FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Tuesday, September 21, 2010

ரமளான் சொன்ன சேதி என்ன?

Tuesday, September 21, 2010
7:20 PM

மாசு மருவற்ற தூய இரட்சகனாகிய அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்...
'நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் இறைவனை அஞ்சுவதற்காக உங்கள் முன் சென்றோர் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போல் உங்கள் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது'(அல்குர்ஆன்2:183)


அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்....
'ரமளான் மாதம் வந்துவிட்டால் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப் படுகின்றார்கள்' அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரீ 1899
கண்ணியமிக்க மாதம் விடை பெற்றுவிட்டது. கருணையாளனாகிய அல்லாஹ்வின் அருட்கொடைகளை பெற்றுக் கொண்டோம். இரவும் பகலும் வணக்கங்களால் பள்ளிகள் அலங்காரமாய் இருந்தன. ஐவேளை தொழுகைகளை பேணாதவர்களெல்லாம் வந்திருந்து தினமும் தொழுகைகளை பேணக்கூடியவர்களுக்கு ரமளானில் பள்ளியில் நெருக்கடியை ஏற்படுத்தி இருந்ததை காண முடிந்தது.

புதுப்புது முகங்கள்! ஆர்வத்தோடு அமல்கள்! அகமும், புறமும் அமைதியில் லயித்து கிடந்த மனிதர்கள்! எந்நேரமும் பள்ளிகளில் தித்திக்கும் திருமறையை ஓதுபவர்களின் ரீங்காரம். இடைவிடாத தொடர் பயான்கள்! நன்மைகளை ஒருவருக் கொருவர் எத்திவைத்தல்! தர்ம சிந்தனைகள்! நோன்பு திறப்பு சேவைகள்! இரவுத் தொழுகைகள்! ஸஹர் நேர காரியங்கள்! லைலத்துல் கத்ர் இரவு! ஃபித்ராக்கள்! என்றெல்லாம் அமல்களின் அலங்காரத்தால் அழகிய மாதம் நிறைவு பெற்றுவிட்டது. ஸுப்ஹானல்லாஹ்!

  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: ரமளான் சொன்ன சேதி என்ன? Rating: 5 Reviewed By: AYM-TNTJ
Scroll to Top