FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Wednesday, April 4, 2012

கோடைக்கால விடுமுறையை பயனுள்ளதாக மாற்றுவோம்

Wednesday, April 4, 2012
3:15 PM


கோடை காலத்தில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளித்து மாணவ, மாணவிகள் பெரும்பாலும் வீணான காரியங்களிலே செலவிட்டு பாழாக்குகின்றனர்.



மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட்செல்வங்ககளின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர்.


1) ஆரோக்கியம்'

2) ஒய்வு.

என்ற நபிமொழி, இன்று கோடை காலத்தை வீணாக்குபவர்களுக்கு சொன்னதைப் போன்று அமைந்துள்ளது.

மனிதனுக்குக் கிடைகும் ஒய்வு நேரத்தையும், ஆரோக்கியமான காலத்தையும் நல்ல காரியங்கள் செய்வதற்குப் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

குறிப்பாக இன்றைய காலத்தில் இளைஞர்கள், சிறுவர், சிறுமிகள் கெட்டுப் போவதற்கும் கொள்கையை விட்டுப் போவதற்கும் ஏராளமான வாய்ப்புகள் உள்ள சூழ்நிலையில் பெற்றோர்கள், தம் பிள்ளைகளை நல்ல பிள்ளகளாக ஒரிறைக்கொள்கையில் உறுதி உள்ள பிள்ளைகளாக மாற்றுவதற்குரிய அனைத்து முயற்சிகளை செய்யக் கடமைப்பட்டுள்ளார்கள்.

விஞ்ஞான வளர்ச்சியிம் பயனாக ஏராளமான சின்னத்திரைகள் புற்றீசல்கள் போல் உருவாகையுள்ளன. மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் தான் அளவுக்கு அதிகமான சின்னத்திரை சேனல்கள் உருவாகி உள்ளன. மேலும் பல சேனல்கள் வருவதற்குரிய முயற்சிகள் நடந்து வருகின்றன.

விஞ்ஞான வளர்ச்சியின் பரிசான இந்த சின்னத்திரைகள் மக்களின் அறிவையும், பண்பாட்டையும், நல்லொழுக்கத்தையும் உயர்த்தி இருந்தால் பெரிதும் மகிழ்ச்சியடையலாம். ஆனால் அறிவை மழுங்கடிக்கும் வகையிலும் சமூகச் சீரழிவை ஏற்படுத்தும் வகையிலும் தான் அதன் நிகழ்ச்சிகள் அமைந்துள்ளன.

பார்வையாளர்களைக் கவர்வதற்காக புதுமையான நிகழ்ச்சிகளை சின்னத்திரை தயாரிப்பளர்கள் உருவாக்கி வருகிறார்கள். குறிப்பாக சிறூவர்களை மையமாக வைத்து நிகழ்ச்சிகளும் தனிச் சேனல்களும் உருவாகி சிறுவர்களின் உள்ளங்களில் இடம் பிடித்துள்ளனர்.

குழந்தைகளுக்கு என்று உருவாக்கப்பட்டிருக்கும் சேனல்களை மட்டுமே குழந்தைகள் விரும்பிப் பார்த்தால் வேறு எந்த விஷயங்கள் மீதும் கவனம் செலுத்த முடியாத அளவுக்கு அவர்களின் அறிவுத்திறன் முடங்கி போகிறது.

எனவே மாணவ, மாணவிகள் ஒய்வு நேரத்தை நல்வழியில் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-(TNTJ) வருடம் தோறும் கோடைக்கால நல்லொழுக்கப் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இதன் மூலம் ஆயிரக்கனக்கான மாணவர்கள் வருடம்தோறும் பயன் பெறுச் செல்கின்றனர்.

இது போன்று நல்ல சந்தர்ப்பங்களை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் இது போனற நல்ல காரியங்களுக்கு பொருளாதார உதவிகளையும் நாம் வாரி வ்ழங்கி இம்மை மறுமை நன்மைகளைப் பெற முயற்சிப்போம்...

நன்றி-தீன்குலப்பெண்மனி,
(ஏப்ரல் மாதம் 2012)

  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: கோடைக்கால விடுமுறையை பயனுள்ளதாக மாற்றுவோம் Rating: 5 Reviewed By: AYM-TNTJ
Scroll to Top