அல்லாஹ்வின் வற்றா கருணையால் 30-11-2014 ஞாயிறு மாலை 4.30 மணி
முதல் இரவு 8.00 மணி வரை அடியக்கமங்கலம் கிளை 1&2 சார்பாக மாபெரும் தெருமுனை பிரச்சாரம் சமூக தீமை மற்றும் பெருகி வரும் இணைவைப்பிற்கு எதிராக நடைபெற்றது. நீண்ட நாட்களுக்கு பிறகு எழுச்சியுடன் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரத்திற்கு அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்..
அடியற்கையில் நான்கு இடங்களில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரத்தில் முதல் உரையாக ராஜாத்தெருவில் சகோதரர் ஆசிக் அவர்கள் இணைவைப்பிற்கு எதிராக உரைநிகழ்த்தினார்.
அதனை தொடர்ந்து மற்ற மூன்று இடங்களான புதுக்காலனி, நடுத்தெரு. ரயிலடித்தெரு போன்ற இடங்களில் மாவட்ட பேச்சாளர் பகுருதீன் அவர்கள் சமூக தீமை மற்றும் இணைவைப்பிற்கு எதிராக உரைநிகழ்த்தினார்.
இந்த தெருமுனை பிரச்சாரத்தின் இருதியாக கிளை 1 செயலாளர் சகோதரர் அமானுல்லா அவர்கள் நன்றி உரை வழங்கினார்... அல்ஹம்துலில்லாஹ்