அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 31-08-2014 அன்று அடியக்கமங்கலம் 2
வது கிளை சார்பாக சரியாக காலை 10 மணியளவில் தர்பியா நடைபெற்றது.
இதில் முதல் உரையாக மாவட்ட பேச்சாளர் அனஸ் நபீல் அவர்கள்
"இளைஞர்களின் இன்றய நிலை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.இதில் நம் சமுதாய இளைஞர்கள் செல்லும் வழிகள் குறித்து பேசப்பட்டது...
அதனை தொடர்ந்து மாவட்ட பேச்சாளர் அப்துல் காதர் அவர்கள் "இஸ்லாத்தின் பார்வையில் நிர்வாகவியல்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.இந்த உரையில் ஒரு நிர்வாகிகள் எப்படி இருக்க வேண்டும் என்று விளக்கம் அளித்தார்.
இறுதியாக மார்க்க சந்தேகங்களுக்கு கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்...