கடந்த 21.02.2015 அன்று அடியக்கமங்கலத்தில் ஆசாத்தெருவில் நள்ளிரவில் ஒரு கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது சம்பவத்தை தாங்கள் அறிவீர்கள். பொருளாதாரத்தில் பிந்தங்கியுள்ள இக்குடும்பத்தினருக்கு யாரும் உதவி செய்ய முன்வராத நிலையில் கீற்றுக்கூரை அமைத்து தருமாறு நம் ஜமாஅத்திடம் கடிதம் கொடுத்தனர்.
அவர்களுடைய தேவையை உணர்ந்த நம் ஜமாஅத் நிர்வாகிகள் திருவாரூர் மாவட்டம் மற்றும் அடியக்கமங்கலம் கிளை 1&2 சேர்ந்து வசூல் செய்து 41.500 ரூபாய் மதிப்பில் செட் அமைத்து கொடுத்ததுடன், 9000 ரூபாய் செலவில் மின் இனைத்து கொடுத்தது, வீட்டுக்கு தேவையான பொருட்கள், உணவு பொருட்கள் 3000 ரூபாய் செலவில் வாங்கி கொடுக்கப்பட்டது.