துக்கொண்டார்கள் என்பது தனி விஷயம்) ஆரம்பத்தில் தியாக மனப்பான்மையோடு செயற்பட்ட இவர்கள் படிப்படியாக TNTJ-வை எதிர்க்கவேண்டும் என்ற எண்ணத்தோடு பல முரண்பாடுகளோடு இப்போது சமுதாயத்தில் வலம்வந்துக் கொண்டிருக்கிறார்கள். மேற்கூறப்பட்ட வரலாறுகளை நாம் விளக்குவதற்கு காரணம் தமுமுக-வும் மற்றும் சில லட்டர்பேடு இயக்கங்களும் தான் ஏகத்துவத்தை நமதூரில் விதைத்து, பரப்பிவருகிறது என்ற பொய்யான மாயைதான்.
ஏகத்துவ சிந்தனை நம்மை அடைவதற்கு முன்பும், இப்போதும் பல தவ்ஹீத் சகோதர்களுடைய திருமணங்களில் பல வரதட்சணை இல்லாமலும், ஆடம்பரம் இல்லாமலும் ஒரு சில சுன்னத்துகளை பின்பற்றி நடந்துக் கொண்டுதான் உள்ளது. முழுமையான நபிவழியில் நடைபெறாததற்கு காரணம் நமதூர் சுன்னத் (?) ஜமாஅத் தான். கூத்தூர், மஞ்சக்கொல்லை, திருவிடச்சேரி,
போன்ற ஊர்களை பின்பற்றி நமதூரிலும் சுன்னத் (?) ஜமாஅத் முன்னின்று நபிவழித் திருமணங்களை நடத்தி தரவேண்டும் என்று கொடுக்கப்பட்ட 3 மனுக்களையும் குப்பையில் தூக்கிப்போட்டார்கள். ஒரு மனுவை மட்டும் விசாரித்த (?) மஹாஜன சபை அப்போதும் எந்த மாற்றமும் செய்யவில்லை.
சுமையா டிரஸ்ட்-ல் நாம் ஒன்றாக இருந்த நேரத்தில் தற்போது TNTJ கிளைத் தலைவராக உள்ள சகோ. சபியுல்வரா டிரஸ்ட்-ஐ நபிவழி திருமணத்திற்காக
தொடர்பு கொண்ட போது, "இப்போது நாம் உள்ளூரில் நடத்தவேண்டாம், வெளியூரில் நடத்து" என்று டிரஸ்ட் நிர்வாகிகள் சொன்னார்கள். அதன் அடிப்படையில் திருவாரூரிலேயே திருமணம் நடைபெற்றது.
இதனால் எப்படியாவது ஒரு நபிவழித் திருமணத்தை நடத்திக்காட்ட வேண்டும் என்ற சிந்தனை TNTJ சகோதரர்களுக்கு
ஏற்பட்டது. இந்த நேரத்தில் நபிவழி திருமணம் என்றால் எதுவென்று சமுதாயத்திற்கு
விளக்க கடமைப்பட்டுள்ளோம்.
- நல்ல நேரம், கெட்ட நேரம் பார்ப்பது கூடாது,
- மாற்று மத சடங்குகள் கிடையாது,
- ஆடம்பர செலவுகள் கிடையாது,
- மஹர் திருமண பெண்ணின் விருப்பம். அவள் கேட்பதை மணமகன் தர வேண்டும். ( தரயிலாவிட்டால் வேறு பெண் பார்த்துக்கொள்ள வேண்டும்.)
- குறிப்பாக வரதட்சணை இல்லை,
- வரதட்சணைக்காக கமிஷன் கிடையாது...
இதை தான் நரக வழி திருமணம் என்கிறான். இந்த நடைமுறைகளை நரகத்திற்கு கொண்டு சேர்க்கும் என்று விளம்பரப்படுத்தும் இவர்கள் உரிய விளக்கம் தரவேண்டும்.
TNTJ செய்துவைத்த இந்த திருமணத்தில் இஸ்லாத்திற்கு மாற்றமான எந்த செயலும் இல்லை என்பதையும், மேலும் எல்லாவற்றிக்கும்
குர்ஆன் & ஹதிஸ் ஆதரங்களோடு நிருபிக்க தயாராக இருக்கிறோம் என்பதையும் நீ இதை நரக வழி என்றால் நீயும் அந்த வழி தான். அந்த வழியை தயவு செய்து போதிக்க வேண்டாம்.
அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையால் இந்த திருமணம் சிறப்பாக நடைப்பெற்றது. ஜமாஅத் தலைவர் J.M.தாவூது, நிர்வாகஸ்தர்கள்
மற்றும் ஏகத்துவ எதிர்களுடைய முகத்தில் அல்லாஹ் கரியை பூசினான். மொத்த ஊரே திரண்டது.
- ஏழைக்கு ஒரு நீதி, பணக்காரர்களுக்கு
ஒரு நீதி என்ற கொள்கை உடையவர்கள்,
- விபச்சாரம்
செய்தால் அடுத்தவர்களுக்கு ஒரு நீதி தன் குடும்பத்திற்கு ஒரு நீதி என்ற கொள்கை உடையவர்கள்,
- மதுபானத்தை
எந்த நேரமும் தண்ணிர் போல் குடிப்பவர்கள்,
- புகை பழக்கம் உடையவர்கள், எல்லாவித குற்ற செயல்களிலும் ஈடுபடுபவர்கள்,
- பெயரளவில்
முஸ்லிமகளாக இருப்பவர்கள்.
என்று இப்படியாக அனைவரும் திரண்டு தாசில்தார் முன்னிலையில் ஒப்புக் கொண்டுவிட்டு ஊருடைய சங்கை விளையாட்டு பொருட்கள் போல அடிக்கடி அலறச் செய்தார்கள்.
இந்த நேரத்தில் இன்னொரு உண்மையையும் சொல்லிக் கொள்கிறோம். ஊரை மீறி இந்த திருமணம் நடைப்பெற்றதாக
அவதூறு பரப்பி வருகிறார்கள். 5ஆம் தேதி திருமணம் நடைப்பெறுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது. J.M.தாவூது மற்றும் எந்த நிர்வாகிகளும் TNTJ நிர்வாகிகளை அழைத்து பேசவில்லை.
மணமகன் வீட்டாரோ, மணமகள் வீட்டாரோ சுன்னத் ஜமாஅத்தை தொடர்புக் கொள்ளவும் இல்லை. இந்நிலையில் வழக்கத்திற்க்கு
மாற்றமாக ஆட்டோ விளம்பரம் செய்து மஹாஜன சபை கூட்டம் நடத்தி, காவல்துறையை தொடர்புக் கொண்டு இறுதியாக தாசில்தாரிடம் ஒப்புக்கொண்டார்கள்.
இதில் நாம் எந்த கட்டத்திலும் ஊரை மீறுதல் என்ற பேச்சுக்கே வேலையில்லை.
அரசு அதிகாரிகளை மீறி, நள்ளிரவில் சங்கை அலறவைத்து பிரச்சணை செய்தது சுன்னத் ஜமாஅத் (?) தான். திருமணத்தன்று காவல்துறை மூலம் TNTJ சகோதரர்களை தொடர்புக் கொண்ட நிர்வாகம் "வெளியூரிலிருந்து யாரும் வரக்கூடாது "என்று சொன்னதால் கொள்கை சொந்தங்களை அப்படியே தடுத்து நிருத்தினார்கள் TNTJ சகோதரர்கள். வெளியூரிலிருந்து யாரும் வரவில்லை, சுமையா தவ்ஹீத்(?) சகோதரர்களும், தமுமுக தவ்ஹீத்(?) சகோதரர்களும், இன்னும் யாரெல்லாம் நாங்கள் தவ்ஹீத் வாதிகள் (?) என்று சொன்னார்களோ அவர்களும் திருமணத்திற்கு
வரவில்லை.
நபிவழிக்காக நாங்களும் உறுதுணையாக இருப்போம் என்று யாரும் TNTJ-வை தொடர்புக் கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு சிலர் நபர்களை வைத்து எல்லாம் வல்ல இறைவன் நிகழ்த்திய அற்புதம் என்றே நாங்கள் கருதுகிறோம்.
சத்தியம் வந்தது, அசத்தியம் அழிந்தே தீரும்... என்ற ஏகனின் வாக்குக்கினங்க
ஒரு சிறந்த காரியம் நடந்து முடிந்திருக்கிறது.
இந்த திருமணம் நடைபெறுவதற்கு
தங்களது ஆலோசனையின் மூலம் எங்களை வலுப்படுத்திய
அனைத்து மாநில, மாவட்ட சகோதரர்களுக்கும் எல்லாம் வல்ல ரப்புல் ஆலமீன் முழுமையான நன்மைகளை வழங்க வேண்டும் என்று பிராத்திக்கிறோம்.
எங்களது இந்த தூய எண்ணங்களை கொச்சைப்படுத்தும்
விதமாக புருகான் பின்னணயில் இருக்கிறார், ஆஸ்திரேலியா இருக்கிறார், வெப்சைட் விளம்பரத்திற்க்காக
செய்தார்கள் உள்ளுர் மக்கள் வரவில்லை, அப்படி இப்படி என்று சுய விளம்பரத்திற்காக எழுதினால் உரிய முகவரியோடு நேரிலோ அல்லது உரிய புகைப்படத்தோடு இனையதளத்திலோ வாருங்கள். விவாதிப்போம்... வஸ்ஸலாம்..
"மக்கள் உங்களுக்கு எதிராக திரண்டுவிட்டனர், எனவே அவர்களுக்கு
அஞ்சிக் கொள்ளுங்கள்
என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினார். இது அவர்களுக்கு நம்பிக்கையை
அதிகமாக்கியது. எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன். அவன் சிறந்த பொறுப்பாளர்" என்று அவர்கள் கூறினார்கள்.
திருக்குர்ஆன் ( 3:173)