TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Tuesday, May 31, 2011

நுஹ் நபியின் கப்பல்


நுஹ் நபி அவர்கள் முக்கியத்துவத்துடன் குர்ஆனில் குறிப்பிடப்படும் இதைத் துதர்களில் ஒருவராக இருந்தார்கள்.


950 ஆண்டுகள் வாழ்ந்த இவர்களின் பிரச்சாரத்தை சொற்பமானவர்களே ஏற்றனர்.பெரும் பகுதி மக்கள் அவர்களை நம்ப மறுத்தனர். சொல்லவொண்ணாத துன்பங்களையும் கொடுத்தனர்.
இறுதியாக இறைவனிடம் நுஹ் நபி அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். 'இனிமேல் இவர்கள் திருத்த மாட்டார்கள். இவர்களை அழித்து விடு' என்று அவர்கள் பிரார்த்தனை செய்ததால் இறைவன் ஒரு கப்பலைச் செய்யுமாறு கட்டளையிட்டான்.

கப்பல் செய்து முடித்ததும் நம்பிக்கை கொண்டவர்களைக் கப்பலில் ஏற்றிக் கொள்ளுமாறும் ஒவ்வொரு உயிரினங்களில் ஒரு ஜோடியை ஏற்றிக் கொள்ளுமாறும் இறைவன் கட்டளையிட்டான்.
இதன் பின்னர் பயங்கரமான வெள்ளப் பிரளயம் ஏற்பட்டது. வானத்திருந்து மழை கொட்டியது. பெரிய மலைகளே மூழ்கும் அளவுக்கு வெள்ளத்தின் கடுமை இருந்தது. கப்பல் ஏறிக் கொண்ட நன்மக்கள் காப்பாற்றப்பட்டனர். ஏற்காத மக்கள் முழுவதுமாக அழிக்கப்பட்டனர்.

வெள்ளம் வடியத் தொடங்கியவுடன் இந்தக் கப்பல் ஜுதி எனும் மலை மீது இறங்கியது. இது பற்றி திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.

'பூமியே! உனது தண்ணீரை நீ உறிஞ்சிக் கொள்! வானமே நீ நிறுத்து!' என்று (இறைவனால்) கூறப்பட்டது. தண்ணீர் வற்றியது. காரியம் முடிக்கப்பட்டது. அந்தக் கப்பல் ஜூதி மலை மீது அமர்ந்தது. 'அநீதி இழைத்த கூட்டத்தினர் (இறையருளை விட்டும்) தூரமாயினர்' எனவும் கூறப்பட்டது.
திருக்குர்ஆன் 11:44


நூஹை அவரது சமுதாயத்திடம் அனுப்பினோம். அவர்களுடன் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஐம்பது ஆண்டுகள் குறைவாக வசித்தார். அவர்கள் அநீதி இழைத்த நிலையில் அவர்களைப் பெரு வெள்ளம் பிடித்துக் கொண்டது. அவரையும், கப்பலில் இருந்தோரையும் காப்பாற்றினோம். இதை அகிலத்தாருக்குச் சான்றாக்கினோம்.
திருக்குர்ஆன் 29:14.15


'நான் தோற்கடிக்கப்பட்டு விட்டேன்; எனவே நீ உதவி செய்வாயாக!' என்று அவர் தமது இறைவனிடம் பிரார்த்தித்தார். அப்போது வானத்தின் வாசல்களைக் கொட்டும் நீரால் திறந்து விட்டோம். பூமியில் ஊற்றுகளைப் பீறிட்டு ஓடச் செய்தோம். ஏற்கனவே திட்டமிட்டபடி தண்ணீர் இணைந்தது. பலகைகள் மற்றும் ஆணிகள் உடைய (கப்பல்) ஒன்றில் அவரை ஏற்றினோம். அது நமது கண்காணிப்பில் ஓடியது. இது (தன் சமுதாயத்தால்) மறுக்கப்பட்டவருக்கு (நூஹுக்கு) உரிய கூலி. அதைச் சான்றாக விட்டு வைத்தோம். படிப்பினை பெறுவோர் உண்டா? எனது வேதனையும், எனது எச்சரிக்கைகளும் எவ்வாறு இருந்தன? இக்குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம். படிப்பினை பெறுவோர் உண்டா?
திருக்குர்ஆன் 54:10-17


மலை போன்ற உயரத்திற்கு வெள்ளம் வந்ததால் ஜூதி மலைக்கு மேல் கப்பல் நிலை கொண்டது. இம்மலை துருக்கி நாட்டின் எல்லையில் அமைந்துள்ளது. இதன் உயரம் 16 ஆயிரம் அடியாகும். துருக்கியில் உள்ள அராராத் மலை (ஜுதி மலை) மீது பணிகளுக்கிடையில் கப்பல் ஒன்று புதைந்து கிடப்பதை அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டு பிடித்தனர்.

இவ்வளவு பெரிய கப்பல் மலையின் மீது அமர வேண்டுமானால் அந்த அளவுக்குப் பெருவெள்ளம் ஏற்பட்டால் தான் சாத்தியம். இந்தக் கப்பலை அத்தாட்சியாக விட்டு வைத்தோம் என்று இறைவன் கூறுவது நிறைவேறி திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை தான் என்பதைச் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கிறது.

Monday, May 30, 2011

சிந்திப்பது இதயமா? மூளையா?

கேள்வி:-
குர்ஆன், இரட்டை வேடம் போடுபவர்களைக் குறிப்பிடும் போது, அவர்கள் செவியிருந்தும் கேளாதவர்கள்; பார்வை இருந்தும் குருடர்கள்; இதயம் இருந்தும் சிந்திக்க மாட்டார்கள்' என்று ஓர் இடத்திலும் (இந்த) குர்ஆனை அவர்கள் ஆராய்ந்து பார்க்க மாட்டார்களா? அல்லது (அவர்களுடைய) இதயங்களின் மீது பூட்டுகள் (போடப்பட்டு) இருக்கின்றனவா?' (47:24) என்று ஓர் இடத்திலும் கூறுகின்றது. இந்த வசனங்களை மாற்று மதத்தவர்கள் படிக்கும் போது, சிந்திப்பது மூளை தானே? அல்லாஹ் இதயத்தைக் குறிப்பிடுகிறானே? இதயத்தின் வேலை சிந்திப்பது இல்லையே? என்று கேட்கிறார்கள். எனவே, இதற்குச் சரியான விளக்கத்தைக் கூறவும்.


                       


பதில்-

மனிதர்களின் சிந்தனை எங்கே நிகழ்கிறது என்பதில் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு விதமான நம்பிக்கை நிலவி வந்தது.
சிந்திப்பது, மகிழ்ச்சியடைவது, இரக்கம் காட்டுவது, பொறாமை கொள்வது உள்ளிட்ட எல்லாக் காரியங்களும் இதயத்தில் தான் நிகழ்கின்றன என்ற நம்பிக்கை ஒரு கால கட்டத்தில் இருந்தது. நாடு, மொழி அனைத்தையும் கடந்து உலகம் முழுவதும் இப்படித் தான் நம்பி வந்தது.

பின்னர், அறிவு சம்பந்தப்பட்டது மூளையிலும் ஆசை சம்பந்தப்பட்டது இதயத்திலும் நிகழ்வதாக ஒரு கருத்துக்கு உலகம் வந்தது. இன்றைய விஞ்ஞானிகள் வேறு முடிவுக்கு வந்து விட்டாலும் கூட இன்றைக்கும் சாதாரண மக்களின் கருத்து இதுவாகத் தான் உள்ளது.

ஒருவன் படிப்பில், சிந்தனையில் குறைவாக இருக்கும் போதும், குறைந்த மதிப்பெண் வாங்கும் போதும், மூளை இருக்கிறதா?என்று கேட்கிறோம்.
ஒருவன் கொடியவனாக, இரக்கமற்றவனாக, பேராசை பிடித்தவனாக இருந்தால் அவனுக்கு இதயம் உள்ளதா என்று கேட்கிறோம். சிந்திப்பது மூளையின் வேலை எனவும், கவலைப்படுவது போன்றவை இதயத்தின் வேலை எனவும் மக்கள் நினைப்பதை இதிருந்து அறியலாம். இடைப்பட்ட காலத்தில் உலக மக்களின் கருத்து இதுவாகத் தான் இருந்தது. அது தான் இன்று வரை சாதாரண மக்களிடம் நீடிக்கிறது.

இரத்தத்தை முழு உடலுக்கும் விநியோகம் செய்வது மட்டுமே இதயத்தின் பணி; இதைத் தவிர வேறு எந்தப் பணியும் அதற்கு இல்லை என்பதை இன்றைய விஞ்ஞான உலகம் கண்டறிந்துள்ளது.
சிந்திப்பது சம்பந்தமான விஷயங்களும், ஆசை சம்பந்தமான விஷயங்களும் மனித உடலின் முழு இயக்கமும் மூளையில் தான் தீர்மானிக்கப்படுகின்றன. சிந்திப்பதும், கவலைப்படுவதும், மகிழ்ச்சியடைவதும், பேராசைப்படுவதும், கோபப்படுவதும் மூளையின் வேலை தான். அனைத்து செயல்களையும் மூளை தான் தீர்மானிக்கிறது.

'இதயத்தில் உனக்கு இடம் இல்லை' என்பது போன்ற வார்த்தைகளை இன்றைய விஞ்ஞானம் கேலிசெய்கிறது. மூளை யில் உனக்கு இடமில்லை என்றுதான் கூற வேண்டும். ஒருவரை நேசிப்பதும், பகைப்பதும் கூட மூளையின் பணி தான்.

இனி நீங்கள் கேட்ட கேள்விக்கு வருவோம். சிந்தனை யைக் குறிப்பிடும் போது இதயம் எனக் கூறாமல் மூளை என்று குர்ஆன் கூறுவதாக வைத்துக் கொள்வோம். இன்றைய உலகத்தின் முடிவுடன் அது அற்புதமாகப் பொருந்திப் போகும்.
ஆனால், இதயத்தில் தான் சிந்தனை மற்றும் உணர்வுகள் உள்ளன என்ற கருத்து நிலை பெற்றிருந்த காலத்தில் இவ்வாறு கூறியிருந்தால் அன்றைய மக்கள் இதையே காரணமாகக் காட்டி குர்ஆனை நிராகரித்திருப்பார்கள். இதயத்தில் நடக்கிற காரியங்களை மூளையில் நடப்பதாக இறைவன் தவறாகக் கூறுவானா எனக் கேட்டு அன்றைய மக்கள் குர்ஆனை நிராகரித்திருப்பார்கள். அவர்கள் நிராகரித்திருந்தால் குர்ஆன் பாதுகாக்கப்பட்டு நம் காலம் வரை வந்து சேர்ந்திருக்காது.

குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பதைக் கவனத்தில் கொண்டு இதயம் எனக் கூறினால் அவர்கள் நிராகரிக்க மாட்டார்கள். ஆனால், மூளை தான் சிந்திக்கிறது' என்று கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் வாழும் மக்கள் அதை ஏற்க மாட்டார்கள். இன்றைய அறிவியல் உலகம் அதை உண்மை என ஏற்காது. இதையே காரணம் காட்டி குர்ஆன் இறைவேதமாக இருக்க முடியாது என்று வாதிடும்!
எனவே, அந்த இடங்களில் மூளை என்றும் குறிப்பிட முடியாது. இதயம் என்றும் குறிப்பிட முடியாது. ஒன்றுமே குறிப்பிடாமலும் இருக்க முடியாது.

இப்போது என்ன செய்வது? எல்லாக் காலத்துக்கும் பொருந் தக்கூடிய வகையில் இதை எவ்வாறு கூறுவது? நாமாக இருந்தால் இப்படிக் குழம்புவோம். அனைத்தையும் அறிந்த இறைவனுக்கு இவ்வாறு குழப்பம் ஏதும் இல்லை. அவன் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய வகையில் கூறவல்லவன்.
அரபு மொழியில் கல்ப்' என்ற சொல்லுக்கு மூளை என்ற பொருளும் உள்ளது. இதயம் என்ற பொருளும் உள்ளது.

Tuesday, May 24, 2011

தொலைக்காட்சி, புகைப்படம்


 உருவப்படங்கள், உருவச் சிலைகள் ஆகியவற்றை இஸ்லாம் தடை செய்துள்ளதைப் பெரும்பாலோர் அறிந்து வைத்துள்ளனர். ஆனால் நவீனமான கருவிகளைப் பயன்படுத்தி தயார் செய்யப்படும் உருவப் படங்கள் பற்றிய இஸ்லாத்தின் தீர்ப்பைப் பலரும் அறியாமல் உள்ளனர்.


உருவச் சிலைகள், உருவப் படங்கள், புகைப் படங்கள், நிழற்படங்கள், எலக்ட்ரான் கதிர் அலைகளால் தெரியும் படங்கள் என பல்வேறு வகைகள் உள்ளன. இவைகளை விரிவாக நாம் ஆராய்ந்தாலே உண்மை விளங்கும்.
எந்த வீட்டில் உருவச் சிலைகளும், நாய்களும் உள்ளனவோ அங்கே மலக்குகள் (வானவர்கள்) நுழைய மாட்டார்கள்' என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ தல்ஹா (ரலி)
நூல் : புகாரி 3224, 5957
உருவச் சிலைகள் என்று நாம் மொழிபெயர்த்த இடத்தில் திம்ஸால்'தமாஸீல்' ஸுரத்' ஆகிய சொற்கள் இடம் பெற்றுள்ளன.
இந்தச் சொற்கள் உருவச் சிலைகளையும், உருவப் படங்களையும் குறிக்கும் பொதுவான சொற்களாகும். 

இந்தச் சொற்கள் மூன்று பரிமாணம் உள்ள உருவச் சிலைகளையே குறிக்கும். இரண்டு பரிமாணமுள்ள படங்களைக் குறிக்காது; எனவே இரண்டு பரிமாணமுள்ள எந்தப் படங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம்'' என்று சிலர் விளக்கம் தருகின்றனர். 

ஹதீஸ்களை ஆராயும் போது இந்த விளக்கம் முற்றிலும் தவறானது என்பதை அறியலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து திரும்பி வந்த போது உருவங்கள் (திம்ஸால்) உள்ள திரைச் சீலையைத் தொங்க விட்டிருந்தேன். அதைக் கண்டதும் அவர்களின் முகம் மாற்றமடைந்தது. அதைக் கிழித்து எறிந்து விட்டு ஆயிஷாவே! அல்லாஹ்வின் படைப்பைப் போல் படைக்க முற்படுபவர்களே கியாமத் நாளில் கடுமையான தண்டனைக்குரியவர்கள்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி 3224, 5954
திரைச் சீலையில் இருந்த உருவங்கள் நிச்சயம் முப்பரிமாணம் உள்ளதன்று. அவ்வாறு இருக்கவும் முடியாது. மாறாக படங்கள் தான் வரையப்பட்டிருக்கும். அல்லது பின்னப்பட்டிருக்கும். படங்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள் என்பதற்கு இது தெளிவான சான்றாகும். 

உருவச் சிலைகளும், உருவப் படங்களும் இஸ்லாத்தின் பார்வையில் ஒன்று தான் என்பதை இந்நிகழ்ச்சி உறுதி செய்கின்றது.
நல்லடியார்கள் என்று கருதப்படுபவர்களின் உருவங்களென்றால் அவற்றையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது கஃபாவுக்குள் இருந்த இப்றாஹீம் (அலை), இஸ்மாயில் (அலை) ஆகியோரின் உருவச் சிலைகள் உட்பட எல்லா உருவச் சிலைகளையும் அகற்றுமாறு கட்டளையிட்டு, அவற்றை அகற்றிய பின்பே உள்ளே நுழைந்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி 1601,
மற்றொரு அறிவிப்பில் (புகாரி 3351)
இப்றாஹீம் (அலை), மர்யம் (அலை) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நல்லடியார்களுக்கு இதில் விதி விலக்கு எதுவும் இல்லை. நல்லடியார்களுக்கு சிலை வடிப்பதிலும், வரைவதிலும் தான் ஈமானுக்கு ஆபத்து அதிகம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

உருவப் படங்கள் முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டதா?  
அதில் ஏதேனும் விதி விலக்கு உண்டா? என்பதை இனி காண்போம்.

Monday, May 23, 2011

தூண்களின்றி வானங்களை


வானத்துக்கும் பூமிக்கும் இடையே எந்தத் தூண்களும் இல்லை என்பதை நாம் காண்கிறோம். வானத்தைப் பற்றிப் பேசும் போது தூண்களில்லாத வானம் என்று தான் அனைவரும் குறிப்பிட்டு வருகிறோம். ஆனால் திருக்குர்ஆன் வழக்கத்துக்கு மாற்றமான வர்னணையுடன் வானத்தைப் பற்றி பேசுகிறது.நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களை அல்லாஹ்வே உயர்த்தினான்.
-திருக்குர்ஆன் 13:2


நீங்கள் பார்க்கக் கூடிய தூண் இன்றி வானங்களைப் படைத்தான்.
-திருக்குர்ஆன் 31:10


நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களைப் படைத்தான் எனக் கூறப்படுகிறது. 'வானங்களுக்கும், பூமிக்கும் தூண்கள் உள்ளன; ஆனால் அவைகளைப் பார்க்க முடியாது' என்று இவ்வசனங்கள் கூறுகின்றன.
பார்க்க முடியாத தூண்கள் இருக்கின்றனவா? என்றால் நிச்சயமாக இருக்கின்றன. உலகத்தில் இருக்கின்ற பூமி உள்ளிட்ட எல்லாக் கோள்களும் அவற்றிற்குரிய இடங்களில் நீந்துவதற்கு, அவற்றைக் குறிப்பிட்ட வேகத்துடன் இழுத்துப் பிடித்திருக்கின்ற ஒரு ஈர்ப்பு விசை எல்லாப் பகுதியிலும் பரவியிருப்பது தான் காரணம். இந்த ஈர்ப்பு விசையின் காரணமாகத் தான் ஒவ்வொரு கோளும் அந்தரத்தில் எவ்விதப் பிடிமானமும் இன்றி தொங்குகின்ற காட்சியைப் பார்க்கின்றோம்.

எனவே சில நூற்றாண்டுகளுக்கு முன் மனிதன் கண்டறிந்த ஈர்ப்பு விசை எனும் கண்டுபிடிப்பை பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் கூறுகிறது.

வானத்திற்கும், பூமிக்கும் எந்தத் தூண்களும் இல்லை என்று தெளிவாகத் தெரியும் போது, முஹம்மது நபியவர்கள் 'பார்க்கின்ற தூண்களின்றி' என்ற வார்த்தையைத் தேவையில்லாமல் பயன்படுத்தி இருக்க முடியாது.
வானங்களையும், பூமியையும் படைத்தவன் பேசுகின்ற வார்த்தையாக இருப்பதால் தான் 'பார்க்கின்ற தூண்களின்றி' என்ற சொல்லைப் பயன்படுத்தி, பார்க்காத தூண்கள் இருக்கின்றன என்ற உண்மையை மறைமுகமாகக் குறிப்பிடுகிறான்.

Sunday, May 22, 2011

மாணவர்களுக்கான கோடைக்கால பயிற்சி முகாமில் ஒரு சிறிய மாற்றம்


(5ஆம் வகுப்புக்கு கீழ் படித்தவர்கள்)
(5ஆம் வகுப்புக்கு மேல் படித்தவர்கள்)

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் மாணவர்களுக்கான கோடைக்கால பயிற்சி முகாம் மிகவும் சிறப்பாக நடைபெற்றுவருகிறது.

இந்த  கோடைக்கால பயிற்சி முகாமில் சிறியவருகளும் ஆர்வத்தோடு கலந்துக்கொண்டதால் நிர்வாகத்தின் ஆலோசனை படி 
(5ஆம் வகுப்புக்கு கீழ் படித்தவர்கள்&5ஆம் வகுப்புக்கு மேல் படித்தவர்கள்)
என்று இரு பிரிவுகளாக பிரிக்கபட்டு செம்மையாக நடந்துவருகின்றன.

Tuesday, May 17, 2011

பெட்ரோல் விலை: பொதுமக்களை ஏமாற்றி பணத்தை கொள்ளையடிக்கும் மத்திய மாநில அரசுகள்! சிறப்பு ஆய்வு கட்டுரை!


(முன்பு விலை ஏற்றப்பட்டபோது எழுதப்பட்ட கட்டுரை)மோட்டார் வாகனம் பயன்படுத்வோர் மட்டுமல்லாது இன்றைக்கு நாட்டில் உள்ள அடித்தட்டு மக்கள் முதல் மேல் தட்டு மக்கள் வரை அனைவரும் பணத்தை பரிகொடுத்தவர்கள் போன்று புலம்புவது”அடப்பாவிங்களா கேக்குரதுக்கு ஆள் இல்லன்னு பெட்ரொல் விலைய இஷ்டம் போல அளவே இல்லாம இப்படி கூட்டிக்கிட்கிட்டே போரானுங்களே” என்று தான்.
இதில் நாமும் விதிவிலக்கல்ல..
ஏனெனில் கடந்த ஓராண்டில் மட்டும் 9 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை பெட்ரோல் விலை 2.55 ரூபாய் உயர்த்தப்பட்டு தற்போது 63.45 ரூபாய்க்கு தமிழகத்தில் பெட்ரோல் விற்கப்படுகின்றது.
பிரதமர் உட்பட உயர் மட்ட அளவில் கூட்டம் போடும் அளவிற்கு நாட்டில் விலைவாசி உயர்ந்துள்ள இந்த நிலையில், நமது இந்திய அரசு இதை (எண்னை நிறுவனங்கள் அரசின் ஒப்புதலுடன் தான் விலையை ஏற்றுகின்றது) செய்திருப்பது, ”நாட்டு மக்கள் செத்தாலும் பரவாயில்லை தங்களுக்கு கோடிகோடியாய் பணம் தரும் பெரும் தொழிலதிபர்கள் நல்லா இருக்கனும் உலகின் பணக்கார பட்டியலில் அவர்கள் பெயர் முன்னேர வேண்டும்” என்ற அரசியல் வாதிகளின் நயவஞ்சகத்தனத்தை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.
நாம் இதை ஆதாரத்தோடே கூறுகின்றோம்!
விலையை உயர்த்து சொல்லப்படும் காரணங்கள்
1.ஆயில் நிறுவனங்களுக்கு நஷ்டம்
அடிக்கடி விலையை உயர்த்துவதற்கு அரசு சொல்லும் முதல் காரணம் ஆயில் நிறுவனங்களுக்கு ஒருநாளைக்கு ”இத்தன கோடி நஷ்டம்” என்பது தான்.
இது கடைந்தெடுத்த பொய்யாகும்! இது பச்சைப் பொய்யாகும்!!  இது மகாப் பொய்யாகும்!!
நாம் இதை  இவ்வளவு அழுத்தமாக சொல்லக் காரணம், அரசு எந்த நிறுவனங்களை நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று கூறுகின்றதோ அந்த எண்னை நிறுவனங்களின் (IOC -Indian Oil Corparation , HPCL -Hindustan Petroleum Corporation , BPCL-Bharat Petroleum Corporation) 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிதிநிலை அறிக்கையை நாம் படித்தது தான்.
நிதி நிலை அறிக்கை (நான்கு மாதத்தில் மட்டும் கிடைத்த லாபம்)
IOC யின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் – (அரசுக்கு வரி கட்டியது போக) 5294 கோடி.
அரசுக்கு செலுத்தியுள்ள வரி 832.27 கோடி
5294 + 832.27 = 6126.27 கோடி லாபம்
HPCL யின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் – (அரசுக்கு வரி கட்டியது போக) 2142.22 கோடி.
அரசுக்கு செலுத்தியுள்ள வரி 90.90 கோடி
2142.22 + 90.90 = 2233.12 கோடி லாபம்
BPCL யின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் – (அரசுக்கு வரி கட்டியது போக) 2142.22 கோடி.
அரசுக்கு செலுத்தியுள்ள வரி 198.00 கோடி
2142.22 + 198.00 = 2340.22 கோடி லாபம்
மேற்குறிப்பிட்ட மூன்று எண்னை நிறுவனங்கள் மூலம் மட்டும் நான்கு மாதத்தில் கிட்டதட்ட 10699.61 கோடி ரூபாய் லாபம் சம்பாதித்து விட்டு, எண்ணை ‘நிறுவனங்களின் நஷ்டத்தை ஈடுகட்டவே விலையை உயர்த்தி உள்ளோம்’ என்று அப்பட்டமாக பொய் கூறி பொதுமக்களை மத்திய அரசு ஏமாற்றுகின்றது.

Monday, May 16, 2011

அடியக்கமங்கலத்தில் மாணவர்களுக்கான கோடைக்கால பயிர்சி முகாம் துவங்கியது

                         

                 

மாணவர்களுக்கான கோடைக்கால பயிர்சி முகாம் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இன்று துவங்கியது.இதில் ஏராளமான மாணவ & மாணவிகள் கலந்துக்கொண்டனர்.

Sunday, May 15, 2011

2011 தமிழக தேர்தல் முடிவு – வீடியோ

2011 தமிழக தேர்தல் முடிவு – வீடியோSaturday, May 14, 2011

TNTJ முதியோர் இல்லம் தஞ்சைக்கு இடம் மாற்றம்


கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பக்கத்தில் செயல்பட்டு வந்த முதியோர் காப்பகம் கடந்த 10.05.11 செவ்வாய்க்கிழமை அன்று முதல் தஞ்சை வடக்கு மாவட்டம் இராஜகிரி – பண்டாரவாடை கிளையில் செயல்பட துவங்கியுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இந்நிகழ்ச்சிக்கு மாநில பொதுச்செயலாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ் மற்றும் மாநிலச் செயலாளர் சாதிக் ஆகியோர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

Wednesday, May 11, 2011

தாவரவியல் பாடத்தில் முஸ்லீம் மாணவி முதலிடம்


+ 2 தாவிரவியல் பாடத்தில் முதல் இரண்டு இடங்களையும் முஸ்லீம் மாணவிகள் பிடித்துள்ளனர். பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் தாவரவியல் பாடத்தில் திருவாரூர் ரஹ்மத் மெட்ரிக் பள்ளி மாணவி அயனுல்மர்லியா, 200க்கு 200 மார்க்குகள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.
இவரது மொத்த மார்க்குகள் 1167. இரண்டாவது இடத்தை தக்கலை புனித மேரி ஜார்ஜெட்டி பள்ளி மாணவி இர்பான் பிடித்துள்ளார்.

Tuesday, May 10, 2011

பாபர் மஸ்ஜித் வழக்கு : என்னது மூனா பிரிக்கனுமா?????? அலஹாபாத்தின் டூபாகூர் தீர்ப்பிற்கு இடைக்கால தடை – சுப்ரிம் கோர்ட் அதிரடி
பாபர் மஸ்ஜித் வழக்கில் அலஹாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய அநியாயத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று திங்கள் கிழமை காலை விசாரனைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த சுப்ரிம் கோர்ட்டி நீதிபதிகள் ”முதல் கட்டமாக அலஹாபாத் நீதிமன்றம் வழங்கிய அநியாயத் தீர்ப்பிற்கு இடைக்கால தடை” விதித்துள்ளனர்.
மேலும் அலஹாபத் உயர் நீதிமன்றத்தின் திர்ப்பு முற்றிலும் வழக்கத்திற்கு மாறானதாகவும் அதாவது வழக்கமாக தீர்ப்பளிக்கும் நீதிக்கு எதிரானதாகவும் மிகவும் ஆச்சிரிமானதாகவும் (Strange and surprising) உள்ளது என கடுமையாக விமர்ச்சித்துள்ளனர்.
இவ்வாறு பிரித்து தீர்ப்ளித்துள்ளது, இதே போன்று பல தொடர்ச்சியான வழக்குகள் வர வாய்ப்பாக அமைந்து விட்டது எனவும் சுப்ரிம் கோர்ட் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
அதாவது இந்த தீர்ப்பை பார்த்த பிறகு
”இந்த இடத்த தோண்டி பாருங்க அதுல என்னோட முப்பாட்டனோட முப்பாட்டன் உடைய கை தடி கிடக்கும் அதுனால இது என்னாடோ இடம்,
இந்த இடத்துல தான் நான் பிறந்தேன் அதுனால இது என்னோட இடம் ,
எங்க ”கடல காங்கேயன் ” சாமி மைனரு அவருக்கு பதிலான நான் வழக்கு போட்றேன் அந்த சாமி இங்க தான் தூங்கினாரு அதுனால இந்த எடம் என்னோடதுன்னு”
ஆளுக்குள் ஆள் வழக்கு பொட்ருவாங்களே ! இப்படி வழக்கு போட்டா அப்புறம் கோர்ட் என்ன கதியாவது ன்னு சுப்ரிம் கோர்ட் சொல்லுது…