அல்லாஹ்வின் வற்றா கருனையால் அடியக்கமங்கலம் ஏகத்துவ
வாதிகளின் பல நாள் கனவான நபி வழி திருமணம் மற்றும் நபிவழி ஜனாஷாவை தமிழ்நாடு தவ்ஹீத்
ஜமாஅத் ( TNTJ ) அடியக்கமங்கலம் கிளை சார்பாக, போலி சுன்னத் ஜமாஅத்-காரர்களின் 300 ஆண்டுகால தடையையும் மீறி, பல சூழ்சிகளை அல்லாஹ்வின்
உதவியால் முறியடித்து நபிவழியை நிலைநாட்டியது. அல்ஹம்துலில்லாஹ்.!!!
இந்த நபி வழி திருமணம்
மற்றும் நபி வழி ஜனாஸா அடக்கம், மூலம் சில கயவர்களின் முகத்திரையும் கிழிக்கப்பட்டுள்ளது.
அல்லாஹ் அக்பர்!!!
ஆம் 04-04-2010 அன்று சுமையா டிரஸ்டை அடியக்கமங்கலம் தவ்ஹீத் ஜமாஅத் ஆக மாற்ற வேண்டும் என்று TNTJ மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், கிளை உறுப்பினர்கள் மற்றும் சுமையா
டிரஸ்ட் நிர்வாகிகளின் முன்னிலையில் ஒரு கூட்டம் நடைப்பெற்றது.
"20 நபர்களுக்கு
மட்டும் சொந்தமான சுமையா டிரஸ்ட்டை கலைத்துவிட்டு அடியக்கமங்கலம் தவ்ஹீத் ஜமாஅத் ஆக அரசாங்கத்தில்
பகிரங்கமாக பதிவு செய்து, அனைத்து உறுப்பினர்களுக்கும் அந்த பள்ளியில் உரிமை வழங்க
வேண்டும்" என்று TNTJ கேட்டுக்கொண்டது.
ஆனால் இந்த கள்ள
பேர்விலிகள் சில காரணங்களை கூறி "அடியக்கமங்கலம் தவ்ஹீத் ஜமாஅத்" ஆக மாற்ற மறுத்து விட்டனர்.
( அவர்கள் கூறிய
காரணத்தை மேலே வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. )
சுமையா டிரஸ்ட்
தலைவர் குத்துபுதீன் அவர்களிடம் மாநில நிர்வாகிகள்
04-03-2010 அன்று இறுதி முடிவைக் கேட்கும் போது,
குத்துபுதீன் (சுமையா டிரஸ்ட் தலைவர்) : தமிழகத்தில் குர்ஆன் & ஹதிஸை அடிப்படையாக கொண்டு இயங்கும் அமைப்பு TNTJ என்றும், அதன் அடிப்படையில்
தான் சுமையா டிரஸ்ட் செயல்படுகிறது(?) என்றும், அடியக்கமங்கலத்தில் சுமையா டிரஸ்ட் ஆரம்பிக்கப்பட்ட நோக்கம் இன்னும் முழுமை
அடையவில்லை என்றும், அதில் " நபிவழி திருமணமும்,
நபிவழி ஜனாஸாவும் என்று நடைபெறுகிறதோ அன்று தான் அடியக்கமங்கலம் தவ்ஹீத் ஜமாஅத்-ஆக
மாற்றப்படும். அது வரைக்கும் சுமையா டிரஸ்ட்-ஆக தான் செயல்படும்" என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
மேலும் "TNTJ-வை தான் பின்பற்றுவோம்" என்று பாருக் ( தம்பிகனி ) அவர்களும் "TNTJ-வுக்கு எதிராக செயல்படமாட்டோம்" என்று
டிரஸ்ட் தலைவர் குத்துபுதின் அவர்களும் கூடுதல் செய்தியையும் பதிவு செய்தனர்.
இந்த நொண்டி காராணங்களை
ஏற்றுக்கொள்ளாத TNTJ மாநில நிர்வாகிகள் சுமையா டிரஸ்ட் நிர்வாகிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை
எடுத்து TNTJ-வில் இருந்து அவர்களை நீக்கினார்கள்.. அதன் பின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம்
கிளை தனியாக இடம் வாங்கி மர்க்கஸ் அமைத்து செயல்பட்டுவருகிறது.
பிரிந்த சில மாதங்களில்
நபிவழி திருமணம் மற்றும் நபிவழி ஜனாஸா நடைப்பெறாமல் இருந்தும் சுமையா டிரஸ்ட் கயவர்கள்
"அடியக்கமங்கலம் தவ்ஹீத் ஜமாத் (ATJ)" என்று போர்டை மாட்டிக்கொண்டு மக்களுக்கு மத்தியில்
குழப்பத்தை ஏற்படுத்தி பண வேட்டையில் ஈடுப்பட்டனர்.
"அடியக்கமங்கலம்
தவ்ஹீத் ஜமாஅத் (ATJ)" என்று அரசங்கத்தில் பதிவு செய்தார்களா(?) இல்லையா(?) என்பதை கூட இரகசியமாக வைத்துக்கொண்டு
பணவேட்டையில் இறங்கி உள்ளார்கள்.
இவர்களின் கொள்கை(?)
என்னவென்று அன்றே TNTJ அரிந்து கொண்டது. பதிவி வெறி பிடித்த இவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்
என்றை பெயரை வைத்துக் கொண்டு நபி வழிக்கு மாற்றமாகவும், எதிராகவும் களம் இறங்கினர்.
ஆனால் அல்லாஹ்வின்
கிருபையால் அடியக்கமங்கலம் TNTJ கிளை நபிவழி திருமணத்தை நடத்தியும், நபிவழி ஜனாஸாவைஅடக்கம் செய்தும்
காட்டியது. இந்த இரண்டும் நடந்த பின்னர் மேற்கண்ட வீடியோவில் கூறுவது போல குத்துபுதீன் அவர்கள்,
1) சுமையா டிரஸ்ட்-டை முழுமையாக கலைத்துவிட்டு அடியக்கமங்கலம் தவ்ஹீத் ஜமாஅத்
ஆக மாற்றி அரசங்கத்தில் பதிவு செய்து பகிரங்கமாக அறிவிக்க தயாரா ???
TNTJ-வில் கூட
நீங்கள் இணைய வேண்டாம் ...
2) உங்கள் பள்ளியில்
பணியாற்றும் தொண்டர்களை அடியக்கமங்கலம் தவ்ஹீத்
ஜமாஅத்-தில் பகிரங்கமாக உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ள தயாரா ???
3) 20 நபர்களுக்கு
மட்டும் உள்ள பள்ளியின் அதிகாரத்தை பொதுவாக உறுப்பினர்களுக்கும் தர தயாரா ???
இந்த கேள்விகளுக்கு
பதில் தரும் கடமை சுமையா டிரஸ்ட் நிர்வாகிகளுக்கு உள்ளது. வீடியோவில் ஒன்றும் நேரில்
ஒன்றும் பேசும் இந்த கருப்பு ஆடுகளை பொதுமக்கள் அடையாளம் கண்டுக்கொள்ள வேண்டும்.
TNTJ-வுக்கு எதிராக
செயல்படமாட்டோம்(?) என்று கூறிவிட்டு நபிவழிக்கு தடையாக வருபவர்களும் இந்த போலி தவ்ஹீத்
வாதிகள் தான்.
சுமையா டிரஸ்ட்-டில்
முக்கிய பொருப்பில் வசிக்கும் அண்ணன் திரிஸ்டார் சாதிக் தற்போது சுன்னத் ஜமாஅத் நிர்வாகியாக
இனைந்து இணை வைப்பான காரியங்களுக்கு துணை செல்கிறார். அதுமட்டுமின்றி, வரதட்சனை திருமனங்களையும், பிதஅத்-தான திருமனங்களையும் இவரே முன்னிலை வகித்து நடத்திவைக்கீறார்.
நபிவழி திருமணத்தின் போதும், நபி வழி ஜனாஸா போதும் நபிவழிக்கு மாற்றமாக பல சூழ்ச்சிகளை செய்தவரும் இவர் தான்.
ஒரு பக்கம் தவ்ஹீத் வாதி என்று கூறிக்கொண்டு, மறு பக்கம் இனைவைப்பான காரியங்களுக்கும் சிறப்பாக ஜால்ரா போடுவதும், இவரது நயவஞ்சகதனத்தை தட்டிகேட்க சுமையா டிரஸ்ட்-டில் ஒரு ஆண் கூட இல்லை என்பதை நினைக்கும் போது மன வேதனையாக உள்ளது.
சுமையா டிரஸ்ட் நிர்வாகி பாருக் ( தம்பிகனி ) அவர்களிடத்தில் நம்முடைய சகோதரர்கள் இவரை பற்றி கேட்கும் போது, "சாதிக் செய்வது முழுக்க முழுக்க தவறு என்றும், அவரிடம் சென்று நீங்கள் செய்வது தவறு என்று சொல்லுவதற்கு எங்கள் டிரஸ்டில் யாருக்கும் திராணி இல்லை என்றும் வேண்டுமானால் நீங்கள் சென்று கூறுங்கள் என்று நம்மை தூண்டுவது" இவர்களது கயமத்தனத்தை படம் போட்டு காட்டுகிறது.
இப்படி முழுக்க முழுக்க நபி வழிக்கு மாற்றமாக செய்துவிட்டு அப்பாவி பொதுமக்களிடம் TNTJ சுமையா டிரஸ்ட்-டின் சொத்தை எழுதி கேட்டது என்று அறிவிக்கும் கோழைகளே.! உங்களுக்கு திராணி இருந்தால் எங்கள் முன் வந்து இந்த வார்த்தை கூறும்.
பதவி, சொத்து, பணம் என்று பித்து பிடித்து அலையும் சுமையா டிரஸ்ட் அல்லை நொல்லைகளே.! எங்களது சொத்து குர்ஆனும் & ஆதாரமான ஹதிஸ்-ம் தான்.
எங்களுடைய குர்ஆன் & ஹதிஸ் சொத்துகளுடன் உங்கள் சொத்தை மதிப்பிடும் போது கால் தூசிக்கு சமமாகாது.
சுமையா டிரஸ்ட் ஆதரவாளர்களே.! சிலரின் முகதாட்சனைக்காக எங்களை நீங்கள் வெறுக்கிறீர்கள். ஆனால் உண்மையான கொள்கை தான் வெற்றி பெறும். முகதாட்சனைகள் அல்ல. உங்களது கேள்விகளை அவர்களை நோக்கி ஏவி, தீமையில் இருந்து அவர்களை நேர்வழி படுத்த கூடிய கடமை உங்களுக்கும் உண்டு... அல்லாஹ் எங்களுக்கு போதுமானாவன்... வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கு நேர்வழி வழங்குவானாக.
குறிப்பு:-
சுமையா டிரஸ்டில் சில சகோதரர்கள் திரிஸ்டார் சாதிக் பற்றி கேள்விகளை எழுப்பி பதில் வராததால் TNTJ -வில் இணைந்தனர்.
( அல்ஹம்துலில்லாஹ்...)
( அல்ஹம்துலில்லாஹ்...)
சுமையா டிரஸ்ட்(?) பற்றி முழுமையாக அறிந்து கொள்ள