அடியக்கமங்கலத்தில் மீலாது நபி விழா என்ற பெயரில் சில பெயர்தாங்கி
முஸ்லிம்களால் ஒரு மாநாடு கடந்த சில வாரங்களுக்கு முன் நடைப்பெற்றது.
இஸ்லாத்திற்க்கு முற்றிலும் மாற்றமான , மாற்று மத கலாச்சாரத்தை அப்படியே
பின்பற்றி கிருஸ்த்துவர்கள் ஈஸா நபிக்கு பிறந்தநாளை கொண்டாடுவதை போல்
இங்கு நபிகள் நாயக்கத்தின் பிறந்தநாளை சிறப்பிக்கிறோம் என்று ஃபித்அத்
(மார்க்கத்தில் இல்லாத புதுமை) மாநாடை நடத்தினர்...
இதில் சிறப்பு பேச்சாளர்களாக சில சில்லைரைகளை வீசி ஆலீம்கள் (?) என்று
சொல்லிக்கொள்ளும் மார்க்க வியாபாரிகளை அழைத்து வந்து முழுக்க முழுக்க
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மீது பொய்யான குற்றச்சாட்டுகளையும் &
அவதூறுகளையும் அள்ளிவீசி விட்டு சென்றனர். குறிப்பாக தமிழ்நாடு தவ்ஹீத்
ஜமாஅத் சார்பாக நடத்தும் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்க்கு யாரும் செல்ல
வேண்டாம் " என்றும், எங்கு தாங்கள் மக்களை ஏமாற்றி மார்க்கத்தின் பெயரில்
மவ்லீத்,தகடு, தாயத்து, & சூனியம் வியாபாரம் கெட்டு விடுமோ என்ற
அச்சத்தில் உளறிவிட்டு சென்றனர்.
இவர்கள் மீலாது நபி மாநாடு என்று கூறி தலைப்புக்கு சம்பந்தம் இல்லாமல்
தவ்ஹீத் ஜமாஅத்தை வசைப்பாடியதற்க்கு எங்களுடைய பிரச்சாரம் தான் காரணம் என்பதை
நாங்கள் உணர்ந்தோம். ஆம், மாநில தலைமை ஷிர்க் ஒழிப்பு மாநாடு என்று
அறிவித்த நாள் முதல் சுமார் 6 மாத காலமாக தர்கா வழிபாடு, சூனியம், தகடு,
தாயத்து, மவ்லீது, சகுணம் பார்ப்பது போன்ற இனைவைப்புக்கு எதிரான
பிரச்சாரத்தை துவங்கியது TNTJ AYM. பிரச்சாரத்தின் இறுதி கட்டமாக குழு
தாவாவை துவங்கி அடியற்கையில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் நேரில் சென்று
இனைவைப்பை பற்றி குர்ஆன் & ஹதீஸ் ஆதரங்களுடன் எடுத்து கூறீனர்.
தாங்கள் பொக்கிஷமாக கருதி வீட்டு வாசலில் தொங்கவிடப்பட்டிருந்த பொருட்கள்
இனைவைப்பு என்று தெரிந்த உடன் இதன் மூலம் நாங்கள் நரகத்தில் சென்று
விடக்கூடாது என்று படைத்தவனுக்கு அஞ்சி அதை கழுற்றி குப்பையில் வீச
அனுமதி கொடுத்தனர். இதனுடைய தாங்கம் தான் மீலாது விழாவில் அவதூறுகளாக
வெளிப்பட்டது..
வீட்டில் இருக்கும் பெண்களிடம் தவறாக நாங்கள் பேசுவதாகவும், அவர்களின்
அனுமதி இல்லாமல் தகடுகளை திருடுவதாகவும் அவதூறுகளை அள்ளி வீசினர் இந்த
போலி ஆலிம்கள். இவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதை ஆதரத்துடன்
எங்களுக்கு முன் நிறுப்பிக்க வேண்டும். ஆனால் காசுக்காக மார்க்கத்தில் பொய்
சொல்லும் இவர்களுக்கு எங்கள் மீது பொய்யை இட்டுக்கட்ட தயங்க மாட்டார்கள்
என்பதை தாங்கள் அறிந்ததே.
இந்த மீலாது (ஃபித்அத்) மாநாட்டை பொருட்படுத்தாத ஏகத்துவ வாதிகள்
பிரச்சாரத்தை முடுக்கி விட்டனர். ஊரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும்
சென்று ஒர் இறை கொள்கையை போட்டு உடைத்தனர்.
இவர்கள் வைத்த பொய்யான குற்றச்சாட்டுகளை அறிந்த பொது மக்கள் இவர்களின்
பேச்சை அலச்சியப் படுத்தி ஷிர்க் ஒழிப்பு மாநாடுக்கு பெரும் அளவில் ஆதரவு
அளித்தனர்.
இதனுடைய விளைவாக அடியக்கமங்கலத்தில் இருந்து மட்டும் 12 வேன்கள்
300-க்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் இனைவைப்பை ஒழிக்க திருச்சியை நோக்கி
பயனித்தனர். வழக்கம் போல அசத்திய வாதிகள் மன்னைக் கவ்வினர்.
எதிர்க்க எதிர்க்க தான் ஏகத்துவம் வளரும் என்பதை மீண்டும் ஒரு முறை கண்கூடாக
பார்க்க முடிந்தது. எல்லா புகழும் இறைவனுக்கே !!! இந்த சத்திய கொள்கையை
எடுத்து சொன்னால் விமர்சனம், அவதூறு வரத்தான் செய்யும் என்பதை உணர்ந்த
கிளை சொந்தங்கள் சிறப்பான பிரச்சாரத்தை மேற்கண்டதின் விளைவு
அடியற்க்கையில் இருந்து மூட்டை மூட்டையாக தகது தாயத்துகளை அள்ளி சென்று
மாநாடு திடலில் தீயிட்டு போசுக்கினர்.
மார்க்கத்தின் பெயாரால் பொய்யைப்பரப்பும் பெயர் தாங்கி முஸ்லிம்கள்
தாங்கள் போதிக்கும் கொள்கையில் உறுதியாக இருந்தால் அடியற்க்கை பொது
மக்கள் முன்னிலையில் விவாதம் செய்ய முன்வர வேண்டும். அதை செய்யாமல் வீண்
அவதூறு பரப்புபவர்கள் அல்லாஹ்வை அஞ்சி கொல்லட்டும்.
மாநாடு சிறப்பாக நடைப்பெற பிரத்தனை செய்த, உதவி செய்த, உழைத்த அனைத்து
நல்லுங்களுக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளைகள்
சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்...