FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Wednesday, April 6, 2011

TNTJ தேர்தல் நிலைபாடு விளக்கம் – நோட்டிஸ் மாதிரி

Wednesday, April 6, 2011
7:45 AM


*இட ஒதுக்கீடு நம் ஜீவாதார உரிமை-Download PDF

*திமுக கூட்டணியை ஏன் ஆதரிக்க வேண்டும்?-Download PDF


இட ஒதுக்கீடு நம் ஜீவாதார உரிமை
அன்பிற்கினிய இஸ்லாமிய சமுதாயமே!
காலங்காலமாய் நம் சமுதாயம் பாலைவனத்தில் காய்ந்து கரிந்து வெந்து நொந்து அற்பக் காசுகளைச் சம்பாதித்து தன் மனைவியை, தாயை, பிள்ளையைப் பிரிந்து, இளமை வாழ்க்கையை அங்கே பிழியப்பட்ட கரும்புச் சாராய் இழந்து கடைசியில் முதுமை நேரத்தில் தாயகம் வந்து, இறுதி வாழ்க்கை வாழும் அவலம் இனியும் நமக்குத் தொடர வேண்டுமா?
திருமணம் முடிந்த அடுத்த வாரமே அடிமை வேலைக்கு விமானம் ஏறி வெளிநாடு சென்று கடைசி வரை மனைவியுடன் தொலைபேசியிலே குடும்பம் நடத்தும் நிலை இனியும் நீடிக்க வேண்டுமா?
இங்கேயும் அடிமை, அங்கே கொத்தடிமை என காலங்காலமாய் பரம்பரை பரம்பரையாய் வெளிநாட்டு விசாவுக்குக் காத்திருந்து அந்நிய நாட்டு அடிமைகளாய், அநாதைகளாய் இனியும் வாழ வேண்டுமா?
பெற்ற தாய் இறந்த தகவல் கிடைத்தும் அன்னிய நாட்டில் நடுரோட்டில் அமர்ந்து தொலைபேசி வழியாக நேரலையில் அழுது கண்ணீர் சிந்தும் அவலம் இனியும் நீடிக்க வேண்டுமா?
வேண்டாம்!!! வேண்டாம்!!! வேண்டாம்!!!
இனியாவது நமது சமுதாயம் படிக்கட்டும். நம் நாட்டிலேயே கவுரமான வேலை பார்க்கட்டும். வெளிநாடு சென்றாலும் கூலித் தொழிலாளியாக்ச் செல்லாமல் பட்டதாரியாகச் சென்று தன் குடும்பத்தோடு வாழட்டும். அதற்கு முக்கியத் தேவை
கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு மட்டுமே!
நமக்கு இடஒதுக்கீட்டை 3.5 சதவிகிதம் தந்தது கலைஞரின் ஆட்சி.

இன்றைக்கும் ஆட்சிக்கு வந்தால் நாங்கள் இடஒதுக்கீட்டை அதிகப்படுத்தி தருவோம் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் சொல்கிறது. ஆனால் இலவச திட்டங்களை மட்டும் காப்பியடித்த ஜெயலலிதா,இடஒதுக்கீடு சம்பந்தமாக ஒரு வார்த்தை கூட குறிப்பிடவில்லை. காற்று வாக்கில் வெளிப்படுத்திய வாக்குறுதிகளை மட்டும் வைத்துக் கொண்டு எதுவும் செய்துவிட முடியாது. ஜெயலலிதா நம் சமுதாயத்திற்கு மாபெரும் துரோகத்தினைத் தான் தொடர்ந்து செய்து கொண்டு இருக்கிறார்.
இட ஒதுக்கீடு நம் ஜீவாதார உரிமை. அதை அடைவது மட்டுமே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். முஸ்லிம் வேட்பாளர்களாக இருந்தாலும் அவர்களின் சுய நலத்திற்காக பதவி ஆசைகளுக்காக மற்றைய விசயங்களுக்காக சமுதாயத்தின் நன்மைகளைக் குப்பையில் எறிந்து விட்டு தங்கள் தலைவர்களுக்கு மட்டும் புகழ் மாலை சூட்டும் இவர்களுக்கு வாக்களிப்பதால் நமக்கு எந்த நன்மையும் இல்லை.
இஸ்லாமியர்களின் இடஒதுக்கீட்டை முழுமூச்சாய் எதிர்க்கும் ஜெயலலிதாவிற்கு நம் சமுதாயம் பாடம் புகட்டிடவும், இடஒதுக்கீட்டை நம் விகிதாச்சார அளவுக்கு அடைந்திடவும் ஆதரிப்பீர்
நாம் ஆதரிக்கும் சின்னம்_______________ நாம் ஆதரிக்கும் வேட்பாளர்______________
திமுக கூட்டணியை ஏன் ஆதரிக்க வேண்டும்?
முஸ்லிம் சமுதாய வாக்காளப் பெருமக்களே!!!
முஸ்லிம் சமுதாயம் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் மற்ற சமுதாயத்துக்கு நிகராக முன்னேற வேண்டுமானால் கல்வியிலும் வேலை வாய்ப்புகளிலும் முஸ்லிம்கள் தனி இட ஒதுக்கீட்டைப் பெற்றாக வேண்டும்; எனவே அதையே முதன்மையான கோரிக்கையாக வைத்து தமிழ்நாடு
தவ்ஹீத் ஜமாஅத் ஒவ்வொரு தேர்தலையும் சந்திக்கிறது அனைவரும் அறிந்ததே!
அந்த வகையில் முஸ்லிம்களின் தனி இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி கும்பகோணத்தில் பத்து லட்சம் முஸ்லிம்களைத் திரட்டி முஸ்லிம்களுக்குத் தனி இட ஒதுக்கீட்டை நாம் வலியுறுத்தினோம். முஸ்லிம்களின் தனி இட ஒதுக்கீட்டை எதிர்த்து வந்த அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலதா முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு அளிப்பதற்காக கமிஷனை அமைத்தார். இது தான் இட ஒதுக்கீட்டுக்கான முதல் படி என்பதால் அந்தத் தேர்தலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்து தீவிரப் பிரச்சாரத்திலும் ஈடுபட்டது. அதிமுகவின் மீதான கடும் அதிருப்தியையும் மீறி பலமான எதிர்க்கட்சியாக அக்கட்சி வெற்றி பெற முஸ்லிம் சமுதாய வாக்குகள் முதன் முதலாக திசை திரும்பியதே காரணமாக அமைந்தது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகும் முஸ்லிம்களின் தனி இட ஒதுக்கீட்டுக்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இடை விடாத போராட்டங்களை நடத்தியது. இந்திய முஸ்லிம் வரலாற்றில் முதன் முறையாக இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி இலட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்தி கைது செய்யப்பட்டனர். இதன் பின்னர் தான் திமுக அரசு முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகிதம் இட ஒதுக்கீட்டைச் சட்டமாக்கியது.
அதற்கு பிறகு திமுக ஆட்சியின் மீது தவ்ஹீத் ஜமாஅத்துக்கு மனக்கசப்புகள் இருந்த போதிலும் அதை மறந்துவிட்டு முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளித்த ஒரே காரணத்துக்காக நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவை ஆதரிப்போம் என்று உறுதி அளித்து அதை தவ்ஹீத் ஜமாஅத் நிறைவேற்றியது.
முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட 3.5 சதவிகித இட ஒதுக்கீடு போதுமானதல்ல என்ற மனக் குறை பரவலாக முஸ்லிம் சமுதாயத்தில் இருக்கும் நிலையில் இப்ப்பொது சட்ட மன்றத் தேர்தல் வந்துள்ளது. எனவே இந்தத் தேர்தலில் முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்துவதையே தேர்தல் பிரச்சனையாக்குவது என்று தவ்ஹீத் ஜமாஅத் பலமாதங்களுக்கு முன்பே முடிவு செய்து அதற்கேற்ப தனது நடவடிக்கைகளை அமைத்து வந்தது.
ஆளும் திமுக முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை 3.5 சதவிகிதத்தில் இருந்து 5 முதல் 7 வரை அதிகப்படுத்தித் தர வேண்டும், அப்படிச் செய்தால் திமுகவுக்கு ஆதரவு. அதிமுக இந்த விசயங்களை தேர்தல் அறிக்கையில் சொன்னால் அதிமுவுக்கு ஆதரவு என்று தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டது. அத்துடன் முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு சரியாக வழங்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க ஆணையம் அமைக்க வேண்டும், முஸ்லிம்களுக்கு உங்கள் கூட்டணியில் போதுமான வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பன கூடுதல் கோரிக்கைகளாக வைக்கப்பட்டன.
இவ்வாறு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்த பின்னர் அதிமுகவின் முன்னனித் தலைவர்களான ஓ.பன்னீர் செல்வம், செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன், பொன்னையன், அன்வர் ராஜா ஆகியோர் நான்கு தடவை தவ்ஹீத் ஜமாஅத் தலைமை அலுவலகம் வந்து ஆதரவு கோரினார்கள். முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை அதிகரித்து தருவதாக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டால் தான் நாங்கள் ஆதரிக்க முடியும் என்று தவ்ஹீத் ஜமாஅத் திட்டவட்டமாக தெரிவித்தது.
உங்கள் கோரிக்கை தேர்தல் அறிக்கையில் கட்டாயம் இடம்பெறும். இடம் பெற்றுவிட்டது என்று மிகுந்த நம்பிக்கை ஊட்டினார்கள் அதிமுக தலைவர்கள். ஆனால் தேமுதிகவுடன் கூட்டு ஏற்பட்டதால் முஸ்லிம்கள் ஆதரவு இல்லாவிட்டாலும் ஜெயிக்கலாம் என்ற ஆணவப் போக்கின் காரணமாக ஜெயலலிதா தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்துக்கு கொடுத்த வாக்குறுதியைக் காற்றில் பறக்க விட்டார்.
வலுவான கூட்டணி அமையாவிட்டால் தேர்தல் அறிக்கையில் சொல்வது என்றும், வலுவான கூட்டணி அமைந்தால் முஸ்லிம்களை ஏமாற்றுவது என்றும் ஜெயலலிதா நினைப்பது தெரிந்து போனது. ஒருவேளை தேர்தல் அறிக்கையில் அவர் குறிப்பிட்டு விடலாம் என்பதால் அதிமுக தேர்தல் அறிக்கை வெளியாகும் வரை காத்திருந்து மறுநாள் பொதுக்குழு கூட்ட ததஜ முடிவு செய்து அதன்படி பொதுக்குழுவைக் கூட்டியது.
இதனிடையே திமுக தேர்தல் அறிக்கையில் “கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சிறுபான்மை சமுதாயத்தினர் உரிய பங்கினைப் பெறுவதற்கு ஏதுவாக நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகளை விரைவில் செயல்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசை வலியுறுத்துவோம்.
சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிலையங்களுக்கும், வழிபாட்டுத் தலங்களுக்கும் தேவையான பாதுகாப்பினை வழங்குவோம்.
இஸ்லாமிய மக்களின் நீண்ட கால கோரிக்கையான இட ஒதுக்கீட்டுக் கொள்கையை ஏற்று 3.5 சதகிவிதம் அளித்தது திமுக ஆட்சிதான். இந்த ஒதுக்கீட்டு அளவினை மேலும் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பரிசீலிப்போம்…” என்று திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
இரு கட்சிகளும் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் அதிமுக அணியில் ஏழு முஸ்லிம்கள் திமுக அணியில் 10 முஸ்லிம்கள் அறிவிக்கப்பட்டன‌ர்.
இரண்டு தேர்தல் அறிக்கையும் வெளியான நிலையில் மீண்டும் பொதுக்குழுவை தவ்ஹீத் ஜமாஅத் கூட்டி உறுப்பினர்களின் கருத்தைக் கேட்டது. அதிமுக நம்பிக்கை துரோகம் செய்ததாலும் இட ஒதுக்கீடு பற்றி எதுவும் கூறாததாலும் முஸ்லிம்கள் அதிமுகவை ஆதரிக்கக் கூடாது என்று ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டது.
தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தி தருவதாக சொல்லப்படும் என்று நம்மை நம்ப வைத்து விஜயகாந்த் ஆதரவு கிடைத்ததும் அலட்சியம் செய்ததால் அதிமுகவை ஆதரிக்க முடியாது என்ற நிலைமையை பொதுக்குழுவில் தெளிவுபடுத்தி இரண்டு கருத்துகள் முன் வைக்கப்பட்டன.
1. திமுக அதிமுக ஆகிய இரு அணிகளுக்கும் ஆதரவு இல்லை. மனசாட்சிப்படி வேறு பிரச்சினைகளின் அடிப்படையில் வாக்களிக்கலாம். அமைப்பின் பெயரையோ கொடியையோ யாருக்கு ஆதரவாகவும் பயன்படுத்தக் கூடாது என்று முடிவு செய்வதா?
2. இட ஒதுக்கீட்டை அதிகரிப்பது பற்றி திமுக கூறியுள்ளதாலும் அதிமுக கூற மறுத்துள்ளதாலும் அதிமுகவை விட கூடுதல் முஸ்லிம்கள் திமுக அணியில் நிற்பதாலும் இட ஒதுக்கீட்டுக்கான கண்காணிப்பு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாலும் திமுகவையே ஆதரிப்பதா?
என்ற இரண்டு கேள்விகள் மக்கள் மத்தியில் வைக்கப்பட்டன.
ஒவ்வொரு கருத்தும் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. எதை அதிகமான மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களோ அதுவே அனைவரின் முடிவாக கருதப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
முதல் கருத்துக்கு ஆதரவாக 19 சதவிகிதம் பேரும்,திமுகவுக்கு ஆதரவு என்ற கருத்துக்கு 81 சதவிகிதம் பேரும் கையை உயர்த்தினார்கள். அதிகமான உறுப்பினர்களின் ஆதரவுடன் திமுக ஆதரவு என்ற முடிவை பொதுக்குழு எடுக்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொருத்தவரை முழுக்க முழுக்க சுயநலமில்லாமல் சமுதாயத்தின் நன்மை கருதி மட்டுமே முடிவுகள் எடுக்கப்படும். எனவே முஸ்லிம் சமுதாயத்தை ஏமாற்ற நினைக்கும் ஜெயலலிதாவுக்குப் பாடம் புகட்ட, முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை அதிகப்படுத்தி நம் வருங்கால சந்ததிகள் பயன்பெற உங்கள் பொன்னான வாக்குகளை திமுக கூட்டனிக்கு அளித்து நம் சமுதாயம் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் தன்னிறைவு அடைய நீங்களும் உதவி செய்யுங்கள்.
சில விளக்கங்கள்:
மாபெரும் ஊழல் நடந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில் எப்படி திமுகவை ஆதரிக்கலாம் என்று ஒரு கேள்வி எல்லார் மத்தியிலும் எழுந்துள்ளது.
ஊழலுக்கு எதிராக நாம் வாக்களிக்க வேண்டும் என்பது சரி தான். ஊழலுக்கு எதிராக ஊழல் செய்யாதவர்களுக்குத் தான் வாக்களிக்க வேண்டும். இந்திய அரசியல் கட்சிகளில் ஊழல் இல்லாத ஒரு கட்சியும் இல்லை.
சென்ற தேர்தலில் நாம் அதிமுகவை ஆதரித்த போது ஜெயலலிதாவும் ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருந்தார். மக்களின் கருத்தும் அதுவாகவே இருந்தது. அப்படி இருந்தும் இட ஒதுக்கீட்டுக்கு ஆணையம் அமைத்ததற்காக அதிமுகவை ஆதரித்தோம்.
ஜெயலலிதா ஊழல் செய்திருந்தாலும் முஸ்லிம்களாகிய சிறுபான்மை மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க ஆணையம் அமைத்தார் என்பதால் அவரது ஊழலையும் கடந்த கால முஸ்லிம் விரோத போக்கையும் நாம் தேர்தல் பிரச்சினையாக்க மாட்டோம் என்று பதில் சொன்னோம். அதே பதில் இப்போதும் பொருந்தும். கருணாநிதி ஊழல் செய்துள்ளார் என்றாலும் அவரை எதிர்ப்பவர்களும் ஊழல் செய்தவர்கள் தான். இனியும் செய்யக்கூடியவர்கள் தான். எனவே அதைத் தேர்தல் பிரச்சினையாக ஆக்கினால் அதுவும் நம்மை நாமே ஏமாற்றிக் கெள்வதாகத்தான் இருக்கும்.
அதை விட நம் சமுதாயம் படித்து முன்னேறவும் வேலைவாய்ப்பு பெறவும் யார் உதவ வருகிறார்களோ அவர்களை ஆதரித்து அதன் பலனை சமுதாயத்திற்குக் கிடைக்கச் செய்வது தான் சமுதாய நலனில் அக்கறை உள்ளவர்களின் முடிவாக இருக்க வேண்டும்.
இந்த ஆட்சியில் விலைவாசி உயர்வு கடுமையாக இருக்கும் போது திமுகவை எப்படி ஆதரிக்கலாம் என்ற கேள்வியும் மக்கள் முன் வைக்கப்படுகிறது.
இந்த வாதம் எல்லா அரசியல் கட்சிகளாலும் மக்களை ஏமாற்றுவதற்கே வைக்கப்படுகிறது. நாடு சுதந்திரம் அடைந்தது முதல் ஒவ்வொரு ஆட்சியிலும் உள்ள விலைவாசி அடுத்த ஆட்சியில் உயராமல் இருந்ததில்லை.
இப்போதைய விலைவாசி அதிமுக ஆட்சியை விட அதிகம் தான்.
ஆனால் அதிமுக ஆட்சியில் விலைவாசி அதற்கு முந்தைய திமுக ஆட்சியை விட அதிகமாகத் தான் இருந்தது. இனி அடுத்து யார் ஆட்சிக்கு வந்தாலும் இப்போது உள்ளதை விட விலைவாசி உயரத் தான் செய்யும். பொருளாதாரப் புழக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் ஏற்படும் விலைவாசி உயர்வை யாராலும் தடுக்க முடியாது. உற்பத்தி குறைந்து தேவைகள் அதிகரிப்பதால் சில பொருள்கள் விலை உயரலாம், உற்பத்தி அதிகமானவுடன் தானாக அவை குறைந்து விடும்.
ஆக நாம் இந்தத் தேர்தலைக் கொண்டு நம் சமுதாயத்திற்கு என்ன செய்ய முடியும் என்ற ரீதியில் தான் சிந்திக்க வேண்டும். நம் வாக்குகளை நம் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்திக் கொண்டால் மட்டுமே நம் சமுதாய உரிமைகள் நிலை நாட்டப்படும் என்பதைக் கருத்தில் கொண்டு நமது வாக்குகளைப் பயன்படுத்துவோம்.
முஸ்லிம் சமுதாயத்தின் பெயரில் இயக்கம் நடத்தும் சிலர் இந்த நிலையிலும் அதிமுகவை ஆதரிக்குமாறு பிரச்சாரம் செய்து வருகின்றனர். அவர்கள் அதிமுகவிடம் மூன்று சீட் வாங்கிய ஒரே காரணத்துக்காக மக்களை விலை பேச முயல்கின்றனர். நேற்று வரை திமுகவுடன் கூட்டு வைத்துக் கொண்டு எல்லாம் ஆண்டு அனுபவித்து விட்டு தேர்தலில் சீட்டு இல்லை என்ற காரணத்துக்காக ஜெயலலிதாவுடன் கூட்டு சேர்ந்துள்ளனர். அவர்கள் ஆதரிப்பது சமுதாய நலனுக்காக அல்ல. தவ்ஹீத் ஜமாஅத் சீட்டும் வாங்காது. எந்தப் பதவியும் வாங்காது. யாரிடமும் எதற்காகவும் கைகட்டியும் நிற்காது. சமுதாய நன்மை கருதி மட்டுமே அரசியல் முடிவுகளை எடுத்து வருகின்றது.
இந்த வித்தியாசத்தை உணர்ந்து திமுக கூட்டணிக்கு வாக்களித்து அவர்கள் ஆட்சிக்கு வந்து இட ஒதுக்கீட்டை அதிகமாக்கினால் நம்முடைய் சமுதாயத்துக்கு இலவசமாகக் கிடைக்கும் உயர் கல்வி அதிகரிக்கும். வேலை வாய்ப்பிலும் நம்முடைய் பங்கு உயரும். மற்றவர்கள் போல் தலை நிமிர்ந்து தன்னிறைவு பெற்று வாழ முடியும், நமது நலனையும் நமது அடுத்தடுத்த தலமுறையினரின் நலனைக் கருத்தில் கொண்டு
வாக்களிப்பீர் திமுக கூட்டணிக்கே!
நாம் ஆதரிக்கும் சின்னம் _______________ நாம் ஆதரிக்கும் வேட்பாளர்_________

  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: TNTJ தேர்தல் நிலைபாடு விளக்கம் – நோட்டிஸ் மாதிரி Rating: 5 Reviewed By: AYM-TNTJ
Scroll to Top