FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Thursday, June 14, 2012

இஸ்லாமிய விழிப்புணர்வு பொதுக்கூட்டத்துளிகள்

Thursday, June 14, 2012
2:20 PM

அல்லாஹ்வின் அளவற்ற அருளால் அடியக்கமங்கலத்தில் 31.05.2012 அன்று
மாலை 6:44 மணிக்கு மேலச்செட்டித் தெருவில் மாபெரும் இஸ்லாமிய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் குவைத் மண்டல அழைப்பாளர் சகோதரர் A.முஹம்மது ஃபைஸல்.B.COM., அவர்கள் தலைமையேற்க மாநில பேச்சாளர் மெளலவி M.அப்துல் கபூர் மிஸ்பாஹி அவர்களும், மாநில மேலாண்மைக் குழு உறுப்பினர் மெளலவி M.A.F.அல்தாஃபி அவர்களும் பேருரை ஆற்றினார்கள்.


பொதுக்கூட்டத்துளிகள் :-

1) இந்த பொதுக்கூட்டத்திற்க்காக காவல்துறை அனுமதி சுமார் 15 நாட்களுக்கு முன்பாகவே பெறப்பட்டது.

2) அடியக்கமங்கலம் சுன்னத் ஜமாஅத் தலைவரை நேரில் சந்தித்து இந்த பொதுக்கூட்டத்தை பற்றிய அறிவிப்பு கடிதத்தை கொடுத்து முழு அனுமதி பெறப்பட்டது.

3) ஆனால் நாங்களும் தவ்ஹீத் ஜமாஅத் என்று சொல்லக்கூடியவர்களும், மழை பெய்தால் கூட பள்ளிவாசல் பக்கம் ஒதுங்காதவர்களும், தவ்ஹீத் என்ற போர்வையில் ஒளிந்துக் கொண்டிருப்பவர்களும், சமுக கேடுகளை அன்றாட தன் வாழ்க்கையில் வாடிக்கையாக செய்துவரும் சிலர் இந்த பொதுக்கூட்டத்திற்கு எதிரான பல்வேறு சூழ்ச்சிகளை வெளிபடையாகவும் மறைமுகமாகவும் செய்தனர்.

4) இறுதியாக இந்த கூட்டத்தினர் தந்த அதிகார மனுவினால் தவ்ஹீத் ஜமாஅத் நடுத்தெருவிலிருந்து மேலச்செட்டித் தெருவிற்கு இடத்தை மாற்றியது.

5) ஆனால் நடுத்தெருவில் நடத்தியிருந்தால் கூட இவ்வளவு பிரம்மாண்டமாக நிகழ்ச்சி நடந்து இருக்காது என்று என்னும் அளவிற்க்கு இப்பொதுக்கூட்டம் மாபெரும் எழுச்சி பெற்றது அல்ஹம்துலில்லாஹ்...

6) சிறிய தெருவாக இருந்ததாலும், கூட்டம் அதிகமாக வரும் என்பதாலும் இந்தமுறை மேடை பிரம்மாண்டமாகப் போடப்பட்டது.

7) முதன் முறையாக பெண்களை மேடைக்கு முன்பு அமரவைத்தால் ஆண்களுக்கு இரண்டு தொலைக்காட்சி பெட்டிகள் மேடையை காண்பதற்காக வைக்ப்பட்டன.

8) புதுக்காலனியில் இருந்து பட்டக்கால் தெரு வரை மெயின் ரோட்டில் கொடிமரங்களை ஊண்டி பார்பவர்களை பிரம்மிக்க வைத்தது.

9) கூட்டம் சரியாக மாலை 6:44 மணிக்கு துவங்கும் என்று அறிவித்ததால் பெண்கள் கூட்டம் 6 மணியிலிருந்தே பொதுக்கூட்டம் நடக்கும் இடத்திற்க்கு வர ஆரம்பித்துவிட்டது.

10) தலைமை உரையாற்றிய ஃபைசல் அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தின் எண்ணற்ற மார்க்க மற்றும் சமுதாய பணிகளை எடுத்துரைத்து, அப்பணிகளை அடியக்கமங்கலம் கிளையும் சிறப்பாக செய்துவருவதை மக்களிடையே பதிவு செய்தார்.

11) அடுத்து அற்ப பதவியா? சொர்க்க பதவியா?? என்ற தலைப்பில் உரையாற்றிய சகோ. கபூர் மிஸ்பாஹி அவர்கள் எந்த ஜமாஅத்தில் பதவி வகித்தாலும் நமது மார்க்கமாகிய இஸ்லாத்தை பின்பற்ற வேண்டுமே ஒழிய பதவிகளுக்காகவும், பட்டங்களுக்காகவும், அந்தஸ்துகளுக்காகவும் எந்த நிலையிலும் இஸ்லாத்தை விட்டுவிடக் கூடாது என்றும் மிகப்பெரிய அந்தஸ்தும், வாழ்க்கை வசதிகளையும் பெற்ற ஃபிர்அவ்னின் மனைவியே மார்க்கத்திற்க்காக அனைத்தையும் இழந்தார்கள் என்று அவருக்கேயுரிய பாணியில் கர்ஜித்தார்.

12) இந்த நிகழ்ச்சியில் உரையாற்றுவதாக இருந்த மெளலவி K.S.அப்துர் ரஹ்மான் பிர்தவ்ஸி அவர்களுக்கு ஏற்ப்பட்ட உடல்சுகக் குறைவினால் மெளலவி P.J அவர்களை நமது நிர்வாகிகள் லால்பேட்டையில் நேரில் சந்தித்து அல்தாஃபி அவர்களின் தேதியை பெற்றனர்.

13) ஃபிர்தவ்ஸி வராததாலும் , போலி சுன்னத்வல் ஜமாஅத்தினர்கள் 
நமதூரில் சமீபகாலமாக மெளலீது, மீலாது மாநாடு, மீலாது ஊர்வலம், மற்றும் இசை வாத்தியங்கள் போன்ற பித்அத்களிலும், தடுக்கப்பட்டவற்றையும் செய்துவருவதால் அல்தாஃபி உரையாற்றினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்ற எண்ணத்தை அல்லாஹ் நிறைவு செய்தான்.

14) மெளலவி அல்தாஃபி அவர்கள் "சுன்னத்வல் ஜமாஅத்தினர் யார்? " என்ற தலைப்பில் கலீபாக்கள் ஆட்சியில் ஏற்பட்ட கொள்கை காலத்தில் ஷீஆக்களின் தாக்கம் அதிகமாகிபோய் அந்த காலத்தில் உருவானது தான் இந்த வார்த்தை என்றும், இன்று தலைகீழாக ஷீஆக்களின் அத்தனை கொள்கைகளையும் தூக்கிப்பிடிப்பவர்கள் தங்களை சுன்னத் ஜமாஅத் என்று அறிவிக்கிறார்கள் என்பதை குர்ஆன்-ஹதீஸ் ஒளியில் பாடம் நடத்தினார்.

15) அடுத்ததாக கிளை தலைவர் அவர்கள் கண்டன உரையாற்றினார்.

16) பிறகு கோடைக்கால பியற்சி முகாமில் பியின்ற 120 மாணவ மாண்வைகளுக்கு மாநில, மாவட்ட , கிளை நிர்வாகிகளும் சான்றிதழ்களும், பரிசுகளையும் வழங்கினர்.

17) இறுதியாக கிளை துனை செயளாலர் . முஸ்தாக் அஹமத் நன்றியுரையாற்றினார்.

18) இந்த கூட்டத்திற்க்கு எதிராக சூழ்ச்சி செய்த அனைருக்கும் எதிராக அல்லாஹ் மிக பெரிய சூழ்ச்சி செய்து இந்த பொதுக்கூத்தை சிறப்பாக நடத்திதந்தான்... எல்லா புகழும் இறைவனுக்கே...அல்லாஹ் அக்பர்!

"அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துபவன்". (அல்-குர்ஆன் 61 : 8)

  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: இஸ்லாமிய விழிப்புணர்வு பொதுக்கூட்டத்துளிகள் Rating: 5 Reviewed By: AYM-TNTJ
Scroll to Top