இணையில்லா இறைவனின் கிருபையால் 16-08-2014 அன்று அடியக்கமங்கலம் ராஜாத்தெரு அல் அஜீஸ் பள்ளியில் TNTJ அடியக்கமங்கலம் கிளை 1 & 2 மற்றும் வெங்கடேஸ்வரா இரத்த வங்கி இணைந்து நடத்திய மாபெரும் இரத்த தான முகாம் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைப்பெற்றது. இந்த முகாமிற்கு திருவாரூர் மாவட்ட தலைவர் பீர் முஹம்மது அவர்கள் தலைமை தாங்கினார்.
அதன் பின் மாவட்ட பேச்சாளர் இக்பால் அவர்கள் இரத்த தானத்தின் அவசியத்தையும், அதில் தொடர்ந்து TNTJ முதலிடம் பெற்று வருவதையும் சுட்டிகாட்டி உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் மாணவர்கள், மாற்று மத நண்பர்கள், பெண்கள் என 47 நபர்கள் (உள்ளூர் மக்கள் 45) தங்களின் குருதிகளை வழங்கினர். அல்ஹம்துல்லில்லாஹ்...
இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த வெங்கடேஸ்வரா இரத்த வங்கி ஊழியகளுக்கு மார்க்கத்தை எத்திவைக்கும் விதமாக அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக மார்க்க புத்தகங்கள் வழங்கப்பட்டது.
அதன் விபரம்,
இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் - 5 புத்தகங்கள்
அர்த்தமுள்ள கேள்விகள்! அறிவுப்பூர்வமான பதில்களும் - 1 புத்தகம்
Prophet Muhammad The Man Supreme- 1 புத்தகம்
மார்க்க பணியிலும் & சமுதாய பணியிலும் அடியக்கமங்கலம் TNTJ கிளை தொடர்ந்து சிறப்பாக செயல்பட எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிராத்திப்போம்...
இவண்,
TNTJ AYM Webmaster,
www.tntjaym.com