FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Wednesday, October 26, 2011

உலகிலேயே விலை குறைந்த Tablet இப்போது இந்தியாவில் அறிமுகம்

Wednesday, October 26, 2011
7:35 PM


Amazonன் Kindle fire எனும் Tablet தான் குறைந்த விலை Tablet ஆக் இருந்தது.  இதன் விலை 200 டாலர்கள் [இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் 9800 ஆகும்].   தற்போது Aakash எனும் Tablet அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. இதன் விலை சந்தையில் 60 டாலர்கள் [இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் 2900 ஆகும்].  இந்திய அரசாங்கம் மாணவர்களுக்கு மானிய விலையில் 35 டாலர்களுக்கு [இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் 1700க்கு] தருகிறது.   அறிமுக காலத்தில் ஒரு லட்சம் Tabletஐ இலவசமாக வழங்குகிறது.  அறிமுக நாளன்று 500 Tablet வழங்கப்பட்டன.  தகவல் தொடர்புத் துறை அமைச்சர் திரு. கபில் சிபல் இந்த Tabletஐ அறிமுகம் செய்து வைத்தார்.  பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த இந்த தொழில்நுட்பம் தற்பொழுது ஏழைகளும் பயன்படுத்த முடியும் என தெரிவித்தார்.  இந்த Tablet இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகிறது. இந்த Aakash Tabletன் வேகம் குறைவாக உள்ளது என சிலர் தெரிவிக்கின்றனர்.
Aakash Tabletன் விவரம்
- Android 2.2
- 7inch தொடு திறை
- 350 கிராம் எடை
- 32 GB Internal Memory
- 256 MB RAM
- இரண்டு USB Port
- 2100 mAh battery
- இரண்டு அல்லது மூன்று மணி நேரம் பயன்படுத்த முடியும்.
வட இந்தியாவில் இந்த Tabletஐ 118 degree Fahrenheitல் வைத்து பரிசோதித்து பார்க்கப்பட்டது. Datawind என்ற British நிறுவனமும் இந்திய தொழில்நுட்ப நிறுவனமான  IITயும் இணைந்து இந்த Tabletஐ உருவாக்கியுள்ளனர். இன்னும் சில மாதங்களில் Aakash Tablet சந்தைக்கு விற்பனைக்கு வருகின்றது.
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: உலகிலேயே விலை குறைந்த Tablet இப்போது இந்தியாவில் அறிமுகம் Rating: 5 Reviewed By: AYM-TNTJ
Scroll to Top