கைது நடவடிக்கை என்ற பெயரில் கடந்த திங்கட்கிழமை அன்று நெல்லை மேலப்பாலையத்தில் உள்ள மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலக்குள் அத்துமீறி பூட்ஸ் காலோடு புகுந்த காவல் துறை தொழுகைக்காக வந்திருந்த முஸ்லிம்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கடுமையான காயங்களுக்கு ஆளாகினர். உதவி ஆணையர் மாதவன் நாயர் என்கிற ஃபாசிஸ சிந்தனையுள்ள இவரின் தலைமையில் வந்த போலீஸ் படைதான் இத்தகய அட்டூழியத்தை செய்திருக்கிறது. பள்ளிவாசலின் புனிதத்தை பாராமல், தொழ வந்தவர்களை அடித்து, கொடூர தாக்குதலை நடத்தி வெறியாட்டம் ஒன்றை ஆடித் தீர்த்திருக்கிறது காவல் துறை.அல்லாஹ்வின் ஆலயத்திற்குள் பூட்ஸ் கால்களுடன் நுழைந்து, அதை அசிங்கப்படுத்தி, அதற்குள்ளேயே வைத்து அப்பாவி முஸ்லிம்கள் மீது அநியாயத் தாக்குதல் நடத்திய உதவி ஆணையர் மாதவன் நாயர் மற்றும் இச்சம்பவம் நாடைபெற சூத்திரதாரியாக செயல்பட்டு பொய் புகார் அளித்த உதவி ஆய்வாளர் சேக் அப்துல் காதர் மீதும் வழக்குப் பதிவு செய்து பணிநீக்கம் செய்ய தமிழக அரசை வலியுறுத்தி லட்சனக்கான முஸ்லிம்கள் பங்குபெறும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்
பள்ளிவாசல் நம் உயிரினும் மேலானது, பள்ளிவாசலின் புனிதத்தை எவன் கெடுத்தாலும் அவனை விட மாட்டோம் என்பதை நிரூபிக்க, இனி ஒருகாலத்தில் எந்தப் பள்ளிவாசலுக்குள்ளும் காக்கிச் சட்டை அத்துமீறுவதை தடுத்து நிறுத்த சென்னையில் திரள்வோம். இதற்கு முடிவு கட்டும் வரை விட மாட்டோம்அணி திரள்வீர் அல்லாஹ்வின் ஆலயத்தின் புனிதம் காக்க!
சங்கமிப்பீர் சர்வாதிகாரத்திற்கு சமாதி கட்ட!!
அனைவரையும் அலைகடலென ஆர்ப்பரிக்க அழைக்கிறது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்இன்ஷா அல்லாஹ்நாள் : 9/6/15
நேரம் : காலை 10.30 மணி
சென்னை,மதுரை
தலைமைகழக செய்தி : ஏசி மாதவன் நாயர் மீது தமிழக அரசே நடவடிக்கை எடு
Friday, June 5, 2015
|
5:42 PM | தலைமைகழக செய்தி |