TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Sunday, February 27, 2011


மாவட்ட பேச்சாளர்-M.அல்தாஃப் ஹுசைன்,M.I.S.C
மாநில பேச்சாளர்-K.M.ஜெய்லானி ஃபிர்தவ்ஸி


மாநில பேச்சாளர்-A.அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி

Saturday, February 19, 2011

ஆல்கஹால் கலந்துள்ள வாசணைத் திரவியங்களை உபயோகிக்கலாமா?

                                                                                      ஆல்கஹால் போதையூட்டக்கூடிய பானமாக இருப்பதால் பொதுவாக இதை எந்த வகையிலும் பயன்படுத்தக் கூடாது என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் இது சம்பந்தமான ஹதீஸ்களை நாம் ஆராய்ந்தால் போதையூட்டக் கூடிய வகையில் இதைப் பயன்படுத்துவது மட்டுமே தவறு. போதை ஏற்படாத வகையில் இதைப் பயன்படுத்தினால் தவறில்லை என்ற முடிவுக்கு வரலாம்.


போதை ஏற்படுத்தக் கூடிய ஒவ்வொன்றும் ஹராம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  கூறியுள்ளார்கள்.


6124 حَدَّثَنِي إِسْحَاقُ حَدَّثَنَا النَّضْرُ أَخْبَرَنَا شُعْبَةُ عَنْ سَعِيدِ بْنِ أَبِي بُرْدَةَ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ لَمَّا بَعَثَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمُعَاذَ بْنَ جَبَلٍ قَالَ لَهُمَا يَسِّرَا وَلَا تُعَسِّرَا وَبَشِّرَا وَلَا تُنَفِّرَا وَتَطَاوَعَا قَالَ أَبُو مُوسَى يَا رَسُولَ اللَّهِ إِنَّا بِأَرْضٍ يُصْنَعُ فِيهَا شَرَابٌ مِنْ الْعَسَلِ يُقَالُ لَهُ الْبِتْعُ وَشَرَابٌ مِنْ الشَّعِيرِ يُقَالُ لَهُ الْمِزْرُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُّ مُسْكِرٍ حَرَامٌ رواه البخاري

Friday, February 18, 2011

காபாவில் மலக்கு (?)


அவர்கள் மறைவானவற்றை நம்புவார்கள்.(திருக்குர்ஆன் 2:3)
முஸ்லிம்கள் ஈமான் கொள்ள வேண்டிய மறைவான விஷயங்களில் ஒன்று மலக்குகள் இருக்கிறார்கள் என்று நம்ப வேண்டும். (ஆதாரம் : முஸ்லிம் 1) அவர்கள் மனிதர்களின் கண்களுக்கு புலப்படமாட்டார்கள். சிலர் காஃபாவின் மீது மலக்கு (?) இருப்பதைப் போல் ஒரு videoவை வெளியிட்டுள்ளனர்.மலக்குகளை இப்படி மனிதர்களின் கண்களுக்குத் தெரியும் வகையில் அனுப்புவதாக இருந்தால் காபிர்கள் கேட்டார்களே, அப்போதே அல்லாஹ் அனுப்பியிருப்பான். மனிதர்களை நபிமார்களாக அனுப்பிய போது நிராகரிப்பவர்கள் கூறியதைப் பாருங்கள் :

Sunday, February 13, 2011

அடியக்கமங்கலத்தில் மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி...


விளம்பரம்-1

Saturday, February 12, 2011

பிப்ரவரி 14 காதலர் தினம்( பெண்களின் கற்பு பறிபோகும் நாள்)


கிறிஸ்துவ போதகர் வேலன்டைன் என்பரின் நினைவாக ரோம
பாரம்பரியத்தின் வாயிலாக உருவானது தான் இந்த வேலன்டைன் தினம்.
பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த நாளை
வணிகமயாக்குவதற்காகவே மேற்கத்திய நாடுகள் இதை காதலர் தினமாக
அறிவித்துள்ளன.

எதற்காக பிப்ரவரி 14 தேர்வு செய்யப்பட்டது என்பதற்கு எந்த சரியான
வரலாறும் இல்லாத இந்த நாள், இன்றைக்கு பல பெண்களின் கற்பு பறிபோகும் நாளாக மாறிவிட்டது.

நமது இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல! மேற்கத்திய கலாச்சாரத்தை
இங்கும் கடைபிடிக்கின்றனர்,

இன்றைக்கு உள்ள மீடியாக்கள் காதலை ஊக்கப்படுத்தும் வண்ணம் தனியாக
பல்வேறு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கும் அளவிற்கு காதல் சாதரண
விஷயம் என்பதையும் தாண்டி "அடப்பாவி உனக்கு கேல் ஃபிரண்ட்
இல்லையா? அப்ப நீ வேஸ்ட்" என்று கூறும் அளவிற்கு கவுரவமான
விஷயமாக மாறி விட்டது.

Friday, February 11, 2011

TNTJ வின் கண்டனத்தை தொடர்ந்து பாடல் வரியை நீக்கியது விஜய் டிவி

விஜய் டி.வியில் ஒளிபரப்பாகிவரும், ”மகான்” என்ற தொடரில் இடம்பெறும் 
பாடலில் முஸ்லிம்கள் தங்களது உயிரினும் மேலாக மதிக்கக்கூடிய நபிகள் 
நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்தும் விதமாக ஒரு பாடல் வரி 
இடம்பெறுவதாக தெரியவந்ததை தொடர்ந்து விஜய் டிவி நிறுவனத்தாருக்கு 
டி.என்.டி.ஜே கடந்த 07.02.11 அன்று கண்டன கடிதம் எழுதியதியதோடு நேரில் 
சென்று உடனடியாக அந்த கண்டனத்திற்குரிய வரிகளை நீக்குமாறு டி.என்.டி.ஜே நேரில் வலியுறுத்தியது.

அதைத் தொடர்ந்து அந்த கண்டனத்திற்குரிய வரியை 09.02.11 அன்று முதல் 
நீக்கிவிடுவதாக விஜய் டிவி நிர்வாகம் உறுதியளித்துள்ளது.

தற்போது விஜய் டிவி கூறியது போன்று அந்த பாடல் வரி மற்றும் காட்சியை 
நீக்கியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!

Sunday, February 6, 2011

பிப்ரவரி மாதத்திலிருந்து தமிழன் தொலைக்காட்சியில் TNTJ
நடத்தும் மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பாகிறது.

திங்கள் -வெள்ளி:இரவு 9.00 மணி முதல் 9.30 மணி வரை நிகழ்ச்சிகள்
ஒளிப்பரப்பாகும். இன்ஷா அல்லாஹ்...

Wednesday, February 2, 2011

பின்வரும் வாசகங்கள் வரும் போஸ்டர்களை உங்கள் பகுதிகளில் உடனே ஒட்டவும்

முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை கண்காணிக்க குழு அமைத்திட வேண்டுமென தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கோரிக்கையை ஏற்று கண்காணிப்பு குழு அமைத்த தமிழக அரசுக்கு நன்றி...
                                              இவண்,
                        தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

முஸ்லிம்களின் 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்தினால் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் ஆதரவும் தீ.மு.க கே!

அடியக்கமங்கலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்...