TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Thursday, April 28, 2011

குழந்தை உடலில் குர்ஆன் எழுத்து! ஒரு ஆய்வு!!

 கேள்வி?
ஒரு ஒன்பது மாதக் குழந்தையின் மீது குர்ஆன் எழுத்து தெரிகிறது என்று சமீபத்தில் நான் யூட்யூபில் நான் பார்த்தேன். இக்குழந்தையின் பெற்றோர் முஸ்லிம்கள் அல்லர் என்றும் கூறப்படுகிறது. இது பற்றி இஸ்லாத்தின் நிலை என்ன?

இதோ அந்த விடியோ...பதில்:

அல்லாஹ்வின் படைப்புகளில் இது போன்ற வித்தியாசமான தோற்றம் கொண்டவை ஏராளம் உள்ளன. ராம், ஓம், சிலுவை, சூலாயுதம் இன்னும் பல்வேறு மதங்களுடன் சமந்தப்பட்ட  வடிவங்களுடன் மனிதர்கள் கால் நடைகள் காணப்படுகின்றன. ஓவ்வொருவரும் இது போன்றதை எடுத்துக் காட்டி தங்கள் மதத்தை மெய்ப்பிக்க வந்த அத்தாட்சி என்று கூறுகின்றனர்.


இது போன்ற கேள்வி எற்கனவே ஒற்றுமை இதழில் கேடகப்பட்டு அதற்கு நாம் அளித்த பதிலை இங்கே எடுத்துக் காட்டுகிறோம். அதுவே உங்களுக்குப் போதுமானதாக இருக்கும்.

அந்த பதில் இது தான்.

59, அத்தாட்சிகளை மறுக்கலாமா?


கேள்வி: 
தங்களின் பார்வைக்கு மரம் ருகூவு செய்வது போன்ற புகைப்படத்தின் காப்பியை அனுப்பி உள்ளேன். இது போன்ற வேறு சில புகைப்படங்களும் கை வசம் உள்ளன. மீன் வயிற்றில் அல்லாஹ் என்றும் முஹம்மது என்றும் எழுதப்பட்டுள்ளது. 

மேலும் ஜெர்மன் நாட்டில் ஒரு மரத்தில் (லாயிலாஹ இல்லல்லாஹ்) என்ற அரபி பதம் தெளிவாக தெரியும் வகையில் அமைந்த புகைப்படங்களும் உள்ளன. 

இது போன்ற விஷயங்களை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்ற கருத்தோடு நானும் இணைகிறேன், என்றாலும் மாற்று கருத்துடைய சகோதரர்கள் இந்த விஷயத்தை நம்பி பெரிதாக எடுத்துக் கொண்டு மற்றவர்களிடமும் இதை பெரிய அளவில் பிரச்சாரம் செய்கிறார்கள். இதை நான் மறுத்து கூறினால்...


அவர்களுக்கு உண்மை தெளிவாக வேண்டும் என்பதற்காக பல பாகங்களிலும், அவர்களுக்கு உள்ளேயும் நமது சான்றுகளை அவர்களுக்குக் காட்டுவோம். உமது இறைவன் ஒவ்வொரு பொருளையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது போதுமானதாக இல்லையா? 
-திருக்குர்ஆன் 41:53


என்ற வசனத்தை எடுத்துக்காட்டி இது அல்லாஹ்வின் அற்புதம் தான் என்றும் இதை மறுத்தால் இந்த வசனத்தையே மறுத்தது போல் ஆகும் என்றும் கூறுகிறார்கள். 
மேலும் இதை எல்லாம் அற்புதமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதற்கு உங்களிடம் என்ன ஆதாரம் உள்ளது என்றும் கேட்கிறார்கள்?

இதோ அந்த விடியோ...பதில்: 
இறைவன் தனது அத்தாட்சிகளைக் காட்டுவான் என்பதிலோ, அவற்றை நம்ப வேண்டும் என்பதிலோ மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

மாயையையும், மாயத் தோற்றங்களையும் அத்தாட்சிகள் என்று கூறுவோர் தான் இவை அத்தாட்சி என்பதற்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும்.

Sunday, April 24, 2011

பெண்கள் பயான்


அடியக்கமங்கலம் ராஜாத் தெரு தவ்ஹீத் மர்க்கஸில் 24-4-2011 ஞாயிற்று கிழமை மாலை 4 மணியளவில் பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் ஏரளமான பெண்கள் கலந்துக் கொண்டு பயன் பெற்றனர்.

பயான் அழைப்பு


24-04-11 ஞாயிறு அன்று நடைபெற்ற மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சிக்காக மக்களுக்கு MICRO PHONE வழியாக அழைப்புவிடுட்ட போது எடுத்த படம்.

Saturday, April 23, 2011

குஜராத் படுகொலை : முஸ்லிம்களுக்கு பாடம் புகட்டுவதற்காக வெண்டுமென்றே அனுமதித்தார் மோடி! – மோடியின் ரகசிய கூட்டத்தில் கலந்து கொண்ட IAS போலீஸ் அதிகாரி உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு சாட்சியம்!


இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் 2002ஆம் ஆண்டு நடந்த ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட மதக் கலவரத்தை குஜராத்தின் முதலமைச்சர் நரேந்திரமோடி வேண்டுமென்றே நடக்க அனுமதித்திருந்தார் என்று மூத்த போலிஸ் அதிகாரி ஒருவர் உச்சநீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கலவரத்தின்போது உதவி கோரி மக்கள் விடுக்கும் அழைப்புகளை புறந்தள்ளுங்கள் என்று போலிஸ் அதிகாரிகளுக்கு நரேந்திரமோடி உத்தரவிட்டிருந்த கூட்டத்தில் தானும் கலந்துகொண்டிருந்ததாக சஞ்சீவ் பட் என்ற அந்த உயர் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும் “கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தால் இந்துக்களிடையே பெரும் கொந்தளிப்பு காணப்படுகிறது. இத்தகைய சம்பவம் இனி நிகழாதவாறு இஸ்லாமியர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்.” என்று மோடி கூறியதாக அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தற்போது, அவர் மாநில ரிசர்வ் போலீஸ் பயிற்சி மையத்தின் முதல்வராக உள்ளார்.

Friday, April 22, 2011

வங்கிப்பணம் ரூ. 1 கோடியை கரைத்த கரையான்கள்

பார்பராங்கி: 
உ.பி. மாநிலத்தில் தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கியின் பண பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ. 1 கோடி கரன்சிகள் கரையானால் அழிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது வங்கி ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பார்பராங்கி மாவட்டத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கிளை ஒன்று உள்ளது. நேற்று மதியம் பணபரிவர்த்தனைக்காக வங்கியின் மண்டல மேலாளர் கீதா திரிபாதியின் தலைமையில் ஊழியர்கள் வங்கியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த பணபெட்டியை திறந்தனர். பெட்டியை திறந்த வங்கி அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெட்டியில் கட்டுகட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த கரன்சிகள் அனைத்தையும் கரையான் திண்றிருப்பது தெரியவந்தது. கரையான்களால் செல்லரித்துப்போன கரன்சிகளின் மதி்ப்பு ரூ. 1 கோடி என வங்கி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து உரிய விசா‌ரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், ‌கரையான்களால் சேதமடைந்த கரன்சிகள் ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன...


-தினமலர்

இந்திய நாட்டில் மட்டும் தான் இது போல் வித்யாசியமான நிகழ்வுகள் நடைப்பெரும்.

Sunday, April 17, 2011

கண்டெடுக்கப்பட்ட பொருளை என்ன செய்யலாம்

கேள்வி:
கண்டெடுக்கப்பட்ட பொருளை என்ன செய்யலாம்
 
நான் பேருந்தில் பயணித்த போது யாரோ விட்டுச் சென்ற பணம் கிடைத்தது. அந்தப் பேருந்தில் என்னைத் தவிர வேறு பயணிகள் யாரும் இல்லை. அந்தப் பணத்தை நான் என்ன செய்வது?

பிறர் தவற விட்ட பொருளை ஒருவர் கண்டெடுத்தால் அவர் ஒரு வருட காலம் மக்களிடம் விளம்பரம் செய்ய வேண்டும். விளம்பரம் செய்யாமல் அதை வைத்துக் கொள்ளக் கூடாது. ஒரு வருட காலம் அறிவிப்புச் செய்தும் யாரும் வராவிட்டால் எடுத்தவரே அப்பொருளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

கண்டெடுக்கப்பட்ட பொருளைப் பற்றி அறிவிப்புச் செய்யாமல் அதைத் தம்மிடம் வைத்துக் கொண்டிருப்பவர் வழிகேட்டிலேயே உள்ளார்.

அறிவிப்பவர் : ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி(
நூல் : முஸ்லிம் (3556)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் (வந்து), பாதையில் கண்டெடுக்கப்பட்ட (பிறர் தவறவிட்ட) பொரு(ளின் சட்டங்க)ளைப் பற்றிக் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "அதன் முடிச்சை' அல்லது "அதன் பையையும் அதன் உறையையும்' (அதாவது அதன் முழு விவரங்களை) நீ அறிந்து வைத்துக் கொள்!  பிறகு ஓராண்டுக் காலம் அதனைப் பற்றி விளம்பரப்படுத்து! அதற்குப் பிறகு அதனை நீ பயன்படுத்திக் கொள்! அதன் உரிமையாளர் (முறைப்படி அதைக் கேட்டு) வந்து விட்டால் அதை அவரிடம் கொடுத்துவிடு!'' என்றார்கள்.

அறிவிப்பவர்:ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி)
நூல் : புகாரி (91)

Thursday, April 14, 2011

தவிடு நீக்காத அரிசியை உபயோகியுங்கள்!

 அரிசியின் பயன்பாடு உலகம் முழுவதும் உள்ளது. குறிப்பாக தென்னிந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மக்களின் அன்றாட உணவாக அரிசி இருக்கிறது. அரிசி உற்பத்தியில் மியான்மர் (பர்மா) முதலிடம் வகிக்கிறது. அதுபோல் தாய்லாந்து, இல;ங்கை, இந்தியா போன்ற நாடுகளில் அதிகம் விளைகிறது.

அரிசி ஒரு மாவுப் பொருளாகும். உலகில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் அரிசியையே உணவாகக் கொண்டுள்ளனர்.

அரிசியில் அதாவது தவிடு நீக்கப்படாத அரிசியில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி12, வைட்டமின் கே, வைட்டமின் இ, மாவுச்சத்து, புரதச் சத்துக்கள் நிரம்பியுள்ளன.

ஆனால் தவிடு நீக்கப்பட்ட அரிசியில் மாவுச்சத்து மட்டுமே நிரம்பியுள்ளது.

இன்றைய கால கட்டத்தில் தவிடு நீக்கப்பட்ட அரிசியையே உட்கொள்ளும் சூழ்நிலைய 07;ல் உள்ளோம்.

நாம் அனைவருமே கண்ணைப் பறிக்கும் வெண்மையான மல்லிகைப் பூ போன்ற அரிசியையே விரும்புகிறோம். இதில் நாவிற்கு சுவை மட்டுமே உண்டு. ஆனால் மாவுச்சத்தைத் தவிர வேறெந்த சத்துக்களும் கிடைப்பதில்லை.

இரண்டு மூன்று முறை பாலீஷ் செய்யப்பட்ட இவ்வகையான அரிசியில் உள்ள எல்லா வைட்டமின் சத்துக்களும் வெளியேற்றப்பட்டு விடுகிறது.

இந்த அரிசியை சமைத்து உண்பதால் மாவுச் சத்து அதிகம் உடலில் சேருகிறது. ஆரம்பத்தில் அந்த மாவுச்சத்தைக் கட்டுப்படுத்த உடலில் இன்சுலின் சுரப்பு அதிகமாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இன்சுலின் சுரப்பு குறைவதால் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இதனால் சர்க்கரை நோய் உண்டாகிவிடுகிறது.

Wednesday, April 13, 2011

தமிழகம் முழுவதும் கோடைகால பயிற்சி முகாம்கள் – நடைபெறும் இடம் (புதிய இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது) மற்றும் விண்ணப் படிவ மாதிரி


இன்ஷா அல்லாஹ் இந்த ஆண்டு மாணவ மாணவியர்கள் கோடைகால விடுமுறையை நல்ல வழியில் செலவிட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தமிழகம் முழுவதும் மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம்களை வருகின்ற மே மாதம் முதல் நடத்த ஏற்பாடு செய்துள்ளது.
பயிற்சி முகாம்கள் நடைபெறும் இடம் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய நபர்களின் தொலைபேசி எண்கள்

கோடைகால பயிற்சி முகாமில் சேருவதற்காக விண்ணப் படிவ மாதிரி


இந்த ஆண்டு நடைபெறும் கோடை கால பயிற்சி முகாம் பற்றி பி.ஜே அவர்கள் ஆற்றிய உரை:


கோடைகால பயிற்சி முகாம் தொடர்பான மேலதிக விபரங்களுக்கு:  9952035333
www.tntj.net

Thursday, April 7, 2011

சட்டரீதியான PDF Zilla இலவசம்

PDF உபயோகிப்பாளர்கள் PDF தொடர்பான நிறைய Software Install செய்து இருப்பார்கள். PDF Fileலிலிருந்து MS Word, Image, Animation SWF File லாக மாற்ற என்று நிறைய Softwares நமது Hard Diskல் அதிகமான இடத்தை ஆக்கிரமித்திருக்கும். இதற்கெல்லாம் ஒரெ Software ஆக இருந்தால் சுலபமாக இருக்கும்.

இதற்கான ஒரே தீர்வாக பிடிஎப் ஜில்லா என்று ஒரு Software உள்ளது இது $29.95 விலையுள்ள Software இப்பொழுது இலவசமாக தரப்படுகிறது.

Free Registration Code: 8061822TWDV6YUK


திமுக கூட்டணியை ஆதரப்பது ஏன் (புதுப்பேட்டை பொதுக் கூட்ட வீடியோ)

Wednesday, April 6, 2011

TNTJ தேர்தல் நிலைபாடு விளக்கம் – நோட்டிஸ் மாதிரி*இட ஒதுக்கீடு நம் ஜீவாதார உரிமை-Download PDF

*திமுக கூட்டணியை ஏன் ஆதரிக்க வேண்டும்?-Download PDF


இட ஒதுக்கீடு நம் ஜீவாதார உரிமை
அன்பிற்கினிய இஸ்லாமிய சமுதாயமே!
காலங்காலமாய் நம் சமுதாயம் பாலைவனத்தில் காய்ந்து கரிந்து வெந்து நொந்து அற்பக் காசுகளைச் சம்பாதித்து தன் மனைவியை, தாயை, பிள்ளையைப் பிரிந்து, இளமை வாழ்க்கையை அங்கே பிழியப்பட்ட கரும்புச் சாராய் இழந்து கடைசியில் முதுமை நேரத்தில் தாயகம் வந்து, இறுதி வாழ்க்கை வாழும் அவலம் இனியும் நமக்குத் தொடர வேண்டுமா?
திருமணம் முடிந்த அடுத்த வாரமே அடிமை வேலைக்கு விமானம் ஏறி வெளிநாடு சென்று கடைசி வரை மனைவியுடன் தொலைபேசியிலே குடும்பம் நடத்தும் நிலை இனியும் நீடிக்க வேண்டுமா?
இங்கேயும் அடிமை, அங்கே கொத்தடிமை என காலங்காலமாய் பரம்பரை பரம்பரையாய் வெளிநாட்டு விசாவுக்குக் காத்திருந்து அந்நிய நாட்டு அடிமைகளாய், அநாதைகளாய் இனியும் வாழ வேண்டுமா?
பெற்ற தாய் இறந்த தகவல் கிடைத்தும் அன்னிய நாட்டில் நடுரோட்டில் அமர்ந்து தொலைபேசி வழியாக நேரலையில் அழுது கண்ணீர் சிந்தும் அவலம் இனியும் நீடிக்க வேண்டுமா?
வேண்டாம்!!! வேண்டாம்!!! வேண்டாம்!!!
இனியாவது நமது சமுதாயம் படிக்கட்டும். நம் நாட்டிலேயே கவுரமான வேலை பார்க்கட்டும். வெளிநாடு சென்றாலும் கூலித் தொழிலாளியாக்ச் செல்லாமல் பட்டதாரியாகச் சென்று தன் குடும்பத்தோடு வாழட்டும். அதற்கு முக்கியத் தேவை
கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு மட்டுமே!
நமக்கு இடஒதுக்கீட்டை 3.5 சதவிகிதம் தந்தது கலைஞரின் ஆட்சி.

Monday, April 4, 2011

சென்னையில் நடைபெற்ற மாநிலப் பொதுக்குழு – TNTJ வின் தேர்தல் நிலைபாடு என்ன ?

TNTJ யின் தேர்தல் நிலைபாடு குறித்து பரபரப்பான பேட்டி – இமயம் மற்றும் தமிழன் டிவியில்!


TNTJ யின் தேர்தல் நிலைபாடு குறித்து பரபரப்பான பேட்டி இமயம் மற்றும் தமிழன் டிவியில் நாளை முதல் ஒளிபரப்பாகின்றது. இது குறித்து அனைத்து மாவட்டம் கிளைகளிலும் பின்வரும் தகவலை நோட்டிஸாக வெளியிடவும்.
TNTJ யின் தேர்தல் நிலைபாடு குறித்து பரபரப்பான பேட்டி
———————————
இன்ஷா அல்லாஹ் 3-4-2011 முதல்..
ஞாயிறு,திங்கள்,செவ்வாய் ஆகிய கிழமைகளில் இமயம் டிவியில் இரவு 10.30 மணிக்கு.
திங்கள்,செவ்வாய்,புதன் ஆகிய கிழமைகளில் தமிழன் டிவியில் இரவு 9.0 மணிக்கு.
———————————
பாருங்கள் பார்க்கத் தூண்டுங்கள்

Sunday, April 3, 2011

வருமான வரியை, இனி ஏ.டி.எம்.-ல் செலுத்தலாம்; புதிய வசதி அறிமுகம்


தற்போது வருமான வரி செலுத்தும் தனி நபர்கள் வங்கிகளுக்கு சென்று அதற்குரிய படிவத்தை நிரப்பி வரி செலுத்த வேண்டியதுள்ளது. பிறகு அதற்கான சிலிப்பை பெற்று கணக்கு தாக்கல் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
இந்த நடவடிக்கைகளால் வங்கிகளில் மார்ச் மாதம் கட்டுக் கடங்காத கூட்டம் திரண்டு வருகிறது. இதை தவிர்க்க இனி ஏ.டி.எம். மூலமாகவும் வரி செலுத்தலாம் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு நேற்று முதன் முதலாக அறிமுகம் செய்துள்ளது.
முதல் கட்டமாக யூனியன் பேங்க் ஆப் இந்தியா ஏ.டி.எம்.களில் இந்த நவீன வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இனி படிப்படியாக மற்ற வங்கி ஏ.டி.எம்.களிலும் இந்த வசதி அறிமுகம் செய்யப்படும்.   ஏ.டி.எம். மூலம் வருமான வரி செலுத்த விரும்புபவர்கள் வங்கி இணையத் தளத்தில் தங்கள் டோட் கார்டு மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
அப் போது ஒரு எண் கொடுக்கப்படும். அதை வைத்து ஏ.டி.எம். எந்திரத்தில் உள்ள குறியீடுகளை தட்டி பான் நம்பர் உள்பட கேட்கும் தகவல்களை பதிவு செய்ய வேண்டும். எவ்வளவு ரூபாய் வருமான வரியாக பிடித்தம் செய்து கொள்ள வேண்டும் என்றும் பதிவு செய்ய வேண்டும்.
இதையடுத்து குறிப்பிட்ட தொகையை வருமான வரியாக பிடித்தம் செய்து கொள்ளும் ஏ.டி.எம். சிறப்பு எண் ஒன்றை கொடுக்கும். அந்த எண் உதவி கொண்டு வங்கி இணையத் தளத்தில் பதிவு செய்து வருமான வரி கட்டியதற்கான சான்றிதழை பெறலாம்.
இதன் மூலம் வங்கிகளில் போய் மணிக்கணக்கில் காத்து நிற்பதை வருமான வரி செலுத்துபவர்கள் தவிர்க்க முடியும்.