FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Wednesday, October 5, 2011

புனித ஹஜ் செல்வோர் கவனத்திற்க்கு...!

Wednesday, October 5, 2011
6:01 AM
மருத்துவரின் பார்வையில்...


புனித மிக்க ரமாலான் மாதம் முடிந்து,ஹஜ்ஜை எதிர்நோக்கி உள்ளோம்.இன்ஷா அல்லாஹ் ஹஜ் செல்வதற்க்கு வாய்ப்பு கிடைத்தவர்கள்,மனதளவில் ஹஜ் செல்வதற் க்கு தங்களை தயார்படுத்தத் துவங்கி விட்டார்கள்.இந்தசமயத்தில் ஹஜ் செல்வோர் தங்கள் உடல் குறித்து தெரிந்து கொள்ளவேண்டிய சில குறிப்புகளைத் தர விரும்புகிறேன்.
நான் 1997ஆம் ஆண்டு சவுதி அரசின் மருத்துவராக ஹஜ்ஜின் போது பணியாற்றிய எனது அனுவத்தின் சில ஆலோசனைகளை இனைத்து உள்ளேன்.

1)ஹஜ் செல்ல நாடி உள்ளவர்கள் ஹஜ்ஜுக்குச் செல்லும் முன் தங்கள் உடன்நலன்களை நல்ல முறையில் பரிசோதித்து,ஹஜ்ஜுக்கு செல்ல தயார் பண்ணிக்கொள்ள வேண்டும்.

2)நெடுநாளைய நோய்களான சக்கரை என்னும் சுகர்,HIGH BP,ஆஸ்துமா,வலிப்பு,இருதய நோய் உள்ளவர்கள்,தங்கள் மருத்துவரை கலந்து ஆலோசித்து,தங்கள் நோயை நன்றாக கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும்.

3)நெடுநாளைய நோய்களான சக்கரை என்னும் சுகர்,HIGH BP,ஆஸ்துமா,வலிப்பு,இருதய நோய்க்கான மாத்திரைகளை தேவைக்கு கொஞ்சம் அதிகமாகக் கொண்டு செல்ல வேண்டும்.அனைத்து மாத்திரைகளும்,ஒரே பேக்கில் வைக்காமல்,பல பேக்குகளில் பிரித்து வைத்துக்கொள்ளவேண்டும்.அப்போது தான் ஒரு பேக் தொலைந்து போனால் கூட,இடைவெளி இல்லாமல் தொடர்ந்து போட மாத்திரைகள் இருக்கும்.தங்கள் மாத்திரைகளின் பெயர்களையும் (BRAND NAME) அதன் மூலக்கூறு பெயர்களையும்(CHEMICAL OR MOLECULE NAME) தெரிந்து வையுங்கள்.அப்போது தான் மாத்திரை முடிந்துவிட்டாலோ அல்லது தொலைந்துவிட்டாலோ, சவுதியில் அந்த மாத்திரைகள் மருத்துவரிடம் அல்லது டிஸ்பென்சரியில் கேட்டுப் பெற வசதியாக இருக்கும் (எல்லா நாடுகளிலும் மூலக்கூறு மருந்தின் பெயர் ஒன்று தான்,BRAND NAME தான் நாட்டுக்கு நாடு மாறுபடும்)

4)சவுதி அரசும் அதன் சுங்கத்துறையும்,அந்நாட்டு மருந்து கட்டுப்பாட்டு துறையின் அனுமதி இல்லாத மற்ற நாட்டு மருந்துகளை,தங்கள் நாட்டில் அனுமதி அளிப்பது இல்லை.என்றாலும் நீங்கள் உபயோகப்படுத்அதும் மருந்துகளைக் கொண்டு செல்லலாம்.ஆனால் அந்த மருந்துகளுக்கு தேவையான டாக்டர் PRESCRIPTION கண்டிப்பாகக் கொண்டு செல்ல வேண்டும்.அந்த டாக்டர் PRESCRIPTION இல்,உங்கள் பெயர் உங்கள் பாஸ்போர்ட்டில் எப்படி பெயர் உள்ளதோ அதே பெயர் அப்படியே,ஸ்பெல்லிங் தவறு இல்லாமல் குறிப்பிடுவது அவசியம் டாக்டர் சீட்டில்.PASSPORT நம்பர் பதிவு செய்வது இன்னும் நல்லது.

மிக முக்கியமாக,வலிப்பு நோய் மருந்துகள்,தூக்க மாத்திரைகள்,மற்றும் மன நல நோய்க்கான மாத்திரைகள் கொண்டு செல்ல நேர்ந்தால்,சரியான மருத்துவ சீட்டுகளுடன் செல்ல வேண்டும்.இது போன்ற மாத்திரைகளுக்கு,சீட்டு இல்லாமல் சென்றால்,சவுதி சட்டப்படி,சிறை தண்டனை வரை தர விதி உண்டு.டாக்டர் சீட்டில் மாத்திரைகளின் எண்ணிக்கைகளையும் பதிவு செய்ய வேண்டும்.இது போன்ற மாத்திரை டாக்டர் சீட்டுகளில்,உங்கள் பெயர் மற்றும் வயதை பாஸ்போர்டில் உள்ளவாறு சரியாக,ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாமல் இருப்பது அவசியம்.

5)பொதுவாக ஹஜ்ஜின் போது மக்காவிலும், மதீனாவிலும், இந்தியா மற்றும் சவுதி அரசின் கீழ் செயல்படும் மருத்துவ DISPENSARY களும் மற்றும் மருந்துக் கூடங்களும், தேவையான அளவில் உள்ளன.எனவே சிறிய சிறிய நோய்களான சளி, ஜுரம் போன்றவைகளுக்கு மருத்துவம் பெறுவதில், அதற்க்கான மாத்திரைகளைப் பெறுவதிலும் சிக்கல் இருக்காது.உங்கள் தேவைக்கேற்ப குறைந்த அளவு, சிறு நோய்களுக்கான மாத்திரைகளை, மருத்துவ சீட்டுகளுடன் எடுத்துச் செல்லலாம்.


6)குறிப்பாக பெண்கள் பலர், தங்கள்.மாதவிடாயைத் தள்ளிப் போடும் மாத்திரைகளை உட்கொள்கிறார்கள். காரணம், தங்கள்.மாதவிடாய், ஹஜ் கிரியை செய்யும் காலத்தில் வந்து,தங்கள் அமல் கெட்டுப் போய் விடுமோ என்ற எண்ணத்தில்.மாதவிடாயின் போது, தொழுகை மற்றும் கஅபா வலம் வருவது, மற்றும் ஹரமுக்குள் நுழைவது தவிர, மற்ற எல்லா ஹஜ்ஜின் செயல்களும் ஆகுமானது தான்.அதனால் நாற்பது நாளைக்கு மாதவிடாய் வராமல் மருந்துகள் மூலம் தள்ளி போவது நல்லது இல்லை.பொதுவாக இந்த மாத்திரைகளில் ESTROGEN மற்றும் PROGESTERONE எனும் ஹார்மோன் உள்ளாதால், இந்த மாத்திரைகளை எடுக்கும் போது, குமட்டல் உடல் கனத்துப் போதல் போன்ற சில கஷ்டங்கள் வரலாம்.இந்த மருந்துகள் எடுக்கும் போது, ஒரு வகையான மன ரீதியான மாற்றங்கள் ஏற்பட்டு,உங்கள் அமல்களைப் பாதிக்கலாம்.சில பெண்களுக்கு மார்பகங்கள் அதிகம் கனத்தும் வலியுடன் காணப்படும்.(ஒர் ஆய்வின் படி, தேர்வுக்காக தங்கள் மாதவிடாயை தள்ளிப் போட, மாத்திரை போட்ட மாண்விகளின் தேர்வு முடிவை விட மோசமாக இருந்தது.காரணம்,மன நிலை மாற்றம்).
ஒரு வேளை, தொடர்ந்து போடாமல் போகும் நிலை ஏற்பட்டாலோ அல்லது மாத்திரை தொலைந்து போனாலோ அல்லது மாத்திரை போட சில நாட்கள் மறந்துவிட்டாலோ, மாத்திரை நிறுத்திய சில நாளில் அதிக இரத்தப் போக்கு ஏற்பட்டு,உங்கள் அமல்களை அதிகம் பாதிக்கலாம்.இந்த நிலைமை 1997 ஆண்டு ஹஜ்ஜின் போது ஏற்பட்டு.பல பெண்கள் தங்கள் மாத்திரைகளை இழந்து விட்ட பின்,அதிக பாதிப்புக்கு உள்ளானார்கள்.எனவே மாதவிடாயைத் தள்ளிப் போடும் மாத்திரைகளைத் தவிர்ப்பதுதான் எல்லா நிலையிலும் நல்லது.அல்லாஹ் எந்த ஆத்மாவையும் அவர்களின் சக்திக்கு மீறி சோதனை தர மாட்டான். அதிக நாள்கள் இந்த மாத்திரைகள் உட்கொண்டால்,மார்பகம் மற்றும் சினைப்பை புற்று நோய் வரும் வாய்ப்பு அதிகம்.

7)சுகர் நோய் உள்ளவர்கள்,முடிந்தால் தங்கள் சுகர் அளவை அடிக்கடி சோதித்து கொள்ள பாக்கெட் GLUCOMETER  கொண்டு  செல்லாம்.ஆனால் அதில் BATTERY உள்ளதால்,அதை  காபின் LUGGAGE விமான நிறுவனம் அனுமதி அளிப்பது இல்லை.

8)ஹஜ் செல்லும் போது,பலருக்கு தங்களை அறியாமலே,சிறிது மன ANXIETY ஏற்படுவது உண்டு.காரணம், தங்கள் விருப்பமானவர்களைப் பிரிந்துவந்தது,கடந்த காலங்களில் ஹஜ்ஜின் போது ஏற்பட்ட தீ விபத்து,STAMPEDE போன்ற சம்பவங்களை நினைத்து,இவ்வளவு செலவழித்து வந்து இருக்கும் தங்களின் புனித பயணம் வெற்றியாக்க முடியுமா என்ற மனநிலை,முற்றிலும் வித்தியாசமான சூழ்நிலையில் 40 நாள் இருப்பது,புதிதான விமான பயணம் ,அதிகமான கூட்டத்தை முதன் முதலில் சந்திப்பது,அதிகம் அதிகம் உம்ரா மற்றும் தவாப் செய்ய வேண்டும் என்ற படபடப்பு ஹஜருல் அஸ்வத் கல்லை அடிக்கடி முத்தமிடும் வாய்ப்பு கிடைக்குமா என்ற ஏக்கம் போன்றவற்றால்,மன்நிலையில் சிறிது படபடப்பு ஏற்படுவது இயற்கை என்றாலும் ,ஊரில் இருக்கும் போதே இதை எல்லாம் சமாளிக்கக் கூடிய மனநிலையைக் கொண்டு வந்து விட்டால்,மனம் சார்ந்த பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.ஏற்கனவே மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள்,தங்களின் மன நோய் அதிமாகும் வாய்ப்பு அதிகம் உள்ளதால் தங்கள் மன நல மருத்துவரை கலந்து ஆலோசித்து தான் ஹஜ் செல்ல உள்ளதை விலக்கி அதற்கு ஏற்றார்போல் மாத்திரைகளை மாற்றி எடுப்பது நல்லது.

9)கர்ப்பமாக உள்ள பெண்கள் தங்கள் மருத்துவரை கலந்து ஆலோசித்து, ஹஜ் செல்வதைப் பற்றி முடிவு எடுப்பது நல்லது.முடிந்தவரை பிரசவம் ஆகும் வரை ஹஜ்ஜை தவிர்ப்பது நல்லது.இதில் அரசு விதிகள்,மற்றும் விமான நிறுவனங்கள் விதிகளை பின்பற்ற வேண்டும்.

சவுதி அரசின் சுகாதார அமைச்சகம் இந்த வருடம் 1432 ஹிஜ்ரி ஆண்டு 2011 ஆங்கில வருடம் ஹஜ்ஜின் போது மேற்கொள்ளவேண்டிய சுகாதார நடைமுறைகளை அறிவித்து உள்ளது.
அதை பற்றி சில குறிப்புகள்.
மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி:(YELLOW FEVER VACCINE) இது மஞ்சள் காமாலை என்னும் JAUNDINE அல்ல
சர்வதேச சுகாதார வதிகளுக்கு ஏற்ப மஞ்சள் காய்ச்சல் பரவுவதைத்தடுக்க (நோய் உள்ள நாடுகளின் பட்டியலில்) ஆபத்து நாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகள், குறைந்தது 10 நாட்கள் முன்பு,பத்து வருடங்களுக்கு மிகாமல் உள்ள,தடுப்பூசி என்று காட்டும் ஒரு கச்சிதாமாக மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த லிஸ்டில் இந்தியா இடம் பெறவில்லை.எனவே இது இந்தியர்களுக்கு பொருந்தாது.

MENINGOCOCCAL மூளைக்காய்ச்சல் தடுப்பூசி:-
மூளைக்காய்ச்சலுக்கு எதிராக தடுப்பூசி,சவூதிக்கு வருவதற்க்கு, 3 ஆண்டுகளுக்கு மேற்படாமல் மற்றும் 10 நாட்களுக்கு குறைவு இல்லாமல் MENINGOCOCCAL QUADRIVALENT தடுப்பூசி போட்ட சான்றிதழ் (ACTW135) அவசியம்.
2 வயதுக்கு மேல், பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு MENINGOCOCCAL QUADRIVALENT தடுப்பூசி உடன் தேவை:
-அனைத்து கடந்த 3 ஆண்டுகளில் தடுப்பூசி போடாத மதினா மற்றும் மக்கா குடிமக்கள் (CITIZEN) மற்றும் குடியிருப்பாளர்கள்..(RESIDENT)-
ஹஜ் மேற்கொள்ளும் அனைத்து சவுதி குடிமக்கள் (CITIZEN) மற்றும் குடியிருப்பாளர்கள்..(RESIDENT)-
கடந்த 3 ஆண்டுகளில் தடுப்பூசி போடப்படாத அனைத்து ஹஜ் பணியாளர்கள்.
இளம்பிள்ளை வாதம்: (ORAL POLLIO DROPS) POLLIO சொட்டு மருந்து
ஆப்கானிஸ்தான், இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ ஜனநாயக குடியரசு, சாட்,அங்கோலா மற்றும் சூடானில் இருந்து வரும் அனைத்து ஹஜ் பயணிகள், எல்லா வயதினர்களும் (முன்பு டிரோப்ஸ் போட்டு இருந்தாலும் சரியே) சவுதி அரேபியாவுக்கு கிள்ம்ப 6 வாரங்களுக்கு முன்பு 1 டோஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் மற்றும் சவுதி அரேபியா வந்து அடைந்ததும், அதன் எல்லையில் வைத்து இன்னொரு dose சவுதி அரசு வழங்கும்.
SEASONAL FLU பருவகால ஃப்ளு தடுப்பூசி
அதிக ஃப்ளு வருவதற்க்கு ரிஸ்க் உள்ள ஹஜ் யாத்ரீகர்கள் (எ.கா. முதியோர், நாள்பட்ட நுரையீரல் அல்லது, இதய நோய் அல்லது, கல்லீரல் நோய் அல்லது சிறு நீரக செயலிழப்பு உள்ளவர்களுக்கு).
ஹஜ்ஜிக்காக சவுதி வரு முன் தங்கள் நட்டில் ஒரு டோஸ் ஃப்ளு தடுப்பூசி போட, சவுதி அரேபிய சுகாதார அமைச்சகம்,பரிந்துரைக்கிறது.

இந்த ஃப்ளு தடுப்பூசியில் பன்றிக் காய்ச்சல் (H1N1) தடுப்பு ஊசியும் அடக்கம்)
உணவு:-
சவுதி அரேபிய சுகாதார அமைச்சகம், சவுதி வரும் ஹஜ் பயணிகள், ஒரு பயணி சிறிதளவு ஒரு நபருக்கு அந்த நாளின் பயணத்திருக்கு தேவையான PROPER CANNED FOOD தவிர மற்ற உணவுகளைக் கொண்டு வர அனுமதி அளிக்கவில்லை.
ஹஜுக்குச் செல்லும் முன் நீங்கள் தயார்படுத்துவதில் மிக முக்கியமானது இறை அச்சமே.எல்லாம் வல்ல அல்லாஹ் எல்லோரின் ஹஜ் கிரியைகள் முழுவதுமாக நிறை வேறி,ஏற்கப்பட்ட ஹஜ்ஜாக ஆக்க அருள் புரியட்டும், ஹஜ் செல்வோர் எனக்காகவும்,இந்த ஜமாஅத்திற்காகவும் மற்றும் முஸ்லிம்களுக்காகவும், இம்மை மறுமை வெற்றிக்காக துவா செய்யவும்…
டாக்டர் முஹம்மது கிஸார் 
உணர்வில் வெளியான் செய்தி(உரிமை16---குரல்02)
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: புனித ஹஜ் செல்வோர் கவனத்திற்க்கு...! Rating: 5 Reviewed By: AYM-TNTJ
Scroll to Top