விறுவிறுப்பாக நடைப்பெற்ற செயல்வீரர்கள் கூட்டம் வீரியமடையும் இறுதி கட்ட மாநாடு பணிகள்...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 13-01-2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக செயல்வீரர்கள் கூட்டம் ஜனவரி 27 திருக்குர்ஆன் மாநில மாநாடு குறித்து ரயிலடித் தெரு கிளை 2 மர்க்கஸில் நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பேச்சாளர்கள் அப்துல் காதர் மற்றும் இஸ்மாயீல் அல்தாபி அவர்களும் திருக்குர்ஆன் மாநாடு அழைப்பு பணிகள் குறித்தும், நாம் செய்யவேண்டிய பணிகள் குறித்தும் உரையாற்றினார்கள்.
அதனை தொடர்ந்து நடைப்பெற்ற மசூராவில் இறுதிகட்ட பணிகள் குறித்து ஆலோசனைகள் செய்யப்பட்டு மாநாடுக்கு அதிகமான மக்களை கொண்டு செல்வது என முடிவுசெய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...