அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக 24/12/2017 அன்று நடுத்தெரு தண்ணீர் தேக்கம் அருகில் மாபெரும் இஸ்லாமிய தெருமுனைக்கூட்டம் மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது...!
இந்நிகழ்ச்சியில் .
கிளை 1 துணைத்தலைவர் ருமைஸ்தீன் அவர்கள் தலைமை தாங்கி 4.30 மணிக்கு நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.
கிளை 1 துணைத்தலைவர் ருமைஸ்தீன் அவர்கள் தலைமை தாங்கி 4.30 மணிக்கு நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.
முதல் உரையாக, TNTJ மாவட்ட பேச்சாளர் இஸ்மாயில் அல்தாபி அவர்கள் திருக்குர்ஆன் மாநாடு ஏன் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
அதனை தொடர்ந்து 5.15 மணிக்கு TNTJ மாவட்ட பேச்சாளர் பஹ்ருதீன் அவர்கள் ஆய்வு செய்து பின்பற்றுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
இரண்டாம் அமர்வு சரியாக 6.30 மணிக்கு ஆரம்பம் ஆனது, இதில் மாவட்ட பேச்சாளர் அப்துல்லாஹ் MISC அவர்கள் மீலாதும்,மவ்லிதும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
நிகழ்ச்சின் இறுதியில், கிளை 1 அல்ஹிதயா மதரசா பிள்ளைகளுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 35 மாணவ மாணவிகளுக்கு கிளை நிர்வாகிகள் பரிசுகளை வழங்கினார்...
கிளை 1 செயலாளர் இப்ராஹிம் அவர்கள் 8:00 மணிக்கு நன்றியுரையாற்றினார். இந்நிகழ்ச்சி சபை கலையும் தூஆவுடன் நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்...
இக்கூட்டத்தில் 200 க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர். எதிர்தரப்பினரின் பொதுக்கூட்டத்தை மிஞ்சும் வகையில் தெருமுனைக்கூட்டம் மிகச்சிறப்பாக நடைப்பெற்றது...