நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : முஹர்ரம் மாதம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை அதற்க்கு முந்தைய ஒராண்டின் பாவத்திற்கு பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிபார்க்கிறேன்
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி),
நூல்: முஸ்லிம் 1977
ஆஷூரா நோன்பு என்பது பத்தாவது நாள் நோற்கின்ற நோன்பாக இருந்தாலும் யூதர்களும் அந்நாளில் நோன்பு நோற்றதால் நபி(ஸல்) அவர்கள் யூதர்களுக்கு மாற்றம் செய்யும் வகையில் ஒன்பதாவது நாளும் நோன்பு வைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்கள்
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)
நூல்; முஸ்லிம் 1916,1917