கடந்த 26-12-2014 அன்று மவ்லிதுக்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தம் இல்லை
என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தும் விதமாக பெரிய பள்ளிவாசல் அருகில்
இருக்கும் TNTJ அனுமதி பெற்ற போர்டில் குர்ஆன் & ஹதிஸ்
எழுதப்பட்டதையும், சில பெயர் தாங்கி முஸ்லிம்களால் இறைவசனத்தின்
மீதும் & நபிகள் நாயகத்தின் பொன்மொழிகள் மீதும் சாணியடித்த
செயலையும் தாங்கள் அறிவீர்கள்.
எத்திவைக்கும் TNTJ வின் அபார வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத
சில சமுக விரோதிகள் தாங்கள் சத்திய கொள்கையை தடுத்து நிறுத்துவதாக
நினைத்துக் கொண்டு மறைமுகமாக அவர்களும் இந்த வளர்ச்சிக்கு ஒரு
காரணமாக இருகின்றார்கள்...
ஆம்,
ஊரில் நடந்து வரும் அனாச்சாரங்கள், ஃபித்அத்களை கண்டித்தும் & விளக்கம்
அளிக்கும் நோக்கிலும் TNJT சிறிய அளவில் பிரச்சாரத்தை துவங்கும் போது
கலக காரர்கள் அவர்களுடைய கைவரிசையை கட்டவிழ்த்து விடுவார்கள்.
அவர்கள் வெற்றி பெற்றது போல் நினைப்பார்கள். இறுதியில் எந்த
பிரச்சாரத்தை சிறிய அளவில் நடத்த முற்பட்டமோ கலக காரர்களின்
ஊக்கத்தால் அதை பிரமாண்டமாக அதே இடத்தில் நடத்தி சத்தியத்தை
நிலைநாட்டிய வரலாறு தான் உண்மை...
1. இணைவைப்புக்கு எதிராக குர்ஆன் & ஹதிஸ் பேனர்கள் சிறிய அளவில்
வைக்கப்பட்டது. அதை 2 முறை சமுக விரோதிகள் கிழித்தனர். இறுதியில்
மூன்றாவது முறை யாக 22*7 அளவிலான மிக பிரம்மாண்டமான பேனர்
வைக்கப்பட்டது அதற்க்கு என்று தனியாக 1000W ஹாலோஜன்
வைக்கப்பட்டது.. கச்சேரிக்கு வந்தவர்கள் எல்லாம் அதை பார்த்து படித்து
சென்றனர்.
2. சிறிய அளவில் மெகா போன் மூலம் தெருமுனை பிரசாரம் செய்து
கொண்டு இருக்கும் போது கயவர்கள் கலக்கம் செய்யதார்கள். அடுத்த
வாரத்தில் அதே இடத்தில் மீண்டும் பெரிய அளவில் ஒலிபெருக்கி மூலம்
சத்திய பிரச்சாரம் செய்யப்பட்டது.
3. தற்போது சிறிய அளவில் போர்டில் எழுதியதை மவ்லிது பாடல்களுக்காக
குர்ஆன் வசனத்தின் மீது சாணி அடிக்கப்பட்டது. இவர்களின் ஊக்கத்தால்
மவ்லிது, தர்ஹா, மீலாத் நபி, கச்சேரி போன்றவைக்கும் இஸ்லாத்துக்கும்
சம்பந்தம் இல்லை என்று குர்ஆன் வசனங்கள் பொருந்திய மவ்லீது ஒரு
அபாயம்,மறுமை வெற்றிக்கு நபிவழியா,முன்னோர்கள் வழியா என்ற
தலைப்பு கொண்ட 1000 நோட்டிஸ்கள்
வீடு வீடாக சென்றுள்ளது. எதை மக்களுக்கு தெரிய கூடாது என்று
சாணியடிதார்களோ அது இன்று அடியக்கமங்கலம் முழுவதும் பல
திசைகளில் பிரச்சாரமாக கொண்டு செல்லப்பட்டுள்ளது. இப்போது மவ்லிது
அடிமைகள் என்ன செய்வார்கள் ???
அவர்கள் அறியாத வகையில் எங்களது தாவா பணிகளை ஊக்கப்படுத்தும் ஓர்
இறை ஏகத்துவ கொள்கை வெறுப்பாளர்களுக்கு நன்றி...