FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Thursday, August 5, 2010

சுமையா அறக்கட்டளை?

Thursday, August 5, 2010
9:29 PM

அடியக்கமங்கலம் சுமையா டிரஸ்ட் போலி தவ்ஹீத் முகத்திரை கிழிந்தது, Video-வை பார்க்க Click here



அடியக்கமங்கலம் சுமையா அறக்கட்டளையில் இரவு தொழுகையில் இமாம் அவர்கள் கையில் குர் ஆனை வைத்து பார்த்து ஒதுகின்றார்.இதை தவறு என்று நம் ஜமாஅத் சகோதரர்கள் பலமுறை எடுத்து சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை.இதற்கு ஆதாரம் கேட்டாள் "அந்த இமாம் சொன்னார் இந்த இமாம் சொன்னார்" என்று சமாளிக்கின்றனர்



ஆனால் இரவு தொழுகையின் போது அந்த பள்ளியின் பெண்கள் பகுதியில் இருந்து இந்த கேள்வி கேட்கப்பட்டது.அதற்கு பேச்சாளர் அவர்கள் தாராளமாக ஓதாலாம் என்று கூறிவிட்டார்.

பெண்கள் மீண்டும் "அவ்வாறு ஓதினால் சுன்னத் விடபடுகின்றதே" என்று கூறியவுடன் பேச்சாளர் அவர்கள் சமாளிக்க ஆரம்பித்துவிட்டார்.

அவர் கூறிய சமையான பதில்...

(1)இரண்டு கை இல்லாதவர்கள் சுன்னத்தை விட்டு விட்டு தான் தொழுகிறார்.


(2)நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சஹாபி பெண்கள் தங்களது குழந்தைகளை தூக்கி மடியில் வைத்து தான் தொழுதார்கள்.


(3நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒட்டகத்தில் பயணம் செய்யும் போது ஒரு கையில் கடிவாளத்தை பிடித்து கொண்டு தொழுதுள்ளார்கள்.

என்று உலகில் யாரும் கூறிராத ஒரு பதிலை கொடுத்துள்ளார் .

நாம் கேட்ட கேள்வி என்ன என்பதை முற்றிலும் மறந்து தன்னுடை மடமையை வெளிபடுத்தி உள்ளார் இந்த பேச்சாளர் .

அவர் சொன்ன பதிலை சற்று சிந்தித்தால் அவர் சொன்னது தவறு என்பதை எளிதாக நாம் அறிந்து கொள்ளலாம்.

முதல் கேள்வி-கை இல்லாதவர் அவ்வாறு தான் தொழ முடியும் அவருக்கு கை இருந்தால் தான் அவருக்கு அது சுன்னத்தை விட்டதாக ஆகுமே தவிர கை இல்லாத காரணத்தால் அவருக்கு அதில் எந்த ஒரு தவறும் ஆகாது.

இராண்டாம் கேள்வி-சஹாபி பெண்கள் சிலர்  தங்களது குழந்தைகளை தூக்கி மடியில் வைத்து தொழுது உள்ளனர்.இது அவர்களுக்கு கொடுக்க பட்ட சலுகையாகும்.ஏன் என்றால் அவர்கள் வீட்டை சுத்தபடுத்த வேண்டும், கணவனை கவனிக்க வேண்டும்,தன் குழந்தையை கவனிக்க வேணடும் இந்த இக்கட்டான சூழ் நிலையில் தொழுவது அவர்களுக்கு மிக சிரமமானது.ஆகையால் நபி (ஸல்) இந்த செயலை தடுக்கவில்லை.

மூன்றாம் கேள்வி-நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒட்டகத்தில் பயணம் செய்யும் போது ஒரு கையில் கடிவாளத்தை பிடித்து கொண்டு தொழுதுள்ளார்கள் என்பது உண்மை தான்.

அவர்கள் பயணத்தில் உள்ளார்கள்.பயணத்தின் போது தொழுவது அந்த காலத்தில் மிகவும் சிரமமாக தான் இருந்தது.இந்த காலகட்டத்தில் வேண்டும் ஆனால் எளிதாக இருக்கலாம்.ஆனால் அன்றைய காலத்தில் உளூ செய்ய தண்ணிர் கிடைக்காது,தொழுவதற்க்கு இடம் கிடைக்காது.ஆகையால் அவர்கள்  ஒட்டகத்தின் மீது அமர்ந்த படியே தொழுதுள்ளார்கள்.தனது கடிவாளத்தை விட்டு விட்டால் ஒட்டகம் வழிதவறி போக நெறிடும்.

பயணத்தின் போது ஃபர்ள் 2 ரக்காயத்துகள் தொழுதால் போதும் என்று  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் ஆகையால் நாம் இதை ஆதாரமாக கொண்டு இனி ஃபர்ளை 2 ஆக தொழுதால் போதும் என்று சொல்ல முடியுமா.

இவர்கள் கூறிய பதில் சிறிதாவது நாம் கேட்ட கேள்விக்கு சம்மந்தம் இருக்கிறதா.

இங்கு தொழுகை வைக்க கூடிய இமாமுக்கு கை இல்லையா...


அல்லது குழந்தையை மடியில் வைத்து தொழுகிறாரா...


அல்லது ஒட்டகத்தின் மேல் அமர்ந்து தொழுகை நடத்துகிறாரா...

இதில் எதையும் அவர் செய்யவில்லை.அவர்கள் கூறிய மூன்று பதில்களுமே சூழ்நிலையை,நிர்பந்தத்தை தருகின்றது.

ஆனால் இவருக்கு எந்த ஒரு சூழ்நிலையும் ஏற்படவில்லை.இவ்வாறு தொழ கூடாது என்று நன்கு அறிந்தும் இவ்வாறு செய்து வருகின்றனர்.தெரிந்ததை ஓதி தொழுகையை முடிக்காமல் இது போல் காரியத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தவரு என்று பேச்சாளருக்கு நன்றாகவே தெரியும் ஆனால் தவறு என்று கூறிவிட்டால் பயாண் பேசவிடமாட்டார்கள்,அடித்து துறத்திவிடுவார்கள் என்று அஞ்சி சமாளித்துள்ளார் இந்த மேய்பாளர்...

இவர்களின் உண்மையான கொள்கை சொத்தை சேர்த்து தங்களது பெயரில் வைத்து கொள்வது தான்.ஆனால் வெளியில் ஏகத்துவ வாதிகள் போல் காட்டி கொள்வார்கள்.நாங்கள் தான் தவ்ஹீத் என்று பெருமை அடிப்பார்கள்.

இவர்கள் போலி தவ்ஹீத்வாதிகள்...இவர்களை நம்பி ஏமாற வேண்டாம்...




தொழுகையில் குர்ஆனை கையில் வைத்து பார்த்து ஒதாலாமா?



"நாங்களும் தவ்ஹீத் ஜமாஅத் தான்" என்று மக்களை ஏமாற்றி வசூல் வேட்டை செய்துவரும் சிலர் இது போல் தங்களது ஜமாத் தொழுகையில் கையில் குர்ஆனை வைத்து ஒதுகின்றனர்.பிறகு ருகூவு செய்யும் போது குர்ஆனை அருகில் வைத்து கொள்ளுகின்றனர்.மீண்டும் அடுத்த ரக்கயத்துக்கு எழுந்து குர்ஆனை விரித்து பக்கங்களை பிரட்டி பார்த்து ஒதி வருகின்றனர்.இவ்வளவு செயல்களையும் தனது தொழுகையில் செய்து வருகின்றனர்.

ஆனால் இறைவன் தனது திருமறையில் கூறுகிறான்...

"ஆகவே குர்ஆனில் உங்களுக்கு இயன்றதை ஒதுங்கள்".
(வசன சுருக்கம்)
திரு குர்ஆன்-73:20

நபி (ஸல்) கூறினார்கள்...

"நபி (ஸல்) அவர்கள் தமது வலது கையை இடது முன் கைஇடது மணிக்கட்டுஇடது குடங்கை ஆகியவற்றின் மீது வைத்தார்கள்".

அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)

நூல்: நஸயீ 879



 "நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் நின்ற போது... தங்களது வலக்கையால் இடக்கையைப் பிடித்திருந்ததை நான் பார்த்தேன்".
1.                        

2.             அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)
3.            நூல்: அபூதாவூத் 624

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டி தறாத இந்த வழிமுறை இவர்கள் செய்து வருகின்றனர்.இவர்கள் இவ்வாரு தொழுவதற்க்கு காரணம் பெருமை தான் .

இவருக்கு பின்னால் தொழுவும் ஆண்களுக்கும்,பெண்களுக்கும் கையில் வைத்து ஒதுவது தெரியாமல் "ஆஹா என்ன ஒரு ராகம்" என்றும்"குர்ஆனை அப்படியே ஒதுக்கின்றார்" என்றும் வசனம் பாடி வருகின்றனர்.ஆனால் மக்களுக்கு இந்த விஷயம் தெரியவந்தால் "தூ" என்று துப்புவார்களே தவிர அறிஞர் என்று புகழமாட்டார்கள்.

தங்களை அறிஞர் என்று சொல்ல வக்கு இல்லாதவர்கள் இன்று நானும் அறிஞர் என்று பெருமை அடித்து கொள்கின்றனர்.

நீங்கள் உண்மையில் அறிஞர் தான் ஆனால் மார்க்கம் அறியாத அறிவுகெட்ட அறிஞர்...

யார் தவ்ஹீத் ஜமாஅத்?

                  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திலிருந்து ஒழுங்கு நடவடிக்கையில் நீக்கப்பட்ட சுமையா டிரஸ்ட் நிர்வாகிகள் தங்களை பொதுமக்களிடம் அறிமுகப்படுத்தும் போதும் பொருளாதாரத்தை திரட்டும் போதும் தவ்ஹீத் ஜமாஅத் என்று கூறி வருகின்றனர்.  டிரஸ்ட் பெரியவர் அமான் இணையதளத்திற்கு ஹஜ் பெருநாள் வாழ்த்து தெரிவிக்கையில் சுமையா  டரஸ்ட் தவ்ஹீத் ஜமாஅத்(?) என்று கூறியிருக்கிறார். .

                                
தவ்ஹீத் ஜமாஅத் என்று தன்னுடைய பள்ளியை பதிவு செய்திருக்கிறாரா என்றால் இல்லை சுமையா டிரஸ்ட் என்று வெளியில் போர்டை போட்டுக்கொண்டு தவ்ஹீத் ஜமாஅத் என்று அறிமுகப்படுத்தி வருகிறார்இவர்கள் சொல்லி வந்த தவ்ஹீத் கொள்கையிலாவது உறுதியாக இருக்கிறார்களா  என்றால் அதுவும்  இல்லை எந்த ஒரு அடிப்படையும் ஆதாரமும் இல்லாமல் தமிழகத்தில் எங்குமே பிறை தெரியாத ஹஜ்  பெருநாளைக்கு ஊர் ஒற்றுமையை மையமாக வைத்து  குர்ஆன்  ஹதீஸை தனக்கு சாதகமாக  வளைத்துக்கொள்ளும் இவர்களின் கொள்கைக்கு தவ்ஹீத் என்று தங்கமுலாம் பூசி வருகின்றனர். இந்த கொள்கை  குன்றுகளிடம் எந்த அடிப்படையை வைத்து 17ஆம் தேதி ஹஜ் பெருநாள் என்று அறிவித்திருக்கிறீர்கள் என்று  நம்முடைய சகோதரர் கேட்டதற்கு உருப்புடியான எந்த வாதத்தையும் வைக்காமல் வழிகேட்டிற்கு ஏகத்துவத்தை  ஆதாரமாக காட்டி உளறியிருக்கிறார்கள். .
                                 டிரஸ்ட் என்று பதிவு செய்துக்கொண்டு தவ்ஹீத் ஜமாஅத் என்று மக்களிடம் சித்தரிக்கின்றனர்.  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் பெயரை காட்டி டிரஸ்ட்டுக்கு வசூல் செய்து வளர்த்தப் பிறகு இப்போது வெறும் டிரஸ்ட் என்று சொன்னால் பொதுவான மக்களையும் இழந்து விடுவோம் என்ற எண்ணத்தில் தவ்ஹீத் ஜமாஅத் என்று இவர்களாக சூட்டிக்கொண்டு, தங்களுக்கு தாங்களே பொறுப்பை போட்டுக்கொண்டார்கள் சுமையா டிரஸ்ட் நிர்வாக தன்மை அனைத்தும் தனி நபரை சார்ந்ததே தவிர பொதுப்படையானது அல்ல.  சுயநலத்திற்காக தவ்ஹீத் ஜமாத்தில் செயல்பட்ட இவர்களையும்  தவ்ஹீத் வாதிகளையும் பிரித்தறிய வைத்த ஏக இறைவனுக்கே எல்லாப்புகழும்!!



  அடியக்கமங்கலம் சுமையா டிரஸ்ட் நிர்வாகிகள் 
  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து நீக்கம்   
        ( மாநில தலைமையின் மூலம் உணர்வில் வெளியான செய்தி

                                  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளை என்று மக்களை நம்ப வைத்து நிதி திரட்டி சொந்தமாக இடம் வாங்கும் போது தனியாக டிரஸ்ட் அமைத்து தங்கள் கைப்பிடியில் அந்த சொத்தை காலாகாலமும் வைத்திருக்க சிலர் விரும்புகின்றனர்
   
டிரஸ்ட் சம்மந்தமாக சமீப காலமாக பிரச்சனை வந்தபோது மாநில நிர்வாகக் குழுவும், மேலாண்மைக் குழுவும் இணைந்து ஆலோசனை செய்தது. டிரஸ்ட் குறித்து முந்தய நிர்வாகக் குழு செய்திருந்த முடிவில் சில மாற்றங்களைச் செய்வது என்று ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.
       
               ஏகமனதாக செய்யப்பட்ட அந்த முடிவு பின்வருமாறு:

                   டிரஸ்ட்டாக செயல்படுவோர் ஜமாஅத் பெயரில் மக்களிடம் நிதி திரட்டி சொத்து வாங்கியப் பின் மக்களிக்கு உரிமை அளிக்க மறுக்கின்றனர். குறிப்பிட்ட பத்து பதினைந்து பேர் மட்டும் தங்கள் கட்டுபாட்டில் சொத்தையும் நிர்வாகத்தையும் வைத்து கொள்கின்றனர். ஏற்கனவே டிரஸ்ட்டாக பதிவு செய்தவர்கள் தங்கள் ஊரில் உள்ள அத்தனை தவ்ஹீத் சகோதரர்களையும் டிரஸ்ட்டில் உறுப்பினராக்க வேண்டும். இதற்காக  பாடுப்பட்ட, நிதி அளித்த மக்களை கிள்ளு கீரையாக பயன்படுத்துவதை அனுமதிக்க கூடாது என்று முடிவு செய்யப்பட்டது

         அதன் அடிப்படையில் அடியக்கமங்கலம் சுமையா டிரஸ்ட் நிர்வாகிகளிக்கு இதுக் குறித்து பேச மாநில நிர்வாகிகள் வருவதற்கு ஒப்புதல் பெறப்பட்டது. கடந்த 4/03/2010 அன்று மாநில துணை தலைவர் கோவை ரஹ்மத்துல்லாஹ், மாநில துணை பொது செயலாளர் கலீல் ரசூல் தலைமையில் கூட்டுக்கூட்டம் நடைப்பெற்றது .
           
             இதில் மாவட்ட தலைவர் அன்சாரி, செயலாளர் பீர் முஹம்மது, பொருளாளர் ஹாஜா மெய்தீன் மற்றும் மாவட்ட  நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்

                அடியக்கமங்கலம் கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் 25 பேரும், சுமையா டிரஸ்ட் உறுப்பினர்களான குத்புதீன் (டிரஸ்ட் தலைவர் ), நூர் தஹார், சாதிக் அலி(பொருளாளர்), நிஜாமுதீன், மற்றும் முஹம்மது பாரூக் ஆகிய ஐந்து பேரும் கலந்துக்கொண்டனர்.
                
                 அடியக்கமங்கலத்தில் உள்ள அனைத்து தவ்ஹீத் சகோதரர்களுக்கும் டிரஸ்ட்டில் உறுப்பினர் தகுதி அளிக்க வேண்டும். அனைத்து தவ்ஹீத் சகோதரர்களிடமும் நிதி திரட்டி செயல்ப்பட்டுக்கொண்டு அவர்களில் யாருக்கும் உரிமை இல்லை என்பதையும், தவ்ஹீத் ஜமாஅத் ஏற்காது என்பதையும் தக்க காரணத்துடன் எடுத்துரைக்கப்பட்டது

                 நம் ஜமாத்தின் இந்த சுமூகமான முடிவுகளை டிரஸ்ட் நிர்வாகத்தினர் ஏற்று அனைத்து உறுப்பினர்களையும் டிரஸ்ட் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்று உறுப்பினர்களும் டிரஸ்ட் நிர்வாகத்திடம் வலியுரித்தினார்கள்

                 இதையெல்லாம் பொருட்படுத்தாமல் உறுப்பினர்களையும் உதாசினப்படுத்தும் வகையில் பின்வரும் முடிவுகளை அறிவித்தனர்

                        ->-> சுமையா டிரஸ்ட்டில் இருக்கும் 11 பேரைத் தவிர வேறு எவரும் இதில் உறுப்பினர்களாக சேர்க்க மாட்டார்கள்.

                        ->-> இந்த டிரஸ்ட்டுக்கு நாங்களே செலவழித்தோம், நாங்களே பொருப்பாளியாவோம்.

                         ->-> இந்த டிரஸ்ட்டுக்காக உழைத்தாலும், குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் நடந்தாலும் எங்கள் டிரஸ்ட்டில் சேர்க்க மாட்டோம். மாறாக தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகம் கேட்டுக்கொள்வதால் எங்களுக்கு விருப்பமானவர் யாரேனும் அதை நேரம் கிடைக்கும் போது சேர்க்கலாமா? வேண்டாமா? என்று பரிசீலனை செய்வோம்

                          ->-> சில செயல்பாடுகளுக்காக தேவைக்கேற்ப குழுக்களை அமைத்து அதில் ஜமாஅத் உறுப்பினர்களை  சேர்த்து கொண்டு  வேலை வாங்குவோம். ஆனால் டிரஸ்ட்டில் உறுப்பினர்களாக சேர்க்கமாட்டோம் என்று திட்டவட்டமாக கூறி விட்டனர்

                 டிரஸ்ட் சொத்துக்கு ஆசைப்பட்டு ஜமாத்தின் உறுப்பினர்களை துக்கி எறியும் இந்த டிரஸ்ட்டுக்கும் நமக்கும் இனி எந்த சம்மந்தமும் இல்லை என அங்கேயே அறிவித்து விட்டோம்.

                 இதற்கு முன் தடவை குத்புதீன் உள்ளிட்ட டிரஸ்ட் நிர்வாகிகளை சென்னைக்கு வரவழைத்து பேசப்பட்டது
பீ.ஜே அவர்களும் டிரஸ்ட் எனபது மக்களை ஏமாற்றும் செயல் என்பதை விளக்கினார். எனபது குறிப்பிடத்தக்கது

                 காலாகாலமும் தங்கள் கைவசத்தில் சொத்தையும் நிர்வாகத்தையும் வைத்துக் கொள்வதில் அவர்கள் உறுதியாக இருந்ததால் அந்த டிரஸ்ட்டுக்கும் தவ்ஹீத் ஜமாதுக்கும் எந்த உறவும் இல்லை. நிர்வாக உறவோ, கொள்கை உறவோ இல்லை என்று அறிவிக்கப்படுகிறது. அடியக்கமங்கலத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் கிளையில் இருந்தும் இவர்கள்  நீக்கப்படுகிறார்கள்.
            
         டிரஸ்டா?   ஜமாஅத்தா?

சொந்தமாக மர்கசோ, பள்ளிவாசலோ இல்லாமல்  வாடகைக் கட்டிடங்களில் செயல்படும் போது எவ்வித பிரச்சனைகளும் இல்லாமல் கட்டுக் கோப்புடன் பணிகள் நடக்கின்றன. ஆனால் சொந்தமாக இடம் வாங்கும் போதுதான் சிலர் பல்வேறுக் கேள்விகளை எழுப்பி மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி விடுகின்றனர்

            வாங்கப்படும் சொத்துக்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெயரில் பதிவு செய்தால் அதனால் கேடுகள்தான் ஏற்ப்படும் என்று காரணம் கூறிஉள்ளூரில் தனி அமைப்பை ஏற்ப்படுத்தி அல்லது ஒரு அறக்கட்டளையை உருவாக்கி அதன் பெயரில் சொத்தை பதிவு செய்தால் அது பாதுக்காப்பானது என்ற கருத்து விதைக்கப்பட்டு அவ்வாறு செய்யக்கூடிய  நிலைமையும் உருவாகிறது .

             தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இயக்கம் எதிர்க்காலத்தில் இரண்டாக பிளவுப்படலாம்: அது நமது ஊரிலும் எதிரொலிக்கலாம்: அதன் காரணமாக இந்த சொத்திலும் பிரச்சினை ஏற்படலாம். எனபது இதற்க்கு சொல்லப்படும்  முதல் காரணம் .

               தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பிளவுப்படாது என்றெல்லாம் யாரும் உத்திரவாதம் தர  முடியாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உருவாக்கிய சமுதாயமே அவர்களுக்கு பின் பிளவுப்பட்டு நின்றிருக்கும் போது தவ்ஹீத் ஜமாஅத் இப்படியே நீடிக்கும் என்று நாம் கூற முடியாது, கூறவும் கூடாது

                 பத்துப் பேர் கூடி டிரஸ்ட்  அமைத்து அதன் பெயரில் சொத்து வாங்க வேண்டும் என்கிறார்களே! அந்தப் பத்து பேருக்கு மத்தியில் பிளவு ஏற்படாதா? அவர்கள் பிளவுப்பட மாட்டார்களா? என்று யாராவது உத்திர வாதம் தர முடியுமா

                   ஒரு தகப்பனுக்கு பிறந்த இரண்டு பிள்ளைகளே சொத்து விசயத்தில் பிளவுப்படுவதை நாம் பார்க்கிறோம். எனவே உள்ளூர் அமைப்பு என்று வைத்துக் கொண்டாலும், டிரஸ்ட் என்று வைத்துக் கொண்டாலும் அவர்கள் மத்தியிலும் பிளவு ஏற்ப்படத்தான்  செய்யும், மாநில அளவிலான இயக்கத்தில் பிளவு ஏற்ப்படுவதை  விட உள்ளூர் அமைப்பில் தான் பிளவு ஏற்ப்படுவதற்க்கு அதக வாய்ப்புகள் உள்ளன. எனவே இவர்கள் கூறும் காரணம் ஏற்புடையது  அல்ல.
                    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குர்ஆன் ஹதீஸ் கொள்கையை விட்டு விலகி விட்டால் அப்போது தவறான கொள்கையை சொல்வதற்கு நமது சொத்து பயன்படுமே என்ற ஒரு கருத்தும் விதைக்கப்படுகிறது.

                       தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இப்போது இருக்கும் இதே நிலையில் தன பயணத்தை தொடர்வதற்கு வாய்ப்பு உள்ளதுப்போல் தடம் புரண்டு செல்வதற்கும் வாய்ப்பு உள்ளது. என்பதை மறுக்க முடியாது. இதைக் காரணம் காட்டி டிரஸ்ட் என்று ஆரம்பித்து சொத்து வாங்க வேண்டும் என்று கூறுகின்றனர்

                        பத்துப் பேர் கொண்ட டிரஸ்ட்டில் ஆறு  பேர் கொள்கை மாறுவதில் வாய்ப்பு அதிகமா? லட்சக்கணக்கானவர்களை கொண்ட ஒரு இயக்கம் தடம் புரளும் வாய்ப்பு அதிகமா? என்று சிந்தித்து பார்த்தால் டிரஸ்ட்டில் தான் அந்த வாய்ப்பு அதிகம் ஏற்படும்.

                         பதினோரு உறுப்பினர்களை கொண்ட டிரஸ்ட்டில் ஆருப் பேர் கொள்கை மாறி விட்டால் அதற்க்கு ஏற்ப அந்த சொத்தின் செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள முடியும்தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் கடந்த காலங்களில் தியாகம் செய்தவர்கள், குர்ஆன் ஹதீஸை ஆய்வு செய்யும் அறிஞர்கள் மிகுதியாக உள்ளதால் தடம் புரள்வதை அவர்கள் தடுத்து நிறுத்தும் வாய்ப்பு அதிகம். எனவே தங்கள் கைப்பிடியில் சொத்தை வைத்துக் கொள்வதற்காக சிலர் கற்ப்பிக்கும் பொய்யான  காரணமே இது என்பதில் ஐயமில்லை
                          ஒரு சொத்து வாங்கப்படுகிறது என்றால் ஆயிரக்கணக்கான மக்களிடம் பணம் திரட்டியே வாங்கப்படுகிறது. அந்த டிரஸ்ட்கள் சொந்தப்பணத்தில் வாங்குவதில்லை. மக்கள் பணத்தில் சொத்தை வாங்கியப்பின் பணம் கொடுத்த மக்கள் குறைகளை தட்டிக்கேட்க முடியுமா? நிச்சயம்   முடியாது. டிரஸ்ட்டிகள் ஊழல் செய்தால், பணம் கொடுத்த மக்கள் அவர்களை பதவி நீக்கம் செய்து நம்பகமானவர்களை நியமிக்க முடியுமா? நிச்சயம் முடியாது

                            டிரஸ்ட்கள் என்று யாரை பதிவு செய்துள்ளார்களோ அவர்களை தவிர வேறு யாருக்கும் எந்த உரிமையும் இருக்காது. அந்த டிரஸ்ட்டிகள் தடம் புரண்டு தர்ஹாவுக்கு எழுதி வைத்தால் கூட அந்தச் சொத்தை வாங்க உதவி செய்தவர்களால் அதை தடுக்க முடியாது
                            
                          மேலும் எந்தக் கொள்கையை நிலை நாட்ட சொத்துக்கள் வாங்கப்படுகிறதோ அந்தக் கொள்கையை நிலை நாட்டுவதற்காக பலரும் பலவித தியாகங்களை செய்திருப்பார்கள். ரத்தம் சிந்தியிருப்பார்கள், ஊர் நீக்கம் செய்யப்பட்டிருப்பர்கள்.  அவர்கள் டிரஸ்ட்டில் உறுப்பினராக இருக்கமாட்டார்கள். ஆனால் அவர்களின் உழைப்பிலும், தியாகத்திலுமே அந்த சொத்து வாங்கப்பட்டிருக்கும். டிரஸ்ட்டில் நடக்கும் முறைகேடுகள் பற்றி அவர்களாலும் கேள்வி கேட்க முடியாது

குறிப்பிட்ட பத்து பேரின் கைபிடியில் தான் அந்தச் சொத்து இருக்கும். கோடி கோடியாக நிதி குவிந்தாலும் அதைப் பற்றி யாருக்கும் கேள்வி கேட்க சட்டப்படி உரிமை இல்லை. ஆனால் மாநில அளவில் பதிவு செய்யப்பட்ட ஒரு இயக்கத்தின் பெயரில் சொத்து வாங்கினால் அதற்க்கு நிதியளித்தவர்கள் கேள்வி கேட்க முடியும் பாடுபட்டவர்கள் தலையிட முடியும் கிளை நிர்வாகத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றால் அவர்களை மாற்றி விட்டு தகுதியானவர்களை நியமிக்க முடியும் இந்த உரிமைகள் சட்டப்படி ஒவ்வொரு கொள்கை சகோதரனுக்கும் உள்ளது.

இந்த இரண்டில் எது பாதுகாப்பானது? என்பதைச் சிந்திக்க வேண்டும்  இன்னும் சொல்லப் போனால் நிதி அளிக்கும் மக்கள் நமக்கெல்லாம் இதில் உரிமை  இருக்கும் என்ற எண்ணத்தில்தான் வாரி வழங்கியுள்ளனர்.  அறக்கட்டளையில் யார் பெயரைக் குறிப்பிட்டு பதிவு செய்தார்களோ அந்த பத்துப் பேரை தவிர வேறு எவருக்கும் எந்த உரிமையும் கிடையாது என்று தெரிந்து இருந்தால் உதவியிருக்க மாட்டார்கள்.

நாம் எந்தப் பள்ளிக்கு உதவினாலும் அதில் தலையிடவும் கண்காணிக்கவும் நமக்கு உரிமை இருக்க வேண்டும் என்றால் இயக்கத்தின் பெயரால் சொத்துக்களைப் பதிவு செய்வதே பாதுகாப்பானதாகும்.
மேலும் ஒரு பள்ளிவாசல் டிரஸ்ட் பெயரில் பதிவு செய்யப்படுகிறது அதன் நிர்வாகிகளாக அதன் டிரஸ்ட்கள்  இருப்பார்கள்  அந்த ஊரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் பணிகளைச் செய்வதற்காக ஒரு கிளையும் செயல்படும்  அந்த நேரத்தில் ஒரு ஊரில் இரட்டை தலைமை உருவாகும்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் ஆலோசனைக் கூட்டத்தை அந்தக்கட்டத்தில் நடத்தும் போது டிரஸ்ட் வேறு ஜமாஅத் வேறு என்று சொல்லி தவ்ஹீத் சகோதரர்களை வெளியேற்றும் நிலையும் ஏற்படும் டிரஸ்ட்டை வளர்த்து விட்டு நாளைக்கு வெளியேறுவதை விட இப்போதே வெளியேறி தனித்து செயல்படுவது  தான் நன்மை பயக்கக் கூடியது  என்பதை இதிலிருந்தும் அறியலாம்.
இப்படி டிரஸ்ட் அமைத்தவர்கள் பலரும் முரண்பட்ட பலரையும் வைத்து பிரச்சாரம் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதை பார்க்கிறோம்.

மேலும் அந்தச் சொத்தில் மற்றவர்களால் பிரச்சினை ஏற்ப்பட்டால் மாநில அளவில் போராடி அதைச் சரி செய்யும் வாய்ப்பும் இயக்கத்திற்கு தான் உண்டு. டிரஸ்ட் என்றால் அவர்கள்தான் அத்தனை பிரச்சினைகளையும் சுமந்தாக  வேண்டும்

தவ்ஹீத் ஜமாஅத் பெயரில் சொத்து வாங்கினால் உள்ளூர் மக்களுக்கு அதிகாரம் இருக்காது என்று கருத்து விதைக்கப்படுகிறது  இவர்கள் உருவாக்க என்னும் டிரஸ்ட்டில்தால் அந்த நிலை ஏற்ப்படும். தவ்ஹீத் ஜமாஅத்தை பொறுத்தவரை உள்ளூர்  நிர்வாகிகளை தலைமை மூலம் நியமிப்பது இல்லை உள்ளூர் உறுப்பினர்களால் தான் தேர்வு செய்ய முடியும் அவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்கள்.       

Newer Post
Previous
This is the last post.
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: சுமையா அறக்கட்டளை? Rating: 5 Reviewed By: AYM-TNTJ
Scroll to Top