நபிவழி திருமணம் அடியக்கமங்கலத்தையே தழைகீழாக புரட்டி தவ்ஹிதை எதிர்க்கும் எதிரிகளை மன்னை கவ்வ வைத்து அந்த பேரதிர்ச்சியிலிருந்து இன்னும் மீழாத பட்சத்தில் நபிவழி நல்லடக்கத்தையும் நடத்தி மீழ முடியாத மரண அடியை கொடுத்துள்ளது தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்.
பாரம்பரியம் என்ற பெயரில் ஒரு குருகிய வட்டத்திற்குள் நமதூர் மக்களை அடிமையாக வைத்துக்கொண்டு ஊர் ஒற்றுமை பேனுகிறோம் என்ற பெயரில் தானும் மார்கத்தை பின்பற்றாமல் மக்களையும் பின்பற்ற விடாமல் நாங்கள் சொல்வது போன்று தான் தொழவேண்டும், நாங்கள் சொல்வது போன்று தான் திருமணம் செய்ய வேண்டும், நாங்கள் சொல்வது போன்று தான் ஜனாஸா அடக்கம் செய்ய வேண்டும், இல்லை என்றால் பள்ளி வாசலுக்குள் தொழ அனுமதிக்க மாட்டோம், ஊர் ஒலை தரமாட்டோம், அடக்கம் செய்ய விடமாட்டோம், என்ற, இந்த திருமணம், ஜனாஸா போன்ற விசயத்தை மட்டும் கையில் வைத்துக்கொண்டு மக்களை மடயர்களாக்கி ஜமாத் நடத்தி கொண்டிருக்கும் மதிக்கெட்ட சுன்னத் ஜமாத்தினர் எற்கனவே நபிவழி திருமணத்தை அடியக்கமங்கலத்தில் நடத்த விடமாடோம், என்று கல்லை தூக்கி எறிந்தால் கரைந்து போகும் காக்கை கூட்டத்தை வைத்து கொண்டு மிரட்டி பார்த்தவர்கள் TNTJ -வினர் அடித்து அடியில் கரைந்து போன இடம் தெரியாமல் ஒடிய பிறகு சருக ஆரம்பித்த ஜமாத் தலைவர் பதவி இன்றும் சருகி கொண்டுதான் இருக்கிறது.
முட்டு கொடுக்க வந்தவர்கள் முட்டி மோதி கொண்டுதான் இருக்கிறார்கள். தற்போது முட்டு கொடுத்து கொண்டிருக்கும் பசுருதினும் இன்றைக்கு. நாளைக்கு என்று இழுத்து கொண்டிருக்கிறார். என்பது குறிப்பிடதக்கது. இதற்கிடையில் தெரு பிரதிநிதியாக உள்ளே நுழைந்த சுமையா டிரஸ்ட் தவ்ஹித்(?) வாதி திரிஸ்டார் சாதிக் தற்போது தலைவராக முட்டு கொடுத்து கொண்டிருக்கும் பசுருதீனை பின்னுக்கு தள்ளி விட்டு ஜமாத் தலைவராக ஆகும் வரை ஒய மாடேன் என்று பனிப் போரை தொடங்கி இருக்கிறார்.
TNTJ -வினர் செய்யும் செயல்கள் மார்க்கத்திற்க்கு உட்பட்டது தான் என்று தெரிந்தும் அதை தடுப்பதற்கும் தவ்ஹீதை அழிப்பதற்கும் அவ்வப்போது ஆலோசனை கொடுப்பது போன்று தன்னுடைய அறிவு திறனை(?) வெளிப்படுத்தி வருகிறார். ஆனால் இவர் வெரும் வாய் சவடால் விடுவதற்க்கு தான் லாயக்கு என்று பசுருதீனுக்கும் அவரோடு இருப்பவருக்கும் நன்றாக தெரியும் இந்த வருட ஃபித்ரா விசயத்தில் எவ்வளவு சீண் போட்டார் என்பதையும் அவர்களே பார்த்து விட்டார்கள். ( இவரின் தவ்ஹிதையும் இவர் தவ்ஹித் வாதி என்று எப்படி பட்டம் பெற்றார் என்பதையும் இவர் தவ்ஹீதை நுழைக்க ஊர் ஜமாத்தில் நுழைந்தது பற்றியும், இப்போது இவர் தவ்ஹீதுக்கு எதிராக செயல் படுவது பற்றியும், தவ்ஹீதை அழிக்க இவர் எற்றிருக்கும் தவ்ஹித்(?) கொள்கையை பற்றியும் இன்ஷா அல்லாஹ் தனியாக பிரித்து காட்டப்படும்).
திருமணம் மற்றும் ஜனாஸா என்று இந்த இரண்டை மட்டுமே வைத்து மிரட்டி ஜமாத் நடத்தி வந்த சுன்னத் ஜமாத்தின் கொட்டம் அடக்கபட்டுவிட்டது. சிறு கூட்டமாக இருக்கும் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் குர்ஆன் மற்றும் ஹதீஸ் என்ற இந்த இரட்டை ஆயுதத்தால் போலி பித்அத் ஜமாத்தின் அஸ்திவாரம் உடைக்கபட்டுவிட்டது. ஊர் ஜமாத்(?) என்ற போலி மாயையை அடிமையாக இருந்த மக்கள் மனதில் இருந்து அகற்றப்பட்டுவிட்டது. வெரும் பெரிய கட்டிடத்தை மட்டுமே வைத்து கொண்டு எந்த கொள்கையும் இல்லாமல், எந்த சக்தியும் இல்லாமல் உயிர் பினமாய் இருக்கும் ஊர் ஜமாத்தின் மதிப்பிற்குறிய(?) தலைவர் பதவி மானம் இழந்து நிற்கிறது. கொள்கை இல்லாமல் பதவி ஆசை பிடித்த எவராக இருந்தாலும் இனி வீட்டுக்கு ஒருவர் மாதம் ஒரு முறை தலைவராக வரலாம். வருபவர்கள் எவராக இருந்தாலும் சரி இனியும் இந்த போலி கட்டுபாடுகளை சொல்லி மக்களை மிரட்டி பார்க்கட்டும், காரி துப்பி விட்டு மக்கள் தவ்ஹீதின் பக்கம் அலை அலையாய் திரும்புவார்கள்...