TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Friday, November 26, 2010

TNTJ அறிவிப்பு

அஸ்ஸலாமு அழைக்கும் ,
நவம்பர் 28 ஆம் நடைப்பெற இருந்த சமுதாய விழிப்புணர்வு மாநாடு மழையின் காரணமாக டிசம்பர் 12 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது

இஸ்லாத்திற்கு எதிராக கிறிஸ்தவர்களின் வாதங்களுக்கு பதிலடி கொடுக்க ஒரு புதிய இணைய தளம்!


கிறித்தவர்களின் கொள்கைத் தவறுகளையும், அதன் காவலர்களின் குற்றச் செயல்களையும், சுட்டிக்காட்டி வர்லாற்று ரீதியில் அவர்கள் செய்து வந்த இரட்டை வேடத்தையும், அப்பாவி வேடம் போட்டு இரகசிய திட்டமிட்டு நடத்திய மதத்தலைமையின் வன்முறையை தோலுரித்துக் காட்டவும், இஸ்லாத்துக்கு எதிராக அவர்கள் கட்டவிழ்த்து விடும் அவதூறுகளுக்கும் விமர்சனங்களுக்கும் தக்க பதிலடி கொடுக்கவும் ஆரம்பிக்கப்பட்ட இணையதளம் சோதனை ஒட்டத்திலிருந்து முன்னேறி முழுமையாக செயல்பட துவங்கியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

www.JesusInvites.com

நீங்கள் பார்ப்பதுடன் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்.

Thursday, November 25, 2010

தானாக மருந்து உட்கொண்டால் சிறுநீரகம் பாதிக்கும்


""டாக்டர் ஆலோசனை இல்லாமல் மருந்து உட்கொண்டால் சிறுநீரகம் பாதிக்கும்,''என மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரியில் நடந்த சிறுநீரகவியல் துறை முன்னேற்றம் குறித்த கருத்தரங்கில் சென்னை டாக்டர் முத்துசேதுபதி பேசினார்.அவர் பேசியதாவது :இன்று அதிக மருந்து, மாத்திரைகள் விற்பனைக்கு வந்துள்ளன. டாக்டர் ஆலோசனையில்லாமல், வலி மாத்திரைகளை அதிகமாக எடுப்பதால் சிறுநீரக நோய் வரும். சர்க்கரை நோய்,ரத்தஅழுத்தம் உள்ளவர்கள் முறையாக பரிசோதனை செய்து,டாக்டர் ஆலோசனைபடி மருந்துகளை எடுத்துக் கொண்டால் இந்நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம். ஆறு மாதத்திற்கு ஒருமுறை சிறுநீர், ரத்தப் பரிசோதனைகளை செய்ய வேண்டும். சிறுநீரில் புரதச்சத்து வெளியேறுகிறதா என கண்காணிக்க வேண்டும்.


குழந்தைகள் சிறுநீர் கழிக்கும்போது வலியால் அழுவர். சிலசமயம் சிறுநீரில் ரத்தம் வெளியாகும்.இவ்வாறு இருந்தால் டாக்டரிடம் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.கால்வீக்கம்,எழுந்தவுடன் முகம் வீங்குதல் சிறுநீரக நோய் அறிகுறிகள் என்றார். டாக்டர்கள் ராஜசேகரன், ஜெயகுமார், முரளி, சம்பத்குமார் பங்கேற்றனர்.


source: dinamalar

Friday, November 19, 2010

நபி வழியில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை சார்பில் 18/11/2010 வியாழன் கிழமை காலை 7.10 க்கு ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது. திடலில் ஏற்பாடு செய்யப்பட தொழுகை அன்று காலை மழையின் காரணமாக தவ்ஹீத் மர்கசில் தொழுகை நடைப்பெற்றது . அல்ஹம்துலில்லாஹ்

அதை தொடர்ந்து சுமார் 5 maadugal நமதூர் மார்க்கெட்டில் வைத்து குர்பானி கொடுக்கப்பட்டு ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது .

Monday, November 15, 2010

அடியக்கமங்கலம் ஒருங்கிணைந்த கிளைகள் சார்பில் செயல் வீரர்கள் கூட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளையில் கடந்த 14/11/2010 மாலை 5 மணியளவில் அப்துர்ரஹ்மான் முன்னிலையில் இஸ்மத் பாட்சா தலைமையில் திருவாரூர், கொடிக்கால்பாளையம், புலிவலம் ஆகிய கிளைகள் ஒருங்கிணைந்த செயல்வீரர்கள் கூட்டம் நடைப்பெற்றது. இதில் நவம்பர் 28 மாநாட்டிற்கு பணிகளை துரிதபடுத்தி மக்களை பெருந்திரளாக அழைத்து செல்வது என தீர்மானிக்கப்பட்டது.

Sunday, November 14, 2010

குர்பானியின் சிறப்பும், அதன் சட்டங்களும்!


மகத்துவமும்,கண்ணியமும் நிறைந்த அல்லாஹ் தன்திருமறையில்...
என் இறைவா! எனக்கு நல்லொழுக்கம் உடையவரை(வாரிசாகத்) தருவாயாக! (என்று கேட்டார்) அவருக்குசகிப்புத் தன்மைமிக்க ஆண் குழந்தை பற்றி நற்செய்தி கூறினோம். அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்த போது என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறு என்று கேட்டார். என் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள் என்று பதிலளித்தார்.இருவரும் கீழ்ப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக் கிடத்திய போதுஇப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம் என்று அவரை அழைத்துக் கூறினோம். இதுதான் மகத்தான சோதனை. பெரிய பலிப்பிராணியை அவருக்குப் பகரமாக்கினோம். பின்வருவோரில் அவரது புகழை நிலைக்கச் செய்தோம். இப்ராஹீமின் மீது ஸலாம் உண்டாகும்! நன்மை செய்வோருக்கு இவ்வாறே கூலி வழங்குவோம். அவர் நம்பிக்கை கொண்ட நமது அடியார்களில் ஒருவர். (அல்குர்ஆன்37:100-111)

ஒரு வணக்கத்தை அல்லாஹ் நமக்குக்
கட்டளையிடுகிறான் 

என்று 

சொன்னால் அதை 

செயல்படுத்துவதன் மூலம் நம்மிடமிருந்து இறைவன் எதை 
முக்கியமாக எதிர்பார்க்கிறான் என்பதை உணர்ந்து
அவற்றுக்கு முன்னுரிமை தரவேண்டும். குர்பானியின்
நோக்கத்தை புரியாத பலர் புகழுக்காக அதை செய்வதைப் 
பார்க்கிறோம். வணக்கத்தின் நோக்கம் இறையச்சத்தின் 
வெளிப்பாடாக இருக்க வேண்டுமேயல்லாது மற்ற 
எண்ணங்களுக்கு இடந்தந்து விடக்கூடாது.
 

அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதுதியாக சிந்தனைகளைநினைவுகூர்வது என்ற அடிப்படையில் வல்லநாயன்அல்லாஹ்தான் குர்பானி கொடுப்பதை முஸ்லிம்களின்வழிமுறையாக ஆக்கியுள்ளான் என்றும்அதை ஒரு வழிபாடு என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அல்லாஹ்விடம் நெருக்கத்தைப் பெற்றுத்தரும் இவ்வணக்கத்தைச் செய்வதில் நாம் ஆர்வங்கொள்வோமாக!
குர்பானி யார் மீது கடமை?
குர்பானி கொடுப்பது வலியுறுத்தப்பட்ட சுன்னத்தாகும்.வசதியுள்ளவர்கள் அவசியம் இந்த வணக்கத்தை நிறைவேற்ற வேண்டும். வசதியில்லாதவர்கள் சிரமப்பட்டுகடன்வாங்கியாவது குர்பானி கொடுக்க வேண்டுமென்பதுஅவசியமல்லாத ஒன்று. ஏனெனில் எந்த ஒருவரையும் அவரது சக்திக்கு மீறி அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.
குர்பானி கொடுப்பவர் கடைப்பிடிக்க வேண்டியவைகள்
குர்பானி கொடுக்க நாடியவர் துல்ஹஜ் மாதம் பிறை 1 முதல் குர்பானி கொடுக்கும் வரை நகம்முடி இவற்றில் எதையும் வெட்டக்கூடாது.
ஒருவர் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ்பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும் வரை அவர் தனது முடியைநகத்தை வெட்டவேண்டாம் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உம்மு ஸலமா(ரலி) நூல்: முஸ்லிம் 3655நஸயீ 4285
ஒரு குடும்பத்திலுள்ள அனைவரும் முடிநகங்களைகளையாமல் இருக்கவேண்டும் என்று அவசியமில்லை.குடும்பத்தை நடத்திச் செல்பவர் தன் குடும்பத்தின் சார்பாககுர்பானி கொடுப்பார். அவர் மட்டும் முடிநகங்களைகளையாமல் இருக்கவேண்டும்.
குர்பானிப் பிராணிகள்
கால்நடைகளைஅவர்களுக்கு அல்லாஹ் வழங்கியதற்காக அறியப்பட்ட நாட்களிலே அல்லாஹ்வின் திருநாமத்தை அவர்கள் துதிப்பார்கள். அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள். வறிய ஏழைகளுக்கும் வழங்குங்கள். (அல்குர்ஆன் 22:28)
இவ்வசனத்தில் குர்பானிப்பிராணிகளைப்பற்றி அல்லாஹ் குறிப்பிடும்பொழுது அன்ஆம்என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றான். அன்ஆம் என்றால் ஆடுமாடு,ஒட்டகம் ஆகிய மூன்று பிராணிகளை மாத்திரம் குறிக்கும். எனவே மேற்கண்ட பிராணிகளையே குர்பானி கொடுக்கவேண்டும். நபி(ஸல்) அவர்கள் ஒட்டகம்ஆடு,மாடு ஆகியவற்றை மட்டும் குர்பானி கொடுத்ததாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள்கூறுகின்றன. எனவே இம்மூன்று பிராணிகள் மட்டுமே குர்பானி பிராணிகள்.
பிராணிகளின் தன்மைகள்
குர்பானிப்பிராணநல்லதிடகாத்திரமானதாகவும்,ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். பொதுவாக எந்தக் குறையும் இல்லாததாக இருக்கவேண்டும்.
நான்கு குறைகள் உள்ளவை குர்பானிக்குஏற்றவையல்ல. வெளிப்படையாகத் தெரியக்கூடிய குருட்டுத் தன்மைநோய்,ஊனம்கொம்பு முறிந்தது ஆகியவற்றைக் குர்பானி கொடுக்கக் கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! கொம்பிலும்,பல்லிலும் ஒருகுறை இருப்பதால் அதைக் கொடுக்க நான்விரும்பவில்லை என்று கூறினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள்,உனக்கு எது விருப்பமில்லையோ அதை விட்டுவிடு! மற்றவருக்கு ஹராமாக்கி விடாதே என்றுகூறினார்கள். அறிவிப்பவர்: பரா(ரலி) நூல்: நஸயீ 4293
இந்த ஹதீஸின் அடிப்படையில் வெளிப்படையாகத்தெரியக்கூடிய பெரிய குறைபாடுகள் இருந்தால் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அற்பமான குறைகள் இருந்தால் அதையும் தவிர்க்க விரும்புவோர் தவிர்க்கலாம். கட்டாயமில்லை என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
நபி(ஸல்) அவர்கள் கொம்புள்ள கொழுத்த இரண்டுஆடுகளைக் குர்பானி கொடுத்திருக்கிறார்கள். அறிவிப்பவர் : அனஸ்(ரலி) நூல்: புகாரி 5554
நபி(ஸல்)அவர்கள் தேர்வு செய்ததுபோல் நல்ல கொழுத்த ஆடுமாடுகளை வாங்கி கொடுப்பது சிறந்ததாகும். மேலும் குர்பானி கொடுப்பதற்குப் பெண் பிராணியை பெரும்பாலும் யாரும் தேர்வு செய்வதில்லை. பெண் பிராணியை அறுத்து பலியிடுவது தவறானது என்றும்அந்தஸ்து குறைவு என்றும் சிலர் நினைக்கிறார்கள். தடுக்கப்பட்ட பிராணிகளின்தன்மைகளை அல்லாஹ்வும்அவனது ரஸ{ல்(ஸல்)அவர்களும் விளக்கும்போது பெண் பிராணிகளைபலியிடக்கூடாது என்று கூறவில்லை.
குர்பானிப் பிராணியின் வயது
நீங்கள் முஸின்னத் தவிர வேறெதனையும்(குர்பானிக்காக) அறுக்காதீர்கள்! உங்களுக்கு சிரமமாக இருந்தால் தவிர. அவ்வாறு சிரமமாக இருந்தால் வெள்ளாட்டில் ஜத்அத்தை அறுங்கள்! அறிவிப்பவர்:ஜாபிர்(ரலி) நூல்: முஸ்லிம் 3631
நபி(ஸல்) அவர்கள் குர்பானி ஆடுகளை பங்கிட்டுக்கொடுத்தார்கள். அதில் எனக்கு ஜத்வு கிடைத்தது,அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஜத்வு தான் கிடைத்தது என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அதைக் குர்பானி கொடுப்பீராக! என்றனர் அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர்(ரலி) நூல்: முஸ்லிம் 3634புகாரி 5547
முஸின்னத்தைத்தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். முஸின்னத் என்றால் இனவிருத்தி செய்வதற்கான பருவத்தை அடைந்தவை. ஜத்அத்ஜத்வு என்றால் பருவமடைவதற்கு முந்தைய நிலையிலுள் ஆடு. உறுதியான பற்கள் முளைப்பதற்காகபிறக்கும் போது இருந்த பற்கள் விழும் பருவத்தை அடைந்தவை. இங்கே வயதைவிட பருவமடைவதுதான் முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். காரணம் சிலநாட்டின் தட்பவெட்ப நிலை காரணமாக பிராணிகள்மேற் சொன்ன பருவமடைவதில் கால வித்தியாசம்ஏற்படுகிறது. எனவே முஸின்னத்--ஜத்அத்--ஜத்வு போன்ற பருவ நிலைகளை அந்தந்த பகுதிகளில் உள்ளோர் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எத்தனை ஆடுகள்?
நபி(ஸல்) அவர்களின் காலத்தில் எவ்வாறு குர்பானிகொடுக்கப்பட்டு வந்ததுஎன்று அபூஅய்யூப்(ரலி)அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் 'ஒருவர்தமக்கும்தமது குடும்பத்திற்கும் சேர்த்து ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார். தாமும் சாப்பிட்டு,மற்றவர்களுக்கும் சாப்பிடக் கொடுப்பார்கள். இன்றுமக்கள்
பெருமையடிப்பதற்காக நீர் காணக்கூடிய நிலைஏற்பட்டுவிட்டது" அறிவிப்பவர்: அதா பின் யஸார் நூல்: திர்மிதீ 1425, இப்னுமாஜா 3137
எனவே ஒருவர் தமக்காகவும்தமது குடும்பத்திற்காகவும் சேர்த்து ஒரே ஆட்டைக் குர்பானி கொடுத்தால் அவரது கடமை நீங்கிவிடும் என்பதை இதிலிருந்து அறிந்துகொள்ளலாம்.
எப்போது குர்பானி கொடுப்பது?
இன்றைய நாளில் நாம் முதலாவது செய்வதுதொழுகையாகும். பிறகு நாம் (வீட்டிற்குச்) சென்று குர்பானி கொடுப்போம். யார் இப்படி நடந்து கொள்வாரோ அவர் நமது வழியில் நடந்து கொண்டார். யார் (தொழுவதற்குமுன்) அறுத்தாரோ அவர் தன் குடும்பத்திற்காக மாமிசத்தை முற்படுத்திக்கொண்டார். அவருக்கு குர்பானியில் (நன்மை) எதுவும் கிடையாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: பரா(ரலி) நூல்: புகாரி 5566 முஸ்லிம் 3765
தஷ்ரீகுடைய நாட்கள் (துல்ஹஜ்11,12,13) அனைத்தும்அறுப்பதற்குரியதாகும். என்று நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள். அறிவிப்பவர்: ஜுபைர் இப்னு முத்இம்(ரலி) நூல்: தாரகுத்னீ பாகம் 4 பக்கம் 284
இதன் மூலம் குர்பானிப் பிராணிகளை ஹஜ்ஜுப் பெருநாள்தொழுகை முடித்துவிட்டு வந்ததிலிருந்து அடுத்து வரும் மூன்று நாட்கள் வரை அறுக்கலாம் என்று மார்க்கம் வழிகாட்டுகிறது.
அறுக்கும் முறை
பிராணிகளை அறுக்கும்போது அவற்றுக்கு சிரமம் தராமல் கத்தியை கூர்மையாக்கிக் கொண்டு விரைவாக அறுப்பதன் மூலம் அவற்றுக்கு நிம்மதி தரவேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் கறுப்பும்வெள்ளையும் கலந்த இரண்டு கொம்புள்ள ஆடுகளைக் குர்பானி கொடுத்தார்கள். அதை தன் கையால் அறுத்தார்கள்.அப்போது பிஸ்மில்லாஹ்வும்தக்பீரும் கூறினார்கள்".
அறிவிப்பவர்: அனஸ்(ரலி) நூல்: புகாரி 5565 முஸ்லிம்3976
மற்றொரு அறிவிப்பில் 'பிஸ்மில்லாஹி வல்லாஹஅக்பர்" என்று கூறியதாக தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அறிவிப்பவர்: அனஸ்(ரலி) நூல்: முஸ்லிம் 3636
விநியோகம் செய்தல்
அவற்றிலிருந்து (குர்பானி பிராணியிலிருந்து) நீங்களும் உண்ணுங்கள்! (வறுமையிலும் கையேந்தாமல்இருப்பதைக்கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும்,யாசிப்போருக்கும்உண்ணக்கொடுங்கள்" (அல்குர்ஆன் 22:36)
நபி(ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்த ஒட்டகத்தின்இறைச்சியை பங்கிட்டுக் கொடுக்கும் பொறுப்பைஎன்னிடம் ஒப்படைத்தார்கள். அதனுடைய இறைச்சி,தோல் ஆகியவற்றை எல்லாம் வினியோகிக்குமாறு உத்தரவிட்டார்கள். ஆட்டை அறுத்துஉரித்து பங்கிடக் கூடியவருக்குக் கூலியாக அந்த இறைச்சியையோ,தோலையோ கொடுக்கக்கூடாது எனவும்கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர்: அலி(ரலி)நூல்: புஹாரி 1717
இந்த ஹதீஸிலிருந்து அறுப்பவருக்குஉரிப்பவருக்குதனியாகத்தான் கூலி கொடுக்க வேண்டுமே தவிர குர்பானி பிராணியின் எந்த ஒரு பகுதியையும் கூலியாக கொடுக்கக் கூடாது என்பதை அறிந்து கொள்ளலாம்.
(குர்பானி இறைச்சியிலிருந்து) உண்ணுங்கள்,சேமித்துக்கொள்ளுங்கள்தர்மம் செய்யுங்கள் என்றுஅல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.அப்துல்லாஹ் பின் வாகித்(ரலி) நூல்: முஸ்லிம் 3643
மேலும் மக்காவில் குர்பானி கொடுக்கப்பட்ட ஆட்டின்இறைச்சியை மதீனாவிற்கு நபி(ஸல்) அவர்களிடம் நாங்கள் கொண்டு வருவோம் என்று ஜாபிர்(ரலி) அறிவிக்கும் ஹதீஸ் புகாரியில் இடம்பெற்றுள்ளது. எனவே குர்பானி கொடுப்பவர்கள் தாங்களும் உண்டு,ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு தேவையான அளவுக்கு சேமித்து வைத்துக்கொள்ளலாம். பிற ஊர்களுக்கும் எடுத்துச் செல்லலாம் என்பதை மேற்சொன்ன ஆயத்,ஹதீஸிலிருந்து நாம் அறியலாம்.
கூட்டுக்குர்பானி
ஒரு மாடு ஏழு நபருக்கும்,ஒரு ஒட்டகம் ஏழு நபருக்கும் (கூட்டு சேரப் போதுமானதாகும்) என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ்(ரலி) நூல்: அபூதாவூத் 2425
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் இருந்த போது ஹஜ்ஜுப் பெருநாள் வந்தது. ஒரு மாட்டில் ஏழுபேர் வீதமும்ஒரு ஒட்டகத்தில் பத்துபேர் வீதமும் நாங்கள் கூட்டு சேர்ந்தோம். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: திர்மிதீ 1421,நஸயீ 4316இப்னுமாஜா 3122
மேலே கூறப்பட்டுள்ள ஹதீஸ்கள் மாடு அல்லதுஒட்டகத்தில் ஏழுபேர் கூட்டு சேரலாம் என்பதோடுஒருஒட்டகத்தில் பத்து பேர் கூட்டு சேரவும் ஆதாரம் உள்ளது என்பதை அறிய முடிகிறது.
இதனடிப்படையில் குர்பானி இறைச்சி எல்லா வகையான மக்களுக்கும் சென்றடையும் வகையில் கூட்டுக் குர்பானி முறையை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமை ஏற்பாடு செய்துள்ளது.

ன்றி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - துபை மண்டலம்

* டவுன்(DOWN)காஜியான, டவுன்(TOWN)காஜி?


தமிழகத்தில் கடந்த 07.11.10 அன்று சந்தேகத்திற்குரிய நாளில் பிறை எங்குமே தென்படாததைத் தொடர்ந்து துல்காயிதா மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து, 18.11.10 வியாழன் அன்று ஹஜ்ஜுப் பெருநாள் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவுப்பு செய்தது.
ஆனால், எந்த ஒரு மார்க்க நெறிமுறையையும் பேணாத தமிழக டவுன் காஜியோ மஹாராஷ்டிர மாநிலம் மாலேகானில் பிறை பார்த்ததன் அடிப்படையில் தமிழகத்தில் 17.11.10 அன்று பெருநாள் என்று தறிகெட்ட அறிவிப்பைச் அறிவித்தார். தமிழக டவுன் காஜியின் அறிவிப்பு எந்த ஒரு நெறிமுறையும், மார்க்க வரைமுறையும் அற்ற அறிவிப்பு என்பதை, பிறை குறித்த டவுன் காஜியின் கடந்த கால அறிவிப்புகளோடு ஒப்பிட்டு பார்த்தால் விளங்கிக் கொள்ளலாம்.
கடந்த ரமாலான் மாதம் முதல் பிறை தமிழகத்தில் தெரிவதற்கு முன்பே கேரள மாநிலத்தில் தென்பட்டது. இப்போது தமிழகத்திற்கு அருகிலுள்ள கர்நாடகாவையும் தாண்டி மஹாராஷ்டிராவிற்கு தாவிய தமிழக டவுன் காஜி, சென்ற ரமலானில் கேரள மாநிலத்தில் பார்க்கப்பட்ட பிறையை நிராகரித்தார். தமிழகத்தில் பிறை பார்க்கப்பட்டால் தான் ஏற்றுக் கொள்வேன் என்று கூறிவிட்டு இப்போது மஹாராஷ்டிராவை ஆதாரமாகக் கொண்ட மர்மம் நமக்கு விளங்கவில்லை.
உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த டவுன் காஜியின் பேட்டி:
”சமுதாய ஒற்றுமை” என்ற மாத இதழுக்கு சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், தமிழகத்திலிருந்து பிறை பர்க்கப்பட்டதாக தகவல் கிடைத்தால் ஏற்றுக் கொள்வேன் என்றும், ”இந்தியாவில் ஒரே நாளில் பெருநாள் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்திரா காந்தி அவர்கள் தனது ஆட்சியின் போது ஹிலால் கமிட்டி ஒன்றை ஏற்படுத்தினார்கள். சில மார்க்க காரணங்களினால் அதன்படி செய்ய முடியாமல் போனது” என்று அந்த பேட்டியில் இந்தியா முழுவதும் ஒரே நாளில் பெருநாள் கொண்டாடுவதற்கு சில மார்க்க காரணங்கள் தடையாக இருக்கின்றன என்று தெரிவித்துவிட்டு, தற்போது ”அவர் சொன்ன நிலைபாட்டிற்கு அவரே முரண்பட்டு” மஹாராஷ்டிரா பிறையை அறிவித்து மக்களைக் குழப்பியுள்ளார். அவர் கொண்டிருந்த நிலைப்பாட்டிலிருந்து அவரே குழம்பி விட்டு, மக்களையும் குழப்பி விட்டுள்ளார்.
சென்ற ரமலானில் அருகிலுள்ள கேரள மாநிலத்தில் தெரிந்த பிறையையே ஏற்காத தமிழக டவுன் காஜி தற்போது மஹாராஷ்டிர பிறையை ஏற்றுக் கொண்டு மக்களைக் குழப்பியுள்ளாரே இவரது நிலைப்பாடு தான் என்ன? இவர் விளங்கித் தான் செய்கிறாரா? அல்லது விளங்காமல் நிலை தடுமாறியுள்ளாரா? என்று அறிந்து கொள்வதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைமையகத்திலிருந்து மாநிலச் செயலாளர்கள் கானத்தூர் பஷீர் மற்றும் அப்துல் ஜப்பார் ஆகியோர் கடந்த 15.11.10 திங்கள் அன்று மாலை 5மணிக்கு டவுன் காஜியை நேரில் சந்தித்து விளக்கம் கேட்கச் சென்றனர்.
டவுன் காஜியின் அற்புத(?) விளக்கம்:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகளை அவரது அலுவலகத்தில் சந்தித்த டவுன் காஜியிடம், எந்த அடிப்படையில் 17.11.10 அன்று பெருநாள் என்று அறிவித்தீர்கள்? என்று கேட்டதற்கு, தமிழகத்தில் எங்கும் பிறை தென்படவில்லை, மஹாராஷ்டிர மாநிலம் மாலேகானில் பிறை தென்பட்டதன் அடிப்படையில் தான் அறிவித்தேன் என்றும், ஆந்திரா, கர்நாடகா என்று இந்தியாவில் எங்கு பிறை தென்பட்டாலும் அதை அறிவிப்பேன் என்று அவர் கடந்த காலத்தில் கொண்டிருந்த நிலைப்பாட்டிற்கு மாற்றமாகவும், அவர் அளித்த பேட்டிக்கு மற்றமாகவும் கூறியுள்ளார். அப்படியனால் கடந்த காலங்களில் டெல்லியில் பார்க்கப்பட்ட பிறையை ஏற்று பெருநாள் அறிவிக்காதது ஏன் என்று நமது நிர்வாகிகள் கேள்வி எழுப்பியதற்கு, டெல்லியில் இருந்து வரும் அறிவிப்பை ஏற்க மாட்டேன் என்று ஒரு அற்புத(?) விளக்கத்தைக் கூறியுள்ளார். டெல்லி என்பது இந்தியாவில் தானே உள்ளது, உங்கள் நிலைப்பாட்டின் படி அது என்ன வேறு நாடா? என்று நமது நிர்வாகிகள் கேட்டதற்கு, டெல்லியைப் பொறுத்த மட்டிலும் அவர்கள் அவர்களாக அறிவிப்பது கிடையாது. அவர்கள் கலகத்தாவை வைத்து அறிவிப்பார்கள் என்ற அறிவிப்பூர்வமான (?) விளக்கத்தைக் கூறியுள்ளார். கல்கத்தாவும் இந்தியாவில் தானே உள்ளது என்ற நமது நிர்வாகிகளின் கேள்விக்கு தகுந்த பதில் இல்லை.
டவுன்(DOWN)காஜியான, டவுன்(TOWN)காஜி?
இந்த முறை பெருநாளை நாங்களும் அறிவித்து விட்டோம், நீங்களும் அறிவித்து விட்டீர்கள் எனவே அடுத்த வருடம் 6 மாதங்களுக்கு முன்பாகவே வாருங்கள். நாம் அமர்ந்து பேசி முடிவெடுக்கலாம் என்று சமாளிப்பு பதில் தான் அவரிடத்திலிருந்து வந்ததே தவிர, ஒரு மார்க்கக் கடமையை நிறைவேற்றுவதற்கு அல்லாஹ்வை அஞ்சி முடிவெடுக்க வேண்டுமே என்ற பொறுப்புணர்வோடு உள்ளவர் போன்று அவர் நடந்து கொள்ளவில்லை. ஆகமொத்தத்தில் தடம்புரண்ட தனது பெருநாள் அறிவிப்பின் மூலம் டவுன்(TOWN)காஜி – டவுன்(DOWN)காஜி யாக மாறிவிட்டார்.
இதைப்போன்று கடந்த சில வருடக்களுக்கு முன்பாக தமிழகத்தைத் தாண்டி அந்தர்பல்டி அடித்து ஒரு பிறை அறிவிப்பைப் செய்த டவுன் காஜியிடம் அப்போது தலைமைப் பொறுப்பிலிருந்த சகோதரர் பீ.ஜே அவர்களும், பாபாஜான் என்ற சகோதரரும் நேரில் சென்று விளக்கம் கேட்டு, “உங்களது மத்ஹபு சட்டத்தில் கூட நீங்கள் கூறுவது போல, இல்லை” தத்தமது பகுதியில் பிறை பார்த்துத் தான் பிறையை அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதே என்று பீஜே கூறிய போது மத்ஹப் கிதபுகளில் அப்படி இல்லை என்று அவர் மறுத்தார். உடனடியாக ஆதாரத்தைக் கையில் எடுத்துச் செல்லாததால் நாளை இதற்கான ஆதாரத்தை எடுத்து வருகிறேன் என்று கூறி விட்டு பீஜே வந்து விட்டார். மறுநாள் ஹனபி மத்ஹபின் ஏராளமான சட்டநூல்களில் இருந்து ஆதாரத்தை பிரிண்ட் எடுத்துக் கொண்டு போய் காட்டிய போது அதை அவரால் மறுக்க முடியவில்லை. “இனி வரக்கூடிய காலங்களில் தமிழகத்தில் காணப்படும் பிறையை மட்டும் தான் ஏற்றுக் கொள்வேன்” தமிழகத்திற்கு வெளியிலிருந்து வரும் அறிவிப்புகளை ஏற்க மாட்டேன்” என்ற நிலைப்பாட்டை ஒப்புக் கொண்டவர் தான் இந்த டவுன் காஜி என்பதையும் நாம் சுட்டிக் காட்டிக் கொள்கின்றோம்.
அதே நேரத்தில், கர்நாடக மாநிலம் குல்பர்காவில் பிறை பார்க்கப்பட்டதாக இந்த டவுன் காஜி அறிவிப்பு வெளியிட்ட போது, அதே நாளில் தாம்பரத்திலும் பிறை தென்பட்டது. பிறை பார்த்த நமது சகோதரர்கள் பிறை தென்பட்ட செய்தியை இந்த டவுன் காஜியிடம் தெரிவித்த போது நம் சகோதரர்கள் பார்த்த பிறையை ஏற்க மாட்டேன். குல்பர்க்கா பிறையைத் தான் ஏற்றுக் கொள்வேன் என்று தடுமாறி தறிகெட்டவர் தான் இந்த டவுன் காஜி என்பதையும் பதிவு செய்கின்றோம்.

நன்றி TNTJ.NET

அடியக்கமங்கலம் கிளை சார்பாக மாநாடு சுவர் விளம்பரம்திருவாரூர் மாவட்ட சமுதாய விழிப்புணர்வு மாநாடு நவ-28-ஆம் தேதி நடைபெற இருப்பதை தெரிவிக்கும் விதமாக அடியக்கமங்கலத்தில் சுமார் 16 இடங்களில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்..........

* பராஅத் இரவு ஒர் உண்மை விளக்கம்


கண்ணியமிக்க இரட்சகனாகிய அல்லாஹ் தன் திருமறையில்...
தமது முகத்தை அல்லாஹ்வுக்கு பணியச் செய்து,நல்லறமும்செய்பவருக்கு கூலி அவரது இறைவனிடம் உள்ளது.அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 2: 112)

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் பின்வருமாறு
எச்சரித்துள்ளார்கள்..
எனக்கு பின்னால் உருவாக்கப்பட்டவை அனைத்தும்வழிகேடாகும். வழிகேடுகள் அனைத்தும் நரகில் கொண்டுசேர்க்கும். அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்: நஸயீ 1560

மார்க்கம் என்ற பெயராலும் - நன்மைகள் என்ற பெயராலும் ஏதேதோ காரியங்களையும், வணக்கங்களையும் தம்மனம் போன போக்கில் தீர்மானித்துக் கொண்டு அவற்றை குறிப்பிட்ட சில தினத்தில் - இரவில் செய்வதை சிறந்த
அமல்களாக எண்ணி நம் சமுதாய மக்கள் செய்துவருகின்றனர். அந்த செயல்கள் யாவும் பாதுகாக்கப்பட்ட இறைவேதமாம் அல்குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளதா? அல்லது மாண்பு நிறைந்த மாநபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலில் செயல்படுத்திக் காட்டப்பட்டுள்ளதா? என்பதையெல்லாம் ஆய்வு செய்யாமல் கடமைகளாக சில காரியங்களை செய்து வருகின்றனர். அப்படிப்பட்ட காரியங்களில் ஒன்றுதான் ஷஃபான் மாதம் பதினைந்தாம் நாள் கொண்டாடப்படும் ஷபே பராத்(பராஅத் இரவு) ஆகும்.
ஒரு தினத்தை சிறப்பான தினம் அல்லது சிறப்பான இரவு என்று நாம் கூறவேண்டுமானால் அதை கண்ணியமிக்க அல்லாஹ் நமக்கருளிய வேதத்தில் கூறியிருக்கவேண்டும். அல்லது அவனது திருத்தூதர் நபி(ஸல்) அவர்கள்
இனங்காட்டியிருக்க வேண்டும்.

அல்லாஹ் தன் திருமறையில்...
இரவை நீங்கள் அமைதி பெறுவதற்காகவும், பகலைவெளிச்சமுடையதாகவும் அவனே அமைத்தான். செவிமடுக்கும்
சமுதாயத்திற்கு இதில் சான்றுகள் உள்ளன.
(அல்குர்ஆன் 10: 67)

பகலையும், இரவையும் படைத்தவன் அல்லாஹ் மட்டுமே ஆவான். அந்த படைப்பாளனுக்குத்தான் தெரியும் எந்த தினம் சிறந்தது, எந்த இரவு சிறந்தது என்று. அப்படிப்பட்ட தினங்களையும், இரவுகளையும் வல்ல நாயன் நமக்கு
அறிவித்துக் கொடுத்துள்ளான். அல்ஹம்துலில்லாஹ்! நபி(ஸல்) அவர்களும் செயல்படுத்திக் காட்டியுள்ளார்கள்.
ஜும்ஆ தினத்தை சிறந்த தினமாக அல்லாஹஅறிவித்துக்கொடுத்துள்ளான்!
 ஹஜ்ஜுடைய தினங்களை கண்ணியமானதென அல்லாஹ்
கூறுகின்றான்!
 இரு பெருநாட்களுடைய தினங்களை புனித நாட்களாக
நபி(ஸல்) கூறுகின்றார்கள்!
 ரமலான் மாதம் பற்றி அல்குர்ஆனில் விவரித்துக்
கூறப்பட்டுள்ளது!
 லைலத்துல் கத்ர் இரவை மகத்தான இரவாக
அல்லாஹ்வும் அவனது தூதர் நபி(ஸல்) அவர்களும்
கூறுகின்றார்கள்.
 குர்ஆன் அருளப்பட்ட மாதம் எது என்பது பற்றி
அல்குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளது!
 ஷவ்வால் மாத ஆறு நோன்பு பற்றி மார்க்கம் சிலாகித்துச்
சொல்கிறது.
 ஆஷ_ரா தினம் பற்றி அறிவித்துக் கொடுக்கப்பட்டுள்ளது!
 போர் செய்யக்கூடாத புனிதமாதங்கள் எவை என்பது
வரையறுத்துச் சொல்லப்பட்டிருக்கின்றது!
 தவிர, ஒவ்வொரு நாளின் கடைசி இரவில் முதல்
வானத்திற்கு அல்லாஹ் வந்து நன்மாராயங்கள் கூறுவதாக
நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்!

மேற்கூறப்பட்டுள்ள தினங்களில் எந்தெந்த மாதிரியான அமல்களை இஸ்லாமியர்கள் செய்யவேண்டும்? அப்படி செய்வதால் எப்படிப்பட்ட நன்மைகள் அல்லாஹ்வின் புறத்திலிருந்து கிடைக்கும் என்பதை எல்லாம் இஸ்லாம்
தெளிவாக எடுத்துச்சொல்லியுள்ளது.
இப்படி அடையாளங் காட்டப்பட்டவைகள் எல்லாம் அல்லாஹ்வின் சின்னங்களாக, மார்க்க அடையாளங்களாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அவைகளை கண்ணியப்படுத்துவது அல்லாஹ்வை கண்ணியப்படுத்துபவையாக அமையும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அப்படி அல்லாஹ்வினாலும், அவனது தூதர்(ஸல்) அவர்களாலும் சிறப்புக்குரியது என்று அடையாளங்காட்டப்பட்டுள்ள தினங்களிலும், இரவுகளிலும் இந்த பாரஅத் இரவு உள்ளதா? அப்படி ஏதேனும் அறிவித்துக்
கொடுக்கப்பட்டுள்ளதா? அதற்கென்று விசேஷ அமல்கள் செய்யவேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளதா? என்று ஆய்வுசெய்வோமேயானால், அல்லாஹ்வின் வேதத்திலும் இல்லை!அண்ணலார்(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலும் இல்லை என்ற முடிவுக்குத்தான் வரமுடிகிறது.
இருப்பினும் பராஅத் இரவுக்கு ஆதாரங்கள் இதுவென்று சிலர் எடுத்து வைக்கும் அனைத்து ஆதாரங்களும் இஸ்லாம் கூறும் அளவுகோல்களின்படி சரியான ஆதாரங்களாக இல்லை.

முதல் ஆதாரம்!

தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக! இதை பாக்கியம்நிறைந்த இரவில் நாம் அருளினோம்.நாம் எச்சரிக்கைசெய்வோராவோம்.அதில் தான் உறுதியான காரியங்கள் யாவும்பிரிக்கப்படுகின்றன. (அல்குர்ஆன் 44:2-4)

திருக்குர்ஆன் இறக்கி அருளப்பட்ட இரவைப் பற்றி இவ்வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான்.அதை பாக்கியமுள்ள இரவு என்றும் அல்லாஹ் குறிப்பிடுகின்றான். அந்த பாக்கியமுள்ள இரவு,பராஅத் இரவு தான் என்பது இவர்களின் வாதம்.திருக்குர்ஆனை பொறுத்தமட்டில் ஒரு வசனத்தின்
விளக்கத்தை இன்னொரு வசனம் அல்லது ஹதீஸ் விளக்கும்.அந்த அடிப்படையில் இந்த வசனத்தில் உள்ளபாக்கியமுள்ள இரவு எது?என்பதை தெளிவுபடுத்தும் வகையில் பின்வரும் வசனங்கள் அமைந்துள்ளன.

மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம்.
(அல்குர்ஆன் 97:1)

அது லைலத்துல் கத்ர் என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.அந்த இரவு ரமலான் மாதத்தில் தான் உள்ளது என்று பின்வரும் வசனம் விளக்குகிறது.

இந்தக் குர்ஆன் ரமழான் மாதத்தில் தான் அருளப்பட்டது.(அது)மனிதர்களுக்கு நேர்வழி காட்டும்.நேர்வழியைத்தெளிவாகக் கூறும்.(பொய்யை விட்டு உண்மையை)பிரித்துக்காட்டும்.உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். (அல்குர்ஆன் 2:185)

இந்த மூன்று வசனங்களிலிருந்து பாக்கியமிக்க இரவு என்பது ரமழான் மாதத்தில் உள்ள லைலத்துல் கத்ரைக் குறிக்கிறதே தவிர ஷஃபான் மாதத்தின் 15 ஆம் இரவு அல்ல என்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது.எனவே பராஅத் இரவுக்கும் இவர்கள் காட்டும் வசனத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை.

இரண்டாவது ஆதாரம்!

ஷஃபான் மாதத்தில் பாதி இரவு வந்து விட்டால் அதில் நீங்கள் நின்று வணங்குங்கள்.அந்தப் பகலில் நோன்பு பிடியுங்கள்.அந்த இரவில் இறைவன் வானத்திலிருந்து இறங்கி வந்து பாவமன்னிப்பு தேடுவோர் உண்டா? நான் அவர்களின்பாவங்களை மன்னிக்கிறேன். சோதனைக்கு ஆளானோர்
உண்டா? நான் அவர்களின் துன்பங்களை போக்குகிறேன்.என்னிடம் கேட்கக் கூடியவர் உண்டா? நான் அவர்களுக்குஉணவளிக்கிறேன் என்று காலை வரை கூறிக்கொண்டேயிருக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் அலீ (ரலி) நூல் :இப்னுமாஜா 1378
இது ஆதாரப்பூர்வமான ஹதீஸல்ல.இதன் அறிவிப்பாளர் தொடரில் 'இப்னு அபீ ஸப்ரா" என்பவர் இடம் பெறுகிறார்.இவர் பலவீனமானவர் என்று இமாம் அஹ்மதும்,இப்னுல் மயீனும் கூறியுள்ளார்கள்.

மூன்றாவது ஆதாரம்!

அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் ஒரு நாள் இரவு படுக்கையில் நபி(ஸல்)அவர்களை காணாமல் வெளியே தேடிவந்தார்கள்.அப்போது அவர்கள் பகீஹ் என்ற இடத்தில் நின்றுகொண்டிருந்தார்கள்.ஷஃபான் மாதம் 15ஆம் இரவில் அல்லாஹ்முதல் வானத்திற்கு இறங்கி கல்ப் கோத்திரத்தாரின் ஆட்டுரோமத்தின் எண்ணிக்கை அளவுக்கு (பாவங்களை)மன்னிக்கிறான் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:ஆயிஷா (ரலி) நூல் : திர்மிதி 670
இந்த ஹதீஸும் ஆதாரப்பூர்வமானது அல்ல என்பதே உண்மை.இதில் அறிவிப்பாளர் தொடரில் வரும் யஹ்யா பின் அபீ கஸீர் என்பவர் 'உர்வா" விடமிருந்து கேட்கவில்லை. அதே போன்று ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் என்பவர் யஹ்யாபின் அபீகஸீரிடமிருந்து செவியேற்கவில்லை என்று இமாம் புகாரி கூறிய கருத்தை பதிவு செய்து இது பலவீனமான செய்தி என்பதை இந்த ஹதீஸைப் பதிவு செய்த திர்மிதி இமாம் அவர்களே தெளிவாக சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

நான்காவது ஆதாரம்!

நபி(ஸல்) அவர்கள் ஷஃபான் மாதத்தில் அதிக நோன்புநோற்பதை போன்று வேறு (எந்த மாதத்திலும்) நோற்பவராகஇருக்கவில்லை.ஏனெனில் (வரும்)வருடத்தில் மரணிக்கக்கூடியவர்களின் தவணைகள் அம்மாதத்திலே மாற்றப்பட்டு விடும் என்பதனால்தான். அறிவிப்பவர்: அதாஹ் பின் யஸார் நூல்: முஸன்னப் இப்னு அபீஷைபா 9764,ஃபலாயிலுர் ரமலான் - இப்னு அபித்துன்யா

இத்தொடரில் வரும் அதாஹ் பின் யஸார் என்பவர் நபி (ஸல்)அவர்கள் காலத்தில் வாழாதவர்.நபி(ஸல்) அவர்களுக்கும் இவருக்கும் மத்தியில் அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார். இச்செய்தி முர்ஸல் என்ற தரத்தில் உள்ள பலவீனமான செய்தியாகும்.

ஐந்தாவது ஆதாரம்!

ரமலான் மாதம் நடுப்பகுதி 15 ஆம் இரவிலும் ஷஃபான் மாதம்நடுப்பகுதி 15 ஆம் இரவிலும் சூரத்துல் இஹ்லாஸ் எனும்சூராவை 1000 தடவை ஓதி யார் 100 ரக்அத் தொழுகின்றாரோஅவருக்கு சொர்க்கத்தை கொண்டு நன்மாராயம் சொல்லப்படும் வரை அவர் மரணிக்கமாட்டார்.
அறிவிப்பவர் : முஹம்மத் பின் அலீ நூல் : ஃபலாயிலுர் ரமலான்
- இப்னு அபித்துன்யா 9
இத்தொடரில் வரும் முஹம்மத் பின் அலீ என்பவர் நபி ஸல் அவர்கள் காலத்தில் வாழாதவர்.நபி ஸல் அவர்களுக்கும் இவருக்கும் மத்தியில் அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார். இச்செய்தி முர்ஸல் என்ற தரத்தில் உள்ள பலவீனமான செய்தியாகும். மேலும் அன்றைய தினம் மஃரிப் தொழுகைக்குப் பிறகு ஹஜ்ரத் அவர்கள் மூன்று யாஸீன் ஓதுவார்கள். முதல் யாஸீன்
பாவமன்னிப்பிற்காகவும், இரண்டாம் யாஸீன் கப்ராளிகளுக்கு ஹதியாவாகவும், ஆயுள் நீடிப்பிற்காகவும், மூன்றாம் யாஸீன் பரக்கத் கிடைக்க வேண்டியும் ஆக மொத்தம் மூன்று யாஸீன் ஓதுவார்கள்.
அந்நாளில் 100 ரக்அத்கள் கொண்ட விசேஷத் தொழுகையும் நடைபெறும். வேறு சில ஊர்களில் இதை விட அதிக ரக்அத்கள் கொண்ட தொழுகையும் உண்டு.
இப்படியாக பராஅத் இரவு அன்று வணக்கம் என்ற பெயரில் மேற்கூறப்பட்ட ஆதாரத்தின் அடிப்படையில் நம் சமுதாய மக்கள் சில அமல்களை செய்து வருவதை பார்க்கின்றோம். ஆனால், வல்ல அல்லாஹ் வணக்கங்களை இலகுவானதாகவும் வழமையாக செயல்படுத்தும் விதத்திலும் மனிதர்களுக்கு
அருட்செய்துள்ளான். அவற்றின் நோக்கங்களையும், கூலிகளையும் உயர்ந்த தரத்தில் மனிதர்களுக்காக அமைத்துள்ளான். ஆனால் இந்த மனிதர்களோ வணக்கங்களை கடினமானதாகவும் என்றோ ஒருநாள் மட்டும் மாய்த்துக் கொள்ளும் விதமாகவும் கண்ணியமிக்க அல்லாஹ்வின் பெயராலேயே அரங்கேற்றுகின்றனர். இதுதான் படைத்த
இறைவனுக்கு நன்றி செலுத்தும் முறையா?! என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறோம்!
மேலும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்...
ஷஃபானின் மத்திய நாள் வந்துவிட்டால் ரமலான் வரும் வரைநோன்பு வைக்காதீர்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி)
நூல்: அஹ்மத் 9330
பெருமானாரின் கட்டளை இவ்வாறிருக்க அதற்குமாறாக இவர்கள் ஷஃபானின் மத்திய நாளான பிறை 15ல் நோன்புநோற்க வேண்டுமாறு வலியுறுத்துகின்றனர். இதுஇறைத்தூதரை பின்பற்றும் முறையாகுமா?!வல்ல இறைவன் தன் திருமறையில்...    
'இந்த தூதர் (முஹம்மத்) உங்களுக்கு சொல்பவராகத் திகழவும், நீங்கள் ஏனைய மக்களுக்கு எடுத்துச் சொல்வோராகத் திகழவும் அவன் உங்களைத்
தேர்ந்தெடுத்தான். உங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கமானஇம்மார்க்கத்தில் அவன் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும்
ஏற்படுத்தவில்லை. இதற்கு முன்னரும் இதிலும் அவனேஉங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான்".
(அல்குர்ஆன் 22:78)
மார்க்கத்தில் புதிதாக நுழைந்தவைகள் பற்றி நபி(ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
“செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடையவேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது(ஸல்)அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது(மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும்.புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும்
பித்அத்துகளாகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும்.ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்”
அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்: நஸயீ 1560
பராஅத் இரவுக்கு இவர்கள் காட்டும் ஆதாரங்கள் ஒன்று கூடஆதாரப்பூர்வமானவை அல்ல. எனவே இவர்கள் ஒருபுதுமையான காரியத்தை உருவாக்கியுள்ளார்கள்.எனவே அல்லாஹ்வுக்கு பயந்து அவற்றை தவிர்த்துக் கொள்ள வேண்டும். வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் அவனது உண்மையான மார்க்கத்தின் வழி நடக்க நல்லருள்செய்வானாக!