TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Wednesday, September 29, 2010

அடியற்ககை கிளை பொதுக்குழுதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளையில் கடந்த 26/09/2010 ஞாயிற்றுக் கிழமை மாலை 3.30 மணிக்கு தவ்ஹீத் மர்கசில் ரமலான் மாதத்தில் நடத்தப்பட்ட போட்டிகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பொதக்குடி இமாம் சகோ. அப்துல் ஹமீது மஹ்லரி அவர்கள் ரமளானுக்கு பின் தொடரவேண்டிய இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அதை தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு மாவட்ட துணை செயலாளர் சகோ. இஸ்மத் பாட்சா அவர்களின் முன்னிலையில் கிளை பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்

அடியற்ககை கிளை பொதுக்குழு


Thursday, September 23, 2010

பாபர் மசூதி தீர்ப்பு: வன்முறைக்கு பதில் போராட்டம் : தவ்ஹித் ஜமாத் துணைத் தலைவர் பேட்டி


ராமநாதபுரம் : "அயோத்தி தீர்ப்பை வைத்து முஸ்லிம்கள் வன்முறையில் ஈடுபடமாட்டார்கள்,' என, தமிழக தவ்ஹித் ஜமாத் மாநில துணைத்தலைவர் ரஹ்மத்துல்லா தெரிவித்தார்.

ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது: முஸ்லிம்களின் பாரம்பரிய பாபர் மசூதி, சிலரால் இடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கின் தீர்ப்பு, நாளை அறிவிக்கப்பட உள்ளது. இதில் பாதகமான தீர்ப்பு வந்தால், முஸ்லிம்கள் வன்முறையில் ஈடுபடமாட்டார்கள். இருப்பின் எங்களின் எதிர்ப்புகளை நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் மூலம் தெரிவிப்போம்.நீதியின் படி மேல்முறையீடு செய்வோம். இதற்கிடையில் தீர்ப்பு குறித்து அச்சுறுத்தலை வெளியிடும், வி.எச்.பி., உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ராமநாதபுரம், வேலூர், திருவண்ணாமலை, தஞ்சை, நெல்லை மாவட்டங்களில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக டி.ஜி.பி.,யிடம் மனு அளித்துள்ளோம், என்றார். மாவட்ட தலைவர் சைபுல்லா, மாவட்ட செயலாளர் ஆரிப்கான், பொருளாளர் மாலிக் உடனிருந்தனர்.

பாபர் மஸ்ஜித் தீர்ப்பின் போது அமைதி காப்போம்! TNTJ வெளியிட்டுள்ள அறிக்கை!


பாபரி மஸ்ஜித் நிலம் உரிமை குறித்து வருகின்ற 24.09.2010(வெள்ளி) அன்று தீர்ப்பு வெளிவரவிருப்பது அறிந்ததே. இது குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முஸ்லிம் சமுதாயத்திற்கும், தனது கட்டுப்பாட்டில் உள்ள 600 பள்ளிவாசல்களுக்கும் பின் வரும் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
கடந்த 1949ஆம் ஆண்டு வரை பாபர் மஸ்ஜிதில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வந்தனர். அதாவது உரிமை மற்றும் அனுபவம் ஆகிய இரு அடிப்படைகளில் அந்த இடம் முஸ்லிம்களுக்குத்தான் சொந்தம் என்று உறுதியாகிறது.
இந்திய நீதி மன்றங்களில் சிவில் வழக்குகளில் இவ்விரண்டையும் அடிப்படையாகக் கொண்டுதான் தீர்ப்புகள் அளிக்கப்படுகின்றன. இதன்படி அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பும் முஸ்லிம்களுக்கு அனுகூலமாகவே அமைய உள்ளது.
அவ்வாறு தீர்ப்பு அநுகூலமாக அமையும் பட்சத்தில் முஸ்லிம்கள் தங்கள் மகிழ்ச்சியை பகிரங்கமாக வெளிப்படுத்தாமல் அடக்கமும் அமைதியும் காத்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Tuesday, September 21, 2010

ரமளான் சொன்ன சேதி என்ன?


மாசு மருவற்ற தூய இரட்சகனாகிய அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்...
'நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் இறைவனை அஞ்சுவதற்காக உங்கள் முன் சென்றோர் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போல் உங்கள் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது'(அல்குர்ஆன்2:183)


Tuesday, September 14, 2010

நோன்பு பெருநாள் திடல் தொழுகை

அடியர்கையில் ருபாய் 60,050 துக்கு பித்ரா விநியோகம்