FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Wednesday, March 25, 2015

இஸ்லாமிய எழுச்சி பொதுக்கூட்ட துளிகள்- 2015

Wednesday, March 25, 2015
9:10 PM






 அல்லாஹ்வின் வற்றா கருணையால் 21-02-2015 அன்று மாலை சரியாக 6:30 மணியளவில் அடியக்கமங்கலம் ராஜாத்தெரு EB முகப்பில் மாபெரும் " இஸ்லாமிய எழுச்சி பொதுக்கூட்டம்" தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளைகள் 1 & 2 சார்பாக நடைப்பெற்றது.

இதில் மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் M. ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்களும், மாநில பேச்சாளர் A. அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்களும் உரையாற்றினர்.





பொதுக்கூட்டம் ஏற்பாடுகள் சம்பந்தமான அனைத்து செய்திகளையும் இணையதள பார்வையாளர்களுக்காக கிழே பதிவிடுகிறோம்.

பொதுக்கூட்டத்துளிகள் :-

1) நபிவழியில் திருமனம் செய்ததுக்காக TNTJ சகோதரர்களின் 8 குடும்பங்களை ஊர்விலக்கி வைத்த போலி சுன்னத் ஜமாஅத்தார்கள் அகம்பாவத்தை உடைத்தெறிந்த பிறகு நடத்த படுகின்ற முதல் பொதுக்கூட்டம் என்பதாலும், கடந்த பொதுக்கூட்டத்தின் போது அடியக்கமங்கலம் ராஜாத் தெரு EB முகப்பில் கூட்டத்தை நடத்த விடாமல் சில சூழ்ச்சிகாரர்களின் சூழ்ச்சிகளால் வேறு இடத்தில் பொதுக்கூட்டம் நடத்திய நாங்கள் மூன்று வருடங்களுக்கு பிறகு எந்த இடத்தில் எங்களின் உரிமை பறிபோனதோ அதே இடத்தில் இப்பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் மிக்க மகிழ்ச்சியோடும், வீரியத்துடனும் இப்பொதுக்கூட்டம் வேலைகள் துவங்கப்பட்டன.

2) உரிய முறையில் காவல்துறையிடம் அனுமதி வாங்கி, வர்ணங்கள் நிறைந்த போஸ்டர்கள் பேனர்கள் நோட்டிஸ்கள் என்று அடியக்கமங்கலம் முழ்வதும் பொதுக்கூட்ட அழைப்பு அலங்காரங்கள் நிறைந்து இருந்தன. ****நோட்டிஸ்- போஸ்டர்கள்- பேணர்கள்-   மின் கம்பம் போஸ்டர்-***

3) மாநில பேச்சாளர்கள் வருகை தருவதால் அன்டை ஊர்களுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது.

4) ஊர் முழுவதும் 2 நாட்களாக ஆட்டோ அலோன்ஸ் மூலம் பொதுக்கூட்டத்திற்க்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.

5) சமுதாயத்தின் உரிமை குரலான உணர்வு இதழில் 2 வாரங்கள் * அளவில் விளம்பரம் கொடுக்கப்பட்டது.


6) மக்கள் திரளின் போது பேச்சாளர்கள் பார்க்கும் வகையில் என்ற அளவில் மேடை போடப்பட்டது.

7) வெளியூர் மக்களின் வருகையை கருத்தில் கொண்டு அவர்கள் எழிதாக பொதுக்கூட்ட இடத்திற்கு வருகை தர புதுக்காலனி முதல் ஆண்டிப்பாளயம் வரை இடது பக்கத்தில் கொடிக் கம்பங்கள் ஊன்றப்பட்டன. 

8) வெளியூரில் வருகை தந்திருந்த பெண்களுக்கு பள்ளிவாசல் அருகாமையில் ஒரு வீட்டில் தொழ வசதி செய்யப்பட்டு இருந்தது.

9) பார்பவர்கள் பிரம்மிக்க வைக்கும் அளவில் சிறந்த முறையில் ஒலி & ஒளி அமைக்கப்பட்டது. 14 ஹாலோஜன் விளக்குகளும், 30 டியூப் லைட்கலும் ,ஹாரன்***  

10) பொதுக்கூட்டத்தில் மாநாடு போல் மக்கள் திரண்ட காரணத்தால் மேடையை காணமுடியாமல் அமர்ந்து இருப்பவர்களுக்காக 5 எல்.சீ.டீ. டீவிக்களும்  வைக்கப்பட்டது.




11) மார்க்க அறிவை வளர்த்து கொள்வதற்கான புத்தகங்கள், டிவிடிகள் விற்பனைக்கு இக்ரா தவ்ஹீத் நூலகம் சார்பாக பொதுக்கூட்ட வளாகத்தில் 2  ஸ்டால் அமைக்கப்பட்டிருந்தது.

12) இந்நிகழ்ச்சியை வெளிநாடு & வெளியூர் வாழ் சகோதரர்களுக்காக அடியக்கமங்கலம் 
வரலாற்றில் முதல் முறையாக இப்பொதுக்கூட்டம் நமது www.tntjaym.com 
இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு (LIVE TELECAST) செய்யப்பட்டது.

13) முதல் கட்டமாக மாநில பேச்சாளர் A.அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் "அல்லாஹ்வின் வல்லமையும்! அடியார்களின் இயலாமையும்!!" என்ற தலைப்பில் அடியக்கமங்கலத்தில் இஸ்லாத்தை கேவலபடுத்தும் விதமாக கப்று வணங்கிகள் செய்துவரும் அணாச்சாரத்தையும், குடிபோதையில் அவுலியாக்களின் பெயரை வைத்து ஆடும் அட்டூழுயங்களுக்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தம் இல்லை என்பதை குர்ஆன் & ஹதீஸ் ஆதாரத்துடன் விளக்கி எச்சரித்தார்.

14) அடுத்து மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் M.ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி, அவர்கள் " விமர்சணங்களும் விளக்கங்களும் " என்ற தலைப்பில் ஏகத்துவ கொள்கையை சொல்பவர்களை பல கூட்டம் கீழ் தரமாக தொடர் விமர்சனம் செய்ய தான் செய்யும் என்றும், இந்த கொள்கையை சொன்ன நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சந்தித்த விமர்சணத்தையும் மக்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்து விமர்சனத்தை கண்டு அஞ்சாமல் சத்திய கொள்கையை எடுத்துரைக்க வேண்டும் என்று கூறினார்.

15) மேலும் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக  அடியக்கமங்கலத்தில் இயங்கி வரும் சுமையா டிரஸ்ட் நிர்வாகிகளை நம் ஜமாஅத்தில் இருந்து நீக்கப்பட்ட காரணத்தையும், அற்ப சொத்துக்காக ஏகத்துவ கொள்கையை மறந்த அவர்களின் உண்மை முகத்தையும், நம் மீது பொய் குற்றச்சாட்டு அனைத்துக்கும் பதில் அளித்தார்.



16) சுமையா டிரஸ்டை ஜமாஅத்தாக மாற்றி அந்த பள்ளிவாசல் உறுப்பினர்கள் அனைவருக்கும் சம உரிமை வழங்கவேண்டும் என்ற கோறிக்கை TNTJ மாநில தலைமை வைத்த போது, டிரஸ்டின் தலைவர் " அடியக்கமங்கலத்தில் நபிவழி திருமணமும் & நபிவழி ஜனாஷாவும் நடைப்பெறாமல் இருக்கிறது இந்த இரண்டும் என்று நடைப்பெறுகிறதோ அன்று தான் நாங்கள் சுமையா டிரஸ்டை கலைத்து விட்டு ஜமாஅத்தாக மாற்றுவோம், அது வரைக்கும் இது டிரஸ்டாகவே செய்லபடும்" என்ற காரணத்தை முன் வைத்தார்.

17) உறுப்பினர்களுக்கு சம உரிமை வழங்க நீங்கள் டிரஸ்டை கலைத்துவிட்டு ஜமாஅத்தாக மாற்ற வேண்டும் என்ற ஜமாஅத்தின் முடிவுக்கு எதிராக மறுத்ததால் அவர்களை ஜமாஅத் நீக்கியது. இன்று அல்லாஹ்வின் உதவியால் TNTJ அடியக்கமங்கலம் சார்பாக ஊர் கட்டுப்பாடுகளை உடைத்து பல பிரச்சனைகளை சந்தித்து நபிவழியில் திருமனமும் , நபிவழியில் ஜனாஷாவும் நடத்தப்பட்டு விட்டது, இப்போது சுமையா டிரஸ்டின் நிலை என்ன ??? என்ற கேள்வியை வைத்தார். இன்றளவும் சுமையா டிரஸ்டை கலைக்காமல் போலியாக அடியக்கமங்கலம் தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் குழுப்பத்தை ஏற்படுத்தும் இவர்கள் சொத்து ஆசை மற்றும் பதவி வெறி காரணமாகவே ஜமாஅத்தாக மாற்ற முன்வரவில்லை என்ற உண்மையை மக்கள் மண்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.





18) பொதுக்கூட்ட தீர்மாணங்களை கிளை 1 செயலாளர் அமானுல்லாஹ் அவர்கள் வாசித்தார்.


19) கிளை 2 செயலாளர் முஹம்மது ஹக் அவர்கள் நன்றியுரையாற்றினார்.



20) சாதரனமான பொதுக்கூட்டத்தை மாநாடு போல் மாற்றி அடியற்கை வரலாற்றில் முதலிடம் பிடிக்க உதவி செய்யத எல்லாம் வல்ல இறைவனுக்கே புகழனைத்தும்... அல்ஹம்துலில்லாஹ்.


இவண்,
TNTJ Aym Webmaster's
இணையதள பொருப்பாளர்கள்
அடியக்கமங்கலம் கிளை 1 & 2
www.tntjaym.com
www.fb.com/aymtntj


  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: இஸ்லாமிய எழுச்சி பொதுக்கூட்ட துளிகள்- 2015 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top