FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Thursday, December 1, 2011

அடிப்படை வசதி இல்லா பட்டக்கால் தெரு

Thursday, December 1, 2011
4:13 PM
அடியக்கமங்கலம் என்றாலே ஒரு காலத்தில் பட்டக்கால் தெரு தான் நினைவுக்கு வரும்,அனைத்து ஊர்களிலிருந்து வரும் பேருந்துகளும் அடியக்கமங்கலம் பட்டக்கால் தெரு நிறுத்தம் இடம் தெரியாமல் இருந்தது இல்லை.

(பல நாட்களாக சுத்தம் செய்யாமல் இருக்கும் பயனிகள் குடை)

ஏன் அடியக்கமங்கலத்தில் எங்கே பார்த்தாலும் திருட்டு நடந்து வருகிறது.ஆனாலும் பட்டகால் தெருவில் இது மிகவும் அரிது.ஏன் என்று தெரியவில்லை.

மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் இந்த தெருவில் புதிய பேருந்து நிறுத்தம் இரண்டு உள்ளது.பல வருடங்களாக இல்லாமலிருந்த இந்த பேருந்து நிறுத்தம் இப்போது தான் டயில்ஸ் போட்டு புதிதாக கட்டப்பட்டுள்ளது.

ஆனால் இந்த நிழற்குடை கட்டியும் பயன் இல்லாமல் இருந்து வருகிறது.
 பட்டக்கால் தெரு முனையில் இருக்கும் இரண்டு விளக்குகளும் சரிவர எறிவதில்லை.

ஏறிந்தாலும் இரண்டு பேருந்து நிறுத்தும் இடங்களிலும் விளக்கின் ஒளி போதுமானதாக இல்லை.இதனால் மக்களுக்கு பல சிரமங்கள் ஏற்படுகிறது.

இந்த விளக்கு இல்லாத காரணத்தால் பல சமுக தீமைகளும் நடக்கிறது.


  • குடிகாரர்களுக்கு இது பாராக பயன்படுகிறது.

  • விலங்குகளுக்கு இது கழிப்பிடமாக பயன்படுகிறது.

  • குடிகாரர்களுக்கும்,வழிபோக்கர்களுக்கும்,பிச்சைகாரர்களுக்கும் திருடர்களுக்கும் இது தங்குமிடமாக(GUEST ROOM) ஆகி விட்டது.

  • எப்போ பார்த்தாலும் சிகரெட் துண்டுகளும்,காலி சாராய பாட்டல்களும்,பான்பராக்,ஆன்ஸ் என்று குப்பை கூடையாகவும் பயன் படுகிறது.
இதனால் மக்கள் அதனுள் செல்வதற்கே மிகவும் அஞ்சிகின்றனர்.பேருந்து நிறுத்தம் இதற்க்காக தான் டயில்ஸ் போட்டு கட்டினார்களா?.இது அனைத்தும் பராமரிப்பு இல்லாததால் தான் நடந்து வருகிறது.அதனால் ஊராட்சி மன்ற நிர்வாகம் இதில் கூடுதல் கவனம் எடுக்க வேண்டும்.


  • தெருக்களை சுத்தம் செய்யும் தோட்டி அந்த பஸ் நிலையத்தையும் சுத்தம் செய்ய உத்தரவு கொடுக்க வேண்டும்.


  • இரண்டு பேருந்து நிறுத்தும் இடங்களிலும் தனி விளக்குகளை பொருத்த வேண்டும்.
இவ்வாறு செயதால் தான் அடியக்கமங்கலம் அடிப்படை வசதி உள்ள கிரமமாக விளங்கும்.இது அனைத்து பேருந்து நிறுத்தும் இடங்களுக்கும் பொருந்தும்.
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: அடிப்படை வசதி இல்லா பட்டக்கால் தெரு Rating: 5 Reviewed By: AYM-TNTJ
Scroll to Top