FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Tuesday, August 10, 2010

கிளை பற்றி

Tuesday, August 10, 2010
9:06 PM

                      அமைப்பின் பெயர் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

                   
                     இவ்வமைப்பின் பதிவு மற்றும் கிளை அலுவலகம் & மர்கஸ்  தற்போது,

                                              எண் 30(ப-எண் 103)
                           முகவரி: 30A ராஜா தெரு,
                                 அடியக்கமங்கலம்,   
    
                என்ற முகவரியில் இயங்கும். தேவைக்கேற்ப அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றிக்கொள்ளவும், பல்வேறு அலுவலகங்களை ஏற்படுத்திக் கொள்ளவும் இவ்வமைப்பிற்கு அதிகாரமுள்ளது.

                   மற்றும் இவ்வமைப்பின் கொள்கை (பைலா) விளக்கம்
               


அமைப்பு விதி (பைலா)

அமைப்பின் பெயர்           :       தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆகும்.
அலுவலகம் :
எண் 30 (ப-எண் 103),அரண்மனைக்காரன் தெரு.
மண்ணடி சென்னை-1
1. பதிவு அலுவலகம் மற்றும் தலைமை அலுவலகம்:
இவ்வமைப்பின் பதிவு மற்றும் தலைமை அலுவலகம் தற்போது
எண் 30(ப-எண் 103)
அரண்மனைக்காரன் தெரு,
மண்ணடி, சென்னை-1
என்ற முகவரியில் இயங்கும். தேவைக்கேற்ப தலைமை அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றிக்கொள்ளவும், பல்வேறு அலுவலகங்களை ஏற்படுத்திக் கொள்ளவும் இவ்வமைப்பிற்கு அதிகாரமுள்ளது.
2. மாவட்ட பதிவாளர் வரம்பு:
சங்கங்களின் பதிவாளர் மற்றும் வட சென்னை மாவட்ட பதிவாளர்,
வட சென்னை மாவட்ட பதிவாளர் அலுவலகம். சென்னை – 1
3. அமைப்பின் துவக்க நாள்:         16-05-2004
4. அமைப்பின் அலுவல் நேரம்:       காலை 10.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை
அமைப்பின் கொள்கைள்:
1. இறைவேதம் திருக்குர்ஆனையும் இறுதித்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின் வழிமுறையான சுன்னத்தையும் தனது வாழ்வில் வழி காட்டியாகவும் ஜீவ நாடியாகவும் ஏற்று செயல் படுவதன் மூலமே ஒருவன் ஈடேற்றம் பெற முடியும்.
2. மனிதக்குலம் உயர்வதற்கு திருக்குர்ஆனும் நபி(ஸல்) அவர்கள் சுன்னத்தும் மாத்திரமே போதும் அவற்றுடன் வேறெதுவும் தேவையில்லை.
3. எந்தக் கருத்தாவது திருக்குர்ஆனின் ஏதேனுமொரு வசனத்திற்கோ, நம்பத்தகுந்த ஏதேனுமொரு நபி மொழிக்கோ முரணாக இருந்தால் அது எவரது கூற்றாக இருந்தாலும் புறக்கணிக்கப்படும்.
4. உள்ளாட்சி சட்டமன்றம், நாடாளுமன்றம் ஆகிய எந்த தேர்தலிலும் போட்டியிடுவதில்லை. சூழ்நிலைக்கு ஏற்றவாறு தேர்தலின் எந்த கட்சிக்கு வாக்களிப்பது என்பதைப் பற்றி மட்டும் கருத்து கூறப்படும்
அமைப்பின் நோக்கங்கள்:
1. இவ்வமைப்பின் கொள்கைகளை தானும் ஏற்று பின்பற்றுவதுடன் அவ்வாறு பின்பற்றத் தூண்டுவது.
2. அமைப்பின் கொள்கைகளை விளங்கி மக்களிடம் பிரச்சாரம் செய்தல் அதன்பால் அழைத்தல்.
3. மக்கள் அனைவரும் கல்வி, பொருளாதாரம், மருத்துவம், சுகாதாரம், தொழில், தொழில் நுட்பம், கலாச்சாரம், பண்பாடு, சமூக நலம் உள்ளிட்ட எல்லாதுறைகளிலும் மேம்பாடு அடையப்பாடுபடுதல்.
அமைப்பின் செயல் திட்டங்கள்:
1. கல்வி நிறுவனங்கள் ஏற்ப்படுத்துதல்.
2. பத்திரிக்கைகள், மலர்கள், நுற்கள், பிரசுரங்கள், ஒளி-ஒலி நாடாக்கள், குறுந்தட்டுகள் வெளியிடுதல்.
3. தொலைக்காட்சி, வானொலியில் நிகழ்ச்சிகளை வழங்குதல்.
4. தெரு முனை பிரச்சாரங்கள், சந்திப்புகள், கலந்துரையாடல், கூட்டங்கள், மாநாடுகள், கருத்தரங்குகள் நடத்துதல்.
5. நோக்கங்கள் நிறைவேற நவீன விஞ்ஞானத்தையும், விஞ்ஞான முறைகளையும், சாதனங்களையும் தகவல் தொடர்பு சாதனங்களையும், கம்ப்யூட்டர், இன்டர்நெட் உள்ளிட்ட அனைத்தையும் பயன்படுத்துதல்.
6. அதற்காக சொத்துக்கள் வாங்கி பராமரித்தல்.
7. நிதிக்காக உண்டியல், சந்தா, நன்கொடை மூலம் பொருள் திரட்டுதல்.
8. நோக்கங்கள் நிறைவேறவும், செயல்திட்டங்களை செயல்படுத்தவும் சிறப்புக் குழுக்கள், அமைப்புகள் ஏற்படுத்தல்.
9. கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் மக்கள் தொகை பிரதிநிதித்துவ அடிப்படையில் முஸ்லிம்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் தனி இட ஒதுக்கீடு பெறுவதற்காகவும், உள்ளாட்சி அமைப்புகள், சட்டமன்றம், நாடாளுமன்றம் ஆகியவற்றில் முஸ்லிம்களின் மக்கள் தொகை பிரதிநிதித்துவ அடிப்படையில் தனித் தொகுதி முறையை பெற்றுத் தரவும் பாடுபடுவது.
10. சமூகக் கொடுமைகளுக்கு எதிராக – வரதட்சணை, வட்டி, சினிமா, ஆபாசம், அழகிப்போட்டி, போதைப்பொருட்கள், மது, சூதாட்டம் போன்ற சமூகத் தீமைகளை ஒழிப்பதற்காக விழிப்புணர்வு பிரச்சாரங்கள், சுவரொட்டிகள் வெளியிடுதல், பிரச்சாரக் கூட்டங்கள், கருத்தரங்குகள், மாநாடுகள் நடத்துதல் மற்றும் தேவைக்கேற்ப ஜனநாயக ரீதியான, சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்வது.
11. அடக்கு முறைகள், வரம்பு மீறல்கள், மனித உரிமை மீறல்கள், சட்ட மீறல்கள் இவற்றுக்கெதிராகவும் போராடுவது.
12. பாதிக்கப்பட்ட – அநீதி இழைக்கப்பட்ட எல்லா தரப்பு மக்களுக்கும் தேவையான அனைத்து வகையான உதவிகளையும் மேற்கொள்வது.
13. மதவெறி , வன்முறை கலாச்சாரங்களை ஒழிப்பதற்குப் பாடுபடுவது.
14. இளைஞர்களை வன்முறையின் பக்கம் செல்வதை விட்டும் தடுப்பதற்கு அறவழிப்போராட்டத்திற்கான வழிமுறைகளையும், அதன் முக்கியத்துவத்தையும் எடுத்துச் சொல்லி அவர்களை சிறந்த நெறியாளர்களாக உருவாக்கப்பாடுபடுவது.
15. மத தீவிரவாதிகளிடமிருந்து இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் அச்சுறுத்தலோ, பாதிப்புகளோ ஏற்பட்டால்; அவற்றை ஜனநாயக ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் வலிமையாக எதிர்ப்பது.
16. அனைத்து மத, இன, மொழி மக்களும் சகோதரத்துவ உணர்வுடன் வாழ நல்லிணக்கத்தை ஏற்ப்படுத்திட தேவையான அனைத்து முயற்ச்சிகளையும் மேற்க்கொள்வது.
மாநில நிர்வாகம்:
1.தலைமை நிர்வாகம்:
i நிர்வாக்குழு
அ) இவ்வமைப்பின் தலைமை நிர்வாகம் அதன் மாநில நிர்வாகக் குழுவாகும். அது ஒரு தலைவர், ஒரு பொதுச் செயலாளர், ஒரு துனைப் பொதுச் செயலாளர், ஒரு பொருளாளர், ஒரு துணைத் தலைவர், 10 செயலாளர்கள் ஆகிய 15 பேர்கள் அடங்கியதாகும்.
ஆ) இது மாநில பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்படும்.
இ) மாநில நிர்வாகக் குழுவின் பதவிக் காலம் அதிகபட்சம் மூன்று ஆண்டுகளாகும்;.
ஈ) எந்த ஒரு உறுப்பினரும் தொடர்ந்து இரண்டு பதவிக்காலத்திற்கு மேல் நிர்வாகக்குழுவில் அங்கம் வகிக்கலாகாது.
உ) பதவி விலக விரும்பும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தலைவரிடமோ, பொதுச்செயலாளரிடமோ மனு செய்யலாம். மனு செய்யலாம். நிர்வாகக்குழு அதை ஏற்றுக்கொண்டால் சம்பந்தப்பட்ட உறுப்பினர் பொறுப்பினை வேறு உறுப்பினரிடம் ஒப்படைக்க வேண்டும்.
ஊ) நிர்வாகக்குழு கூட்டம் குறைந்தது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கூட்டப்படும். இதற்கான அறிவிப்பு ஒரு நாள் முன்னதாக அனுப்பப்படும். 1/3 உறுப்பினர்கள் இதன் கோரமாகும்;. சுற்றறிக்கை மூலமாகவும் நிர்வாகக்குழு தீர்மானங்களை நிறைவேற்றலாம்.
ii) தலைவர்:
அ) இவரே இவ்வமைப்பின் முதன்மை நிர்வாகியாவார்.
ஆ) இவ்வமைப்பின் அன்றாட அலுவலகப் பணிகளையும் நிர்வாகத்தையும் இவர் கண்காணிப்பார்.
iii) துணைத்தலைவர்:
அ) தலைவருக்கு உதவியாக இருப்பார்கள். தலைவர் இல்லாத போது அவரது பொறுப்புகளை இருவரில் ஒருவரோ அல்லது இருவரும் சேர்ந்தோ நிறைவேற்றுவார்கள்.
iஎ) பொதுச் செயலாளர்:
அ) அமைப்பின் அன்றாட அலுவல்களையும், நிர்வாகத்தையும் தலைவருடன் இணைந்தோ அல்லது அவரது அனுமதியுடனோ கவனிப்பார்கள்.
ஆ) தலைமை நிர்வாகக் குழு எடுக்கும் முடிவுகளை இருவரும் பகிர்ந்து கொண்டு செயல்படுத்துவார்கள்;.
இ) தலைவர் அல்லது துணைத் தலைவர்களின் ஒப்பதலுடன் நிர்வாகக் குழு கூட்டத்தை இருவரில் ஒருவர் கூட்டுவார்.
ஈ) மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டங்களை பொதுச் செயலாளர் கூட்டுவார்.
உ) அமைப்பிற்கு எதிராக மேற்கொள்ளப்படும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளின் மீது எதிர் நடவடிக்கை மேற்கொள்ளவும்இ வழக்கு தொடரவும் பொதுச் செயலாளருக்கு அதிகாரம் உண்டு.
எ) துணைப் பொதுச் செயலாளர்;;:
அ) பொதுச் செயலாளர் இல்லாத போது அவர்களது பணிகளை இவர் கவனிப்பார்;.
ஆ) பொதுச் செயலாளர் அளிக்கும் பணிகளையும் இவர் ஆற்ற வேண்டிய கடமை உண்டு.
எi) பொருளாளர்:
அ) இவ்வமைப்பின் பொருளாதாரம் சம்பந்தமான அனைத்து நடவடிக்கைகளையும் இவர் கவனிப்பார்.
ஆ) வங்கிக் கணக்குகளை தலைவருடனும் பொதுச் செயலாளர்களுடனும் இணைந்து இயக்குவார்.
எii) அமைப்பின் அலுவலக முறை:
அமைப்பின் அலுவல்கள் மாநில நிர்வாகக் குழுவால் மேற்கொள்ளப்படும்.
எiii) அமைப்பின் அலுவல் அதிகாரி:
அமைப்பின் அன்றாட அலுவல்கனையும் நிர்வாகத்தையும் மாநிலத் தலைவரே கவனிப்பார்.
எiii) அமைப்பின் வழக்குகள்:
அமைப்பிற்காக வழக்குத் தொடரவோ, அமைப்பின் மீது வழக்குத் தொடரப்படவோ வேண்டுமெனில் அமைப்பின் பொதுச் செயலாளர் பெயரிலேயே செய்யப்பட வேண்டும்.
2. மாநில செயற்குழு:
அ) i) மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்கள்
ii) மாநில சிறப்புக் குழுக்களின் உறுப்பினர்கள்
iii) அனைத்து மாவட்டங்களின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஆகியோர் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் ஆவர்.
ஆ) மாநில செயற்குழு குறைந்தது 6 மாதத்திற்கு ஒருமுறை கூட்டப்படும்.
மாவட்ட நிர்வாகம்
1.மாவட்ட நிர்வாகக் குழு
அ) ஒரு தலைவர், ஒரு துணைத் தலைவர், ஒரு செயலாளர், ஒரு துணைச் செயலாளர், ஒரு பொருளாளர் ஆகிய ஐந்து (5) பேர் கொண்டது மாவட்ட நிர்வாகக் குழுவாகும்.
ஆ) இக்குழு மாவட்ட பொதுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும்.
இ) இதன் பதவிக் காலம் மூன்றாண்டுகள்.
ஈ) மாநில தலைமைக்குக்கீழ் அதன் அடுத்த அதிகார மட்டமாக மாவட்ட நிர்வாகக் குழு செயல்படும்.
உ) தத்தமது மாவட்டங்களுக்குட்பட்ட கிளைகளின் நடவடிக்கைகளை இக்குழு நேரடியாக கண்காணிக்கும்.
2. தலைவர்:
இவர் மாவட்ட நிர்வாகத்தின் தலைமை நிர்வாகியாவார்.
3. துணைத் தலைவர்:
இவர் தலைவருக்கு உதவியாக செயல்படுவார். தலைவர் இல்லாத போது அவரது பொறுப்புகளை கவனிப்பார்;.
4. செயலாளர்:
அ) மாவட்ட அமைப்பின் அன்றாட அலுவல்களையும் நிர்வாகத்தையும் தலைவருடன் இணைந்தோ அல்லது அவரது அனுமதியுடனோ கவனிப்பார்கள்.
ஆ) மாவட்ட நிர்வாகக் குழு எடுக்கும் முடிவுகளை இருவரும் பகிர்ந்து கொண்டு செயல்படுத்துவார்கள்.
இ) தலைவர் அல்லது துணைத் தலைவரின் ஒப்புதலுடன் மாவட்ட நிர்வாகக் குழு கூட்டத்தை இருவரில் ஒருவர் கூட்டுவார்.
ஈ) மாவட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களை மாவட்ட நிர்வாகக்குழு ஒப்புதல் அளிக்கும் செயலாளர் ஒருவர் கூட்டுவார்.
உ) மாவட்ட அளவில் அமைப்பிற்கு எதிராக மேற்கொள்ளப்படும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளின் மீது எதிர் நடவடிக்கை மேற்கொள்ளவும் வழக்கு தொடரவும் மாவட்ட நிர்வாகக் குழு ஒப்புதல் பெற்ற செயலாளர் ஒருவருக்கு அதிகாரம் உண்டு.
5. துணைச் செயலாளர்கள்:
இவர் செயலாளருக்;கு உதவியாக இருப்பார். செயலாளர் இல்லாத போது அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவார்.
6. பெருளாளர்:
மாவட்ட பொருளாதார விஷயங்களுக்கும் அதன் கணக்குகளுக்கும் அவரே பொறுப்பாவார். தலைவருடனும் இணைந்து வங்கிக் கணக்குகளை இயக்குவார்.
கிளை நிர்வாகம்
அ. ஒரு தலைவர், ஒரு துணைத்தலைவர், ஒரு செயலாளர், ஒரு துணைச்செயலாளர், ஒரு பொருளாளர் ஆகிய ஐந்து (5) பேர் கொண்டது கிளை நிர்வாகக் குழுவாகும்.
ஆ.இக்குழு கிளையின் பொதுக் குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும்.
இ.இதன் பதவிக் காலம் மூன்றாண்டுகள்.
ஈ. மாவட்டத் தலைமைக்கு கீழ் அதன் அடுத்த அதிகார மட்டமாக கிளை நிர்வாகக் குழு செயல்படும்.
உ. கிளை நிர்வாகிகளின் பணிகள் மாவட்ட நிர்வாகிகள் போன்றதே.
ஆ. உறுப்பினர்கள்
1. இவ்வமைப்பின் கொள்கைகளை ஏற்று நடந்து அதன் நோக்கங்களுக்காக பாடுபட விரும்பும் இந்திய குடிமக்கள் எவரும் இவ்வமைப்பின் உறுப்பினராகலாம்.
2. இவ்வமைப்பின் உறுப்பினர் வேறு எந்த அமைப்பிலும் உறுப்பினராக இருக்கக் கூடாது.
3. உறுப்பினராக விரும்புவோர் ரூபாய் 20.00 (இருபது) விண்ணப்பக் கட்டணத்துடன் மாநில தலைமையிலிருந்து பெறப்படும் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து மாவட்ட தலைவர் மற்றும் செயலாளர் ஒருவரின் பரிந்துரையுடன் தலைமைக்கு அனுப்பவேண்டும்.
4. தலைமை நிர்வாகக் குழு நேரடியாகவும் உறுப்பினர்களை சேர்த்துக் கொள்ளலாம்.
5. உறுப்பினர் விண்ணப்பத்தை ஏற்கவோ காரணம் கூறாது மறுக்கவோ தலைமை நிர்வாகக் குழுவிற்கு அதிகாரமுள்ளது.
6. உறுப்பினராக சேர்க்கப்பட்டவர்கள் ஆண்டுச் சந்தாவாக ரூபாய் 25.00 (இருபத்தைந்து) ஒவ்வொரு நிதியாண்டின் துவக்கத்தில் செலுத்த வேண்டும்.
7. ஒரு ஆண்டுச் சந்தா செலுத்தாத உறுப்பினர்களுக்கு பொதுக் குழுவில் கலந்துக் கொள்ள மட்டுமே உரிமையுள்ளது. வேறு எந்த உரிமையும் கிடையாது. இரண்டு சந்தாக்கள் செலுத்தாத உறுப்பினரின் பெயர் உறுப்பினர் பதிவேட்டிலிருந்து எவ்வித முன்னறிவிப்புமின்றி நீக்கப்படும்.
8. உறுப்பினர்கள் அமைப்பின் கொள்கைகளை ஏற்று நடக்க வேண்டும். அமைப்பின் நோக்கங்கள் நிறைவேற பாடுபட வேண்டும்.
9. பொதுக்குழு கூட்டங்களில் நேரில் கலந்து கொள்ளவும்இ தீர்மானங்கள் கொண்டு வரவும், தீர்மானங்களின் மீது வாக்களிக்கவும், அமைப்பின் பதவிகளுக்கும் பொறுப்புகளுக்கும் தேர்ந்தெடுக்கப்படவும் பிறரைத் தேர்ந்தெடுக்க வாக்களிக்கவும் உறுப்பினர்கள் உறுப்பினர்கள் தகுதியுடையவர்கள் ஆவர்.
பொதுக்குழு
1. ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டம் :
ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டம் ஒவ்வொரு நிதியாண்டு முடிந்த 6 மாதங்களுக்குள் நிர்வாகக் குழுவால் கூட்டப்பட்டு கீழ்க்கண்ட பொருள்கள் குறித்து விவாதிக்கும்.
அ. ஆண்டு அறிக்கையின் மீது விவாதித்தல்
ஆ. சென்ற நிதியாண்டின் தணிக்கை செய்யப்பட்ட கணக்குகள் மீது விவாதித்து அங்கீகரித்தல்.
இ. வரும் நிதியாண்டிற்கான வரவு செலவுகள் குறித்து விவாதித்தல்.
ஈ. வரும் நிதியாண்டிற்கு கணக்கு தணிக்கையாளரை நியமித்தல்.
உ. சிறப்புத் தீர்மானம் இருப்பின் நிறைவேற்றல்.
ஊ. இதர தீர்மானங்கள் நிறைவேற்றல்
2. சிறப்புப் பொதுக்குழு கூட்டம் :
அ.நிர்வாகக்குழு தேவைப்படும் போது சிறப்புப் பொதுக்குழுவை கூட்டும்.
ஆ. அமைப்பின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரு பங்கு உறுப்பினர்கள் சிறப்புப் பொதுக்குழுவைக் கூட்டக்கோரி மனுச் செய்தால் அம்மனு கிடைக்கப்பெற்ற முற்பதுநாட்களுக்குள் நிர்வாகக்குழு சிறப்பு பொதுக்குழுவை கூட்டவேண்டும். அவ்வாறு சிறப்புப் பொதுக்குழு கூட்டப்படவில்iயாயின் மனுதாரர்களே அனைத்து உறுப்பினர்களுக்கும் இருபத்தொரு நாட்கள் அவகாசமளித்து அறிவிப்பு செய்து சிறப்புப் பொதுக்குழுவைக் கூட்டலாம்.
3. குறைந்தபட்ச எண்ணிக்கை :
அ. சாதராணமாக பொதுக்குழுவிற்கான குறைந்தபட்ச எண்ணிக்கை அமைப்பின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்காகும். பொதுக்குழு கூட்ட நேர ஆரம்பத்தின் போது குறைந்தபட்ச எண்ணிக்கைக்கு குறைவான உறுப்பினர்கள் இருந்தால் கூட்டம் ஒரு மணிநேரம் தள்ளி வைக்கப்படும். அவ்வாறு தள்ளி வைத்து நடத்தப்படும் கூட்டத்திற்கு குறைந்தபட்ச எண்ணிக்கை அவசியமில்லை.
ஆ.எனினும் அமைப்பின் சட்டவிதிஇ ஓ துணை விதி 2 உட்பிரிவு (ஆ) வின் கீழ் உறுப்பினர்கள் கூட்டும் பொதுக்குழுவிற்கு கூட்ட நேர ஆரம்பத்தில் குறைந்த பட்ச எண்ணிக்கைக்கும் குறைவான உறுப்பினர்களே இருந்தால் அப்பொதுக்குழுக் கூட்டம் ரத்து செய்யப்படும்.
4. அறிவிப்பு :
அ) அனைத்து பொதுக்குழு கூட்டத்திற்கும் கூட்டம் நடப்பதற்கு பதினைந்து நாட்களுக்கு முன்னதாக எல்லா உறுப்பினர்களுக்கும் அறிவிப்பு செய்யப்படும். சாதாரணமாக அமைப்பின் செய்திகளுக்கும் விளம்பரங்களும் ஏனைய அறிவிப்புகளும் செய்யப்படும். பத்திரிகைகளில் ஏதேனும் ஒரு பத்திரிக்கையில் செய்யப்படும் பொதுக்குழு அறிவிப்பே போதுமானதாகும்.
ஆ) பொதுக்குழு கூட்டப்படும் நாள், நேரம், இடம், கூட்டப்படும் நோக்கம் அல்லது விவாதிக்கப்பட இருக்கும் பொருள் ஆகியவற்றுடன் கூட்டுபவரின் பெயர், மற்றும் பொறுப்பு அமைப்பின் எந்த சட்டவிதிகளின்படி கூட்டப்படுகிறது என்ற விவரமும் அறிவிப்பில் குறிப்பிடப்படவேண்டும்.
சிறப்புத் தீர்மானம்
1.அமைப்பின் சட்ட விதிகளை திருத்த, மாற்ற, சேர்க்க, நீக்க
2.அமைப்பின் சொத்துக்களை விற்க, அடமானம் வைக்க அல்லது வேறு வகையில் அந்நியப்படுத்த ஆகியவற்றுக்காக சிறப்புத் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.
3.கூட்டத்தில் கலந்து கொள்ளும் உறுப்பினர்களின் நான்கில் மூன்று பங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் சிறப்புத் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.
4.சிறப்புத் தீர்மானங்கள் அமைப்பின் சட்டவிதிகளாக கருதப்படும்.
பொது
1.பதிவாளரிடம் ஆவணத் தாக்கல் :
சங்கப் பதிவாளரிடம் தாக்கல் செய்யப்பட்ட வேண்டிய ஆவணங்கள், அறிக்கைகள் மற்றும் படிவங்களை தலைவர் தாக்கல் செய்வார்.
2.நிதி நிர்வாகம் :
அமைப்பின் நிதி அமைப்பின் பெயரில் வங்கிகளில் நடப்புக் கணக்கு ஆரம்பித்து வைப்பீடு செய்யப்படும். வங்கிக் கணக்கினை தலைவர், தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய மூவரில் இருவர் கூட்டாக இயக்குவர்.
3.கணக்குகள் மற்றும் தணிக்கை:
அ.அமைப்பின் நிதியாண்டு ஒவ்வொரு ஏப்ரல் மாதம் 1 ஆம் துவங்கி மார்ச் 31ல் முடிக்கப்படும்.
ஆ. அமைப்பின் அனைத்து கணக்கு பதிவேடுகளையும் பொருளாளர் பராமரித்து வருவார்
இ.கணக்குகளை தணிக்கை செய்ய தணிக்கையாளர் பொதுக்குழுவால் நியமிக்கப்படுவார்.
4.அன்றாட செலவுகள் மற்றும் பணியாளர் நியமனம் :
அ.அமைப்பின் அன்றாட செலவுகளுக்காக ரூபாய் 10,000 (பத்தாயிரம்) மேற்படாமல் தலைவரும், பொருளாளரும் தம் கைவசம் வைத்துக் கொள்ளலாம்.
ஆ.தேவைகேற்ப அமைப்பின் பணிகளை கவனிக்க பணியாளர்களை நியமனம் செய்து அவர்களின் ஊதியம் மற்றும் பணி நிபந்தனைகளை நிர்வாகக் குழு நிர்ணயம் செய்யும்.
5.சிறப்புக் குழுக்கள் :
சிறப்புப் பணிக்காக சிறப்புக் குழுக்களை ஏற்படுத்த நிர்வாகத்திற்கு அதிகாரமுள்ளது.
6.ஒரு உறுப்பினர் ஒரு மட்டத்தில் மட்டுமே நிர்வாகக் பொறுப்பை வகிக்க முடியும்
7.பொதுக்குழு மற்றும் செய்குழுவிற்கு அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 10 சதவீதத்திற்கு அதிகரிக்காமல் உறுப்பினர்களை நியமனம் செய்யும் அதிகாரம் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகக் குழுவிற்கு அதிகாரம் உண்டு.
8.தமிழ்நாட்டிற்கு வெளியே அமைப்பின் கிளையை ஏற்படுத்த விரும்புவர்கள் மாநில தலைமையிடம் எழுத்துப்பபூர்வமான அனுமதியைப் பெற்று கிளைகளை அமைத்துக் கொள்ளலாம். அவ்வாறு ஏற்படுத்தப்படும் கிளைகள் மாநில அளவில் இருந்தாலும் அவை தமிழ்நாடு மாநிலத் தலைமைக்கு (தலைமை நிர்வாகக்குழு) கீழே அதன் கிளையாகத்தான் இயங்கும்.
9.அமைப்பின் செலவினங்களுக்காக ஒவ்வொரு மட்ட நிர்வாகமும் தனித்தனியே அதன் பெயரில் அச்சிட்டு ரசீதுகளின் மூலம்தான் நன்கொடைகள் வசூலிக்க வேண்டும். அச்சிட்ட ரசீகள் இல்லாமல் எந்த வசூலும் செய்யக் கூடாது.
10.கூட்டங்கள் குறிப்பிட்ட காலக்கெடுக்குள் கூட்டப்படாவிட்டால் அடுத்த மேல்மட்ட அமைப்பிற்கு அக்கூட்டங்களை கூட்ட அதிகாரம் உண்டு.
11.சட்டவிதிகள், அறிக்கைகள் நகல் வழங்கல் :
அமைப்பின் சட்ட விதிகள், வரவு – செலவு அறிக்கை, நிதி நிலை அறிக்கை ஆகிய ஏதேனும் நகல் வேண்டும் உறுப்பினர் நகல் ஒன்றுக்கு ரூபாய் 1.00 செலுத்தி விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
12.பதிவேடுகளை பர்வையிடல்
உறுப்பினர் பதிவேடு, பொதுக்குழு மற்றும் நிர்வாகக்குழு கூட்ட நிகழ்ச்சி குறிப்பேடுகள் கணக்குப் பதிவேடுகள் உள்ளிட்ட அமைப்பின் அனைத்து ஆவணங்களையும் அமைப்பின் உறுப்பினர்கள் கட்டணமின்றி மனுச் செய்து அலுவலக நேரத்தில் பார்வையிடலாம்.
13. சட்ட விதி மீறல் நடவடிக்கை
அமைப்பின் நலனி;ற்கோ, நோக்கத்திற்கோ, சட்டவிதிகளுக்கோ மாறாகவோ அல்லது அமைப்பின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்திலோ எந்த உறுப்பினராவது செயல்பட்டால் அவரது நடவடிக்கை குறித்து அவர் உறுப்பினராக உள்ள கிளை அல்லது மாவட்ட நிர்வாகக்குழு தலைமை நிர்வாகக் குழுவிடம் அறிக்கைதாக்கல் செய்து அவரை நீக்கி நடவடிக்கை அல்லது இதர நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கும். தலைமை நிர்வாகக் குழு அதனை பரிசீலித்து அப்பரிந்துரை சரியெனக் கண்டால் உறுப்பினரை அமைப்பிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுக்கும் அல்லது இதர நடவடிக்கை எடுக்கம்.
அவ்வாறான உறுப்பினர்கள் மீது நேரடியாக நடவடிக்கை மேற்கொள்ளவும் தலைமை நிர்வாகக் குழுவிற்கு அதிகாரம் உண்டு.
14. கோரம்:
அனைத்துக் கூட்டங்களுக்கும் கோரம் அதன் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் (1/3) ஒரு பங்காகும்.
15. விதி விலக்கு வழங்குதல்:
அ) அமைப்பின் விதிகளில் சிலவற்றிலிருந்து சிலருக்கு விலக்களிப்பது அவசியமென நிர்வாகக் குழு கருதும்போது அடுத்த பொதுக்குழு வரை விலக்களிக்கலாம்.
ஆ) இவ்வமைப்பின் சட்;ட விதிகளில் எதையேனும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க மாநில செயற்குழுவிற்கு அதிகாரம் உள்ளது. ஆயினும் மூன்று மாதங்களுக்குள் பொதுக்குழுவைக் கூட்டி அங்கீகாரம் பெற வேண்டும்.
16. வெளிநாட்டு விருதுகள்:
இவ்வமைப்பு எந்த வெளிநாட்டு அரசிடமிருந்தோ நிறுவனத்திடமிருந்தோ எந்த பொருளாதார உதவியோ, பரிசோ, விருதோ பெறக்கூடாது.
17. அதிகாரம் வழங்குதல்:
குறிப்பிட்ட காலத்திற்கு குறிப்பிட்ட அதிகாரத்தை பிறருக்கு வழங்குவதற்கும் மாநில நிர்வாகத்திற்கு அதிகாரமுள்ளது.
18. தமிழ் நாடு சங்கங்கள் பதிவு சட்டம்:
அமைப்பின் சட்ட விதிகளில் குறிப்பிடப்படாத இதர விஷயங்களுக்கு தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டம் (1975) மற்றும் தமிழ்நாடு சங்கங்கள் பதிவு விதிகள் (1978) பொருந்தும்.
தமிழ் நாடு சங்கங்கள் பதிவு சான்றிதழ்:


  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: கிளை பற்றி Rating: 5 Reviewed By: AYM-TNTJ
Scroll to Top