TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Saturday, December 31, 2011

டி.வி மூலம் தொழுகை பயிற்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 30-12-11 வெள்ளி அன்று இஷா தொழுகைக்கு பிறகு தவ்ஹீத் மர்க்கஸில் டி.வி மூலும் தொழுகை பயிற்சி ஒளிப்பரப்பட்டது. இதில் மாநில பேச்சாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் ஊட்டி தர்பியாவில் தொழுகை பயிற்சி என்ற தலைப்பில் உரையாற்றிய சி.டி போடப்பட்டது. சகோதரர்கள் கலந்துக் கொண்டு பயன் அடைந்தனர்.

Thursday, December 29, 2011

அடியக்கமங்கலம் ஊராட்சி மன்ற தலைவரிடம் மணு கொடுத்த TNTJ நிர்வாகிகள்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 29-12-11 வியாழக்கிழமை காலை 11:30 மணியளவில் ஊராட்சி மன்ற தலைவர் SMJ.நிஜாமுதின் அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து TNTJ  நிர்வாகிகள் அடியக்கமங்கலத்தில் சில அடிப்படை வசதி செய்து தரும் படி மணுக் கொடுத்தனர்.

அந்த மணுவில்...
 • கொசு மருந்து அடிக்க கோரியும்,
 • பஸ் நிறுத்தங்களில் புதிய மின் விளக்குகள் அமைக்க கோரியும்,
 • பஸ் நிறுத்தங்களில் ஏற்படும் அசுத்தங்களை உடனுக்குடன் சுத்தம் செய்ய கோரியும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
அதை ஊராட்சி மன்ற தலைவர் பெற்றுக் கொண்டு விரைவில் இதை நிறைவேற்றுவதாக வாக்குறிதி கொடுத்தார். மேலும் அவர் இது போல் செய்திகள் வேறு இருந்தாலும் தயங்காமல் தொலைபேசி மூலம் என்னை தொடர்புக் கொண்டு என் பார்வைக்கு கொண்டு வந்தால் நிச்சயம் தக்க நடவடிக்கை எடுப்பேண் என்று கூறினார்.

மேலும் அடியக்கமங்கலம் ஊராட்சியை முதல் ஊரட்சியாக மாற்ற எங்களுடை ஆதரவும் பங்களிப்பும் நிச்சயம் உங்களுக்கு இருக்கும் என்பதை அடியக்கமங்கலம் TNTJ  நிர்வாகிகள் தெரிவித்தனர்...அல்ஹம்துலில்லாஹ்...!


Monday, December 26, 2011

செயல் வீரர்கள் கூட்டம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ  அடியக்கமங்கலம்-கிளை சார்பாக 25-12-2011 ஞாயிற்றுக் கிழமை மாலை 4:30 மணியளவில் மாவட்ட தலைவர் அப்துல் ரஹ்மான் & மாவட்ட செயலாளர் இஸ்மத் பாட்ஷா முன்னிலையில் செயல் வீரர்கள் கூட்டம் ராஜாத் தெரு தவ்ஹீத் மர்க்கஸில் நடைப்பெற்றது.

இக்கூட்டத்தில் (பிப்ரவரி 14) 14-02-2012 தேதி நடக்க இருக்கும்  "முஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம்" சம்பந்தமாக ஆலோசனை நடைபெற்றது.

மேலும் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:-

 • செட்டிதெரு பஸ் நிறுத்ததில் பேருந்துகள் நிற்த்தப்படாததால் பள்ளி மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டு மனஉழைச்சல் அடைகிறார்கள். இதை கருத்தில் கொண்டு அனைத்து பேருந்துகளும் கண்டிப்பாக செட்டிதெரு பஸ் நிறுத்தத்தில் நிற்க வேண்டும் என்று மேல் அதிகாரிகளுக்கு மனு கொடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது.

 •  பஞ்சாயத்திற்குற்ப்பட்ட பகுதிகளில் கொசு மற்றும் நாய் தொல்லை ஒழிக்க  பஞ்சாயத்து தலைவரிடம் மனு கொடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது.

 • மேலும் பள்ளிவாசல்   பொறுப்புகள் சம்பந்தமாக சில பொறுப்பாளர்கள் நியம்மிக்கப்பட்டது.
மாணவரனி செயலாளராக:
 • சகோ.அஜ்மாலுதீன்,9500773502.
துனை மாணவரனி செயலாளராக:
 • சகோ.அசாருதீன்,8344727437.

சந்தா வசூலிப்பவராக:
 • சகோ.முகம்மது அபுதாஹிர்,9003382347.

உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளராக:
 • இமாம் இலியாஸ்,7200705261.

செய்தி தொடர்பாளராக:
 • சகோ.நஜிமுதீன்,9944522093.

 • சகோ.ருமைஸ் தீன்,9944816551.

மார்க்க புத்தகம் & சி.டி சம்பந்தமான பொறுப்பாளராக:

 • சகோ.முகம்மது அபுபக்கர்,9688105504.

ஆகியோர் நியம்மிக்கப்பட்டு அவர்களின் பொறுப்புகளை பற்றி விளக்கமளிக்கப்பட்டது. துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவுப்பெற்றது.Sunday, December 25, 2011

தூய்மை இல்லாத பட்டக்கால்-தெரு பயணிகள் நிழற்க் குடை களம் இறங்கிய TNTJ மாணவரனி


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) நமதூர் அடியக்கமங்கலம் பட்டக்கால் தெரு பயணிகள் நிழற்க் குடை தூய்மை இல்லாததை பற்றி "அடிப்படை வசதி இல்லா பட்டக்கால் தெரு" என்ற தலைப்பில் நமது கருத்துகளை பதிவு செய்தோம். அந்த நிழற்க் குடையில் உள்ளே உள்ள மாடு கழிவையும் போட்டோ எடுத்து உங்கள் பார்வைக்கு சமர்பித்தோம். ஆனால் இந்த அசுத்தம் பல நாட்களாக சுத்தம் செய்யபடாமல் நீடித்துவந்தது.

இதனால் பொதுமக்கள் அனைவரும் உள்ளே  செல்ல  தயங்கி  பேருந்து  வரும்  வரை கால்கடுக்க நின்று கொண்டு  பயணம் செய்தனர். இந்த அசுத்தத்தை ஊரில் உள்ள  பலரும் கண்டுக் காணாமல் சென்று கொண்டு இருந்தனர்.


அடியக்கமங்கலம்  ராஜாத் தெரு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-(TNTJ) மாணவரினி சார்பாக 25-12-2011 ஞாயிற்றுக் கிழமை காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை சகோதரகள் சுத்தம் செய்யும் களத்தில் இறக்கினர்.

Sunday, December 18, 2011

கண்களை மூடி துஆச் செய்யலாமாகேள்வி:-

கண்களை மூடிக் கொண்டு துஆச் செய்யலாமா? கண்களை மூடிக்கொண்டு துஆச் செய்யும் போது உள்ளச்சம் ஏற்படுகிறது. ஆனால் மாற்று மதத்தினரின் வழக்கமாக இது உள்ளதால் கூடாது என்று சிலர் கூறுகின்றனர்.


பதில்:-

"கண்களை மூடிக் கொண்டு பிரார்த்தனை செய்வதற்கு மார்க்கத்தில் தடையேதும் இல்லை.உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான்".

(அல்குர்ஆன் 7:55)


இந்த வசனத்தில் பிரார்த்தனை செய்யும் ஒழுங்கைப் பற்றி இறைவன் கூறும் போது, பணிவாகவும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள் என்று கூறுகின்றான். கண்களை மூடிக் கொண்டால் தான் உங்களால் இந்த நிபந்தனையை நிறைவேற்ற முடியும் என்றால் அதைச் செய்வதில் தவறில்லை.
நமக்கு அனுமதிக்கப்பட்ட விஷயங்களை மாற்று மதத்தவர்கள் செய்வது பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை.

Tuesday, December 13, 2011

தர்கா வழிபாட்டிற்க்கு எதிராக நோட்டிஸ் விநயோகம்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அடியக்கமங்கலம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக தர்கா வழிபாட்டிற்க்கு எதிராக பல்வேறு தாவா பணிகளை செய்து வருகிறது அதன் தொடர்ச்சியாக "இதோ சொர்க்கத்திற்க்கான வழி"  என்ற தலைப்பில் 11-12-11 ஞாயிற்றுக்கிழமை நோட்டிஸ் விநயோகம் செய்யப்பட்டது.Sunday, December 11, 2011

சந்திரகிரகன தொழுகைஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 10-12-11 சனிக்கிழமை இரவு 7:40 மணிக்கு சந்திரகிரகன தொழுகை நமது மர்க்கஸில் நடைப்பெற்றது. இதில் ஆண்களும்,பெண்களும்,சிறுவர்களும் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டனர்.Saturday, December 10, 2011

குர்ஆன்,ஹதிஸ் பேனர்கள்

அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் அடியக்கமங்கலம் ராஜாத் தெருவில் நடக்கவிருக்கும் மெளலான பாவா கந்துரிக்கு எதிரான பல பயான்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக தர்கா வழிபாடு,இனைவைப்பு,சந்தன பூசுதல் ஆகியவை மார்க்கத்தில் தடை என்று குர்ஆன், ஹதிஸ் ஆதாரங்களுடன் 5 பேனர்கள்  முக்கிய இடங்களில் 09-10-11 அன்று வைக்கப்பட்டது.

ராஜாத் தெரு (தவ்ஹீத் மர்க்கஸ் முனையில்) சந்தனம் பூசுதல் என்ற தலைப்பில் பேனர் வைக்கப்பட்டுள்ளது.

மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 09-12-11 வெள்ளிக்கிழமை அன்று சரியாக மாலை 4:00 மணியளவில் ராஜாத் தெரு தவ்ஹீத் மர்க்கஸில் மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த சொற்ப்பொழிவில் அதிரை.ராஜா அவர்கள் "தர்கா வழிபாடு" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

இவரது உரையில் கொடியேற்றுவது, சந்தனம் பூசுவது,கச்சேரி,கவாலி நிகழ்ச்சிகள் ஆகிய அனைத்தும் மாற்று மத கலச்சாரம் என்று தெளிவாக எடுத்து கூறினார்.யார் மாற்று மத கலச்சாரத்தை பின்பற்றுகிறார்களோ அவர்கள் நரகத்துக்கு செல்வார்கள் என்ற நபி (ஸல்) பொன் மொழியை நினைவுப்படுத்தினார்.


புங்க மர விதையில் பயோ டீசல்: முஸ்லீம் மாணவிகள் சாதனை !


மயிலாடுதுறை அருகே, பள்ளி மாணவியர், புங்க மர விதையில் இருந்து எடுக்கப்பட்ட பயோ டீசலை கொண்டு, கார் இன்ஜினை இயக்கிக் காண்பித்தனர். நாகை மாவட்டம், மயிலாடுதுறை அடுத்த வடகரையில் உள்ள ஹாஜா சாரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியர், பள்ளி நிர்வாகி ஜியாவுதீன் மற்றும் முதல்வர் குணசேகரன் ஆகியோர் உதவியுடன், புங்க மர விதையிலிருந்து எடுக்கப்பட்ட பயோ டீசலை கொண்டு, வாகன இன்ஜின்களை இயக்க முடியும் என கண்டுபிடித்துள்ளனர். ஹாஜா சாரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், நாகை கலெக்டர் முனுசாமி முன்னிலையில், முஸ்லீம் மாணவிகள் செயல் முறை விளக்கம் காண்பித்தனர். முதலில், டீசலை கொண்டும், பின் தாங்கள் கண்டுபிடித்துள்ள புங்க மர விதையிலிருந்து எடுக்கப்பட்ட பயோ டீசலை கொண்டும், தொடர்ந்து கார் இன்ஜினை இயக்கிக் காண்பித்தனர். நிகழ்ச்சியில், மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் திருவளர்ச்செல்வி, மயிலாடுதுறை மாவட்ட கல்வி அலுவலர் சக்திவேல், தரங்கம்பாடி தாசில்தார் சூரியமூர்த்தி, தனி தாசில்தார் பாலச்சந்திரன், செம்பனார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, மாணவியரின் கண்டுபிடிப்பை பாராட்டினர். 

நன்றி : காலை நாளிதழ்

Tuesday, December 6, 2011

ஆஷூரா நோன்பிற்க்காக இஃப்தார் நிகழ்ச்சி

அல்லாஹ்வின் உதவியால் 05-12-11 & 06-12-11 ஆகிய தேதிகளில் ஆஷூரா நோன்பிற்க்காக இஃப்தார் நிகழ்ச்சி அடியக்கமங்கலம் தவ்ஹீத் மர்க்கஸ் சார்பாக ஏற்பாடு செய்யபட்டது.

05-12-11 அன்று எடுக்கபட்டது....

06-12-11 அன்று எடுக்கபட்டது....


Monday, December 5, 2011

அணல் பறந்த தெருமுனைப் பிரச்சாரம்

அல்லஹ்வின் மாபெரும் கிருபையால் 04-12-11 ஞாயிற்று கிழமை மாலை சரியாக 4:30 மணிக்கு அடியக்கமங்கலம் TNTJ தவ்ஹீத் மர்க்கஸ் சார்பாக 5 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது.இதில் 2 இமாம்கள் யாசர் அரபத்(திருத்திரைபூன்டி) & அப்துல் ஹமீது(இமாம் பொதக்குடி) உரைநிகழ்த்தினார்கள்.


மேலச்செட்டி தெரு (நபிலா ஸ்டோர் முன்பு) யாசர் அரபத் அவர்கள் தர்கா வழிபாடு  என்ற தலைப்பில்  உரையாற்றினார்.

Friday, December 2, 2011

ஆஷூரா நோன்பு


நபி (ஸல்) அவர்கள் ஆஷூரா நோன்பு நோற்பதை நமக்கு சுன்னத்தாக ஆக்கியிருக்கிறார்கள்.
"ரமலான் நோன்பு கடமையாக்கப் படுவதற்கு முன்னால் மக்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம் நாளில்) நோன்பு நோற்று வந்தார்கள். அது தான் கஅபாவுக்குப் புதிய திரை போடப்படும் நாளாக இருந்தது. அல்லாஹ் ரமலானுடைய நோன்பைக் கடமையாக்கிய போது, யார் ஆஷூராவுடைய நோன்பு நோற்க விரும்புகிறார்களோ அவர் அதை நோற்றுக் கொள்ளட்டும். யார் அதை விட்டு விட விரும்புகிறாரோ, அவர் அதை விட்டு விடட்டும். என்று அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்".
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 1592
இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
"அறியாமைக் கால (குறைஷி) மக்கள் ஆஷூராவுடைய நாளன்று நோன்பு நோற்கக் கூடியவர்களாக இருந்தார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னால் நபி (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் அந்நோன்பை நோற்றார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்ட போது நபி (ஸல்) அவர்கள், நிச்சயமாக ஆஷூரா நாள் அல்லாஹ்வுடைய நாட்களில் உள்ள நாளாகும். எனவே விரும்பியவர் அந்நாளில் நோன்பு நோற்கலாம். விரும்பியவர் விட்டு விடலாம் எனக் கூறினார்கள்".
நூல்: முஸ்லிம் 1901
மேற்கண்ட ஹதீஸ்கள் ஆஷூரா நோன்பு நோற்பது சிறப்பிற்குரியதும் சுன்னத்தானதும் ஆகும் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.

Thursday, December 1, 2011

அடிப்படை வசதி இல்லா பட்டக்கால் தெரு

அடியக்கமங்கலம் என்றாலே ஒரு காலத்தில் பட்டக்கால் தெரு தான் நினைவுக்கு வரும்,அனைத்து ஊர்களிலிருந்து வரும் பேருந்துகளும் அடியக்கமங்கலம் பட்டக்கால் தெரு நிறுத்தம் இடம் தெரியாமல் இருந்தது இல்லை.

(பல நாட்களாக சுத்தம் செய்யாமல் இருக்கும் பயனிகள் குடை)

ஏன் அடியக்கமங்கலத்தில் எங்கே பார்த்தாலும் திருட்டு நடந்து வருகிறது.ஆனாலும் பட்டகால் தெருவில் இது மிகவும் அரிது.ஏன் என்று தெரியவில்லை.

மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் இந்த தெருவில் புதிய பேருந்து நிறுத்தம் இரண்டு உள்ளது.பல வருடங்களாக இல்லாமலிருந்த இந்த பேருந்து நிறுத்தம் இப்போது தான் டயில்ஸ் போட்டு புதிதாக கட்டப்பட்டுள்ளது.

ஆனால் இந்த நிழற்குடை கட்டியும் பயன் இல்லாமல் இருந்து வருகிறது.
 பட்டக்கால் தெரு முனையில் இருக்கும் இரண்டு விளக்குகளும் சரிவர எறிவதில்லை.

ஏறிந்தாலும் இரண்டு பேருந்து நிறுத்தும் இடங்களிலும் விளக்கின் ஒளி போதுமானதாக இல்லை.இதனால் மக்களுக்கு பல சிரமங்கள் ஏற்படுகிறது.

இந்த விளக்கு இல்லாத காரணத்தால் பல சமுக தீமைகளும் நடக்கிறது.


 • குடிகாரர்களுக்கு இது பாராக பயன்படுகிறது.

 • விலங்குகளுக்கு இது கழிப்பிடமாக பயன்படுகிறது.

 • குடிகாரர்களுக்கும்,வழிபோக்கர்களுக்கும்,பிச்சைகாரர்களுக்கும் திருடர்களுக்கும் இது தங்குமிடமாக(GUEST ROOM) ஆகி விட்டது.

 • எப்போ பார்த்தாலும் சிகரெட் துண்டுகளும்,காலி சாராய பாட்டல்களும்,பான்பராக்,ஆன்ஸ் என்று குப்பை கூடையாகவும் பயன் படுகிறது.
இதனால் மக்கள் அதனுள் செல்வதற்கே மிகவும் அஞ்சிகின்றனர்.பேருந்து நிறுத்தம் இதற்க்காக தான் டயில்ஸ் போட்டு கட்டினார்களா?.இது அனைத்தும் பராமரிப்பு இல்லாததால் தான் நடந்து வருகிறது.அதனால் ஊராட்சி மன்ற நிர்வாகம் இதில் கூடுதல் கவனம் எடுக்க வேண்டும்.


 • தெருக்களை சுத்தம் செய்யும் தோட்டி அந்த பஸ் நிலையத்தையும் சுத்தம் செய்ய உத்தரவு கொடுக்க வேண்டும்.


 • இரண்டு பேருந்து நிறுத்தும் இடங்களிலும் தனி விளக்குகளை பொருத்த வேண்டும்.
இவ்வாறு செயதால் தான் அடியக்கமங்கலம் அடிப்படை வசதி உள்ள கிரமமாக விளங்கும்.இது அனைத்து பேருந்து நிறுத்தும் இடங்களுக்கும் பொருந்தும்.

Monday, November 28, 2011

எதிர்புக்கு மத்தியில் நடந்த பெண்கள் பயான்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 26-11-2011 சனிக்கிழமை மாலை சரியாக 4:00 மணியளவில் பெண்கள் பயான் தவ்ஹீத் மர்க்கஸில் நடைப்பெற்றது.அதே தினத்தில் மிகவும் அருகில் உள்ள மெளலானா பாவா தர்காவில் கொடியேற்றம் விழா ஏற்பாடு செய்யப்பட்டுவந்தது.

ஆலிமா அவர்கள் தர்கா வழிபாடு பற்றி மிகவும் துள்ளியமாக எடுத்துகூறினார்.அவரது உரையில் சந்தனம் பூசூவது,கூடு எடுப்பது,கொடியேற்றுவது ஆகிய தீமைகளை ஆதாரங்களுடன் எடுத்து கூறினார்.ஆனால் அசத்தியவாதிகள் செய்தது என்ன தெரியுமா? "எங்கே மக்கள் இந்த சொற்பொழிவை கேட்டுவிடுவார்களோ,கூட்டம் வராமல் போய்விடுமோ,உண்டியல் வசூல் குறைந்துவிடுமோ என்று அஞ்சி பாட்டை ஒளிபெருக்கி மூலம் பாடவைத்தனர்".

இதையும் மீறி நமது ஒளிபெருக்கி மூலம் பயான் சிறப்பாக நடந்தது.இதனால் ஆபத்து வருமே என்று கூட அஞ்சாமல் தீமையை தடுக்கவேண்டும் என்ற ஒரே நோகத்தோடு இந்த  தவ்ஹீத் ஜமாஅத் செயல்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்...
"உண்மை வந்து விட்டது,பொய் அழிந்து விட்டது.பொய் அழியக் கூடியதாகவே உள்ளது"என்றும் கூறுவீராக!"
அல்-குர்ஆன்-17:81

Thursday, November 17, 2011

காலில் விழுதல்

சிலர் இந்த எல்லையையும் கடந்து மகான்கன் என்று இவர்களாகத் கற்பனை செய்து கொண்டவர்களின் கால்களில் விழுகின்றனர். இது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதாகும் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
திருக்குர்ஆன் இதைத் தெளிவாக அறிவிக்கின்றது."உமது இறைவனிடம் இருப்போர் (வானவர்கள்) அவனுக்கு அடிமைத்தனம் செய்வதைப் புறக்கணிக்க மாட்டார்கள். அவனைத் துதிக்கின்றனர். அவனுக்கே ஸஜ்தாச் செய்கின்றனர்".
திருக்குர்ஆன் : 7:206"இரவு, பகல், சூரியன், சந்திரன் ஆகியவை அவனது சான்றுகளில் உள்ளவை. சூரியனுக்கோ, சந்திரனுக்கோ ஸஜ்தாச் செய்யாதீர்கள்! அவனையே நீங்கள் வணங்குவோராக இருந்தால் அவற்றைப் படைத்த அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்யுங்கள்!"
திருக்குர்ஆன் : 41:37"அல்லாஹ்வுக்கே ஸஜ்தா செய்து வணங்குங்கள்".
திருக்குர்ஆன் : 53:62படைக்கப்பட்டவற்றுக்கு ஸஜ்தாச் செய்யக் கூடாது. படைத்தவனுக்குத் தான் ஸஜ்தாச் செய்ய வேண்டும் என்பது தான் நமக்கு இடப்பட்ட கட்டளை."ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு ஸஜ்தாச் செய்வதை நான் அனுமதிப்பதாக இருந்தால் மனைவியை கணவனுக்கு ஸஜ்தா செய்ய அனுமதித்திருப்பேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்".
அறிவிப்பவர் : அபூஹரைரா (ரலி)
நூல் : திர்மிதி 1079நான் ஹீரா எனும் ஊருக்குச் சென்றேன். அங்குள்ள தலைவருக்கு அவ்வூர் மக்கள் ஸஜ்தா செய்ததை நான் பார்த்தேன். ஸஜ்தா செய்யப்படுவதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவரை விட அதிக தகுதி படைத்தவர்களாயிற்றே என்று (எனக்குள்) நான் கூறிக் கொண்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து 'ஹீரா ஊர் மக்கள் தமது தலைவருக்கு ஸஜ்தாச் செய்ததை நான் பார்த்தேன். அல்லாஹ்வின் தூதரே நீங்கள் இதற்கு அதிகத் தகுதி உடையவர்கள்' என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'எனது சமாதியை நீ கடந்து சென்றால் அதற்கு ஸஜ்தாச் செய்வாயா?' எனக் கேட்டார்கள். மாட்டேன் என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'அவ்வாறு செய்யாதீர்கள். ஒரு மனிதனை இன்னொரு மனிதனுக்கு ஸஜ்தாச் செய்ய நான் அனுமதிப்பதாக இருந்தால் மனைவியை கணவனுக்கு ஸஜ்தாச் செய்ய அனுமதித்திருப்பேன். ஏனெனில் அவர்கள் கணவருக்கு அதிகம் கடன்பட்டுள்ளனர்' என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பாளர் : கைஸ் பின் சஅத் (ரலி) 
நூல் : அபூதாவூத் 1828
முஆத் (ரலி) ஷாம் அல்லது ஏமன் நாட்டுக்கு வந்தார். அங்கே கிறித்தவர்கள் தங்கள் பாதிரிமார்களுக்கும், தலைவர்களுக்கும் ஸஜ்தாச் செய்ததைக் கண்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதற்கு அதிகத் தகுதி படைத்தவர்கள்' என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டனர். (மதீனா வந்தததும்) 'அல்லாஹ்வின் தூதரே கிறித்தவர்கள் தமது மத குருக்களுக்கும், தலைவர்களுக்கும் ஸஜ்தாச் செய்ததை நான் கண்டேன். (இவ்வாறு) கண்ணியம் செய்வதற்கு நீங்கள் அதிகத் தகுதி படைத்தவர்கள் என்று என் மனதில் எண்ணினேன். ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என்று கேட்டேன். இது தான் எங்களுக்கு முந்தைய நபிமார்களின் முகமன் அவர்கள் கூறினார்கள். இதை எங்கள் நபிக்கு செய்திட நாங்கள் அதிக உரிமை படைத்தவர்கள்' என்று கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்கள் தங்கள் வேதத்தை மாற்றியது போல் தங்கள் நபிமார்கள் மீது பொய் கூறுகின்றனர். இதை விடச் சிறந்ததை அல்லாஹ் நமக்குத் தந்துள்ளான். அது தான் ஸலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அபீஅவ்பா (ரலி)
நூல் : அஹ்மத் 18591சமுதாயத்தில் எவ்வளவு மதிப்புமிக்கவர் என்றாலும் அவர் காலில் விழுவதற்கு இஸ்லாத்தில் அறவே அனுமதியில்லை.

Saturday, November 12, 2011

பகிரங்க அறைகூவல்


கொள்கைச் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். எனது மின்னஞ்சல் முகவரியில் இருந்து அனுப்பப்பட்டதாகவும், எனது மின்னஞ்சல் முகவரிக்கு வந்ததாகவும் சில ஆபாச செட்டப் மெயில்களைச் சிலர் பரப்பி வருவது என் கவனத்துக்கு வந்துள்ளது.


என்னுடைய மின்னஞ்சல் முகவரி இது வரை நான்கு முறை களவாடப்பட்டதைப் பற்றி அவ்வப்போது எனது தளத்தில் நான் தெரிவித்துள்ளேன். எனது முகவரியில் இருந்து பல முகவரிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டதை வெப் மாஸ்டர் துணையுடன் நான் கண்டுபிடித்துள்ளேன். இது போல் பரப்பக் கூடியவர்கள் அதன் உண்மைத் தன்மையை நிரூபிக்கக் கடமைப்பட்டுள்ளார்கள். அவர்கள் நேருக்கு நேராக வந்து என் முன்னிலையில் அதை நிரூபித்துக் காட்டுமாறு பகிரங்க அறைகூவல் விடுகிறேன். என்னைப் பற்றி அவதூறு பரப்புவோர் குறித்து சைபர் கிரைம் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது கணிணியிலும் நெட் ஒர்க வழியாக நுழைந்து பல ஃபைலகளை அந்தக் கயவர்கள் அழித்துள்ளனர். அதையும் வெப்மாஸ்டர் துணையுடன் கண்டு பிடித்துள்ளேன். இதற்காகவும் சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்

குறிப்பு:-

பொது வாழ்வில் உள்ள யாருக்கு எதிராக எதைப் பரப்பினாலும் அதைத் தக்க முறையில் நிரூபித்து சம்மந்தப்பட்டவர் குற்றம் செய்திருந்தால் அவர் மீது தக்க நடவடிக்கை எடுப்பதற்காகவே பரப்ப வேண்டும். அதிலும் குறிப்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொருத்தவரை அதன் நிர்வாகிகள் மீதான பாரதூரமான குற்றச்சாட்டுகளில் தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கும் ஜமாஅத்தாக உள்ளது. எனவே எனக்கு எதிராக அவதூறு பரப்புவோர் அதைத் தக்க முறையில் நிரூபணம் செய்யும் பொறுப்பையும் ஏற்க வேண்டும். அல்லது தங்களின் அவதூறுக்காக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறேன்.

Wednesday, November 9, 2011

கூட்டு குர்பானி


அல்லஹ்வின் மாபெரும் கிருபையால் அடியக்கமங்கலம் கிளை சார்பாக 6 மாடுகள் அறுக்கப்பட்டு சுற்றுவட்டார பகுதி ஏழை மக்களுக்கு விந்யோகம் செய்யப்பட்டது.
Monday, November 7, 2011

ஹஜ் பெருநாள் திடல் தொழுகை

அல்லாஹ்வின் மாபெரும் உதவியால்...07/11/2011 அன்று காலை சரியாக 7:45 மணிக்கு அடியக்கமங்கலம் ராஜாத் தெரு தவ்ஹீத் மர்க்கஸ் வளாகத்தில் நபி வழி ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைப்பெற்றது.

ஆண்கள் பகுதி


பெண்கள் பகுதி


அனைவரும் தங்களது வாழ்த்துகளை பறிமாறி கொண்டனர்.


நமது ஜமாஅத் சார்பாக திடல் தொழுகை ஏற்பாடுகள் 06/07/2011 ஞாயிறு அன்றே
செய்யப்பட்டுவந்தன.ஆனால் ஹஜ் பெருநாள் காலையில் 5:30 மணியில் இருந்து மழை பொழிந்தன.உடனே பள்ளிவாசல் உள்ளே தொழுகையை நடத்திவிடலாம் என்று சகோதரர்கள் முடிவை மாற்றினர்.ஆனாலும்  திடல் தொழுகை என்கிற சுன்னத் விடுபட போகிறதே என்ற வருத்தம் அனைவருக்கும் இருந்தது.ஆனால் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் மழை 6:30க்கு ஓய்ந்தன.உடனே சகோதரர்கள்  7:15 மணிக்கு கலத்தில் இரக்கப்பட்டு திடல் தொழுகையை வெரும் 10 நிமிடங்களில் தார் பாய்களை விரித்து,பாய்கள் போட்டு ஏற்பாடு செய்தனர்.

சுன்னத்து தானே என்று எந்து ஒரு சூழ்நிலையிலும் சுன்னத்தை விடமல் பேணி வரும் ஒரே ஜமாஅத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தான் என்பது அடியக்கமங்கலத்தில் நிருபனமாயிற்று...அல்ஹம்துலில்லாஹ்!

ஆனால் அடியக்கமங்கலத்தில் நாங்களும் தவ்ஹீத் ஜமாஅத் தான் என்று கூறி வரும் சுமையா டிரஸ்ட் வாதிகள் திடல் தொழுகைக்காண எந்த ஒரு முயற்ச்சியும் எடுக்கவில்லை ஏன் எடுக்கவில்லை என்றால் திடல் சேராக இருக்கிறது என்று மழுப்பினார்கள்.ஹஜ் பெருநாளுக்கு முன் 2 நாள் வரை மழை இல்லை வெயில் தான் இருந்தது ஆனாலும் இவர்கள் திடலை சுத்தம் செய்யாமல் திடல் சேராக இருக்கிறது என்று சமாளிக்கின்றனர்.

இவர்களின் கொள்கை அழிந்து வருவதை கண்னால் காணமுடிகின்றது.
அல்லாஹ் இவர்களுக்கு நேர் வழி காட்டுவானாக...

அடியக்கமங்கலத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ  மட்டும் தான் நபிவழி முறையில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடத்தியது எனபது குறிப்பிடத்தக்கது.
  எல்லா புகழும் இறைவனுக்கே...


அராபா நோன்பு இப்தார் நிகழ்ச்சி


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 06-11-11 ஞாயிற்று கிழமை அராபா நோன்பு இப்தார் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

Saturday, November 5, 2011

நோட்டிஸ் விநயோகம்


01-10-11  அன்று அடியக்கமங்கலம் முழுவதும் குர்பானி சட்டங்கள் என்ற தலைப்பில் நோட்டிஸ் விநயோகம் செய்யப்பட்டது.


Thursday, November 3, 2011

அஜினாமோட்டோ ஆபத்து!


சமையலில் ருசிக்காக இன்றைக்கு அஜினாமோட்டோ என்ற வேதிஉப்பு பயன்படுத்தப்படுகின்றது.உண்வுப் பொருள்களுக்கு சுவை சேர்ப்பதற்காக இது பயன்படுத்தப்படுகின்றது.இந்த அஜினாமோட்டோ உப்புகள் ஹோட்டல்களில் அதிகமாகப் பயன்படுத்தப் படுகின்றன.மலேசியா போன்ற நாடுகளில் இது ஒரு மளிகைப் பொருளாகவே மாறிவிட்டது.நமது நாட்டிலும் பாஸ்ட்புட் கடைகளில் இந்த அஜினாமோட்டோ மிக அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றது.


இந்த அஜினாமோட்டோ என்பது கரும்பு மற்றும் மரவள்ளிக் கிழங்கு ஆகியவற்றை ஊரல்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றது.

இதை உணவுப் பொருள்களில் சேர்த்துக் கொள்வதால் உடல்நலத்திற்கு கேடு என்பது நிருபிக்கப்பட்டுள்ளது.ஒரு வேளை உணவில் 3 கிராமுக்கு அதிகமாக அஜினாமோட்டோ சேர்த்தால் தலைவலி,நெஞ்சுவலி,குமட்டல்,கை கால் மரத்துப் போதல் போன்ற பின்விளைவுகளை இது ஏற்படுத்துகின்றது.அது மட்டுமில்லாமல் இந்த உப்பு நம் உடலில் உள்ள கால்சியம் சத்துகளை உறிஞ்சி எலும்புகளை பலமிழகச் செய்வதாகவும்,அதன் மூலம் முடிகள் நரைத்துப் கேடுவிளைவிக்கும் இந்த அஜினாமோட்டோவை உணவில் சேர்ப்பதைத் தவிர்ப்பதே நல்லது.

உணர்வு-உரிமை-16 குரல்-09 

Wednesday, October 26, 2011

உலகிலேயே விலை குறைந்த Tablet இப்போது இந்தியாவில் அறிமுகம்Amazonன் Kindle fire எனும் Tablet தான் குறைந்த விலை Tablet ஆக் இருந்தது.  இதன் விலை 200 டாலர்கள் [இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் 9800 ஆகும்].   தற்போது Aakash எனும் Tablet அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. இதன் விலை சந்தையில் 60 டாலர்கள் [இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் 2900 ஆகும்].  இந்திய அரசாங்கம் மாணவர்களுக்கு மானிய விலையில் 35 டாலர்களுக்கு [இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் 1700க்கு] தருகிறது.   அறிமுக காலத்தில் ஒரு லட்சம் Tabletஐ இலவசமாக வழங்குகிறது.  அறிமுக நாளன்று 500 Tablet வழங்கப்பட்டன.  தகவல் தொடர்புத் துறை அமைச்சர் திரு. கபில் சிபல் இந்த Tabletஐ அறிமுகம் செய்து வைத்தார்.  பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த இந்த தொழில்நுட்பம் தற்பொழுது ஏழைகளும் பயன்படுத்த முடியும் என தெரிவித்தார்.  இந்த Tablet இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகிறது. இந்த Aakash Tabletன் வேகம் குறைவாக உள்ளது என சிலர் தெரிவிக்கின்றனர்.
Aakash Tabletன் விவரம்
- Android 2.2
- 7inch தொடு திறை
- 350 கிராம் எடை
- 32 GB Internal Memory
- 256 MB RAM
- இரண்டு USB Port
- 2100 mAh battery
- இரண்டு அல்லது மூன்று மணி நேரம் பயன்படுத்த முடியும்.
வட இந்தியாவில் இந்த Tabletஐ 118 degree Fahrenheitல் வைத்து பரிசோதித்து பார்க்கப்பட்டது. Datawind என்ற British நிறுவனமும் இந்திய தொழில்நுட்ப நிறுவனமான  IITயும் இணைந்து இந்த Tabletஐ உருவாக்கியுள்ளனர். இன்னும் சில மாதங்களில் Aakash Tablet சந்தைக்கு விற்பனைக்கு வருகின்றது.

அடியக்கமங்கலம் வார்டு உறுப்பினர்களின் விபரம்


அடியற்கை ஊராட்சியின் தலைவர், உறுப்பினர் மற்றும் வார்டு உறுப்பினர் பற்றிய விபரங்கள் :-

தலைவர் : ஜனாப். S.M.J நிஜாமுதீன்,

உறுப்பினர் : திரு. R.D. முத்து,

1 வார்டு : திரு. P. தங்கதுரை.


2 வார்டு : திரு. P. பாரதி மோகன்.

3 வார்டு : திரு. S. ஞானசேகர்.

4 வார்டு : திரு. P. ராஜீவ் காந்தி.

5 வார்டு : திருமதி. K. லலிதா.

6 வார்டு : ஜனாப். A. அமானுல்லாஹ்.

7 வார்டு : ஜனாப். M. அய்யூப் கான்.

8 வார்டு : ஜனாப். U. உம்மா சல்மா.


வார்டு :


10 வார்டு : ஜனாப். M. அப்துல் ஹலீம்.

11 வார்டு : ஜனாபா R. பரக்கத் நிஷா.

12 வார்டு : திரு. P. சுரேஷ் குமார்.