TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Saturday, December 31, 2011

டி.வி மூலம் தொழுகை பயிற்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 30-12-11 வெள்ளி அன்று இஷா தொழுகைக்கு பிறகு தவ்ஹீத் மர்க்கஸில் டி.வி மூலும் தொழுகை பயிற்சி ஒளிப்பரப்பட்டது. இதில் மாநில பேச்சாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் ஊட்டி தர்பியாவில் தொழுகை பயிற்சி என்ற தலைப்பில் உரையாற்றிய சி.டி போடப்பட்டது. சகோதரர்கள் கலந்துக் கொண்டு பயன் அடைந்தனர்.

Thursday, December 29, 2011

அடியக்கமங்கலம் ஊராட்சி மன்ற தலைவரிடம் மணு கொடுத்த TNTJ நிர்வாகிகள்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 29-12-11 வியாழக்கிழமை காலை 11:30 மணியளவில் ஊராட்சி மன்ற தலைவர் SMJ.நிஜாமுதின் அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து TNTJ  நிர்வாகிகள் அடியக்கமங்கலத்தில் சில அடிப்படை வசதி செய்து தரும் படி மணுக் கொடுத்தனர்.

அந்த மணுவில்...
 • கொசு மருந்து அடிக்க கோரியும்,
 • பஸ் நிறுத்தங்களில் புதிய மின் விளக்குகள் அமைக்க கோரியும்,
 • பஸ் நிறுத்தங்களில் ஏற்படும் அசுத்தங்களை உடனுக்குடன் சுத்தம் செய்ய கோரியும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
அதை ஊராட்சி மன்ற தலைவர் பெற்றுக் கொண்டு விரைவில் இதை நிறைவேற்றுவதாக வாக்குறிதி கொடுத்தார். மேலும் அவர் இது போல் செய்திகள் வேறு இருந்தாலும் தயங்காமல் தொலைபேசி மூலம் என்னை தொடர்புக் கொண்டு என் பார்வைக்கு கொண்டு வந்தால் நிச்சயம் தக்க நடவடிக்கை எடுப்பேண் என்று கூறினார்.

மேலும் அடியக்கமங்கலம் ஊராட்சியை முதல் ஊரட்சியாக மாற்ற எங்களுடை ஆதரவும் பங்களிப்பும் நிச்சயம் உங்களுக்கு இருக்கும் என்பதை அடியக்கமங்கலம் TNTJ  நிர்வாகிகள் தெரிவித்தனர்...அல்ஹம்துலில்லாஹ்...!


Monday, December 26, 2011

செயல் வீரர்கள் கூட்டம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ  அடியக்கமங்கலம்-கிளை சார்பாக 25-12-2011 ஞாயிற்றுக் கிழமை மாலை 4:30 மணியளவில் மாவட்ட தலைவர் அப்துல் ரஹ்மான் & மாவட்ட செயலாளர் இஸ்மத் பாட்ஷா முன்னிலையில் செயல் வீரர்கள் கூட்டம் ராஜாத் தெரு தவ்ஹீத் மர்க்கஸில் நடைப்பெற்றது.

இக்கூட்டத்தில் (பிப்ரவரி 14) 14-02-2012 தேதி நடக்க இருக்கும்  "முஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம்" சம்பந்தமாக ஆலோசனை நடைபெற்றது.

மேலும் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:-

 • செட்டிதெரு பஸ் நிறுத்ததில் பேருந்துகள் நிற்த்தப்படாததால் பள்ளி மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டு மனஉழைச்சல் அடைகிறார்கள். இதை கருத்தில் கொண்டு அனைத்து பேருந்துகளும் கண்டிப்பாக செட்டிதெரு பஸ் நிறுத்தத்தில் நிற்க வேண்டும் என்று மேல் அதிகாரிகளுக்கு மனு கொடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது.

 •  பஞ்சாயத்திற்குற்ப்பட்ட பகுதிகளில் கொசு மற்றும் நாய் தொல்லை ஒழிக்க  பஞ்சாயத்து தலைவரிடம் மனு கொடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது.

 • மேலும் பள்ளிவாசல்   பொறுப்புகள் சம்பந்தமாக சில பொறுப்பாளர்கள் நியம்மிக்கப்பட்டது.
மாணவரனி செயலாளராக:
 • சகோ.அஜ்மாலுதீன்,9500773502.
துனை மாணவரனி செயலாளராக:
 • சகோ.அசாருதீன்,8344727437.

சந்தா வசூலிப்பவராக:
 • சகோ.முகம்மது அபுதாஹிர்,9003382347.

உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளராக:
 • இமாம் இலியாஸ்,7200705261.

செய்தி தொடர்பாளராக:
 • சகோ.நஜிமுதீன்,9944522093.

 • சகோ.ருமைஸ் தீன்,9944816551.

மார்க்க புத்தகம் & சி.டி சம்பந்தமான பொறுப்பாளராக:

 • சகோ.முகம்மது அபுபக்கர்,9688105504.

ஆகியோர் நியம்மிக்கப்பட்டு அவர்களின் பொறுப்புகளை பற்றி விளக்கமளிக்கப்பட்டது. துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவுப்பெற்றது.Sunday, December 25, 2011

தூய்மை இல்லாத பட்டக்கால்-தெரு பயணிகள் நிழற்க் குடை களம் இறங்கிய TNTJ மாணவரனி


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) நமதூர் அடியக்கமங்கலம் பட்டக்கால் தெரு பயணிகள் நிழற்க் குடை தூய்மை இல்லாததை பற்றி "அடிப்படை வசதி இல்லா பட்டக்கால் தெரு" என்ற தலைப்பில் நமது கருத்துகளை பதிவு செய்தோம். அந்த நிழற்க் குடையில் உள்ளே உள்ள மாடு கழிவையும் போட்டோ எடுத்து உங்கள் பார்வைக்கு சமர்பித்தோம். ஆனால் இந்த அசுத்தம் பல நாட்களாக சுத்தம் செய்யபடாமல் நீடித்துவந்தது.

இதனால் பொதுமக்கள் அனைவரும் உள்ளே  செல்ல  தயங்கி  பேருந்து  வரும்  வரை கால்கடுக்க நின்று கொண்டு  பயணம் செய்தனர். இந்த அசுத்தத்தை ஊரில் உள்ள  பலரும் கண்டுக் காணாமல் சென்று கொண்டு இருந்தனர்.


அடியக்கமங்கலம்  ராஜாத் தெரு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-(TNTJ) மாணவரினி சார்பாக 25-12-2011 ஞாயிற்றுக் கிழமை காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை சகோதரகள் சுத்தம் செய்யும் களத்தில் இறக்கினர்.

Sunday, December 18, 2011

கண்களை மூடி துஆச் செய்யலாமாகேள்வி:-

கண்களை மூடிக் கொண்டு துஆச் செய்யலாமா? கண்களை மூடிக்கொண்டு துஆச் செய்யும் போது உள்ளச்சம் ஏற்படுகிறது. ஆனால் மாற்று மதத்தினரின் வழக்கமாக இது உள்ளதால் கூடாது என்று சிலர் கூறுகின்றனர்.


பதில்:-

"கண்களை மூடிக் கொண்டு பிரார்த்தனை செய்வதற்கு மார்க்கத்தில் தடையேதும் இல்லை.உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான்".

(அல்குர்ஆன் 7:55)


இந்த வசனத்தில் பிரார்த்தனை செய்யும் ஒழுங்கைப் பற்றி இறைவன் கூறும் போது, பணிவாகவும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள் என்று கூறுகின்றான். கண்களை மூடிக் கொண்டால் தான் உங்களால் இந்த நிபந்தனையை நிறைவேற்ற முடியும் என்றால் அதைச் செய்வதில் தவறில்லை.
நமக்கு அனுமதிக்கப்பட்ட விஷயங்களை மாற்று மதத்தவர்கள் செய்வது பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை.

Tuesday, December 13, 2011

தர்கா வழிபாட்டிற்க்கு எதிராக நோட்டிஸ் விநயோகம்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அடியக்கமங்கலம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக தர்கா வழிபாட்டிற்க்கு எதிராக பல்வேறு தாவா பணிகளை செய்து வருகிறது அதன் தொடர்ச்சியாக "இதோ சொர்க்கத்திற்க்கான வழி"  என்ற தலைப்பில் 11-12-11 ஞாயிற்றுக்கிழமை நோட்டிஸ் விநயோகம் செய்யப்பட்டது.Sunday, December 11, 2011

சந்திரகிரகன தொழுகைஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 10-12-11 சனிக்கிழமை இரவு 7:40 மணிக்கு சந்திரகிரகன தொழுகை நமது மர்க்கஸில் நடைப்பெற்றது. இதில் ஆண்களும்,பெண்களும்,சிறுவர்களும் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டனர்.Saturday, December 10, 2011

குர்ஆன்,ஹதிஸ் பேனர்கள்

அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் அடியக்கமங்கலம் ராஜாத் தெருவில் நடக்கவிருக்கும் மெளலான பாவா கந்துரிக்கு எதிரான பல பயான்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக தர்கா வழிபாடு,இனைவைப்பு,சந்தன பூசுதல் ஆகியவை மார்க்கத்தில் தடை என்று குர்ஆன், ஹதிஸ் ஆதாரங்களுடன் 5 பேனர்கள்  முக்கிய இடங்களில் 09-10-11 அன்று வைக்கப்பட்டது.

ராஜாத் தெரு (தவ்ஹீத் மர்க்கஸ் முனையில்) சந்தனம் பூசுதல் என்ற தலைப்பில் பேனர் வைக்கப்பட்டுள்ளது.

மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 09-12-11 வெள்ளிக்கிழமை அன்று சரியாக மாலை 4:00 மணியளவில் ராஜாத் தெரு தவ்ஹீத் மர்க்கஸில் மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த சொற்ப்பொழிவில் அதிரை.ராஜா அவர்கள் "தர்கா வழிபாடு" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

இவரது உரையில் கொடியேற்றுவது, சந்தனம் பூசுவது,கச்சேரி,கவாலி நிகழ்ச்சிகள் ஆகிய அனைத்தும் மாற்று மத கலச்சாரம் என்று தெளிவாக எடுத்து கூறினார்.யார் மாற்று மத கலச்சாரத்தை பின்பற்றுகிறார்களோ அவர்கள் நரகத்துக்கு செல்வார்கள் என்ற நபி (ஸல்) பொன் மொழியை நினைவுப்படுத்தினார்.


புங்க மர விதையில் பயோ டீசல்: முஸ்லீம் மாணவிகள் சாதனை !


மயிலாடுதுறை அருகே, பள்ளி மாணவியர், புங்க மர விதையில் இருந்து எடுக்கப்பட்ட பயோ டீசலை கொண்டு, கார் இன்ஜினை இயக்கிக் காண்பித்தனர். நாகை மாவட்டம், மயிலாடுதுறை அடுத்த வடகரையில் உள்ள ஹாஜா சாரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியர், பள்ளி நிர்வாகி ஜியாவுதீன் மற்றும் முதல்வர் குணசேகரன் ஆகியோர் உதவியுடன், புங்க மர விதையிலிருந்து எடுக்கப்பட்ட பயோ டீசலை கொண்டு, வாகன இன்ஜின்களை இயக்க முடியும் என கண்டுபிடித்துள்ளனர். ஹாஜா சாரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், நாகை கலெக்டர் முனுசாமி முன்னிலையில், முஸ்லீம் மாணவிகள் செயல் முறை விளக்கம் காண்பித்தனர். முதலில், டீசலை கொண்டும், பின் தாங்கள் கண்டுபிடித்துள்ள புங்க மர விதையிலிருந்து எடுக்கப்பட்ட பயோ டீசலை கொண்டும், தொடர்ந்து கார் இன்ஜினை இயக்கிக் காண்பித்தனர். நிகழ்ச்சியில், மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் திருவளர்ச்செல்வி, மயிலாடுதுறை மாவட்ட கல்வி அலுவலர் சக்திவேல், தரங்கம்பாடி தாசில்தார் சூரியமூர்த்தி, தனி தாசில்தார் பாலச்சந்திரன், செம்பனார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, மாணவியரின் கண்டுபிடிப்பை பாராட்டினர். 

நன்றி : காலை நாளிதழ்

Tuesday, December 6, 2011

ஆஷூரா நோன்பிற்க்காக இஃப்தார் நிகழ்ச்சி

அல்லாஹ்வின் உதவியால் 05-12-11 & 06-12-11 ஆகிய தேதிகளில் ஆஷூரா நோன்பிற்க்காக இஃப்தார் நிகழ்ச்சி அடியக்கமங்கலம் தவ்ஹீத் மர்க்கஸ் சார்பாக ஏற்பாடு செய்யபட்டது.

05-12-11 அன்று எடுக்கபட்டது....

06-12-11 அன்று எடுக்கபட்டது....


Monday, December 5, 2011

அணல் பறந்த தெருமுனைப் பிரச்சாரம்

அல்லஹ்வின் மாபெரும் கிருபையால் 04-12-11 ஞாயிற்று கிழமை மாலை சரியாக 4:30 மணிக்கு அடியக்கமங்கலம் TNTJ தவ்ஹீத் மர்க்கஸ் சார்பாக 5 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது.இதில் 2 இமாம்கள் யாசர் அரபத்(திருத்திரைபூன்டி) & அப்துல் ஹமீது(இமாம் பொதக்குடி) உரைநிகழ்த்தினார்கள்.


மேலச்செட்டி தெரு (நபிலா ஸ்டோர் முன்பு) யாசர் அரபத் அவர்கள் தர்கா வழிபாடு  என்ற தலைப்பில்  உரையாற்றினார்.

Friday, December 2, 2011

ஆஷூரா நோன்பு


நபி (ஸல்) அவர்கள் ஆஷூரா நோன்பு நோற்பதை நமக்கு சுன்னத்தாக ஆக்கியிருக்கிறார்கள்.
"ரமலான் நோன்பு கடமையாக்கப் படுவதற்கு முன்னால் மக்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம் நாளில்) நோன்பு நோற்று வந்தார்கள். அது தான் கஅபாவுக்குப் புதிய திரை போடப்படும் நாளாக இருந்தது. அல்லாஹ் ரமலானுடைய நோன்பைக் கடமையாக்கிய போது, யார் ஆஷூராவுடைய நோன்பு நோற்க விரும்புகிறார்களோ அவர் அதை நோற்றுக் கொள்ளட்டும். யார் அதை விட்டு விட விரும்புகிறாரோ, அவர் அதை விட்டு விடட்டும். என்று அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்".
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 1592
இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
"அறியாமைக் கால (குறைஷி) மக்கள் ஆஷூராவுடைய நாளன்று நோன்பு நோற்கக் கூடியவர்களாக இருந்தார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னால் நபி (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் அந்நோன்பை நோற்றார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்ட போது நபி (ஸல்) அவர்கள், நிச்சயமாக ஆஷூரா நாள் அல்லாஹ்வுடைய நாட்களில் உள்ள நாளாகும். எனவே விரும்பியவர் அந்நாளில் நோன்பு நோற்கலாம். விரும்பியவர் விட்டு விடலாம் எனக் கூறினார்கள்".
நூல்: முஸ்லிம் 1901
மேற்கண்ட ஹதீஸ்கள் ஆஷூரா நோன்பு நோற்பது சிறப்பிற்குரியதும் சுன்னத்தானதும் ஆகும் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.

Thursday, December 1, 2011

அடிப்படை வசதி இல்லா பட்டக்கால் தெரு

அடியக்கமங்கலம் என்றாலே ஒரு காலத்தில் பட்டக்கால் தெரு தான் நினைவுக்கு வரும்,அனைத்து ஊர்களிலிருந்து வரும் பேருந்துகளும் அடியக்கமங்கலம் பட்டக்கால் தெரு நிறுத்தம் இடம் தெரியாமல் இருந்தது இல்லை.

(பல நாட்களாக சுத்தம் செய்யாமல் இருக்கும் பயனிகள் குடை)

ஏன் அடியக்கமங்கலத்தில் எங்கே பார்த்தாலும் திருட்டு நடந்து வருகிறது.ஆனாலும் பட்டகால் தெருவில் இது மிகவும் அரிது.ஏன் என்று தெரியவில்லை.

மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் இந்த தெருவில் புதிய பேருந்து நிறுத்தம் இரண்டு உள்ளது.பல வருடங்களாக இல்லாமலிருந்த இந்த பேருந்து நிறுத்தம் இப்போது தான் டயில்ஸ் போட்டு புதிதாக கட்டப்பட்டுள்ளது.

ஆனால் இந்த நிழற்குடை கட்டியும் பயன் இல்லாமல் இருந்து வருகிறது.
 பட்டக்கால் தெரு முனையில் இருக்கும் இரண்டு விளக்குகளும் சரிவர எறிவதில்லை.

ஏறிந்தாலும் இரண்டு பேருந்து நிறுத்தும் இடங்களிலும் விளக்கின் ஒளி போதுமானதாக இல்லை.இதனால் மக்களுக்கு பல சிரமங்கள் ஏற்படுகிறது.

இந்த விளக்கு இல்லாத காரணத்தால் பல சமுக தீமைகளும் நடக்கிறது.


 • குடிகாரர்களுக்கு இது பாராக பயன்படுகிறது.

 • விலங்குகளுக்கு இது கழிப்பிடமாக பயன்படுகிறது.

 • குடிகாரர்களுக்கும்,வழிபோக்கர்களுக்கும்,பிச்சைகாரர்களுக்கும் திருடர்களுக்கும் இது தங்குமிடமாக(GUEST ROOM) ஆகி விட்டது.

 • எப்போ பார்த்தாலும் சிகரெட் துண்டுகளும்,காலி சாராய பாட்டல்களும்,பான்பராக்,ஆன்ஸ் என்று குப்பை கூடையாகவும் பயன் படுகிறது.
இதனால் மக்கள் அதனுள் செல்வதற்கே மிகவும் அஞ்சிகின்றனர்.பேருந்து நிறுத்தம் இதற்க்காக தான் டயில்ஸ் போட்டு கட்டினார்களா?.இது அனைத்தும் பராமரிப்பு இல்லாததால் தான் நடந்து வருகிறது.அதனால் ஊராட்சி மன்ற நிர்வாகம் இதில் கூடுதல் கவனம் எடுக்க வேண்டும்.


 • தெருக்களை சுத்தம் செய்யும் தோட்டி அந்த பஸ் நிலையத்தையும் சுத்தம் செய்ய உத்தரவு கொடுக்க வேண்டும்.


 • இரண்டு பேருந்து நிறுத்தும் இடங்களிலும் தனி விளக்குகளை பொருத்த வேண்டும்.
இவ்வாறு செயதால் தான் அடியக்கமங்கலம் அடிப்படை வசதி உள்ள கிரமமாக விளங்கும்.இது அனைத்து பேருந்து நிறுத்தும் இடங்களுக்கும் பொருந்தும்.