TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Thursday, March 31, 2011

ஏப்ரல் ஃபுல்: ஏமாற்றாதீர்கள்! ஏமாறாதீர்கள்!!

ஏப்ரல் 1 என்றாலே ஏமாற்றுதல் என்று பொருள் மாறும் அளவிற்கு ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் சிலர் சிலரை மதிக்காமல், உரிய கவுரவத்தைக் கொடுக்காமல், அவர்களிடம் பொய் சொல்லி, அதற்குச் சத்தியமும் செய்து நம்ப வைத்து பிறகு ஏமாற்றுவது, ஏளனமாகச் சிரிப்பது, மேலும் அவர்களுக்கு இழிவை ஏற்படுத்துவது போன்ற செயல்களை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்கள்.
இவர்கள் பிறரை ஏப்ரல் ஃபூல் – முட்டாளாக்கி அற்ப சந்தோஷத்தை அனுபவித்து வருகின்றனர்.
April Fool’s Day அல்லது All Fool’s Day என்ற ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ஏப்ரல் ஃபுல் க்கு பல வரலாறுகள் சொல்லப்படுகின்றது
முஸ்லிம்களில் சிலரும் இதை செய்து வருகின்றனர்.
எனவே நாம், நமக்கு வழிகாட்டியாக வந்த குர்ஆனையும், ஹதீஸையும் அடிப்படையாகக் கொண்டு இந்தத் தீமையைப் பற்றி அறிந்து, அதிலிருந்து விலகவும், நேர்வழி பெறவும் முயற்சிக்க வேண்டும்.
ஹோலி கலாச்சாரம்
பொதுவாக மாணவர்கள் ஏப்ரல் மாதத்தில் பிறருடைய மேலாடைகள் மீது மையைத் தெளித்து அசிங்கப் படுத்துகின்றார்கள். இதை ஏப்ரல் ஃபூலின் ஓர் அடையாளமாக நினைத்து செய்கின்றனர். மையைத் தெளிக்கும் இந்த நடைமுறையானது ஹோலி பண்டிகையின் போது நிறங்களை பரஸ்பரம் வீசிக் கொள்ளும் இந்துக்களின் ஒரு பிரிவினருடைய கலாச்சாரத்துடன் ஒத்துப் போகின்றது. எனவே மாற்று மதக் கலாச்சாரம் என்ற அடிப்படையில் முஸ்லிம்கள் இதைக் கைவிட வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் பிற சமுதாயத்தின் சம்பிரதாயங்களை (கலாச்சாரத்தை) ஏற்படுத்திக் கொள்கிறானோ அவனும் அவர்களைச் சார்ந்தவனே! (நூல்: அபூதாவூத் 3512)

சென்னை பாரிமுனையில் பள்ளிவாசலை இடித்து அபகரிக்க முயற்சி – களமிறங்கி மீட்டெடுத்த தவ்ஹீத் ஜமாஅத்!


சென்னை பாரிமுனையில் பிராட்வே சாலையில் இமேஜ் ஆப்டிக்கல் என்ற கண்ணாடி ஷோரூம் அமைந்துள்ளது.அந்தப்பகுயில் வந்து செல்லும் மக்கள் தொழுவதற்கு இடம் தேடி மிகவும் சிரமப்படும் அப்பகுதி மக்களின் அவலத்தைக்கண்ட‌ அந்த கட்டிடத்தின் உரிமையாளர் உமர் அப்துல்லாஹ், அந்த கட்டிடத்தின் முதல் தளத்தின் ஒரு பகுதியை தொழுகை நடத்துவதற்கு பள்ளி அமைத்துக்கொள்ளலாம் என தானமாக வழங்கியிருக்கிறார். மட்டுமின்றி இனி அந்த இடத்திற்கு தானோ தன் வாரிசுகளோ உரிமை கொண்டாட மாட்டார்கள் எனவும் வாக்குறுதி அளித்திருக்கிறார்.
கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் அந்த இடம் அங்கு வந்துசெல்லும் மக்கள் தொழுவதற்கு நல்ல முறையில் பயன்பட்டு வந்திருக்கிறது. இந்நிலையில் கேராளாவில் இயங்கி வரும் “மர்கஸூஸ் தக்காபஸூஸ் சுன்யா” என்ற எத்தீம் கானா அமைப்பு நிர்வாகிகள் உமர் அப்துல்லாஹ் அவர்களைத் தொடர்பு கொண்டு எங்களுக்கு ஒரு இடம் தாருங்கள். அங்கே நாங்கள் கடை கட்டி வாடகைக்கு விட்டு அந்த வருமானத்தை எங்களுக்கு பயன்படுத்திக் கொள்கிறோம் என இவர்கள் கேட்க, அவர்களுக்காக அந்த கட்டிடத்தின் 3 மற்றும் 4வது தளங்களை முழுமையாக விட்டுக்கொடுத்து விட்டு டெல்லிக்கு சென்று அங்கேயே தங்கி விட்டார் உமர் அப்துல்லாஹ்.
இந்த நிலையில் கேரள அமைப்பினரால் அந்தக் கட்டிடத்திற்கு அல்-அல்ஹாஜ்.மன்சூர் என்பவர் நிர்வாகியாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். அந்த கேரள அமைப்பினர் தொழுகை நடந்து வரும் இரண்டாவது தளத்தையும் அபகரிக்க நினைத்து மன்சூர் மூலமாக அதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

Sunday, March 27, 2011

TNTJ வின் பொதுக்குழுவும் முதல்வர் சந்திப்பும் – தினத்தந்தி செய்தி


முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரித்து தருவதாக உறுதியளித்துள்ளதால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது.

தி.மு.க.வுக்கு ஆதரவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் ஜெய்னுலாபுதீன், பொதுச் செயலாளர் ரஹமதுல்லா, செயலாளர் சாதிக் உள்பட நிர்வாகிகள் நேற்று அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர், முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்து சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு தங்களது ஆதரவை தெரிவித்துக்கொண்டனர்.

பின்னர் வெளியில் வந்த ஜெய்னுலாபுதீன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கல்வி, வேலைவாய்ப்பில் அடித்தட்டு முஸ்லிம்கள் முன்னேற வேண்டுமானால் தனி இடஒதுக்கீடு தேவை என்ற அடிப்படையில் 3.5 சதவீத இடஒதுக்கீட்டை இந்த ஆட்சியில் பெற்றோம்.

இடஒதுக்கீட்டை அதிகரிக்க

இது போதுமானதாக இல்லை என்று கருதியதால் இந்த 3.5 சதவீத இடஒதுக்கீட்டை யார் அதிகரித்து தருவோம் என்று தேர்தல் அறிக்கையில் கூறுகிறார்களோ அவர்களை ஆதரிப்பது என்ற நிலையில் இருந்தோம்.

அ.தி.மு.க. தலைமை எங்களை 5 முறை தொடர்பு கொண்டு இடஒதுக்கீட்டை அதிகரித்து தருவோம் என்றனர். எங்கள் அலுவலகத்திற்கு வந்த அ.தி.மு.க. நிர்வாகிகளிடமும் தேர்தல் அறிக்கையில் அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம்.

தி.மு.க. அறிவிப்பு

ஆனால் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இந்த இடஒதுக்கீட்டை அதிகரித்து தருவதாக அறிவித்திருக்கிறார்கள். அ.தி.மு.க. கூறாமல் சென்றுவிட்டது. தேர்தல் அறிக்கையில் கூறாமல் பிரசாரங்களில் கூறுவதை நாங்கள் உறுதியாக எடுத்துக்கொள்ள முடியாது.

அதன் அடிப்படையில், ஒட்டுமொத்த முஸ்லிம்களின் கோரிக்கை அடிப்படையில் தி.மு.க.வை ஆதரிப்பது என்று எங்கள் மாநில பொதுக்குழுவில் முடிவெடுத்திருந்தோம். அந்த முடிவினை முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்து தெரிவித்தோம். பொதுக்குழுவில் எடுத்த முடிவுப்படி முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு தரவேண்டும் என்றும் நாங்கள் அவரிடம் கூறியிருக்கிறோம்.

இவ்வாறு ஜெய்னுலாபுதீன் கூறினார்.

நன்றி :தினத்தந்தி 

திமுகவை ஆதரிக்க என்ன காரணம் ?


அதிமுக ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீட்டை அதிகப்படுத்தி தருவேன் என திருச்சியில் ஜெயலலிதா அவர்கள் திருச்சி மேற்கு வேட்பாளர் மரியம் பிச்சையை ஆதரித்து பிரச்சாரம் செய்த செய்தி வெளியாகியுள்ளது . ஆனால் இந்தச் செய்தி வந்த பிறகும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய பொதுக்குழுவில் திமுகவிற்கு ஆதரவு என்ற நிலையை எடுத்துள்ளது. இந்த இரண்டு விசயங்களையும் நோக்கும் பொதுமக்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்படும். அதாவது ஜெயலலிதா அவர்கள் தான் இடஒதுக்கீட்டை அறிவித்து விட்டார்களே! பின்பு ஏன் இவர்கள் திமுகவை ஆதரிக்கிறார்கள் என்ற கேள்வி அனைவரது மத்தியிலுமே எழும். எழவேண்டும்.
இறைவனின் மாபெரும் கிருபை:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொருத்தவரை எந்த வியசத்தையும் தன்னிச்சையாக எடுக்கக்கூடிய தனிநபர் முடிவுக்கு வேலையே இல்லை என்பதை அனைத்து மக்களும் நன்கறிவார்கள். எங்களுக்கு 2 சீட்டு கிடைத்தால் போதும், நாங்கள் எப்படியாவது எம்எல்ஏ அல்லது எம்பியாக ஆகிவிட மாட்டோமா? அல்லது எனக்கு ஒரு வாரிய பதவியும், அவருக்கு ஒரு காரிய பதவியும் கிடைத்தால் போதுமே! காலத்துக்கும் கொண்டை விளக்கு வைத்த வண்டியிலே ஒய்யார பவனி வரலாமே என தவமாய்த் தவமிருந்து அரசியல் கட்சித் தலைவர்களிடம் அப்பாயின்மென்ட் வாங்கி சமுதாய மக்களை அடகு வைத்து அதன் மூலம் தங்கள் சுய லாபங்களைத் தீர்த்துக் கொள்ளும் சமுதாய அமைப்புகள் உள்ளன.
இவர்களுக்கு மத்தியில், எங்கள் சமுதாயத்திற்கு மட்டும் நன்மை என்ற ரீதியில் வந்தால் மட்டும் தான் ஆதரவு, மற்றபடி தலைவர்களின் தனிப்பட்ட வேறு எந்த கோரிக்கைகளுக்குமோ அல்லது அமைப்பின் தலைவர்களை தனியாகச் சந்தித்து டேபிளுக்கு கீழே அழுத்தும் வேலைகளுக்கோ துளியளவும் இடமில்லாத காரணத்தால் தான் இறைவனின் மாபெரும் கிருபையினால் இன்றைக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் எல்லா தரப்பு மக்கள் மத்தியிலும் ஒரு தன்னிகரற்ற இடத்தைப்பெற்றுள்ளது என்பதை மறுக்க முடியாது.

Saturday, March 26, 2011

சென்னையில் நடைபெற்ற மாநிலப் பொதுக்குழு – TNTJ வின் தேர்தல் நிலைபாடு என்ன ?வரும் சட்டமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் இன்று காலை ( 26.03.11 ) சென்னை எழும்பூர் சிராஜ் மஹாலில் மாநில மேலாண்மைக்குழுத் தலைவர் ஷம்சுல்லுஹா தலைமையில் நடைபெற்றது.
முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகரித்துத் தருவதாக தேர்தல் அறிக்கையில் அதிமுக வாக்களித்தால் அதிமுக கூட்டணியை ஆதரிப்பது என்று சேலத்தில் நடந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன் பின்னர் அதிமுக சார்பில் அதன் மூத்த தலைவர்கள் ஓ.பன்னீர் செல்வம், செங்கோட்டையன், பொன்னையன், அன்வர் ராஜா, பொள்ளாச்சி ஜெயராமன் ஆகிய முக்கிய தலைவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைமை அலுவலகத்திற்கு மூன்று தடவை நேரில் வந்து ஆதரவு கேட்டனர். தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகரிக்க உறுதியளிப்போம் என்று சொன்னால் தவிர நாங்கள் ஆதரிக்க முடியாது என்று நாம் திட்டவட்டமாகச் சொன்னோம். இதன் பின்னர் பல தடவை பேச்சு வார்த்தை நடத்திய பின் தேர்தல் அறிக்கையில் சொல்வதாகவும் அதற்கான வாசகங்கள் எப்படி அமைய வேண்டும் என்று நம்மிடம் கேட்ட போது அந்த வாசகத்தை நாம் எழுதிக் கொடுத்தோம். கட்டாயம் தேர்தல் அறிக்கையில் சொல்வோம் என்று அவர்கள் உறுதி மொழி அளித்தாலும் தேர்தல் அறிக்கையைப் பார்க்காமல் நாங்கள் முடிவு சொல்ல முடியாது என்று கூறினோம்.
இதன் காரணமாகவே அதிமுக வின் தேர்தல் அறிக்கை வரும் வரை யாருக்கு ஆதரவு என்னும் முடிவை எடுக்காமல் தள்ளி வைத்தோம்.
ஆனால் அதிமுக தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்கு உரிய இடஒதுக்கீட்டை அதிகப்படுத்தித் தருவதாக ஒரு வார்த்தையும் இல்லை.
ஆனால் திமுக வின் தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீட்டை அதிகரிப்பது பற்றி கூறப்பட்ட பின்பும் திமுக வின் தேர்தல் அறிக்கையை வரிக்கு வரி காப்பியடித்த ஜெயலலிதாவுக்கு முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்த பாராவை மட்டும் காப்பியடிக்கக் கூட மனமில்லை.
தேர்தல் பிரச்சாரத்தின் போது போகிற போக்கில் இது குறித்து பேசினால் அதை முஸ்லிம்கள் நம்ப மாட்டோம், மாறாக தேர்தல் அறிக்கையில் தான் கூற வேண்டும் என்று நாங்கள் கூறியதை ஒப்புக் கொண்ட அதிமுக முஸ்லிம் சமுதாயத்துக்கு மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டது.
பல மாதங்கள் பேச்சுவார்த்தை நடத்தி தேர்தல் அறிக்கையில் இதைச் சேர்ப்போம் எனக் கூறி, வாசகங்கள் எப்படி அமைய வேண்டும் என்பது உட்பட நம்மிடத்தில் எழுதி வாங்கிச் சென்று விட்டு, நம்மை நம்ப வைத்து ஏமாற்றிய அதிமுகவுக்கு தக்க பாடம் புகட்டுவது என்று மாநிலப் பொதுக்குழு தீர்மானிக்கின்றது.
முஸ்லிம்களுக்குப் போதுமான பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்று நாம் வைத்த கோரிக்கையும் அதிமுக வால் உதாசீனம் செய்யப்பட்டுள்ளது.
திமுக 120 இடங்களில் 4 இடங்களை முஸ்லிம்களுக்கு வழங்கியுள்ளது. ஆனால் 160 இடங்களில் போட்டியிடும் அதிமுக மூன்று இடங்கள் மட்டும் முஸ்லிம்களுக்கு வழங்கி மற்றொரு துரோகத்தையும் செய்துள்ளது. எனவே வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக வின் துரோகச் செயலுக்கு தக்க பாடம் புகட்டுவதற்காகவும் திமுக தேர்தல் அறிக்கையில் இட ஒதுக்கீடு குறித்து சொல்லி இருக்கிற காரணத்துக்காகவும் அதிமுகவுக்கு எதிராகவும் திமுகவுக்கு ஆதரவாகவும் வாக்களிப்பது என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலப் பொதுக்குழு தீர்மானிக்கின்றது.

Sunday, March 20, 2011

எல்லை கல் கடவுள்

ராமநாதபுரம்:ரோட்டோர எல்லை கல்லை சிலர் கடவுளாக சித்தரித்து விட்டு செல்ல, பலரும் அதை வழிபட்டு வருகின்றனர்.ராமநாதபுரம் மாவட்டம் எட்டிவயல் அருகே மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் எல்லை கல் ஒன்று உள்ளது. சில நாட்களுக்கு முன், அந்த கல் மீது சிலர் மாலை போட்டு, பூஜை நடந்ததற்கான அடையாளங்களுடன் விட்டு சென்றனர். அதை அவ்வழியாக வந்தவர்கள் பார்த்து, வழிபட துவங்கினர்.சில நாட்களில் எல்லை கல் வழிபாடு பிரபலமானது.
வெளியூர் வாசிகள் இதை பொருட்படுத்தவில்லை என்றாலும், அருகில் உள்ள கிராமத்தினர் இவ்வழியாக செல்லும் போது எல்லை கல்லை வழிபடுவதை வழக்கமாக்கினர். நெடுஞ்சாலைத்துறையினர் ஒட்டிய ஒளிரும் ஸ்டிக்கரால், இரவில் கல் ஒளிர்வதை கூட, கடவுளின் அருள் என அப்பகுதியினர் நம்புகின்றனர். சத்திரக்குடியை சேர்ந்த சந்திரசேகர் கூறியதாவது: ஒரு மாதத்தில் தான் இந்த வழிபாட்டு முறை வந்தது. இதை வழிபட்டு சென்றதால், எனக்கு சில காரியத்தில் வெற்றி கிடைத்தது. இதற்கு பெயர் வைத்தால் வழிபட வசதியாக இருக்கும், என்றார்.
பல ஆண்டுகளுக்கு பின், சமீபத்தில் தான் நெடுஞ்சாலையில் உள்ள எல்லை கற்கள் புதுப்பிக்கப்பட்டன. அதற்குள் அதை கடவுளாக்கி வழிபாட்டு முறையையும் கொண்டு வந்ததை அப்பகுதி பகுத்தறிவாளர்கள் ஏற்கவில்லை. "விளையாட்டாக யாரோ செய்த செயல், தற்போது கடவுள் நம்பிக்கையாக மாறிவருவதாக,' சிலர் கூறினர். ""கடவுளாக பாவித்தாலும் இதுவரை அதற்கு பெயர் வைக்காமல் விட்டு வைத்ததே,''ஆறுதல்பட வேண்டிய விசயம்.

நன்றி-தினமலர்

கட்டிமேட்டில்-தவ்ஹீத் எழுச்சி பொதுக்கூட்டம்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நேற்று (19-3-2011) சனிக்கிழமை
மாலை சரியாக 6-00 மணிக்கு திருவாருர் மாவட்டம்,திருத்துறைப்பூண்டி வட்டாரம் கட்டிமேடு-ஆதிரெக்கதில் தவ்ஹீத் எழுச்சி பொதுக்கூட்டம் மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது...

இக்கூட்டதிற்க்கு சிறப்புரையாக மாநில பேச்சாளர்-M.A.பக்கீர் முஹம்மது அல்தாஃபி,அவர்கள் உரையாற்றினார்கள்.

இப்பொதுக்கூட்டதிற்க்கு ஆயிரற்றுக்கும் மேலான ஆண்களும்,பெண்களும்,குழந்தைகளும் கலந்துக் கொண்டனர்.
இப்பொதுக்கூட்டம் ஒரு மாவட்ட மாநாடு போல் காட்சியளித்தது... 

அடியக்கமங்கலத்தில் இருந்து ஏராளமான மக்கள் இப்பொதுக்கூட்டதில் கலந்துக் கொன்டனர்.அடியக்கமங்கலம்-கிளை சார்பாக வாகன வசதி செய்யப்பட்டது.

***அல்ஹம்துலில்லாஹ்***

Friday, March 18, 2011

பஹ்ரைனில் புரட்சியாளர்களை ராணுவம் அடக்கியது


வளைகுடா நாடுகளில் ஒன்றான பஹ்ரைனில் மன்னர் ஹமார்த்துக்கு எதிராக பொதுமக்களில் ஒரு பிரிவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் கடந்த ஒரு மாதமாக நடந்து வருகிறது. போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கையில் மன்னர் ஹமாத் தீவிரமாக இறங்கினார் அவர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்தார்.
ஆனால் அவர்கள் மறுத்து விட்டனர். மாறாக கடந்த சில நாட்களுக்கு முன்பு போராட்டத்தை தீவிரப்படுத்தினர். தலைநகர் மனாமாவில் உள்ள பியர்ஸ் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கில் புரட்சியாளர்கள் கூடினர். எனவே போராட்டத்தை தடுக்க சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளிடம் இருந்து பக்ரைன் மன்னர் ஹமாத் ராணுவ உதவியை நாடினார்.
மேலும் அங்கு அவசர நிலையை பிரகடனம் செய்தார். இந்த நிலையில், சவுதி அரேபியா மற்றும் அண்டை நாடுகளிடம் இருந்து சுமார் 2 ஆயிரம் ராணுவ விரர்கள் பஹ்ரைன் வந்தனர். அவர்கள் பியர்ஸ் சதுக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது டாங்கிகள், ஹெலிகாப்டர்கள் மூலம் குண்டுவீசி தாக்குதல் நடத்தினர்.
மற்றும் எந்திர துப்பாக்கியால் சுட்டனர். தண்ணீர் புகை குண்டுகள் மற்றும் ரப்பர் குண்டுகளால் சுட்டது. மேலும் அங்கு போராட்டக்காரர்கள் அமைத்து இருந்து கூடாரங்களுக்கு தீ வைத்தது. இதனால் அவை எரிந்து சாம்பலாயின. அத்துடன் அங்கிருந்த மரங்கள், குப்பை கூளங்களும் எரிந்தன.
இதனால் அப்பகுதி முழுவதும் ஒரே கரும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இருந்தும் போராட்டக்காரர்கள் அங்கிருந்து ஓடவில்லை. இதையடுத்து அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். ராணுவம் தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர்.
பலர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை மனாமாவில் உள்ள சல்மானியா என்ற ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். ஆனால் அதையும் ராணுவம் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த புரட்சியாளர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதன் மூலம் அவர்களின் போராட்டத்தை ராணுவம் ஒடுக்கி யது

அரசுக்கு எதிராக போராட்டம்: பஹ்ரைனில் அவசர நிலை பிரகடனம்


ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் ஒன்றான பஹ்ரைனில் மன்னர் ஹமாத்துக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்தில் ஷியா பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக போராட்டம் நடந்து வருகிறது.

போராட்டத்தில் இதுவரை 7 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைநகர் மனாமாவில் மீண்டும் போராட்டம் வெடித்தது. ஷியா பிரிவினரும், மன்னருக்கு ஆதரவாக செயல்படும் சன்னி பிரிவினரும் மோதிக் கொண்டனர். எனவே கலவரம் மூண்டது.

கலவரத்தை அடக்க போலீசார் தண்ணீர்புகை குண்டுகள் மற்றும் ரப்பர் குண்டுகளை வீசினார்கள். இதில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயம் அடைந்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து அங்கு போராட்டம் வலுவடைந்துள்ளது.மனாமா நகரம் முழுவதும் மோதல்கள் வெடித்துள்ளன. இதனால் அங்கு கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், பாங்கிகள் மூடப்பட்டன.

எனவே அங்கு தெருக்கள் முழுவதும் பாலைவனம் போல் காட்சி அளிக்கிறது.போராட்டத்தை அடக்க சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளை சேர்ந்த ராணுவம் வர வழைக்கப்பட்டுள்ளது. அவை பஹ்ரைன் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் அங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இது 3 மாதத்துக்கு அமலில் இருக்கும். இதற்கான உத்தரவை மன்னர் ஹமாத் பிறப்பித்துள்ளார்.

நன்றி-மாலை மலர்

Wednesday, March 16, 2011

விதையில்லாத சீத்தா பழம் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news updateவாஷிங்டன் : திராட்சை, சீத்தா உள்ளிட்ட விதையுள்ள பழங்கள் சாப்பிடுவதற்கு ச
ற்று சிரமமாக இருக்கும். விதைகளை நீக்குவதற்கு குழந்தைகள் சங்கடப்படுவதுண்டு. இந்நிலையில், விதையில்லாத சீத்தா பழத்தை விஞ்ஞானிகள் விளைவித்துள்ளனர். திராட்சை உள்ளிட்ட சில பழங்கள் நவீன கண்டுபிடிப்பில் விதையில்லாமல் உருவாக்கப்படுகின்றன. அந்த வரிசையில் சீத்தா பழமும் இடம்பெறப் போகிறது. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் விதையில்லாத சீத்தா பழத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.

அதாவது மலரில் உள்ள Ôஓவுல்Õ என்ற ஜீன், பழத்தில் விதை உருவாவதற்கு காரணமாக உள்ளது ஆய்வில் தெரியவந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஜீனை மரபணு மாற்றம் செய்து விதையில்லாத பழத்தை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளனர். கடந்த 1990ல் அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த யுசி டேவிஸ் உயிரியல் பேராசிரியர் சார்லஸ் கஸர், ஆர்பிடோப்சிஸ் என்ற தாவரத்தில் ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டார்.

மலரில் ஒரு குறிப்பிட்ட ஜீன் குறைபாடு இருந்தால் பழமோ விதையோ உருவாகாது என கண்டுபிடித்தார். இப்போதைய ஆய்வுக்கும் இதற்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இந்த புதிய கண்டுபிடிப்பு மூலம் மேலும் பல பழங்களை விதையில்லாமல் தயாரிப்பதற்கான ஆராய்ச்சிக்கு வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
thanks to-dinakaran

Tuesday, March 15, 2011

2011 ஹஜ் பயண விண்ணப்பங்கள் நாளை(16-03-11) முதல் வழங்கப்படும்


ஹஜ் புனிதப் பயணம் செல்வதற்கான விண்ணப்பங்கள் நாளை முதல் வழங்கப்படும் என்று தமிழ்நாடு ஹஜ் குழு தெரிவித்துள்ளது.இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழ் நாட்டில் வசிக்கும் முஸ்லிம் பெருமக்களில் ஹஜ்-2011-ல் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்களை மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ் நாடு மாநில ஹஜ் குழு வரவேற்கிறது. ஹஜ் 2011-ற்கான விண்ணப்பப் படிவங்கள் சென்னை-34, புதிய எண்.13 (பழைய எண்.7), மகாத்மா காந்தி சாலை (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை)யில், ரோஸி டவர்,  மூன்றாம் தளத்தில் தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலரிடமிருந்து 16-3-2011 முதல் பெற்றுக் கொள்ளலாம் அல்லது விண்ணப்பங்களை www.hajcommittee.com என்ற இணையதளம் மூலமாகவும் அச்சு எடுத்துக் கொள்ளலாம். விண்ணப்பப் படிவத்தை நகல்கள் எடுத்தும், உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

ஹஜ் குழுவின் விதிமுறைகளின் அடிப்படையில் ஒரு குழு/உறையில் 
ரத்த-உறவுமுறையுள்ள குடும்ப நபர்கள் அல்லது நெருங்கிய உறவினர்கள் முதலானோர் ஐந்து நபர்களுக்கு மிகாமல் உள்ளடங்கியதாக இருக்கவேண்டும்.  இவ்வுறையில் அந்நிய நபர் எவரையும் சேர்க்கக்கூடாது. விண்ணப்பதாரர் ஒன்றுக்கு மேற்பட்ட மாநில ஹஜ் குழுவிடம் விண்ணப்பித்தாலோ அல்லது ஒரு மாநில ஹஜ் குழுவில் பலமுறை விண்ணப்பித்தாலோ அவ்வாறான விண்ணப்பங்கள் முற்றிலுமாக நிராகரிக்கப்படுவதுடன் எந்தவொரு மாநில ஹஜ் குழுவாலும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

மாப்பிள்ளை தேடவே பூப்பெய்தல் விழா(?)


கேள்வி:-

பெண்கள் பருவமடையும் போது அதை விளம்பரம் செய்தால் தான் பெண் கேட்டு வருவார்கள். இந்த வீட்டில் திருமணத்துக்கு தகுதியான ஒரு பெண் இருக்கிறாள் என்பது அப்போது தான் தெரியும் என்று இதற்கு காரணம் கூறுகிறார்கள். இது சரியா?

பதில்:-


முஸ்லிம்களைப் பொருத்த வரை தங்களின் அனைத்து காரியங்களையும் அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய வழியில் தான் நடத்த வேண்டும். சில காரணங்களை நாமாகக் கற்பணை செய்து கொண்டு சடங்குகளை உருவாக்கக் கூடாது.
பெண்கள் புகுந்த வீட்டில் சிரமப்படுக்ககூடாது என்பதற்காகவே வரத்ட்சணை கொடுக்கிறோம் என்று கூறுவது போலவும், கள்ளச் சாராயம் குடித்து சாகக் கூடாது என்பதற்காகவே டாஸ்மாக் கடை திறந்துள்ளோம் என்பது போலவும் எல்லா தவறான காரியங்களுக்கும் காரனங்கள் கூறப்படுகின்றன. இந்தக் காரணத்தில் சிறிதும் உண்மை இல்லை.
உலகில் இந்தியா தவிர வேறு நாடுகளில் எல்லாம் பருவ வயது அடைவதற்கு விழாக்கள் இல்லை. அங்கெல்லாம் பெண்களுக்கு வரண் கிடைக்கவில்லையா?
ஆணுக்கு திருமணம் செய்ய எண்ணும் பெற்றோர் எந்த வீட்டில் பெண் இருக்கிறார் என்று விசாரித்துப் பார்த்து பெண் கேட்டு வருவார்கள். அது போல் பெண் வீட்டாரும் விசாரித்துப் பார்த்து மாப்பிள்ளை பேசுவார்கள். பூபெய்தல் விழாவுக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை.
பெண்ணுக்கு மாப்பிள்ளை அவசியம் என்பது போல் ஆணுக்கும் பெண் அவசியம் தானே? அப்படியானால் எங்கள் வீட்டில் வயசுக்கு வந்த ஆண் இருக்கிறான் என்பதற்காக ஏன் விழா நடத்தவில்லை?
கொடுத்த அன்பளிப்பை மொய் எனும் பெயரில் திரும்பப் பெறுவதற்காகவே இது போன்ற விழாக்களை மற்ற மதத்தவர்கள் உருவாக்கினார்கள். கொடுத்த அன்பளிப்பை திரும்பக் கேட்கக் கூடாது என்ற கொள்கையுடைய இஸ்லாத்தில் இந்த விழா தேவையற்றது.

திருவாரூரில் தவ்ஹீத் எழுச்சி பொதுக்கூட்டம்

திருவாரூர் மாவட்டசெயற்குழு கூட்டம் 13.03.2011 அன்று திருத்துறைபூண்டி மர்க்கஸில் காலை 10,00 மணிக்கு நடைபெற்றது இதில் தலைவர் அன்சாரி தலைமையில் தாவா சம்மந்தமாக ஆலோசனைசெய்யப்பட்து.இதைத் தொடர்ந்து கடந்த மாத மாவட்டத்திலிருந்தும் கிளைகளிலிருந்தும் வந்திருந்த தாவாப் பணிகள் குறித்த செய்திகள் வாசிக்கப்பட்டது. அல்லாஹ்வின் கிருபையால் துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.

Saturday, March 12, 2011

பெண்கள் தலைமுடியை வெட்டலாமா?பதில்:பெண்கள் தலைமுடியைக் குறைத்துக் கொள்வது பற்றி கேட்டாலும் குறைத்துக் கொள்வதைப் பற்றியும் மொட்டை அடித்துக் கொள்வது பற்றியும் சேர்த்தே விளக்குவது நல்லதெனக் கருதுகிறோம்.

பொதுவாகப் பெண்கள் தலைமுடியைக் குறைத்துக் கொள்வதற்கோ, முழுமையாக மழித்துக் கொள்வதற்கோ மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை.
ஹஜ், உம்ராவை முடித்த பின் இஹ்ராமில் இருந்து விடுபடுவதன் அடையாளமாக தலையை மழித்துக் கொள்ள வேண்டும்; முடியாவிட்டால் சிறிதளவு முடியைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது
அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள்! நீங்கள் தடுக்கப்பட்டால் இயன்ற பலிப்பிராணியை (அறுங்கள்.) பலிப்பிராணி அதற்குரிய இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைகளை மழிக்காதீர்கள்! உங்களில் நோயாளியாகவோ, தலையில் ஏதேனும் தொந்தரவோ இருப்பவர் (தலையை முன்னரே மழிக்கலாம்.) அதற்குப் பரிகாரமாக நோன்பு அல்லது தர்மம் அல்லது பலியிடுதல் உண்டு.
திருக்குர்ஆன் 2:196

Monday, March 7, 2011

'கிரி்கெட் பைத்தியம்’ உங்களுக்கும் இருக்கிறதா?நம் நாட்டில் வாழும் பெரும்பாலான மனிதர்களிடம் தனியான ஓர் இடத்தை பிடித்திருக்கும் விளையாட்டு கிரி்கெட். அதற்குக் காரணம், நம் நாடு இவ்விளையாட்டில் உலக அளவில் கொடி கட்டிப் பறப்பது தான் என்று கூறினால், அது மிகையாகாது.ஒரு விளையாட்டை இரசிப்பது, அதற்காக நேரம் ஒதுக்குவது தவறு கிடையாது. ஆனால், அதற்கு அடிமையாகுவது தான் மகாத் தவறு. கிரிக்கட்டிற்கு அடிமையானவர்கள் வெளிப்படுத்தும் உணர்வு ‘கிரி்கெட் பைத்தியம்’  என வர்ணிக்கப்படுகிறது. இந்த ‘கிரிக்கெட் பைத்தியம்’ நமது முஸ்லிம் சகோதர சகோதரிகளையும் விட்டு வைக்கவில்லை என்பது தான் வேதனைக்குரிய விடயம். கிரிக்கட் போட்டிகள் நடைபெறும் சந்தர்ப்பங்களில் இவர்கள் தமது உலக, மறுமை கடமைகளை மறந்து விடுகிறார்கள்.

பரப்பான சூழலில் கூடிய டிஎன்டிஜே மாநில செயற்குழு!

           தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் இந்த பரபரப்பான சூழ்நிலையில்  முஸ்லிம்களின் ஓட்டு யாருக்கு என்பதை முடிவு செய்யும் டிஎன்டிஜே யின் மாநில செயற்குழுக் கூட்டம் சென்னை டி நகரில் உள்ள வெங்கடேஷ்வரா திருமண மண்டபத்தில் 06..3.11 ஞாயிறன்று காலை 10.30மணிக்கு கூடியது.
மாநிலத் தலைவர் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் தலைமையேற்க, பொதுச் செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் அழைப்புப் பணியின் அவசியத்தை விளக்கியும், இந்த அழைப்புப் பணியை அனைத்து தரப்பு மக்களிடத்திலும் எப்படி செவ்வனே எடுத்துச் செல்ல வேண்டும் என்பதையும் மாவட்ட கிளை நிர்வாகிகளிடம் விளக்கி சிற்றுரை நிகழ்த்தினார்.
அதைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகிகளுக்கான இரண்டு நாள் நல்லொழுக்கப் பயிற்சி முகாமை மாநிலத் தலைமையகம் வரக்கூடிய மே மாதம் 28, 29 ஆகிய தேதிகளில் ஊட்டியில் நடத்த இருப்பதை அறிவிப்புச் செய்தார்.
அதைத் தொடர்ந்து, புதிய நிர்வாகம் பொறுப்பேற்ற பிறகு அதிக தாவா பணிகளைச் செய்து தாவா பணிகளுக்கான முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாவட்டம் மற்றும் கிளைகளுடைய விபரங்கள் செயற்குழுவில் அறிவிப்பு செய்யப்பட்டது.

Saturday, March 5, 2011

சுமையா(சுயநல) டிரஸ்ட் கேட்ட கேள்விக்கு TNTJ அளித்த பதில்கேள்வி:-முஸ்லிம் ட்ரஸ்ட் என்பதும் முஸ்லிம் மீடியா ட்ரஸ்ட்
என்பதும் TNTJ-வில் செயல்பட்டு வருகிறதே 
இது மட்டும் சரியா?


பி.ஜே அளித்த பதில்:-
எந்த ஒரு பொது செயல்பாடுகளாக இருந்தாலும், அதன் சொத்துக்களாக இருந்தாலும் தனி நபர் பெயரில் இருக்கக் கூடாது எனவும் ட்ர்ஸ்ட் எனும் அறக்கட்டளையின் பெயரில் இருக்கக் கூடாது; மாறாக சங்கமாக பதிவு செய்து தான் செயல்பட வேண்டும் எனவும்  நான் சொல்லி வருகிறேன். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கருத்தும் இதுவேயாகும்.
ஆனால் என்னை தலைவராகக் கொண்டு முஸ்லிம் ட்ரஸ்ட் என்பதும் முஸ்லிம் மீடியா ட்ரஸ்ட் என்பதும் செயல்பட்டு வருகின்றன. அது மட்டும் சரியா என்ற கேள்வி இப்போது மீண்டும் எழுப்பப்பட்டு வருகிறது.
ட்ரஸ்ட்களால் ஏற்பட்ட கேடுகளை அனுபவபூர்வமாக உணர்வதற்கு முன்னர் ட்ரஸ்ட் அமைப்பதில் எங்களுக்கு மறுப்பு இல்லாத காலகட்டத்தில், சில ட்ரஸ்ட்கள் அமைக்கப்பட்டன. இந்தக் கொள்கை முடிவு எடுக்கப்பட்ட பின் எந்த ட்ரஸ்டும் அமைக்கப்படவில்லை. இந்த வித்தியாசத்தை புரிந்து கொள்ளவேண்டும்.
மேலும் மேற்கணட் இரண்டு ட்ரஸ்டுகளும் சங்கம் எனக் கூறி மக்களை ஏமாற்றவில்லை. பெயரிலேயே ட்ரஸ்ட் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதைக் கவனத்தில் கொண்டு பின் வரும் விளக்கத்தையும் படிக்கவும்.
இது முன்னரே எழுப்பப்பட்டு பதில் சொல்லப்பட்ட கேள்வி தான். அந்தப் பதில் எனது இந்த இணைய தளத்தில் 2-11-2009 ல் வெளியிடப்பட்டுள்ளது
அதை அப்படியே கீழே தருகிறேன்.
2-11-2009ல் இது குறித்து பி.ஜே எழுதியது
ட்ரஸ்ட் தொடர்பாக ஜமாஅத்தின் நிலைபாடு  
சொந்தமாக மர்கஸோ, பள்ளிவாசலோ இல்லாமல் வாடகைக் கட்டடங்களில் செயல்படும் போது எவ்விதப் பிரச்சினைகளும் இல்லாமல் கட்டுக் கோப்புடன் பணிகள் நடக்கின்றன. ஆனால் சொந்தமாக இடம் வாங்கும் போது தான் சிலர் பல்வேறு கேள்விகளை எழுப்பி குழப்பத்தில் ஆழ்த்தி விடுகின்றனர்.