FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Sunday, May 8, 2011

மாணவர்களுக்கான கோடைக்கால பயிற்சி முகாம்

Sunday, May 8, 2011
4:59 PM

அன்பிற்கினிய சகோதர,சகோதரிகளே!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமஅத்-(TNTJ) சார்பாக இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கு கோடைக்கால விடுமுறையை பயனுள்ளதாகவும், நன்மையளிக்ககூடியதாகவும் ஆக்குவதற்க்கு கோடைக்கால பயிற்சி முகாம்களை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

இந்த வருடம் 
அடியக்கமங்கலம், ராஜாத்தெரு "தவ்ஹீத் மர்க்கஸில்"
கோடைக்கால பயிற்சி முகாம் வறும் 16-05-11 முதல் இனிதே நடைபெறஉள்ளது...

இன்ஷா அல்லாஹ் அதில் நாம் நம் பிள்ளைகளை கலந்து கொள்ள வைத்து பயன்பெற செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.ஏனெனில் கல்வி என்பது இறைவன் நமக்கு தரும் மிகப்பெரிய அருட்கொடை.அந்த அருட்கொடையை அடைவதற்க்கு நாம் அதிகம் முயற்சிக்க வேண்டும்.இந்த கல்வியை நன்மை பெற்க்கூடியவர்களுக்காகவே வழங்குவதாக இறைவன் கூறுகின்றான்.

"அல்லாஹ் தான் நாடுகின்றவர்களுக்கு ஞானத்தை வழங்குகின்றான் எவருக்கு ஞானம் வழங்கப்படுகிறதோ அவர் (மெய்யாகவே)
ஏராளமான நன்மைகள் வழங்கபட்டவராவர்.
(இவற்றிலிருந்து) நல்லறிவுடையோர் தவிர வேறெவரும் சிந்தித்து படிப்பினை பெறமாட்டார்கள்".
-அல்-குர்ஆன்:2:269

இன்னும் கல்வியின் சிறப்பை பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறும் போது:

" கல்வியை தேடும் வழியில் ஒருவர் நடந்தால் அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தின் பாதையை இலகுவாக்குகிறான்"என்று கூறியுள்ளார்கள்.



கல்வியை தேடிசெல்பவர்களுக்கு சொர்க்கமே பரிசாக கிடைக்க உள்ளது, குர்ஆனில் கூற்ப்படும் படிப்பினைகளை அறிவுடையோர் மட்டுமே விளங்கி வெற்றி பெறுவதாக இறைவன் கூறுகின்றான்.கல்விக்கு என்றுமே விளிம்பில்லை,மறுமையில் நாம் வெற்றி பெற உதவுவது அல்லாஹ்வின் கருணையும்,நன்மையுமே பயனுள்ள கல்வி கிடைத்தால் இவை இரண்டும் நிச்சயம் கிடைக்கும்.

பயனற்ற உலக கல்விக்காக வருடம் முழுவதும் காலத்தை செலவழிக்கிறோம் ஆனால் மார்க்க கல்விக்காக நாம் செலவழிக்கும் ஒவ்வொரு நிமிடமும் நன்மையாகவே மாறுகிறது.ஆகையால் இக்கல்வியை கற்று அதிக நன்மைகளை நாம் அடைய வேண்டும்.

என்வே கிடைத்துள்ள காலத்தையும், நேரத்தையும் இறைவனுடைய கல்விக்காக செலவிட்டு வீணாண காரியங்களிலிருந்து அல்லாஹ் நம்மை காப்பாற்றி நன்மையை பெற செய்வானாக! இன்ஷா அல்லாஹ்...

இங்கனம்...

தவ்ஹீத் மர்க்கஸ்,
ராஜாத் தெரு,
அடியக்கமங்கலம்.
www.tntjaym.tk



  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: மாணவர்களுக்கான கோடைக்கால பயிற்சி முகாம் Rating: 5 Reviewed By: AYM-TNTJ
Scroll to Top