இதனால் பொதுமக்கள் அனைவரும் உள்ளே செல்ல தயங்கி பேருந்து வரும் வரை கால்கடுக்க நின்று கொண்டு பயணம் செய்தனர். இந்த அசுத்தத்தை ஊரில் உள்ள பலரும் கண்டுக் காணாமல் சென்று கொண்டு இருந்தனர்.
அடியக்கமங்கலம் ராஜாத் தெரு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-(TNTJ) மாணவரினி சார்பாக 25-12-2011 ஞாயிற்றுக் கிழமை காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை சகோதரகள் சுத்தம் செய்யும் களத்தில் இறக்கினர்.
இந்த சமுதாய சேவையை கண்ட அடியக்கமங்கலம் பொது மக்கள் தங்களது பணிக்கு வாழ்த்துகளையும்,நன்றியையும் தெருவித்தனர். ஏன் பேருந்தில் சென்ற கண்டக்டர் (CONDUCTOR) கூட அவரது வாழ்த்தை பதிவு செய்தார்.
ஊராட்சி மன்ற நிர்வாகம் இதை கண்டு காணாமல் இருப்பது வருத்ததிற்க்குரியது. இதுப்போல் அடிப்படை வசதி செய்தால் தான் அடியக்கமங்கலம் ஊராட்சியை தமிழ்நாட்டில் முதல் ஊராட்சியாக மாற்ற முடியும்.
ஒவ்வொருவரும் இது போல் முயற்சி செய்து அடியக்கமங்கலம் ஊராட்சியை தமிழ்நாட்டில் முதல் ஊராட்சியாக மாற்ற உதவி செய்யவும்...

குறிப்பு:-
(இனையதளத்தில் சுத்தம் செய்யும் படங்கள் போட்டதற்க்கான காரணம் மற்றவர்களும் கூச்சம் இல்லாமல் செயல்படுத்த தான்...பெருமைக்கு அல்ல...)
இது போல் அடியக்கமங்கலம் ராஜாத் தெரு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-(TNTJ)யில் தாவா & சமுதாய திட்டங்கள் பல உள்ளன பொதுமக்கள் ஆதரவு இருந்தால் விரைவில் செயல்படுட்டபடும்...இன்ஷா அல்லாஹ்...!
இது போல் அடியக்கமங்கலம் ராஜாத் தெரு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-(TNTJ)யில் தாவா & சமுதாய திட்டங்கள் பல உள்ளன பொதுமக்கள் ஆதரவு இருந்தால் விரைவில் செயல்படுட்டபடும்...இன்ஷா அல்லாஹ்...!
-TNTJ AYM செய்தி தொகுப்பாளர்...