TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Sunday, July 31, 2011

ஜெயலலிதாவை கண்டித்து கண்டன போஸ்டர்


அடியக்கமங்கலம்-கிளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  சார்பாக ஜெயலலிதாவை கண்டித்து இன்று (31-7-2011) கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன .

நோன்பை தாமதமாக திறக்களாமா?


கேள்வி?

நோன்பு நேரங்களில் சூரியன் மறையக் கூடிய நேரத்தை விஞ்ஞானக் கணிப்பு மூலம் அறிந்து கொள்கின்றோம். ஆனால் சில நிமிடங்கள் முன் பின்னாக முரண்பட்டுக் கூறுகின்றனர். இதனால் பேணுதலுக்காக சில நிமிடங்கள் கூடுதலாக்கி நோன்பைத் திறக்கலாமா?


பதில்:-
சூரியன் உதயம், சூரியன் மறைவு போன்ற நேரங்கள் தொடர்பாக‌ விஞ்ஞானக் கணிப்பில் எந்த முரண்பாடும் இல்லை. அக்டோபர் 2ம் தேதி காந்தி மண்டபத்தில் இந்த இடத்தில் சூரிய ஒளி வரும் என்று கணித்துள்ளார்கள் என்றால் அந்த இடத்தில் குறிப்பிட்ட நாளில் சூரிய ஒளி வருகின்றது. அந்த அளவுக்குத் துல்லியமாகக் கணிக்கப்பட்டுள்ளது. ஊருக்கு ஊர் வேறுபடுமே தவிர ஒரே ஊருக்கு இரண்டு விதமான நேரத்தை யாரும் கணிப்பதில்லை.

நோன்பை நிறைவு செய்வதை விரைவு படுத்தும் வரை மக்கள் நன்மையில் ஈடுபட்டவர்களாக இருப்பார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உமர் (ரலி), நூல்: புகாரி 1957
சூரியன் மறைந்தவுடன் நோன்பு துறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் பல ஹதீஸ்கள் உள்ளன. எனவே பேணுதலுக்காக சில நிமிடங்கள் தாமதமாகத் திறப்பது நபிவழிக்கு மாற்றமானதாகும்.

தென் ஆப்ரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் பேர்நெல் இஸ்லாத்தை தழுவினார் !


தென் ஆப்ரிக்காவில் உள்ள போர்ட் எலிசபத்த்தில் பிறந்த 22 வயது, தென் ஆப்ரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் பேர்நெல்(Wayne Dillon Parnell) 28/7/2011 வியாழக்கிழமை அன்று இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார்.இவர் தென் ஆப்ரிக்கா சர்வேதச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்(Left-arm medium-fast) என்பது குறிப்பிடத்தக்கது.


பேர்நெல் கிறிஸ்துவ மார்க்கத்திலிருந்து இஸ்லாத்தை தழுவி இருக்கிறார்.இவருடைய பெயரை வலீத் ,பொருள் புதிதாக பிறந்த மகன் என்று தனது பெயரை மாற்றிக் கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.

"வெய்ன் இரண்டு மாதங்களுக்கு முன்பே இஸ்லாத்தை பின்பற்ற முடிவு செய்துவிட்டார்," என்று தென் ஆப்ரிக்கா அணி மேலாளர் டாக்டர் முகம்மது மொசாஜி தெரிவித்துள்ளார்.

ஹாஷிம் ஆம்லா , இம்ரான் தாகிர் போன்ற சக வீரர்களின் வற்புறுத்தலினால்தான் பேர்நெல் இஸ்லாத்தை தழுவினார் என்ற வதந்தியை மொசாஜி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.இது அவருடைய சொந்த முடிவு எனவும் மொசாஜி கூறினார்.
மொசாஜியின் மறுப்பை ஆதரிக்கும் வகையில் தென் ஆப்ரிக்காவின் மற்ற அணி வீரர்களும் ஹாஷிம் ஆம்லா , இம்ரான் தாகிர் , பேர்நெலை எந்த விதத்திலும் கட்டாயம் படுத்தவில்லை.ஆம்லாவின் ஒழுக்கம் ,சுற்றுப்பயணத்தின் போதும் தினசரி தொழுகை,மதுபான கொண்டாட்டங்களில் பங்கேற்காதது ,தென் ஆப்பிரிக்க அணியின் விளம்பரதாரரான பீர் கம்பெனியை விளம்பரப்படுத்த மறுத்தது போன்ற இவரின் செயல் அனைவரையும் ஈர்க்கத்தான் செய்தது.

பேர்நெல்லுடைய சக விளையாட்டு வீரர்கள் ,கடந்த IPL(Indian premier League) போட்டியில் "பேர்நெல் மது அருந்தாததை வைத்தே அவர் தன் மதத்தை மாற்றுவதில் எவ்வளவு மும்முரமாக இருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டோம்" என்று தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் இருந்து நாம் கற்க வேண்டிய பாடம் :

ஒரு முஸ்லிமின் ஒழுக்கத்தை பார்த்தே மாற்று மதத்தினர் இஸ்லாத்தை நேசிக்க ஆரம்பிக்கின்றனர்.நாமும் இஸ்லாத்தின் ஒழுங்குகளை பேணி நமக்கு நன்மை தேடிக் கொள்வதோடு பல மாற்று மத சகோதரர்கள் நேர்வழி பெற உதவுவோம்.


நன்றி : sport24.co.za

Press News: மத வன்முறை தடுப்பு சட்டத்திற்கு தமிழக முதல்வர் எதிர்ப்பு- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கண்டனம்


மத வன்முறை தடுப்பு சட்டத்திற்கு தமிழக முதல்வர் எதிர்ப்பு- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கண்டனம்
மத வன்முறையை தடுக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வர உள்ள ”மத மற்றும் திட்டமிட்ட வன்முறை தடுப்பு” சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வன்மையாக கண்டிக்கின்றது.
கலவரத்தை தடுக்க மத்திய அரசு கொண்டு வரும் சட்டத்தை ஒரு மாநில முதல்வர் எதிர்ப்பது விசித்திரமாக உள்ளது. இதற்கு தமிழக முதல்வர் சொல்லும் காரணங்கள் ஏற்கதக்க வகையில் இல்லை.
இந்த சட்டம் ஏதோ அவசரகோலத்தில் உறுவாக்கப்பட்ட சட்டம் அல்ல, இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் நடந்த கலவரங்களில் சிறுபாண்மை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர், குற்றவாளிகள் சரியான முறையில் தண்டிக்க படவில்லை, மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்படவில்லை என அரசால் நியமிக்கப்பட்ட பல கமிஷன்கள் கூறியுள்ளன.
கலவரங்களை விசாரிக்க நீதிபதிகளின் தலைமையில் அமைக்கப்பட்ட கமிஷன்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில் உறுவக்காப்பட்டது தான் இந்த ‘மத மற்றும் திட்டமிட்ட வன்முறை தடுப்பு சட்டம்”.
மேலும் காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலுக்கு முந்தைய தேர்தலில் அளித்த தேர்தல் அறிக்கையின் அடிப்படையிலும், கடந்த தேர்தலில் அளித்த தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையிலும், பல்வேறு சட்ட வல்லுனர்களின் ஆலோசனைபடி தான் இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
எனவே இது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என தமிழக முதல்வர் கூறியிருப்பது ஏற்கதக்க வகையில் இல்லை.
மனித உயிர்களைவிட மாநில உரிமை பெரிதல்ல என்பதை முதல்வர் உணர்ந்துகொள்ள வேண்டும், எனவே தமிழக முதல்வர் இந்த சட்டத்தை ஆதரிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கேட்டுகொள்கின்றது,
இந்தியாவில் கலவரங்களில் ஈடுபடும் சமூகவிரோதிகளை தண்டிக்கவும், கலவரத்தில் பாதிக்கபட்டோருக்கு நிவாரணம் வழங்கவும், சட்டம் இயற்றிய மத்திய அரசை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பாராட்டுகின்றது
இப்படிக்கு
P. ஜெய்னுல் ஆபிதீன்
மாநில தலைவர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்

பாலகோட்டில் குவிந்த கொள்கைச் சகோதரர்கள் – போராட்டம் நல்லிணக்க கூட்டமாக மாறியது ! அல்ஹம்துலில்லாஹ்!


சமீபத்தில் தர்மபுரி பாலகோட்டில் நடைபெற்ற பிரச்சனை குறித்து எந்த விதமான நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து நேற்று  (29-7-2011)  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையரிந்த கொள்கை சகோதரர்கள் போராட்டக் கலத்தில் நேற்று குவிந்தனர்.
உடனே தகவல் அறிந்த காவல்துறையினர் இரு தரப்பினரையும் அழைத்து சமரச பேச்சு வார்த்தை நடத்தினர்.
இறைவனது கிருபையால் எதிர் தரப்பினர் ஒத்த கருத்திற்கு வந்ததால் ஆர்ப்பாட்டம் நல்லிணக்கன கூட்டமாக அறிவிக்கப்பட்டு நடைபெற்றது.


இதில் மேலாண்மைக்குழு உறுப்பினர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் உரையாற்றினார்கள். ஏராளமான கொள்கை சகோதரர்கள் இதில் கலந்து கொண்டனர்.

Friday, July 22, 2011

மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி


 22-7-2011 வெள்ளிக்கிழமை மாலை சரியாக 4:00 மணியளவில் ராஜாத் தெரு தவ்ஹீத் மர்க்கஸில் மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

 இந்த சொற்பொழிவில் மாநில பேச்சாளர்.மஹ்தும்,M.I.S.C  அவர்கள் சிற்ப்புரையாற்றினார்.ஆண்களும்,பெண்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

Thursday, July 21, 2011

தலைமையகத்தில் PRESS MEET: உயிரை காப்பாற்றிக் கொண்டு அகதிகளாக சென்னை வந்த பாலகோட் முஸ்லிம்கள்! நெஞ்சை உருக்கும் வீடியோ காட்சி!தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு என்ற ஊரில் இஸ்லாமியர்கள் எனக்கூறிக் கொண்டு மஹதி என்ற பிரிவினர் செயல்படுகின்றனர். இவர்கள் தமிழகத்தில் இந்த ஊரைத் தவிர வேறு எங்குமே இல்லை. இவர்கள், தங்களின் மதக் குருக்களின் காலில் விழுந்து வணங்க வேண்டும் என்று அங்குள்ள முஸ்லிம்களை இத்தனை காலமும் நிர்பந்தித்து வருகின்றனர்..
பொதுவாக மஹதிகளைப் பொருத்தவரை ஒரு குணம் உண்டு. இவர்களை எதிர்க்கும் யாராக இருந்தாலும் அவர்களை அந்த ஊரில் உள்ள ஒரு தனிப்பள்ளிவாசலில் கட்டி வைத்து சித்ரவதை செய்வார்கள். முழுக்க முழுக்க இவர்கள் தங்களை ஒரு தனிப்பிரிவாகவே நினைத்துக் கொண்டு இஸ்லாம் காட்டித் தராத ஒரு தனி வாழ்க்கையை வாழ்கின்றனர்,
இந்த நிலையில் அங்கிருந்த மக்கள் சிலருக்கு ஏகத்துவக் கொள்கை கொஞ்சமாக ஊற்றெடுக்க, அவர்களின் கொள்கை இஸ்லாம் மார்க்கத்திற்கு முரணானது என்தைப் புரிந்து கொண்டு அங்குள்ள மஹதீகளுக்கு எதிராக அவர்களின் கொள்கைகளுக்கு எதிராக ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்யத் துவங்குகின்றனர்.
ஆனால் இந்த மக்கள் இதற்கு முன்னர் அந்தக் கூட்டத்தில் தான் இருந்து வந்தார்கள். அவர்களின் வழிமுறைகளைத் தான் பின்பற்றி வந்தார்கள்.
அவர்களுக்குள்ளேயே இந்த ஏகத்துவ தீபம் சுடர் விட்டு கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்ததால், அந்த மஹதீ வழிகேடர்களால் இவர்களை அடித்து உதைப்பதைத் தவிர வேறு வழியை அவர்களால் கையாள முடியவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த ஏகத்துவ சகோதரர்களை இதனால் அவர்கள் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதுபற்றி காவல்நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்ற போதும் இவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இவர்கள் புகார் கொடுக்கச் சென்ற நேரத்தில் அங்கே ஆய்வாளர் மற்றும் துனைக்கண்காணிப்பாளர் முன்னிலையிலேயே இவர்கள் மீது கொலைவெறித்தாக்குதலில் ஈடுபட்டனர் அந்த வழிகேடர்கள். காவல்துறையில் போதிய பலம் இல்லை என்று கூறி காவல்துறையினரும் கைவிரித்து விட்டனர். அதுமட்டுமின்றி இவர்களிடம்,
நீங்கள் எங்காவது தப்பித்து ஓடி விடுங்கள் இல்லாவிட்டால் அவர்கள் உங்களை கொலை செய்து விடுவார்கள் என இவர்களுக்கு அறிவுறையும்(?) வழங்கியுள்ளனர் காவல்துறையினர். இவர்களின் தாக்குதல் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
தாக்குதலுக்கு உள்ளானவர்கள் ஊர் சென்றால் தங்கள் உயிருக்கு ஆபத்து நேரிடும் என்ற அச்சத்தில் வேறு வழியின்றி கையில் காசும் இன்றி உடுத்திய ஆடையுடன் சென்னையில் இருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் தஞ்சம் புகுந்தனர். மஹதிகளின் வெறியாட்டத்தால் அகதிகளாக வந்திருக்கும் கொள்கைச் சகோதரர்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அரவனைத்து பாதுகாப்பு கொடுத்திருக்கிறது.
அந்த மஹதி வழிகேடர்களின் அயோக்கியத்தனங்களை உலகுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்ற ரீதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் இன்று(21/07/2011) பத்திரிகையாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.,
பத்திரிகையாளர்களைச் சந்தித்த அந்தச் சகோதரர்கள் தங்களின் துக்கம் தாங்காமல் அழுக ஆரம்பித்தனர். வந்திருந்த எல்லோருமே கண்ணீர் விட ஆரம்பித்தனர்.
எங்களுக்கு உடுத்துவதற்கு துணியில்லை, எங்கள் பிள்ளைகளை எங்களால் பார்க்க முடியவில்லை, சொந்த ஊருக்குள்ளே நுழைய முடியவில்லை, நாங்கள் ஏற்றுக்கொண்ட இந்தக் கொள்கைக்காக நாங்கள் இப்போது இந்த அவல நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளோம். என்ன ஆனாலும் எங்களின் கொள்கையிலோ, பிரச்சாரத்திலோ நாங்கள் பின்தங்கிட மாட்டோம். ஆனால் எங்களின் பிரச்சாரத்தை எதிர்கொள்ள வழியின்றி எங்களைக் கொலை செய்யும் நோக்கத்தில் வெறியாட்டம் நடத்திய அத்தனை பேரையும் கைது செய்து எங்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். நாங்கள் பிறந்த எங்கள் ஊருக்குள் நிம்மதியாக நடமாட எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும், இந்த வன்முறையாளர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் , எங்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்தனர்.
தப்பித்தோம் பிழைத்தோம் என சென்னை வந்த சகோதரர்கள் பத்திரிக்கையாளர் முன்பு கண்ணீர் மழ்க பேட்டியளிக்கும் வீடியோ காட்சி

"அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துவான்".
-அல்குர்ஆன் 61:8

Tuesday, July 19, 2011

கப்ரின் மேல் பள்ளிவாசல் கட்டலாமா?

கேள்வி?
கப்ரின் மேல் பள்ளிவாசல் கட்டலாமா?


பதில்:-

கப்ருக்கு மேல் பள்ளிவாசல் கட்டுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.


அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
"அல்லாஹ் யூதர்களைத் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! தம் இறைத் தூதர்களின் மண்ணறைகளை அவர்கள் வணக்கத் தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள்'' என அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்".
-புகாரி (437)

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
உம்மு ஹபீபா அவர்களும், உம்மு சலமா அவர்களும் (அபிசீனிய ஹிஜ்ரத்தின் போது) அபிசீனியாவில் தாங்கள் பார்த்த உருவப் படங்கள் கொண்ட ஒரு கிறிஸ்தவ ஆலயத்தைக் குறித்து (என்னிடம்) பேசினார்கள். மேலும் அவ்விருவரும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அதைப் பற்றிக் கூறினார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "(அவர்கள் எத்தகையவர்கள் என்றால்) அவர்களிடையே நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து இறந்து விடும் போது அவரது சமாதியின் மீது வணக்கத் தலம் ஒன்றைக் கட்டி அதில் (அவருடைய) அந்த உருவங்களை வரைவார்கள். அவர்கள் தாம் மறுமை நாளில் அல்லாஹ்விடம் மக்களிலேயே மிக மோசமானவர்கள்'' என்று கூறினார்கள்.
            -புகாரி (427)
கப்ரு உள்ள இடத்தில் தொழுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
உங்களது தொழுகைகளில்ல் சிலவற்றை உங்களுடைய இல்லங்களிலும் நிறைவேற்றுங்கள் உங்களுடைய இல்லங்களை (தொழுகை நிறைவேற்றப்படாத) கப்ரு (சவக்குழி)களாக ஆக்கி விடாதீர்கள்.
-புகாரி (432)

கப்ருகளுக்கு மேல் பள்ளிமட்டுமல்ல பொதுவாக எந்த ஒரு கட்டிடத்தையும் கட்டுவது கூடாது.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
கப்ருகள் காரையால் (சுண்ணாம்புக் கலவையால்) பூசப்படுவதையும் அதன் மீது உட்காருவதையும் அதன் மீது கட்டடம் எழுப்பப்படுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
-முஸ்லிம் (1765)
கப்ரின் மீது பள்ளிவாசல் கட்டும் நிலை ஏற்பட்டால் அதற்கு முக்கியமான நினந்தனை உள்ளது. அந்த இடத்தை ஆழமாகத் தோண்டி அதில் எலும்புகள் ஏதும் இருந்தால் அவற்றை வேறு இடத்தில் புதைக்க வேண்டும்.

Sunday, July 17, 2011

அடியக்கமங்கலம்-கிளை பொதுக்குழு

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்...

16-07-2011 ஞாயிற்று கிழமை சரியாக 11:30 மணியளவில் திருவாருர் மாவட்ட தலைவர் P.அப்துர் ரஹ்மான்,மற்றும் பொது செயலாளர் M.I.இஷ்மத் பாட்ஷா முன்னிலையில்அடியக்கமங்கலம் TNTJ தவ்ஹீத் மர்க்கஸில் கிளை பொதுக்குழு நடைப்பெற்றது.இப்பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கபட்டனர்:

தலைவர்-S.அஹமது சபியுல்வரா

செயலாளர்-A.முகம்மது சுல்தான்

பொருளாளர்-M.ஹாஜா ஷேக் அலாவுதீன்

துணை தலைவர்-M.அஹமது கபீர்

துணை செயலாளர்கள்-

H.முஸ்தாக் அஹமது

A.ருமைஸ் தீன்

செயற்க்குழு உருப்பிணர்கள்:

M.முகம்மது ஷபீயுல்லாஹ்,

A.உமர் பாரூக்,

S.அப்துல் ரஜாக்,

R.ஜலால்.


மாணவரணி செயலாளர்-M.முகம்மது ஹக்

மருத்துவர் அணி செயலாளர் -S.முகம்மது அணஸ்

தீர்மாணம்:-

அடியக்கமங்கலத்தில் தாவா பணியை அதிக்கபடுத்த ஆலோசனை செய்யப்பட்டது...

Saturday, July 16, 2011

நோட்டீஸ் விநயோகம்


பராஅத் இரவு இஸ்லாமிய மார்க்கத்தில் இல்லாத ஒன்று என்ற உண்மையை மக்கள் மத்தியில் எடுத்துவைக்கும் விதமாக அடியக்கமங்கலம் முழுவதும் நோட்டீஸ் விநயோகிக்கபட்டது...
பராஅத்தும் மத்ஹபுகளும்நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தவர்களுக்கு மத்தியில் ஒவ்வொரு மாதமும் நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத ஏதாவது ஒரு புதுப் புது காரியங்கள் , வழிபாடுகள் நிறைந்து காணப்படுகிறது. அப்படிப்பட்ட நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத காரியங்களில் உள்ளதுதான் ஷஅபான் மாதம் 15 ஆம் பிறை இரவில் மூன்று யாசீன்கள் ஓதுவதும், அன்று இரவில் நின்று வணங்குவதும்., அன்றைய பகற்பொழுதில் நோன்பு வைப்பதும் ஆகும்.
இப்படிப்பட்ட காரியங்களை செய்யக்கூடிய இவர்கள் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு வழிகாட்டியிருக்கிறார்களா? அல்லது இவ்வாறு செய்யுமாறு கட்டளையிட்டிருக்கிறார்களா? என்று சிந்தித்துப் பார்ப்பது கிடையாது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ” நம்முடைய மார்க்கத்தில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி (2697)
மற்றொரு ஹதீஸில் வருகிறது
நபி (ஸல்) அவர்கள் : ” என் சமுதயாத்தில் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள். ஏற்க மறுத்தவரைத் தவிர.” என்று கூறினார்கள். மக்கள் ” அல்லாஹ்வின் தூதரே ஏற்க மறுத்தவன் யார்? என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ” எனக்கு கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்.எனக்கு மாறு செய்தவர் (சத்தயத்தை) ஏற்க மறுத்தவர் ஆவார்.” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹ‎ýரைரா (ரலி) நூல் : புகாரி (7280)
நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத காரியங்களை நன்மை என்று எண்ணி நாம் செய்தாலும் அது அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படாது என்பதையும், அவ்வாறு செய்பவர்கள் நபியவர்களுக்கு மாறுசெய்தவர்கள், நரகவாசிகள் என்பதையும் மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது.

Sunday, July 10, 2011

தீ மிதிக்க முடியுமா?

கேள்வி
இஸ்லாம் உருவ வழிபாடு கூடாது என்று போதிக்கின்றது என்று கூறுகிறீர்கள். அப்படியெனில், நாங்கள் மாரியம்மனின் அருளினால் எந்தவித பாதிப்பும் இல்லாமல் சாமியை நினைத்து தீ மிதிக்கிறோம். அவ்வாறு உங்களுடைய இறைவனின் அருளினால் அந்த இறைவனை நினைத்துக் கொண்டே எந்தவித பாதிப்பும் இல்லாமல் நீங்கள் தீ மிதித்து வர முடியுமா? என்று இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சியைப் பார்த்து வரும் ஒரு இந்து நண்பர் கேட்கின்றார்.
பதில்
தீ மிதிப்பதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். இதற்கும் பக்திக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

மனிதர்களின் உள்ளங்கைகளிலும், உள்ளங் கால்களிலும் மற்ற பகுதிகளை விட வெப்பத்தைத் தாங்கும் ஆற்றல் அதிகமாக உள்ளது.
விளக்கில் தீ எரியும் போது அதில் விரலை நீட்டித் தொட்டு தொட்டு வெளியே எடுக்கலாம். ஒன்றும் செய்யாது. வைத்துக் கொண்டே இருந்தால் தான் விரலைப் பொசுக்கும்.

ஒரு அடுப்பில் உள்ள தீக்கங்கை ஒரு கையால் எடுத்து மறு அடுப்பில் கிராமத்துப் பெண்கள் சர்வ சாதாரணமாகப் போடுவார்கள்.

உள்ளங்கைகளையும், உள்ளங்கால்களையும் நெருப்பில் தொடர்ந்து வைத்துக் கொண்டு இருந்தால் தான் பொசுக்குமே தவிர நெருப்பில் வைத்து வைத்து எடுத்தால் சில நிமிடங்கள் தாக்குப் பிடிக்க முடியும்.

இதன் காரணமாகத் தான் கடவுள் இல்லை எனக் கூறுவோரும் தீ மிதித்துக் காட்டுகின்றனர். முஸ்லிம்களில் அறிவீனர் சிலர் முஹர்ரம் பத்தாம் நாள் அன்று இது போன்ற தீ மிதித்தலை சில பகுதிகளில் செய்கின்றனர்.
எவராலும் செய்ய முடிகின்ற சாதாரணமான ஒரு காரியம் அறியாமை காரணமாக அசாதாரணமான காரியமாகக் கருதப்படுகின்றது.

மாரியம்மன் அருளால் தான் தீ மிதிக்கிறோம் என்று கூறுவதில் அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் தீயில் நடக்காமல் ஒரு நிமிடம் நின்று காட்டச் சொல்லுங்கள்!

அல்லது உள்ளங்காலை வைக்காமல் இருப்பிடத்தை தீக்கங்கில் வைத்து பத்து விநாடி உட்காரச் சொல்லுங்கள்! மாரியம்மன் அருள் தான் காரணம் என்றால் அதையும் செய்து காட்டத் தான் வேண்டும். இதற்கு யாரும் முன் வர மாட்டார்கள். நெருப்பில் வைத்து விட்டு உடனே எடுத்து விடும் நிகழ்ச்சி தான் தீமிதிப்பதில் உள்ள சூட்சுமம்.

நீங்கள் தீ மிதிக்கத் தயாரா? என்று அவர் அறை கூவல் விடுத்தால் அதையும் செய்து காட்ட நாம் தயாராக இருக்கிறோம். ஆனால் அதன் பின்னர் அவர் தமது கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.


அவரிடம் கேட்டு எழுதுங்கள்!


அல்லது நாம் கூறியவாறு தீயில் ஒரு நிமிடம் உட்கார்ந்து விட்டு எந்தப் பாதிப்பும் இல்லாமல் எழுந்து காட்டட்டும். நாம் நமது கருத்தை மாற்றிக் கொள்வோம். சரி தானே!

நூலின் பெயர்: அர்த்தமுள்ள கேள்விகள்! அறிவுப்பூர்வமான பதில்கள்
ஆசிரியர் : P.ஜைனுல் ஆபிதீன்

Sunday, July 3, 2011

பாத் ரூமில் துஆக்களை ஓதலாமா?

கேள்வி:

டாய்லெட் செல்லும் போது ஓதுவதற்கு துவா உள்ளது. அது போல் டாய்லெட் விட்டு வெளி வருவதற்கும் துவா உள்ளது. அதே போல் உளு செய்வதற்கும் முடிப்பதற்கும் பிஸ்மில்லாஹ்வும் இன்ன பிற வாசகங்களும் உள்ளன, டாய்லெட் உலூ போன்றவை ஒரே இடத்தில இறக்கும் பட்சத்தில் பாத்ரூமிலே எல்லா துவாக்களையும் ஓதலாமா?
பதில்:

இயற்கைக் கடனை நிறைவேற்றுபவர் கழிப்பிடத்திற்கு வெளியே தான் துஆக்களை கூற வேண்டும் என்று பலர் கருதுகின்றனர்.இவ்வாறு கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

கழிவறைக்குள் எக்காரியங்களைச் செய்யக்கூடாது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு விவரித்துள்ளார்கள். கழிப்பிடத்திற்குள் துஆக்களைக் கூறக் கூடாது என்றால் இதையும் நபியவர்கள் குறிப்பிட்டிருப்பார்கள். ஆனால் நபியவர்கள் இது கூடாது என்று கூறியதாக எந்தச் செய்தியும் இல்லை.நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குள் நுழைந்தவுடன் துஆ ஓதுவார்கள் என்று புகாரியில் இடம்பெற்ற செய்தி கூறுகின்றது.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கழிவறைக்குள் நுழைந்தால் "அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் குப்ஸி வல் கபாயிஸி'' என்று கூறுவார்கள்.
பொருள்: இறைவா! ஆண் பெண் ஷைத்தான்களின் தீங்கிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.
-புகாரி (6322)

எனவே ஒருவர் கழிப்பிடத்திற்குள் நுழைந்து கூற வேண்டியதைக் கூறிவிட்டு மலம் கழித்தால் அதில் தவறேதுமில்லை.
துஆக்களைக் கூற வேண்டும் என்றே நபிமொழி கூறுகின்றது. அவற்றைக் கழிப்பிடத்திற்கு உள்ளே அல்லது வெளியே கூறுவதில் எந்தத் தடையும் பிறப்பிக்கவில்லை.
கழிவறையில் இருப்பவர் எதையும் மொழியக் கூடாது என்று கூறுபவர்கள் பின்வரும் செய்தியை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.


இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்த போது அவர்களைக் கடந்து சென்ற மனிதர் ஒருவர் சலாம் சொன்னார். அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதில் சலாம் சொல்லவில்லை.

-முஸ்லிம் (606)கழிவறையில் இருக்கும் போது என்பதற்கும் மலம் சிறுநீர் கழித்துக் கொண்டிருக்கும் போது என்பதற்கும் வித்தியாசம் உள்ளது. சிறு நீர் கழித்துக் கொண்டிருக்கும் போது நபிகள் நாயகம் ஸல் அவர்கள் ஸலாம் கூறவில்லை என்று தான் இந்த ஹதீஸ் கூறுகிறது. கழிவறையில் என்று கூறவில்லை. கழிவறைக்குள் நுழைந்தவுடன் ஓத வேண்டியதை ஓதி விட்டு அதன் பின்னர் மலஜலம் கழிப்பதற்கு இதில் எந்த தடையும் இல்லை.