அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 22-06-2012 அன்று TNTJ
அடியக்கமங்கலம் கிளை சார்பாக 4 இடங்களில் சமுதாய விழிப்புணர்வு தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் மாநில பேச்சாளர் சகோ. இஸ்மாயில் மற்றும் மாவட்ட பேச்சாளர் புலிவலம் அணஸ் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
மாநில பேச்சாளர் சகோ. இஸ்மாயில் அவர்களின் பிரச்சாரம்
ரயிலடித் தெரு - தலைப்பு : பெற்றோர்கள் கவனத்திற்க்கு...!
( இன்றைய நவின யுகத்தில் செல்ப்போன், டி.வி என்று சீர்கெட்டு போகும் குழந்தைகளை கவணிக்கவேண்டும் என்று பெற்றோர்களுக்கு ஆலோசனையாக உரையாற்றினார்.
ஆசாத் தெரு - தலைப்பு : இஸ்லாத்திலல் இல்லாத மூடநம்பிக்கைகள்...
( இஸ்லாத்தில் இல்லாத மூடநம்பிக்கைகள் தாயத்து, கள்ளி செடி, தகடு, போன்ற செயல்கள் நரகத்துக்கு கொண்டு செல்லும் செயல் என்று குர்ஆன் & ஹதீஸ் அடிப்படையில் உரையாற்றினார்)
ஆசாத் தெருவில் ஒரு வீட்டுவாசலில் கண்தீர்ஸ்டிக்காக கட்டப்பட்டிருந்த தகடு & கள்ளி செடியை மாநில பேச்சாளர் இஸ்மாயில் அவர்கள் தாவா செய்து அப்புறபடுத்திய காட்சி...
மாவட்ட பேச்சாளர் புலிவலம் அணஸ் அவர்களின் பிரச்சாரம்
புதுமனைத் தெரு - தலைப்பு :" நற்குணங்கள் "
( முஸ்லிம்களிடம் இருக்ககூடிய நற்குணங்கள் பற்றி உரையாற்றினார் )
நடுத்தெரு - தலைப்பு : "சமுக தீமைகள்"
( மனிதர்களிடத்தில் இருக்க கூடிய சமுக தீமைகளான புகை, மது, சூது போன்றவற்றை இஸ்லாமியர்களான நாம் முழுமையாக தவிர்க்க வேண்டும் இல்லை என்றால் நாம் நரகத்தில் வேதனை செய்யப்படுவோம் என்று எச்சரித்தார்.)
இந்த பிரச்சாரத்தின் வாயிலாக எங்களுக்கு பல விஷயங்கள் தெரிய வருவதாகவும் மாதம் ஒரு முறை எங்கள் தெருவில் இது போல் பிரச்சாஅர்ம் செய்யவேண்டும் என்று ஆசாத் தெருவை சேர்ந்த ஒரு பெண்மனி நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்தார்... அல்ஹம்துலில்லாஹ்...
-செய்தி தொடர்பாளர்