கொள்கைச்
சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். எனது மின்னஞ்சல் முகவரியில் இருந்து
அனுப்பப்பட்டதாகவும், எனது மின்னஞ்சல் முகவரிக்கு வந்ததாகவும் சில ஆபாச
செட்டப் மெயில்களைச் சிலர் பரப்பி வருவது என் கவனத்துக்கு வந்துள்ளது.
என்னுடைய
மின்னஞ்சல் முகவரி இது வரை நான்கு முறை களவாடப்பட்டதைப் பற்றி அவ்வப்போது
எனது தளத்தில் நான் தெரிவித்துள்ளேன். எனது முகவரியில் இருந்து பல
முகவரிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டதை வெப் மாஸ்டர் துணையுடன் நான்
கண்டுபிடித்துள்ளேன். இது போல் பரப்பக் கூடியவர்கள் அதன் உண்மைத் தன்மையை
நிரூபிக்கக் கடமைப்பட்டுள்ளார்கள். அவர்கள் நேருக்கு நேராக வந்து என்
முன்னிலையில் அதை நிரூபித்துக் காட்டுமாறு பகிரங்க அறைகூவல் விடுகிறேன்.
என்னைப் பற்றி அவதூறு பரப்புவோர் குறித்து சைபர் கிரைம் மூலம் சட்ட
நடவடிக்கை எடுக்கவுள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது கணிணியிலும் நெட் ஒர்க வழியாக நுழைந்து பல ஃபைலகளை அந்தக் கயவர்கள் அழித்துள்ளனர். அதையும் வெப்மாஸ்டர் துணையுடன் கண்டு பிடித்துள்ளேன். இதற்காகவும் சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது கணிணியிலும் நெட் ஒர்க வழியாக நுழைந்து பல ஃபைலகளை அந்தக் கயவர்கள் அழித்துள்ளனர். அதையும் வெப்மாஸ்டர் துணையுடன் கண்டு பிடித்துள்ளேன். இதற்காகவும் சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்
குறிப்பு:-
பொது
வாழ்வில் உள்ள யாருக்கு எதிராக எதைப் பரப்பினாலும் அதைத் தக்க முறையில்
நிரூபித்து சம்மந்தப்பட்டவர் குற்றம் செய்திருந்தால் அவர் மீது தக்க
நடவடிக்கை எடுப்பதற்காகவே பரப்ப வேண்டும். அதிலும் குறிப்பாக தமிழ்நாடு
தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொருத்தவரை அதன் நிர்வாகிகள் மீதான பாரதூரமான
குற்றச்சாட்டுகளில் தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கும் ஜமாஅத்தாக உள்ளது.
எனவே எனக்கு எதிராக அவதூறு பரப்புவோர் அதைத் தக்க முறையில் நிரூபணம்
செய்யும் பொறுப்பையும் ஏற்க வேண்டும். அல்லது தங்களின் அவதூறுக்காக பகிரங்க
மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறேன்.