ஏக இறைவனின் மகத்தான கிருபையினால் 29-08-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக "இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம் " முஸ்லிம்களுக்கான நேரடி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிளை-2 தலைவர் N.அப்துல் காதிர் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் முன்னுரையாக கிளை-1 இமாம் S. பகுருதீன் அவர்கள் இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததின் அவசியம் என்ன..? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்...!
அதன் பிறகு சகோதரர் TNTJ தனிக்கைக்குழு உறுப்பினர் கோவை R.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் மக்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்கள்.
நிகழ்ச்சி துளிகள் :
1) இந்நிகழ்ச்சிக்காக இரண்டு முறை இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி ஏன் என்ற தலைப்பில் தெருமுனைப்பிரச்சாரம் செய்யப்பட்டது.
2) இந்நிகழ்ச்சிக்காக 3000 நோட்டிஸ்கள்,200 போஸ்டர்கள், 2 ஆட்டோ ஃப்லக்ஸ் அடிக்கப்பட்டது மக்களுக்கு விளம்பரப்படுத்தப்பட்டது.
3) ஆட்டோ மூலம் தொடர்ச்சியாக 4 நாட்கள் அலோன்ஸ் செய்து மக்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.
4) மக்களின் பார்வைபட பட்டக்கால்தெரு பேருந்து நிலையம் அருகிலும் , செட்டித்தெரு பேருந்து அருகிலும் இரண்டு ஃப்ளக்ஸுகள் வைக்கப்பட்டது.
5) நிகழ்ச்சிக்கு வரும் பொதுமக்கள் தங்களுடைய மார்க்க அறிவை வளர்த்து கொள்வதற்க்காக "இக்ரா தவ்ஹீத் நூலகம்" சார்பாக புத்தகம்,டிவிடிகள் போன்றவைகள் விற்பனை ஸ்டால் வைக்கப்பட்டது.
6) நிரம்பி வழிந்த மக்கள் வெல்லத்தால் மண்டபத்தின் 1 தளத்தில் நிகழ்ச்சியை காண 2 L.E.D டீவிக்கள் வைக்கப்பட்டது...!
7) இஸ்லாம் சம்பந்தாமன கேள்விகள், TNTJ நிலைப்பாடு பற்றிய கேள்விகள், சமுதாய பற்றிய கேள்விகள் என 20 கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கு தக்க பதிலளிக்கப்பட்டன.
அல்ஹம்துலில்லாஹ்....
இந்த நிகழ்ச்சிக்காக பிராத்தனை செய்த, பொருளாதாரம் வழங்கிய, உழைத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்...
இறுதியாக கிளை-1 செயளாளர் இபுராஹீம் அவர்கள் நன்றியுறையாற்றினார்கள்...!