அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 03-01-2015 அன்று அடியக்கமங்கலம்
TNTJ 1&2 வது கிளை சார்பாக காலை சரியாக 10 மணியளவில் நமதூர் ராஜாத்தெரு TNTJ 1 வது கிளை மர்கஸில் மாபெரும் இஸ்லாமிய நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் மாநில துனை தலைவர் MS.செய்யது இப்ராஹிம் அவர்கள் சிறந்த முறையில் பயிற்சி அளித்தார்.இதில் ஆண்களும் பெண்களும் அதிக அளவில் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் மார்க்கம் குறித்த மக்களின் சந்தேகங்களுக்கும் சகோதரர் செய்யது இப்ராஹிம் அவர்கள் அழகிய முறையில் பதில் அளித்தார் ..அல்ஹம்துலில்லாஹ்




