FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Thursday, November 29, 2012

8 தவ்ஹீத் குடும்பங்கள் ஊர் நீக்கம்

Thursday, November 29, 2012
11:05 PM


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 05-11-2012 அன்று அடியக்கமங்கலத்தில் பல
எதிர்ப்புகளுக்கு மத்தியில் பலத்த போலிஸ் பாதுகாப்புடன் நபிவழி (வரதட்சணை இல்லா) திருமணம் நடைப்பெற்றது. இதை பொருத்துக் கொள்ள முடியாத போலி சுன்னத் ஜமாஅத்காரர்கள் இந்திய சட்டத்திற்கு எதிராக 8 தவ்ஹீத் குடும்பங்களை ஊர் நீக்கம் செய்தனர். இந்திய நாட்டு சட்டத்திற்கு எதிராக செயல்பட்ட சுன்னத்(?) ஜமாஅத்கார்ரகளை கைது செய்ய கோரியும், தக்க நடவடிக்கை விரைவில் எடுக்க கோரியும் திருவாரூர் மாவட்ட TNTJ நிர்வாகிகள் உதவியுடன் மாவட்ட ஆட்சியரிடமும் & காவல்துறை கண்கானிப்பு அதிகாரிடமும் 20-11-2012 அன்று மனு கொடுக்கப்பட்டது. 




அதன் பின் திருவாரூர் மாவட்ட TNTJ தலைவர் அப்துல் ரஹ்மான் அவரகள் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் " வரதட்சணை இல்லா நபிவழி திருமணம் நடைப்பெற்றதை பொருத்துக் கொள்ள முடியாத அடியக்கமங்கலம் சுன்னத்(?) ஜமாஅத் நிர்வாகிகள் இந்திய நாட்டு சட்டத்திற்கு எதிராக 8 தவ்ஹீத் குடும்பங்களை ஊர் நீக்கம் செய்தனர். சட்டத்தை மீறிய சுன்னத் ஜமாஅத்காரர்களை கைது செய்ய கோரியும், விரைவில் தக்க நடவடிக்கை எடுக்க கோரியும் மாவட்ட ஆட்சியரிடமும் & காவல்துறை கண்கானிப்பு அதிகாரிடமும் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் மீது அரசு தக்க நடவடிக்கை எடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார்... அல்ஹம்துலில்லாஹ்...













  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: 8 தவ்ஹீத் குடும்பங்கள் ஊர் நீக்கம் Rating: 5 Reviewed By: AYM-TNTJ
Scroll to Top