புகழ் அனைத்தும் ஏக இறைவன் அல்லாஹ்வுக்கே!
அல்லாஹ்வின் மகத்தான கிருபையினால் அடியக்கமங்கலத்தில் ராஜாத்தெரு தவ் ஹீத் மர்க்கஸ் வளாகத்தில்
24.07.16 ஞாயிறு மாலை 4.30 துவங்கி இரவு 7.30 வரை முஹம்மத் ரசூலுல்லாஹ்... தெருமுனைக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
அதில் ஆரம்பமாக மாணவ மாணவிகளின் மார்க்க அறிவுத்திறன் போட்டிகள் நடைப்பெற்றது..
அதை தொடர்ந்து
நாகை மாவட்ட தாயீ மவ்லவி M.இஸ்மாயில் அல்தாஃபி அவர்கள் "அழகிய முன்மாதிரி அண்ணல் நபி" என்ற தலைப்பில்
"#மத்ஹபுதான் மாநபியை பின்பற்றுவதற்கு தடையாக இருக்கிறது என்பதையும், மத்ஹபினால் தான் முஸ்லிம்களுக்கு மத்தியில் இபாதத் விஷயத்தில் பல்வேறு முரண்பாடுகள் தோன்றியது" என்பதையும் தெளிவாக விளக்கினார்.
இறுதியில் கோடைக்கால இஸ்லாமிய பயிற்சி முகாமில் பங்குபெற்ற பிள்ளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த தெருமுனைக் கூட்டம் கஃபாராவுடன் இனிதே நிறைவுற்றது.....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 1