FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Wednesday, March 16, 2011

விதையில்லாத சீத்தா பழம் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

Wednesday, March 16, 2011
7:39 AM
Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news updateவாஷிங்டன் : திராட்சை, சீத்தா உள்ளிட்ட விதையுள்ள பழங்கள் சாப்பிடுவதற்கு ச
ற்று சிரமமாக இருக்கும். விதைகளை நீக்குவதற்கு குழந்தைகள் சங்கடப்படுவதுண்டு. இந்நிலையில், விதையில்லாத சீத்தா பழத்தை விஞ்ஞானிகள் விளைவித்துள்ளனர். திராட்சை உள்ளிட்ட சில பழங்கள் நவீன கண்டுபிடிப்பில் விதையில்லாமல் உருவாக்கப்படுகின்றன. அந்த வரிசையில் சீத்தா பழமும் இடம்பெறப் போகிறது. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் விதையில்லாத சீத்தா பழத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.

அதாவது மலரில் உள்ள Ôஓவுல்Õ என்ற ஜீன், பழத்தில் விதை உருவாவதற்கு காரணமாக உள்ளது ஆய்வில் தெரியவந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஜீனை மரபணு மாற்றம் செய்து விதையில்லாத பழத்தை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளனர். கடந்த 1990ல் அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த யுசி டேவிஸ் உயிரியல் பேராசிரியர் சார்லஸ் கஸர், ஆர்பிடோப்சிஸ் என்ற தாவரத்தில் ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டார்.

மலரில் ஒரு குறிப்பிட்ட ஜீன் குறைபாடு இருந்தால் பழமோ விதையோ உருவாகாது என கண்டுபிடித்தார். இப்போதைய ஆய்வுக்கும் இதற்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இந்த புதிய கண்டுபிடிப்பு மூலம் மேலும் பல பழங்களை விதையில்லாமல் தயாரிப்பதற்கான ஆராய்ச்சிக்கு வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
thanks to-dinakaran
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: விதையில்லாத சீத்தா பழம் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு Rating: 5 Reviewed By: AYM-TNTJ
Scroll to Top